Saturday, May 7, 2016

உலக மறுமை தீங்குகளுக்கான பாதுகாப்புக் கேடயம்.

உலக மறுமை தீங்குகளுக்கான பாதுகாப்புக் கேடயம்.

இனி ஒரு சில மாதங்களுக்கு எமது காதுகள் அடிக்கடி கேட்கப்போகும் ஒரு விடயம்தான் இது...

உண்மையில் நாம் அடிக்கடி மீட்டும், அடிக்கடி மீட்டப்பட வேண்டிய விடயங்களில் ஒன்றுதான்...

ஏனெனில் இந்த விடயத்துக்கு அர்த்தம் கொடுக்கும் போது எமது இம்மை மறுமை வாழ்வு சிறக்கும். உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு மிகையான பொக்கிஷமாகும்.

இதற்கான கூலிகளின் எல்லைதான் என்ன?!!!! இதன் மூலம் கிடைக்கும் சந்தோசத்தின் அளவுதான் என்ன?!!

யோசிக்கத் தேவையில்லை தக்வாவைப் பற்றித்தான் பேசுகிறேன்...

தக்வா... தக்வா... தக்வா...

இந்த வார்த்தை எமக்குள் என்ன மாற்றத்தை கொண்டுவந்தது.? அல்லது இந்த வார்த்தையின் முழுமையான அர்த்தம் தான் என்ன?

இது போன்ற கேள்விகளை தனக்குள்ளே கேட்டுப்பார்த்தால் தொடர்புள்ளிகளுடன் கூடிய வினாக்குறிகள்தான் பதிலாக வருகிறது...

சரி, தக்வா என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதில் காண முயற்சிப்போம்..

உண்மையில் இதன் மொழிக்கருத்து, “ஒன்றை அதற்கு ஆபத்து ஏற்படுத்தும் இன்னொரு விடயத்திலிருந்து பாதுகாத்தல்என்பதாகும்.

258 இடங்களில் இந்த வார்த்தை திரும்பத் திரும்ப மீட்டப்படும் வேதம் அல்குர்ஆன்.

இதில் 182 தடவைகள் வினையாகவும், 76 தடவைகள் பெயராகவும் மீட்டப்பட்டுள்ளது. அதுவும் வினையில் 70 ஏவல் வினைகள்..

மூன்றில் இரண்டிற்கு மேற்பட்ட தடவை செயல்வடிவத்திலும்.

மூன்றில் ஒன்றுக்கும் குறைவான தடவை பெயர்வடிவிலும்.

நாம் தக்வா என்ற வார்த்தையை இந்த வேதம் பயன்படுத்தியுள்ள முறைகளை பார்த்தால் தக்வா குறித்த கேள்விகளுக்கான திருப்திகரமான விடைகளைக் காணமுடியும் என நினைக்கிறேன்... இன்ஷா அல்லாஹ்..!!

தக்வா என்றால் என்ன?

கிட்டத்தட்ட ஐந்து கருத்துக்களில் இந்த வார்த்தையை அல்குர்ஆன் பயன்படுத்தியிருக்கிறது.

  1. தவ்ஹீத் (ஏகத்துவம்) மற்றும் ஈமான் (இறை நம்பிக்கை)

“(காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை - முட்டாள்தனமான வைராக்கியத்தை - தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து, அவர்களுக்கு (பயபக்தியூட்டும்) தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்” (48:26)

  1. இஹ்லாஸ் (உளத்தூய்மை)

“இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.” (22:32)

  1. இபாதத் (வணக்கம்) மற்றும் தாஅத் (கட்டுப்பாடு)

“அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது: நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?(26:106)

  1. கஷ்யா (இறை அச்சம்)

“உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்.” (4:131)

  1. பாவகாரியங்களை விடுதல்

“நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.” (2:197)
“எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.” (2:189)

இது போக இன்னுமொரு கருத்திலும் இடம் பெற்றுள்ளது. அதுதான் பாவமீட்சிதௌபா என்ற கருத்தாகும்.

“நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.” (7:96)

பாவமீட்சி மற்றும் பாவங்களை தவிர்ந்திருத்தல் என்ற இரண்டும் ஒன்றாக நோக்குமிடத்து மொத்தமாக ஐந்து கருத்துக்களில் தக்வா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதிலிருந்த தக்வா என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதில்கான முயற்சிப்போம்...

பதப்பிரயோகங்கள் சொல்லும் தக்வாவிற்கான விளக்கம்..


“ஏகத்துவக் கலிமாவை ஏற்றுக்கொண்டு, ஏக இறைவனுக்கு கட்டுப்பட்டு அவனுக்கு அஞ்சி அவன் தடுத்த பாவமான காரியங்களை விட்டும் முற்று முழுதாக ஒதுங்கி உளத்தூய்மையோடு நடப்பதுதான் தக்வா என்று சொல்லாம்.”

இப்னுல் முஃதஸ் (ரஹிமஹீல்லாஹ்) பின்வருமாறு கவிபாடினார்,

“பாவம் பெரிதாக இருப்பினும் சிறிதாக இருப்பினும் அதைவிட்டும் ஒதுங்கிவிடு; நீ தக்வாபை பெற்றுக்கொள்வாய்.
முள் நிறைந்த பாதையில், அதைவிட்டும் எச்சரிக்கையாக நடப்பவனைப் போல் இரு..
ஒரு சிறு பாவத்தையும் கூட குறைத்து மதிப்பிடாதே, ஏனெனில் பெரும் மலைகலெள்ளாம் சிறு சிறு கூலாங்கற்கலால் ஆனவைதான்.”

தக்வாவை ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், ஏக இறைவன் தடுத்த பாவகாரியங்களை விட்டும் விலகியிருத்தலாகும்...

இது வார்த்தையில் பேசிவிட்டு மறந்துவிடுகின்ற ஒரு விடயமல்ல. மாறாக உள்ளத்தில் வேரூன்றி செயற்பாட்டில் வரவேண்டிய ஒரு விடயம்.

அந்த செயற்பாடு வாயால் வருவதாக இருந்தாலும் சரி, உடலின் ஏனைய்ய உருப்புகளால் வருவதாக இருந்தாலும் சரி... செயல்வடிவம் தான் முக்கியம். அல்லாஹ் வினை அமைப்பில் மூன்றில் இரண்டிற்கு மேற்பட்ட தடவை பேசியதன் ஞானம் இதுவாகவும் இருக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்...

ஏகத்துவக் கலிமாவை உள்ளத்தால் ஏற்றநாம், ஏக இறைவனுக்கு முழுவதுமாக கட்டுப்படுவதாக மனதார சத்தியப்பிரமாணம் செய்திருக்கிறோம்.

இதற்கேற்ப, அவனை அஞ்சி, இஹ்லாஸ் எனும் தூய எண்ணத்தைக் கொண்டு செயலாற்றுவது எமது கடமை.

அதிலும் குறிப்பாக முத்தகீ என்ற பண்பை தனதாக்கிக் கொள்ள இறைவன் தடுத்த சிறிய பெரிய அத்தனை பாவங்களையும் விட்டு முழுவதுமாக ஒதுங்கியிருக்க வேண்டும்.

இந்த நிலையை ஏற்படுத்த சிறந்த பாசறைதான் ரமழான்... அதிலே பிடிக்கின்ற நோன்பு...

ரமழானும் தக்வாவும்...


“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” (2:183)

தூய்மையுடையோர் என்றால் தக்வாவுடையோர்...

நோன்பின் மூலம் எப்படி தக்வா...?


நோன்பு எமக்கும் அல்லாஹ்விற்கும் மாத்திரம் தொடர்புடைய ஒன்று...

நாம் நோன்பாளியா என்பது அல்லாஹ் மாத்திரமே அறிந்த ஒன்று...

நாம் நோன்பு நோற்கும் போது எமக்கு அல்லாஹ் ஹராமாக்கிய விடயங்களை தவிர்ந்து நடக்கிறோம்...

மேலும், எமக்கு மற்றைய்ய தினங்களில் ஹலாலாக்கிய உண்ணல், பருகல், மனைவியரோடு சேரல் போன்ற காரியங்களையும் தவிர்ந்து வாழுகிறோம்...

இறைவனின் வார்த்தையான அல்குர்ஆனோடு அதிகம் தொடர்பைப் பேணுகிறோம்...

இரவு வணக்கங்களில் அதிகம் ஈடுபடுகின்றோம்...

தான தருமங்கள், உதவி ஒத்தாசைகள், பேன்றவற்றில் அதிகம் ஈடுபடுகின்றோம்...

அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுகிறோம்...

இஃதிகாப் எனும் அமலில் ஆர்வம் காட்டுகிறோம்...

இன்னும் ஏராளம்...

இந்த உடல், பொருள், உணர்வு ரீதியான தியாகங்கள் அனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்விற்காக என்ற ரீதியில் அல்லவா அமைகின்றது... அப்போது தக்வா என்ற வார்த்தை உயிர்பெற்றுவிட்டது என்று அர்த்தம்...

அல்லாஹ்விற்காக, பசி, தாகம், பொருள், சொல்வம், உணர்வுகளை தியாகம் செய்யப் பழகுகின்றோம்...

இந்த தியாகம் தந்த பண்புகள் யாருக்குச் சொந்தமானது...??


நாம் ரமழானில் செய்யும் தியாகங்கள்...

அத்தியாயம் ஆல இம்ரானின் 134, 135 ஆம் வசனங்கள் சொல்லும் முத்தகீயின் பண்புகளை கொண்டுவருமல்லவா..?!!!!

  • அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்.
    • தான் பசித்திருந்து பிறருக்கு பசிதீர்த்து பலகிவிட்டோம் அல்லவா...
  • கோபத்தை மென்று விழுங்குவார்கள்.
    • நோன்பாளியாக இருக்கின்றபோது இதலிருந்து தவிர்ந்திருந்தோம் அல்லவா?
  • மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்.
    • சகிப்புத்தன்மையை அள்ளிக்கொட்டியதே ரமழான்...
  • மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்.
    • பாவமன்னிப்பு, பிரார்த்தனை, என்று ரமழானில் பட்டியல் நீண்டதே...!!

இந்தப் பண்புகள் மட்டுமல்ல, சூறதுல் பகறாவின் ஆரம்ப வசனங்கள் சொல்லும் பண்புகளும் தான் எம்மில் குடிகொள்கின்றது...

  •  (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்.
    • இந்த நம்பிக்கையில்தான் ரமழானின் அத்தனை நடவடிக்கைகளும்...
  • தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்.
    • பர்ளையும் தாண்டி சுன்னாவில் கரிசனைகாட்டினோம்...
  • நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
    • இறைவன் தந்த அத்தனையையும் அவனுக்காக அவன் வழியில் தியாகம் செய்து பழகினோம்...
  • இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்.
    • இந்த நம்பிக்கையில் தானே ஒருமாத கால அல்குர்னினுடனான உறவு...
  • இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
    • இந்த நம்பிக்கையில்தானே நன்மையில் போட்டி போட்டோம்...


தக்வா என்ற வார்த்தையை வாழ்க்கையாக மாற்ற வரும் ரமழானில் விதையிட்டு, இம்மை மறுமையில் பாதுகாப்பு கேடயத்தை உள்ளத்தில் குடிகொள் வைப்போம் இன்ஷா அல்லாஹ்...

சுருக்கமாக சொல்கிறேன்..


குறிப்பு: இந்த பகுதி 2014/08/01 தினகரன் பத்திரிகையில் பிரசுரமாகியது. தலைப்புப் பொருத்தம் கருதி இங்கே பதிவு செய்கிறேன்...

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்- நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வைப் பயந்துகொள். ஒரு தீமையைச் செய்ததைத் தொடர்ந்து ஒரு நற் செயலைச் செய்துவிடு. அது அத்தீமையை அழித்துவிடும். மேலும் மனிதர்களுடன் நற்பண்பாட்டுடன் நடந்துகொள். ஆதாரம்- அத்திர்மிதி, அறிவிப்பாளர்.- முஆத் இப்னு ஜபல் (ரழியல்லாஹு அன்ஹு) நிச்சயமாக நற்செயல்கள் தீமைகளை அழித்துவிடுகின்றன”- சூறா ஹுத் - 114.

தக்வா என்ற பதம் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளல்என்ற கருத்தைத் தொனிக்கின்றது. இதனது பிறப்பிடம் உள்ளம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தக்வா இங்கே இருக்கிறது!என்று மூன்று முறை தனது நெஞ்சத்தைச் சுட்டிக்காட்டினார். உள்ளத்தில் பிறந்த தக்வாவை எல்லா இடங்களிலும் எல்லா நிலைமைகளிலும் வாழவைத்து பராமரிக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம் தனிமனிதனுக்குமுரியதாகும். எனவே தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வைப் பயந்துகொள்என உபதேசித்தார்கள்.

தக்வா என்றால் என்ன?” என உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உபை இப்னு கஃப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு உபை இப்னு கஃப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இருமருங்கிலும் முட்கள் நிறைந்த ஒற்றையடிப்பாதையில் எவ்வாறு செல்வீர்கள்?” என்று கேட்டார்கள். எனது ஆடையை தூக்கிப் பிடித்துக்கொண்டு முட்களில் சிக்கிவிடாமல் பக்குவமாக நடந்து செல்வேன்என உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பதிலளித்தார்கள். அதுவே தக்வா!என உபை இப்னு கஃப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பதிலளித்தார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒருமுறை வினவப்பட்டது. மனிதர்களில் சிறந்தவர் யார்?” அதற்கு நபியவர்கள் மஹ்மூம் எனும் இதயமுடையவர் உண்மை மிக்க நாவையுடயவர்என்றார்கள். மஹ்மூம் எனும் இதயமுடையவர் யார்?” என நபித்தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் அவர்தான் தக்வா எனும் இறையுணர்வு மிக்கவர். பாவம், அத்துமீறல், குரோதம், பொறாமை என்பன எதுவுமற்ற தூய்மையான உள்ளம் கொண்டவர்எனப்பதிலளித்தார்கள்.ஆதாரம்: இப்னுமாஜா.



வரகாபொலை முஆத் முனாஸ்

நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா? நன்றி செலுத்துங்கள்.

நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா?
நன்றி செலுத்துங்கள்.



  • வாழ்க்க வெறுத்துட்டு...
  • எனக்கு மட்டும் இப்பிடி...
  • அல்லாஹ் என்ன மட்டும்தான் சோதிக்கிரான்...
  • நான் குடுத்து வெச்சவனல்ல...
  • ஏண்ட பொறப்பு சரியில்ல...
  • எனக்கு ஒன்டுமே இல்ல...


இந்த வர்த்தைகளைத்தான் எம் உள்ளங்கள் அடிக்கடி மீட்டுகிறது. ஏன்?
இப்படிப்பட்ட நிலமைக்குக் காரணம்தான் என்ன?

சற்று சிந்தியுங்கள்...

?????????????????????????????
?????????????????????????????

பதில் கிடைத்து விட்டதா???
இல்லாவிட்டால் விடுங்கள்..!! படைத்தவனே பதில் தருகிறான்..!!
நான்றாகக் பதித்துக்கொள்ளுங்கள்...!!!!

நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்.” (அல்குர்ஆன் 14:7)

அல்லாஹ் எமக்கு வழங்கியிருக்கும் அருள் குறித்து சிந்தித்ததுண்டா..? இல்லை..!!

“உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?” (அல்குர்ஆன் 51:21)

ஆனால் நாமோ? பிறருக்கு வழங்கப்பட்ட அருள் குறித்து சிந்திக்கிறோம்... இனி எங்கே நிம்மதி கிடைக்கும்..?

நபியின் வழிகாட்டல் ஞாபகம் இல்லையா?

நீங்கள் உங்களுக்கு மேலுள்ளவர்களைப் பார்க்காது, கீழுள்ளவர்களைப் பாருங்கள்..”

ஆனால் எம் கண்களுக்கு கீழுள்ளவர்கள் காண்பதில்லையே..!! ஒருவேளை அவர்கள் எமக்குக் கீழால் இருப்பதாலோ…??!!

இல்லை, இல்லை..!! ஒரே ஒரு கேள்வி...!!

எனக்கு ஒரு விடயம் வாக்களிக்கப்பட்டிருக்கிறதுஇன்னுமொரு விடயம் வாக்களிக்கப்பட வில்லை,, இதில் எதுகுறித்து கவலைப்படவேண்டும்...???
பதில்... (வாக்களிக்கப்படாததுதான்..)

ஆனால் நாம் வாக்களித்த விடயம் குறித்துதான் கவலைப்படுகிறோம்...

வாக்களிக்கப்பட்டதா..?? அதுக்கு ஏன் கவளப்படனும்..??

இறுதி வேதத்தில் நம்பிக்கை இருந்தால் சிந்திப்போம் இந்த வசனம் குறித்து...

“இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.” (அல்குர்ஆன் 11:6)

இனியுமா கவலை...???!!

மறுமையில் எனக்கு வர இருக்கும் கூலிகள் இன்னும் நிர்னயிக்கப்படவில்லை... எனவே அது குறித்து கவலைப்படுவோம்.. அதற்காக பாடுபடுவோம்...

இதற்காக  எமக்கு கிடைத்திருக்கும் அருள்களுக்கு நன்றி சொலுத்துவோம்... எழுதியது கிடைத்தே தீரும்... எழுதப்படாதவையும் அதிகரிக்கும்... இறை வாக்கு அப்படித்தானே...

நன்றி செலுத்துவதற்கு மாற்றமாக, நன்றிகெட்டவனாக இருந்தாலும் எழுதியது கிடைத்தே தீரும்... ஆனால் நிம்மதி இருக்காது... அதேநேரம் எழுதப்படாத மறுமை வாழ்க்கையிலும் நிம்மதியிருக்காது... (அருள்களை நிராகரித்துவிட்டு சுவனத்தை கற்பனை பன்னமுடியுமா...!!!)

“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).” (அல்குர்ஆன் 14:7)

இதை அறிந்த பிறகும் நாம்... நன்றி மறப்போமா..???!!

“நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 100:6)

யா அல்லாஹ்..!! உனக்கு நன்றி செலுத்தும் அந்த சொற்ப எண்ணிக்கையினரில் என்னையும் ஒருவனாக்கு...!!!

நன்றி செலுத்துவது எப்படி..???

யாராவது எமக்கு எதனையாவது தந்து உதவி செய்தால் எப்படி நன்றி செலுத்துவோம்..?? அவர் செல்வதை தாமதிக்காமல் செய்யத் துணிவோம்..

ஆம், இதுதான் நன்றி..!!

  • இறைவன் சொன்னதை செய்யுங்கள், சொல்லாததை விட்டுவிடுங்கள்..
  • தடுத்ததை தவிர்ந்திருங்கள், அனுமதித்ததை அனுபவியுங்கள்..
  • வரம்புமீறாதீர்கள்... அவனுக்காக வாழுங்கள்...!!!


எண்ணிமுடிக்க முடியாத அருள்களைத் தந்தவனல்லவா அவன்..??!!

“இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணிமுடிக்க முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 16:18)

நன்றி செலுத்துவோம்ஈருல நிம்மதி பெறுவோம்...!!!!!!!



வரகாபொலை முஆத் முனாஸ்