Wednesday, July 10, 2013

மலேஷியாவில் முர்ஸிக்கு ஆதரவாக பேரணி

மலேஷியாவில் முர்ஸிக்கு ஆதரவாக பேரணி


எகிப்தில் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட சதியை மலேஷிய கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கண்டித்துள்ளன. அத்தோடு, எகிப்தில் அன்றாடம் இடம் பெற்றுவரும் நிகழ்வுகள் தம்மை கலக்கமடையைச் செய்துள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன.

மலேஷிய இஸ்லாமிய நிறுவனங்களின் கூட்டமைப்பு, கோலாலம்பூரில் ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டங்களில் பலர் கலந்து கொண்டுள்ளதோடு, எகிப்திய மக்கள் பெற்றுக் கொண்ட ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான சதியை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment