சிரியா மீது ஐ.நா அனுமதியின்றி தாக்குதல் நடாத்த ஒபாமா தீர்மானம், பிரான்ஸ், பிரிட்டன் என்பனவும் கூட்டுச்சேரும் நிலை
சிரியா மீது இராணுவ தாக்குதல்
ஒன்றினை மேற்கொள்ள அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் சிரியா மீது இராணுவத் தாக்குதல் நடாத்த அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஒப்புதலை
அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா நாடியுள்ளதுடன் அந்த நடவடிக்கைக்கு ஐ.நா வின் அனுமதியும்
தனக்கு அவசியமில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிரிய ஜநாதிபதி பஸர் அல் அஸாத்
தனது ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடாத்திவரும் அப்பாவி மக்கள் மீது இராணுவத்தை பயன்படுத்தி
இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக கூறியே இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர்
ஒபாமா, வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:
"சிரியா நிலவரத்தைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, அந்நாட்டின் மீது அமெரிக்கா இராணுவ
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்துள்ளேன். இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கு
அஸாத் அரசைப் பொருப்பாளியாக்க நம்மால் முடியும் என்று நம்புகிறேன்.
சிரியாவில் நடைபெற்றது மனித கண்ணியத்தின்
மீதான தாக்குதலாகும். இரசாயன ஆயுதங்கள் மீது உலக அளவில் தடைவிதிக்கப்பட்டதை எள்ளிநகையாடுவது
போல் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. அங்கு நடந்த சம்பவங்களை அமெரிக்காவில் வெறுமனே வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நமது கடமைகளை நாம் நிறைவேற்றியாக
வேண்டும். இரசாயன ஆயுதப் பிரயோகம் குறித்து விசாரனை நடாத்தினால் மட்டும் போதாது. அதற்கு
பதிலடி கொடுக்கப்பட்டாக வேண்டும். சிரியா மீது நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்க மக்கள்
பிரதிநிதிகளின் ஒப்புதலை நான் கோர உள்ளேன்.
எம்.பி.க்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை
ஒதுக்கிவைத்துவிட்டு, சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதை ஆதரித்து வாக்களிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன். அரசியலைத் தாண்டி சில விடயங்கள் முக்கியமானவை. நாம் ஒரே நாட்டினர்
என்ற தகவலை உலகுக்கு அனுப்புமாறு நாடாளுமன்றத்தினை நான் கேட்டுக்கொள்கிறேன்."
என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை
ஒபாமா நாடிய பிறகு, இது தொடர்பான வரைவுத் தீர்மானம் ஒன்றை வெள்ளை மாளிகை, நாடாளுமன்றத்திற்கு
அனுப்பிவைத்தது. அதில், சிரியா மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடாத்த அதிபருக்கு
அங்கீகாரம் அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிரியாவின் டமஸ்கஸ்
நகருக்கு அண்மையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட இரசாயன தாக்குதலின் பின்னணியில் அந்நாட்டு
அரசாங்கமே உள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பான 9 பக்க அறிக்கை பிரான்ஸ்
பிரதமர் ஜீன் மார்க் அயிரோல்ட்டால் பாராளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை (செப்.02)
சமர்ப்பிக்கப்பட்டது.
சிரியாவா பல நூற்றுக்கணக்கான தொன்னுடைய
நரம்புத்தொகுதியை பாதிக்கும் சாரின் இரசாயனத்தையும் மிகவும் நச்சுத்தன்மையுடைய விஎக்ஸ்
இரசாயனத்தையும் தன் வசம் வைத்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
சிரிய இராணுவம் ஏற்கனவே பல தாக்குதல்களில்
பொது மக்களுக்கு எதிராக சாரின் உள்ளடங்களான இரசாயனங்களை பயன்படுத்தியுள்ளது எனவும்,
எனினும் கடந்த மாதம் 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பெருமளவு இரசாயனங்கள்
பிரயோகிக்கப்பட்டுள்ளன எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், சிரியா தொடர்பில் பிரான்ஸ்
தனித்து செயற்படப் போவதில்லை எனவும் சிரியாவிற்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான
கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த பிரான்ஸ் ஜநாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே தொடர்ந்து பணியாற்றி
வருவதாகவும் ஜீன் மார்க் அயிரோல்ட் தெரிவித்தார்.
பிரான்ஸ் அரசியலமைப்பின் பிரகாரம்
ஜநாதிபதிக்கு பராளுமன்ற அங்கீகாரத்தை பெறாது தாக்குதலொன்றிற்கு உத்தரவிட முடியும்.
எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே சிரியா மீது இராணுவத்
தாக்குதல் தொடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருவதற்கு சிரியா கடும் கண்டனத்தை
தெரிவித்துள்ளது.
"ஒபாமாவும், பிரிடிஷ் பிரதமர்
கமரூனும் மரத்தின் உச்சிக்கு ஏறிவிட்டு எப்படி இறங்குவது என்று தெரியாமல் விழி பிதுங்கி
நிற்கின்றனர்." என்று சிரியாவின் ஐ.நா நிரந்தர பிரதிநிதி பஷார் அல்ஜாப்பரி கூறியதாக
சரிய அரசு செய்தி நிறுவனமான சனா செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் சிரியாமீது அமெரிக்கா
தாக்குதல் நடாத்துமானால் அது அல்கைதாவை ஊக்கப்படுத்தும் விதமாக அமைடுயும் என சிரியா
ஐ.நாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
எவ்வாறாயினும் சிரியாவின் தலைநகரமான
டமஸ்கஸின் புறநகர் பகுதியில் சிரிய இராணுவம் பொதுமக்கள் மீது நடாத்திய இரசாயன தாக்குதலுக்காக
அஸாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
எகிப்து தலைநகர் கொய்ரோவில் நடைபெற்ற
அரபு லீக் மாநாட்டில் அரபு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்று சிரியாவுக்கு
எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும், பஸர் அல் அஸாத் மீது உரிய நடவடிக்கை
எடுக்கவும் ஐ.நாவையும் சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நன்றி: விடிவெள்ளி
No comments:
Post a Comment