எகிப்தில் அதிருப்திக்கு மத்தியில் புதிய அமைச்சரவைக்கான முயற்சிகள்

எகிப்தில் பிரதமராக நியமிக்கப்பட்ட ஹாஸிம் அல்-பப்லாவி புதிய அமைச்சரவையொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் இஹ்வான்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க தயார் என்று கூறியள்ளார். ஆனால், இஹ்வான்கள் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,
பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணியான தேசிய மீட்பு முன்னணி, இடைக்கால ஆட்சியை
முன்னெடுப்பதற்கான பிரகடனம் தொடர்பாக தம்முடன் எவரும் கலந்தாலோசிக்கவில்லை
என குறைப்பட்டுள்ளது. அத்துடன் அதில் மாற்றம் செய்யப்படல் வேண்டும்
என்றும் கூறியுள்ளது.
இராணுவத்திற்கு
மறைமுக ஆதரவு வழங்கிவருவதாகக் கருதப்படும் அமெரிக்கா, தற்போது இடம்பெற்று
வரும் மாற்றங்களால் எச்சிக்கையுடன்கூடிய உந்துதலை அடைந்துள்ளதாக
கூறியுள்ளது.
அடுத்த
மாதங்களுள் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பை நடாத்த சதிப் புரட்சியின் பின்
தோன்றிய இடைக்கால அரசு முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதன் பின்னர்
பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதும், அடுத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதுமே அவர்களது திட்டம்.
எவ்வாறாயினும் இந்த திட்டத்தை இஸ்லாமியவாதிகள் மட்டுமல்லாத லிபரல்வாதிகளும் பரவலாக நிராகரித்துள்ளனர்.
முர்ஸி
மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்படாதவரை எந்தவொரு அமைச்சரவையிலும்
பங்கேற்பதில்லை என சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சியின் சிரேஷ்ட
அங்கத்தவர் முஹம்மத் கமால் தெரிவித்துள்ளார்.
தற்போது சட்டவாக்க,
நிர்வாக மற்றும் நீதி அதிகாரங்கள் இடைக்கால ஜனாதிபதி என்ற ஒரு தனிநபரின்
கையினுள் செல்கிறது. அதில் கையொப்பமிட்டால் தம்மை சந்தர்ப்பவாதியாகவே
மக்கள் பார்ப்பார்கள் என தேசிய மீட்பு முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவரு
ஏ.எப்.பி செய்தி நிறுவனத்துக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
முர்ஸிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த “தமர்ருத்“ இயக்கத்தினர்கூட,
இந்த திட்டம் தொடர்பாக தம்மை யாரும் கலந்தாலோசிக்கவில்லை என்று
கூறியுள்ளனர். இடைக்காலத் தலைவர் நிலமை தொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டும்
என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment