Tuesday, September 10, 2013

சிரியாவில் பஷ்ஷார் அஸதிற்கு ஆதரவாக ஈரானிய படைகள்

சிரியாவில் பஷ்ஷார் அஸதிற்கு ஆதரவாக ஈரானிய படைகள்

சிரியாவில் பஷ்ஷார் அஸதிற்கு ஆதரவாக ஈரானிய புரட்சிகர இராணுவத்தினர் போராடும் வீடியோ காட்சிகளை சிரியப் போராளிகள் வெளியிட்டுள்ளனர்.

அங்கு, பஷ்ஷாரின் படைகளுக்கு பயிற்சி அளித்தல், கண்கானித்தல் மற்றும் களத்தில் போராடுதல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடும் காட்சிகள் அதில் அடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சிரியாவிலுள்ள ஈரான் போராளிகள் குறித்த கணிப்பீடுக்ள, ஆவணங்கள், பெயர்கள் மற்றும் இராணுவ திட்டங்கள் குறித்த தகவல்கள் தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவை விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் எனவும் சிரியப் போராளிக்ள தெரிவித்துள்ளனர்.

முன்பதாக, சிரியாவில் ஈரான் படைகள் உள்ளதாக ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் உயர் தளபதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஈரானிலிருந்து சிரியா செல்லும் சரக்கு விமானத்தை ஈராக் பரிசோதித்தமைக்கு ஈரான் கண்டனம் தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து, ஈரானிலிருந்து சிரியாவுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதை தன்னால் கட்டுப்படுத்த இயலாதென ஈராக் வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.(M-B)
 

No comments:

Post a Comment