Friday, September 6, 2013

கிலாபத் துல்லும் பந்து போன்றது

கிலாபத்

துல்லும் பந்து போன்றது


கிலாபத், இஸ்லாமிய ஆட்சி என்ற சிந்தணை பரவலாகப் பேசப்படும் இந்த நூற்றாண்டில். கிலாபத் பற்றிய ஒரு தெளிவை பெற்றுக்கொள்வது ஒரு முஸ்லிமின் கடமை என்ற ரீதியில் இந்த ஆக்கத்தை நான் ஏழுதுகிறேன்.

இஸ்லாம் இபாதத், இமாரத், கிலாபத் என்ற மூன்று கோட்பாடுகளின் கீழ் அமைந்த ஒன்றாகும். இதில் இபாதத் பற்றிய விடயத்தில் முஸ்லிம்கள் ஓரளவு தெளிவு பெற்றிருந்தாலும். மற்ற இரு கோட்பாடுகள் பற்றிய ஒரு தெளிவின்மையை நான் இந்த சமூகத்தில் காண்கிறேன். இதில் இமாரத் என்பது பூமியை வளப்படுத்தும் பணியைக் குறிக்கின்றது. ஏனெனில் இஸ்லாம் பிரபஞ்ச அமைதிக்காக பிரபஞ்சத்தின் படைப்பாளனாகிய ஏக இறைவனால் அவனது கலீபாவான பிரதிநிதிக்கு வழங்கப்பட்டதாகும். இந்த இஸ்லாம் மனிதனை மட்டும் அமைதிப்படுத்துவதை மாத்திரம் தனது பணியாகக் கொள்ளாது முழு பிரபஞ்சத்தையும் அமைதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. ஆகையால் ஒரு முஸ்லிம் இபாதத்தின் மூலம் தன்னை அமைதிப்படுத்துவதைப் போன்று அல்லாஹ்வின் பிரதிநிதியாக நின்று இந்த பூமியையும் அமைதிப்படுத்தும் வளப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.

இந்த இஸ்லாத்தின் மூலம் பிரபஞ்ச அமைதியை ஏற்படுத்த விரும்பும் அல்லாஹ் இந்த உலகிலுள்ள அனைத்து சித்தாந்தங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடுகள், மதங்களையெல்லாம் மிகைத்து ஓர் உலகாலும் மார்க்கமாக மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அந்த அடிப்படையில் முதல் நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) முதல் இன்று வரை இஸ்லாமிய கிலாபத் எழுச்சியுலும் வீழ்ச்சியிலும் சென்றுகொண்டிருக்கின்றதை அதன் வரலாற்றை பார்க்கும்போது தெளிவாகத் தோன்றுகிறது. இந்த சுழற்சிப்போக்கு மேல்நோக்கி எரியப்பட்ட ஒரு இறப்பர் பந்து கீழ்நோக்கி வந்து பூமியில் மோதி மீண்டும் மீண்டும் உயர்ந்து மோதி செல்வதைப்போன்று உள்ளது. எவ்வாறெனில்,

முதன் முதலில் அல்லாஹ் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சுவனத்திலிருந்து இந்த உலகிற்கு அனுப்பி பல நூற்றாண்டுகள் இஸ்லாத்தின் மூலம் இந்த புவி ஆழப்பட்டது. அதனைத்தொடர்ந்து நுஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் காலத்தில் கிலாபத் மறைந்து ஷிர்க் ஆண்டதால் பாரிய உயிரிழப்பிற்குப்பின் பின் மீண்டும் இஸ்லாமிய கிலாபத் நூஹ் நபியின் தலைமையில் உருவாகியது. இப்படியாக பல சந்தர்பங்களில் விழுந்து எழுந்து வரும்போது பல உயிர்கள் அர்பணிக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ இருக்கிறது. இவ்வாறு தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது காலத்தில் கிலாபத் அழிந்திருந்தது. அப்போது நபியவர்களும் அவரது தோழர்களும் தமது இன்னுயிரை நீத்து பலத்த போராட்டத்திற்கு மத்தியில் மீண்டும் அந்த கிலாபத்தை கொண்டுவந்து அது வளர்ந்து 1924இல் துருக்கியில் முஸ்தபா கமால் பாஷா அத்தாதுர்கின் ஆட்சியால் வீழ்ச்சிகண்டது. அதன் பிறகும் கிலாபத் மீண்டும் எழும் என்பது நபியவர்களின் வாக்காக இருக்கின்றது. அது எப்போது வரும்? என்ற கேள்விதான் இங்கு புதிராக இருக்கின்றது.

மேற்சொன்ன சுருக்கமான வரலாற்றுடன் எமது சிந்தணையை நுழைக்கும் போது அதனை ஒருவாராக ஊகிக்முடியுமாகவுள்ளது. எவ்வாறு மேலிருந்து கீழ்நோக்கி வந்த ஒரு பந்து பூமியில் மோதி பாரியதொரு அழுத்தத்தைக் கொடுத்து மேலெழுந்து செல்கின்றதோ, அதேபோன்று இஸ்லாமிய கிலாபத் எழும் சந்தர்ப்பம் எல்லாம் பல உயிர்கள் உரமாக்கப்பட்டுள்ளன, பல போராட்டங்கள் நடந்தேறியுள்ளன, பல சோதனைகள் பூதாகரமெடுத்துள்ளன....

இந்த அடிப்படையில் சமகால நிகழ்வுகளைப் பார்த்தால் எகிப்திலும் இன்னும் சில அறபுநாடுகளிலும் இஸ்லாமிய வாதிகள் தமது இலட்சக்கணக்கான உயிர்களை உரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்...... என்பதை அவதானிக்க முடியுமாயுள்ளது. இப்படியான போராட்டங்களின் மூலம் உண்மையான இஸ்லாமிய வாதிகளும் அல்லாஹ்வின் எதிரிகளும் சமூகத்திற்கு தெளிவாக காட்டப்படுகின்றார்கள். அல்லாஹ்வின் எதிரிகள் முஸ்லிம் சமூகத்தை விட்டும் ஒதுக்கப்படுகின்றார்கள்.. இதன் மூலம் விளங்குவது என்வென்றால், ஒரு ரோகெட் மேலெழும்போது பல அழிவுகளை கீழே ஏற்படுத்திவிட்டு ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கு அவசியமற்ற பகுதிகளை களற்றி எரிந்து விடுகிறது போன்று, இஸ்லாம் எழுச்சியடையும் போது அது பல அழிவுகளை சந்தித்து அதனூடாக அதன் எதிரிகளையும் அறிந்து மேலெழுந்து செல்லும்.

இன்ஷா அல்லாஹ் இந்த நூற்றாண்டு இஸ்லாத்தின் நூற்றாண்டாக இருக்கும். முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைக்கும். அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் சமீபமாகத்தான் உள்ளது. இது எப்படித்தான் இருந்தாலும் இந்த எழுச்சிக்கு தானும் ஒரு காரணகருத்தாவாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த எழுச்சிக்காக தனது உதிரங்களை உரமாகப்போடும் இஸ்லாமிய போராளிகளுக்காக வேண்டி நாம் குறைந்தளவு இறைவணிடம் இருகரம் ஏந்துவோம்.

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آَمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
 
'(விசுவாசங் கொண்டோரே!) நீங்கள் தைரியத்தை இழந்துவிடவேண்டாம் கவலையும் பட வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், நீங்கள்தாம் மிக்க மேலானவர்கள். உங்களுக்கு காயம் ஏற்பட்டதென்றால் (அதைப் பற்றி அதைரியமடையாதீர்கள். ஏனென்றால்) அந்த மக்களுக்கு, இதைப் போன்றே காயம் ஏற்பட்டுள்ளதுளூ அந்த சோதனையான நாட்களை மனிதர்களுக்கிடையில் மாறி மாறி வரும்படி நாம் செய்கின்றோம். ஏனென்றால், (உங்களில்) உண்மையாகவே விசுவாசங்கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறிவதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரைத் தத்தம் செய்யும் மாபெரும்) தியாகிகளை அவன் எடு(த்தறிவி)ப்பதற்காகவுமே (இவ்வாறு செய்கின்றான்.) இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.'
(ஆலு இம்ரான் 3:139-140)


முஆத் முனாஸ் (வரகாபொலை)
மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகம்

No comments:

Post a Comment