Monday, September 9, 2013

எகிப்தில் நடைபெற்றவற்றுக்குப் பின்னால் நிற்பவர்கள் யார்?

காடியன் பத்திரிகையில் நோம் ஸோம்ஸ்கி அவர்கள் எழுதிய கட்டுரை

எகிப்தில் நடைபெற்றவற்றுக்குப் பின்னால் நிற்பவர்கள் யார்?

இதற்கு முன்னர் எகிப்திய விவகாரம் குறித்து பல தடவைகள் எழுதியுள்ளேன் எனினும் அவற்றில் இந்த விவகாரத்திற்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கவில்லை என்றே நினைக்கிறேன், இந்தக் கட்டுரையில் அது பற்றி சற்று ஆழமாகவும் வித்தியாசமாகவும் நோக்கலாம் என்றிருக்கிறேன்.

ஒரு கேள்வியை இவ்வாறு கேட்டுப் பார்ப்போம், இராணுவப் புரட்சிக்குத் திட்டமிட்டவர்கள் யார்? அதனை மக்கள் புரட்சியாய் காட்ட முனைந்தவர்கள் யார்? இந்தக் கேள்விகள் மற்றோர் கோள்வியை உருவாக்குகின்றன, இந்த இராணுவப் புரட்சியின் மூலம் அதிகம் பிரயோசனப்படுகின்றவர்கள் யார்?

முபாரக்கின் ஜனரல்கள், அவர்கள்தான் புதிய அரசை வீழ்த்தியவர்கள் முபாரக்கை வெளியே கொண்டு வந்தவர்கள், ஏனெனில் அவர்களுக்கு இஃவான்களுடன ஒரு உடன்பாட்டிற்கு வரமுடியவில்லை, இஃவான்கள் தனிச்சிறப்புகளும் கண்ணியமும் எகிப்தியப் படைக்கு இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள், ஆனால் ஜனரல்களோ இராணுவ மேல் சபைக்கே அந்த தனிச்சிறப்புக்களும் கண்ணியமும் இருக்க வேண்டும் என நினைத்தார்கள், வித்தியாசம் மிகவும் தெளிவானது. 

இராணுவம் ஒரு பெரும் பொருளாதார சாம்ராஜ்யத்தை வைத்திருந்தது, அது தலைமை பீடத்திலிருந்ததால் மக்கள் கண்களுக்குப் புலப்படாமல் அது மறைக்கப்பட்டிருந்தது, தலைமை அவர்களை விட்டுப் போன போது திறை நீங்கி விட்டது, இஃவான்கள் அதனைக் கண்டார்கள், படிப்படியாக அதனை அவர்களிடமிருந்து எடுத்தால் எகிப்தியர்களின் பொருளாதார நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முடியுமாக இருக்கும்.

இந்த இராணுவப் புரட்சி பற்றிய ஆலோசணை, முபாரக் பதவி இறங்கி உமர் சுலைமான் தனது முதல் உரையை நிகழ்த்த முன்னரே, இராணுவத்தினுள் விவாதிக்கப்பட்டது, ஆனால் அதனை உடனே செய்வதா அல்லது சற்று பொறுத்துப் பார்ப்பதா? 

துரதிஷ்டவசமாக இராணுவம் நீண்டகாலம் பொறுமை காக்கவில்லை, தமது அதிகாரம் பறிபோவதை அவர்கள் விரும்பவில்லை.

இந்த நாடகத்தில் இன்னும் பல்வேறு சக்திகள் பங்கு கொண்டிருக்கின்றன என்பது உண்மை, முபாராக்கிற்கு துணை நின்ற நிறுவனங்கள் மத்திய கிழக்கு என பலர், ஆனாலும் அவற்றை நான் பேசவில்லை.

இந்த விடயத்தில் அமெரிக்காவின் பங்கை அவதானிக்கின்ற போது, அமெரிக்காவின் உடன்பாடில்லாமல் நிச்சயமாக இந்தப் புரட்சி நடக்கவில்லை, ஏனெனில் ஒபாமாக்கும் முர்ஸிக்கும் இடையிலான முரண்பாடுகள், எகிப்து தொடர்ந்தும் அமெரிக்க செல்வாக்குப் பிரதேசமாக இருக்கமாட்டாது என்ற நிலையைத் தோற்றுவித்தது, அல்லது ஆகக் குறைந்தது முபாரக்கின் காலத்தைப் போல் மேற்குடன் மிகவும் மிருதுவாக எந்தக் கோரிக்கையையும் அது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருப்பினும் அதனை நிறைவேற்றி வைக்கும் நிலை காணப்படமாட்டாது எனத் தெரிந்தது.

முர்ஸியின் அமெரிக்க விஜயத்தின போது, முர்ஸியின் வாயால் சொல்ல வைக்க முயன்ற வார்த்தையை அவர் சொல்ல மறுத்தார், அதுதான் ”பலஸ்தீன் இஸ்ரேலிய மக்கள் நிரந்தரப் பாதுகாப்பையும் முழுமையான சமாதானத்தையும் அனுபவிக்கும் வகையில் அவசியமான தீர்வுகளைக் காண்பதற்காக அமெரிக்காவும் எகிப்தும் செயற்படும்” என்ற வார்த்தைகள், இந்த வார்த்தைகளின் நோக்கம் முர்ஸியை இஸ்ரேல் என்ற வார்த்தையை மொழிய நிர்ப்பந்திப்பதாவே இருந்தது அதன் மூலம் இஸ்ரேலை அவரது வாயாலேயே அங்கீகரித்ததாக மாற்றி விட நினைத்தார்கள்,ஏனெனில் முபாரக்கின் காலத்தில் இஸ்ரேலை பன்றி குரங்கு என்றுதான் அவர் அடையாளப்படுத்தினார். 

இங்குதான் உறவுகள் முறுகலடையத் தொடங்கின, ஒவ்வொரு தரப்பும் தமக்கான தீர்வுகளைத் தேட முற்பட்டனர்.

கலாநிதி முர்ஸி சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், ஜேர்மனி, பிரேஸில், பிரான்ஸ், பிரித்தானியா, ஈரான் என்று தனது கவனங்களைத் திருப்பத் தொடங்கினார், இந்தியாவுடன் இராணுவ உடன்படிக்கைகள், ரஷ்யாவுடன் அணு உடன்படிக்கைகள், பிரேஸில், சீனாவுடன் கைத்தொழில் உடன்படிக்கைகள், சூடானுடன் விவசாய உடன்படிக்கைகள், இன்னும் பல ஆபிரிக்க நாடுகளுக்கு விவசாய முன்மொழிவுகள் என பல நடவடிக்கைகளை எடுத்தார், அமெரிக்கா அறிந்து கொண்டது, இஃவான்களை ஆட்சியை விட்டு அகற்றாவிடடால், எகிப்தின் மீதான அமெரிக்காவின் செல்வாக்கு படிப்படியாக இல்லாமல் போய்விடும், எனவே அவர்கள் அந்த வழியைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர், மத்திய கிழக்கு வெளிவிவகார அமைச்சர்களுக்கு இஃவான்கள் உங்களுக்கு அபாயமானவர்கள் என்று சொல்வது மாத்திரமே போதுமாக இருந்தது, அவாகள் தமது எதிர்ப்பை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் காட்டினார்கள்.

ஜெனரல்கள் இந்த எல்லா நிலைகளிலும் இஃவான்களுடன் இந்தப் பயணத்தைப் போவதற்குத் தயாராக இருக்கவில்லை.

இவற்றிலிரந்து நாம் புரிந்து கொள்கிறோம் பல்வேறு தரப்பினரின் எண்ணங்களும் நோக்கங்களும் இஃவான்களை நீக்கவேண்டும் என்பதில் உடன்பட்டிருக்கின்றன, ஆனால் அவர்கள் அனைவரும் தங்களது நலன்களையே தேடினார்கள், எகிப்தின் நலனைத் தேடவில்லை.

இஃவான்கள் இது போன்றதொரு இராணுவப் புரட்சி நிகழ்ந்து விடாதிருக்க காலத்துடன் போட்டி போட்டார்கள், ஆனாலும் அசத்தியம் அவர்களை முந்திவிட்டது.
இறுதியாக...

இதனால் இஃவான்கள் நிச்சயமாக அனைத்தையும் இழந்து விடவில்லை, அதேநேரம் இராணுவப் புரட்சியும் எதனையும் அடைந்து கொள்ளவுமில்லை. இதுதான் உண்மை , இஸ்லாமிய வாதிகள் ஒரு பெரும் மக்கள் தொகையை முழு எகிப்பைதயும் உள்ளடக்கும் வகையில் திரட்டும் சக்தியோடுதான் இன்னும் இருக்கிறார்கள், உலகம் அதனை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறது, இராணுவப்புரட்சியாளர்கள் தமது ஆதரவாளர்களுக்கு காட்டும் விடயங்கள் உண்மையல்ல என்பதையும் உலகம் அறிகிறது. இப்போது அமெரிக்கா தடியை அதன் நடுப்பகுதியால் பிடித்துக் கொண்டிருக்கிறது.

கடைசியாய் ஒரு கேள்வி கலாநிதி முர்ஸி மீண்டும் வர வாய்ப்பிருக்கிறதா?

ஆயிரமாயிரம் ஊடகப் பொய்கள் சொன்னாலும் முழுநாட்டினதும் சாத்வீகத்திற்கு முன்னாலும் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாலும் இந்த இராணுவப் புரட்சி நின்று பிடிக்கமுடியாது, ஆனால் இங்கு முக்கியமான விடயம் என்னவெனின் இஸ்லாமியவாதிகள் தமது கோரிக்கைகளிலும் மக்களைத் திரட்டுவதிலும் உறுதியாக இருப்பார்களா? அப்போது மாத்திரம்தான் முர்ஸி மீண்டும் வருவது அசாத்தியமானதல்ல என்று சொல்ல முடியும்,ஆனால் ஒரு டீல் நடைபெறாமல் அது நிகழமாட்டாது, இங்கு நான் இனிஷியேட் என்று சொல்லவில்லை, ஏனெனில் ஒவ்வொரு இனிஷியேட்டுக்குப் பின்னாலும் ஒரு டீல் இருக்கிறது. அது நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் இன்னும் இரத்தம் சிந்த முனைவது மீள முடியாத சிக்கலுக்குத் தள்ளிவிடும்.

No comments:

Post a Comment