சிரியா அகதிகளுக்கு கனடா 45 மில்லியன் டொலர்கள் உதவி
சிரியா அகதிகளுக்கு 45 மில்லியன் டொலர்கள் நன்கொடையாக வழங்க உள்ளதாக கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்துள்ளார்.
சிரியாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு மில்லியனுக்கு அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ளனர், இதில் பாதி பேர் குழந்தைகள் ஆவர்.
இந்நிலையில் கனடா சார்பில், அதிகளுக்கு 45 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்க பிரதமர் முடிவு செய்துள்ளார்.
இதனுடன் சேர்த்து, 2012ம் ஆண்டிலிருந்து கனடாவால் வழங்கப்பட்ட உதவித்தொகை 203 மில்லியன் டொலர்களாகும்.
மேலும் சொல்லமுடியாத அளவுக்கு கஷ்டங்களை அனுபவிக்கும் அப்பாவி மக்களுக்கு உதவிகளை வழங்குவதில் கனடா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து செயல்படும் என பிரதமர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment