முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடலாம்!
முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய அடிப்படை மீறாத வகையில் இஸ்லாமிய வரையறைக்குள்
நின்று சமூக சேவை மற்றும் அரசியலில் ஈடுபட முடிமென சர்வேதச இஸ்லாமிய
மார்க்க அறிஞர் டாக்டர் ஷாக்கீர் நாயிக் தெரிவித்தார்.
கடந்த வாரம் டாக்டர் ஷாக்கீர் நாயிக் கொழும்புக்கு வருகை தந்திருந்த போது காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளருமான சல்மா அமீர் ஹம்சா டாக்டர் ஷாக்கீர் நாயிக்கை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் இல்லத்தில் நடைபெற்றது. இதன் போது முஸ்லிம் பெண்களின் அரசியல் பிரவேசம் குறித்து சல்மா அமீர் ஹம்சா டாக்டர் ஷாக்கீர் நாயிக்கிடம் கேட்ட போதே டாக்டர் ஷாக்கீர் நாயிக் மேற் கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் முஸ்லிம் பெண்கள் மத்தியில் தேவைகள் அதிகம் இருக்கின்றன. முஸ்லிம் பெண் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என அனைத்துவிதமான தேவைகளும் உள்ளன.
இதே போன்று சமூக சேவைகளிலும் அரசியலிலும் முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று இஸ்லாமிய ஒழுக்கம், பண்பாடு, கலாசார விழுமியங்களைப் பேணி முஸ்லிம் பெண்கள் அரசியலிலும் சமூக சேவைகளிலும் ஈடுபடமுடியும்.
உதாரணமாக முஸ்லிம் பெண்கள் ஆண்களுடன் கைகுலுக்காமல் இருப்பதைப் போல எனக் குறிப்பிடலாம். இஸ்லாம் பூரணத்துவமான ஒரு மார்க்கமாகும்.
இந்த மார்க்கத்தில் அனைத்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைச் சரியாக விளங்கிக் கொண்டால் அதில் சகலவற்றுக்கும் தீர்வுள்ளது எனவும் டாக்கடர் ஷாகீர் நாயிக் மேலும் குறிப்பிட்டார்...

No comments:
Post a Comment