எகிப்து !
எகிப்து !
"இஸ்லாத்தின் அடையாளங்கள் இனி மெல்ல முளைக்கும் ..."
"எனது வாழ்நாளில் இன்னொரு மதீனாவின் வாசனையை நுகரமுடியும்..."
" எனது கிறிஸ்தவ நண்பனுக்கு கொடுத்த, குர்ஆன் வரிகளுக்கு இந்த நாட்டின்
விதிகளில் இருந்தும் ,வீதிகளில் இருந்தும் விளக்கம் கொடுப்பேன்!"
"பாருங்கள் இதுதான் என் இஸ்லாம் என்று மார் தட்டுவேன்...!"
எனக்குள் எட்டிப்பார்த்த கனவுகள்.... நெஞ்சுக்குள் சுடுநீராய் கசிகிறது...
என்ன செய்வேன் என் ரப்பே,
இங்கே அபூஜஹிளுக்கு அபூபக்கர் என்று பெயர்...
தாமதங்கள் தற்காலிகமானவை !
இன்ஷா அல்லாஹ் உனது பூக்கள் இரத்தத்தில் தான் பூக்குமென்றிருந்தால்...
அது பூக்கட்டும்!
No comments:
Post a Comment