Monday, September 9, 2013

இரசாயன ஆயுதத்தை சிரியாவுக்கு வழங்கியது பிரிட்டன்! டெய்லி மெயில் கூறுகிறது!

இரசாயன ஆயுதத்தை சிரியாவுக்கு வழங்கியது பிரிட்டன்! டெய்லி மெயில் கூறுகிறது!

டமாஸ்கஸ்: சிரியாவுக்கு இரசாயன ஆயுதத்தை வழங்கியது பிரிட்டன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவுக்கு சோடியம் ஃப்ளூராய்டை விற்க 2004-ஆம் ஆண்டிற்கும் 2010-ஆம் ஆண்டிற்கும் இடையே பிரிட்டீஷ் அரசு ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இத்தகவலை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் பஸ்ஸாருல் அஸத் இரசாயன ஆயுதத்தை பிரயோகித்து ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சிரியாவின் மீது அமெரிக்கா தலைமையிலான சில நாடுகள் தாக்குதல் நடத்த தயாராகி வரும் வேளையில் லண்டனை தலைமையிடமாக கொண்ட டெய்லி மெயில் பத்திரிகை இந்த அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது.

கொடிய ஸரின் விஷ வாயுவை தயாரிக்க சோடியம் ஃளூராய்டை பயன்படுத்துகின்றனர். ஆபத்தான, கொடிய இரசாயனங்களை விற்பது தொடர்பான சர்வதேசச் சட்டங்களை மீறி சிரியாவுக்கு பிரிட்டன் சோடியம் ஃப்ளூராய்டை வழங்கியுள்ளது.

சிரியாவுக்கு பிரிட்டன் இரசாயன ஆயுதம் வழங்கிய செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும், சில கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் பிரிட்டீஷ் பாராளுமன்ற உறுப்பினர் தாமஸ் டொக்கார்டி கூறியுள்ளார். இச்சம்பவத்தில் பங்கிருப்பதாக சனிக்கிழமை பிரிட்டீஷ் அரசு ஒப்புக்கொண்டது.

No comments:

Post a Comment