Monday, September 9, 2013

ராணுவ புரட்சியின் படுதோல்விக்கான அறிகுறிகள்


ராணுவ புரட்சியின் படுதோல்விக்கான அறிகுறிகள்

By : Mohamed Fakeehudeen

அரசியல் ஆய்வாளரும் பத்ரிகை எழுத்தாளருமான முஹம்மத் அல்ஸரூஜி புரட்சி தோல்வியடைந்து மக்கள் விருப்ப முடிவு விரைவில் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளிவைக்கும் என கூறியுள்ளார். அதற்கு அவர் முன்வைக்கும் நியாயங்கள் வருமாறு:

1) எகிப்தின் அனைத்து மானிலங்களிலும் மில்லியன் கணக்கில் மக்கள் ஆதரவு விரிவடைந்து கொண்டே வருதல்


2) ராணுவ புலனாய்வு துறை, ராணுவ ஒழுக்கவியல் விவகாரம், விசேட பந்தோபஸ்து அனைத்துமே ஆர்ப்பாட்டக்காரர்களை ஒழித்துக்கட்டுவதில் தோல்வி கண்டுள்ளமை


3) நாடளாவிய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதில் மேற்கொள்ளப்பட்ட பயமுறுத்தல் நடவடிக்கை தோல்வி கண்டுள்ளமை


4) அரசியல் மற்றும் ராணுவ கேந்திர ஸ்தானங்களில் கடும் அச்சுறுத்தல் இருந்தும் கூட மக்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டுள்ளமை


5) சட்டபூர்வதன்மைக்கு ஆதரவு வழங்கும் தேசிய கூட்டணி முர்ஸி மீண்டுவருதல் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு விடாப்பிடியாக இருக்கின்றமை.


6) ஸீஸீ தன்னை காப்பாற்றிக் கொள்ள மக்கள் ஆணையை தருமாறு கோரியமை.


7) ராணுவ சதி புரட்சி கர்த்தாக்களிடமே பிளவு தோன்றியுள்ளமை
அல்பராதியை ஜனாதிபதியாக நியமிக்க ஸீஸீ மறுத்துள்ளமை


9) ஸீஸீ அமரிக்காவிடம் அரசியல் பிச்சை கேட்டுள்ளமை


10) இடைக்கால அரசும் அதன் தலைவர் அத்லியும் வெளிப்படையாகவே களத்தில் காணமால் போயுள்ளமை


11) முரண்பட்ட ராணுவ அறிக்கைகள் வெளிவந்துள்ளமை


12) புரட்சியை எதிர்த்து சட்டபூர்வதன்மைக்கு ஆதரவு வழங்கும் கூட்டணியை சந்திப்பதற்காக படையெடுக்கும் வெளிநாட்டு பிரதிநிதிக் குழுக்கள் 


13) தற்போதைய எகிப்தின் யதார்த்த நிலைமை அமரிக்காவை பீதியடையச் செய்துள்ளமை


14) இராணுவ புரட்சி சம்பந்தமாக முரண்பட்ட அறிக்கைகளை அமரிக்கா வெளியிட்டுள்ளமை

No comments:

Post a Comment