நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது தஃவா வராலாற்றில் படிநிலை அணுகுமுறை
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வாழ்க்கை வரலாறு பல்வேறு சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த வரலாற்றைக் கற்பதன் மூலமே நபியவர்கள் சரியாவை அல்லது தஃவாவை முன்வைத்த ஒழுங்கில் மக்களிடம் முன்வைப்பதற்கு உத்தரவாதமளிக்க முடியும் சரியாத்துறை அறிஞர்கள், அழைப்பாளர்கள், சமூக சீர்திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், பொதுவாக முஸ்லிம்கள் என்ற அனைத்து தரப்பினரும் தவிர்க்க முடியாது வாசிப்பிற்குட்படுத்துவதன் மூலமே இறைத்தூதரின் வாழ்க்கையில் அவர்கையான்ட நுனுக்கமான, தந்திரோபாய படிநிலைகளை அறிந்து கொள்வது சாத்தியமாகும் இந்தப்பின்னனியில் நேரடியாக விடயதானத்திற்குப் புகமுன் இறைத்தூதரின் வரலாற்றின் சிறப்பியல்புகளை மேலோட்டமாக முன்வைப்பது கருப்பொருள் உள்ளக விடயதானத்தை புரிந்து கொள்வதற்கு இலகுவாகவும், தெளிவாகவும் அமையும். அவற்றை எளிதாக விளங்கும் வகையில் பின்வருமாறு சுருக்கமாக முன்வைக்கிறோம்.
01. உலகில் தோன்றிய நபிமார்கள் சீர்திருத்தவாதிகளின் வரலாறுகளின் நம்பகத்தன்மை வாய்ந்ததும் மிகச்சரியானதுமான வரலாறாக அமைவது நபிகளாரின் வரலாறு மாத்திரமே இதைவிடம் மேலானது நபிகளாரின் வாழ்க்கை வரலாறு நம்பத்தகுந்த ஆதாரபூர்வ அறிவிப்புகளினூடாகவே கிடைத்தது. அவர்களது வரலாற்றில் இடம்பெற்ற எந்தவொரு முக்கியமான பெரிய சிறிய நிகழ்வுகளிலும் சந்தேகம் ஏற்படுவதற்கான எத்தகையதொரு சந்தர்ப்பத்தையும் அவை விட்டுவைக்கவில்லை. ஏலவே அனுப்பப்பட்ட எந்தவொரு தூதருடைய வரலாற்றுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பம்சமாக இது காணப்படுகிறது. உதாரணத்திற்கு மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய வரலாற்றை பொருத்தவரையில் அவர்;களுடைய வாழ்வில் இடம்பெற்ற நம்பகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோடு யூதர்களினால் புனையப்பட்ட இடைச்செருகள்களும் கலந்துள்ளன. ஆவ்வாறே பிரிதொரு உதாரணமாக ஈஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வரலாற்;றை நோக்கும் போது கிறிஸ்தவ ஆலையங்களினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள இன்ஜீல் உண்மையில் ஈஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மரணித்து பல நூறு வருடங்கள் கழித்;த பின்னரே பிரதிசெய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. குறித்த இந்த நூல் அக்காலத்தில் கிறிஸ்தவர்களிடயே பரந்து காணப்பட்ட நூற்றுக்கனக்கான இன்ஜீல் வேத நூல்களை அடிப்படையாகக் கொண்டு எத்தகைய அறிவுபூர்வமான வழிமுறையையும் பின்பற்றாமலே உருவாக்கப்பட்டது.
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வாழ்க்கை வரலாறு பல்வேறு சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த வரலாற்றைக் கற்பதன் மூலமே நபியவர்கள் சரியாவை அல்லது தஃவாவை முன்வைத்த ஒழுங்கில் மக்களிடம் முன்வைப்பதற்கு உத்தரவாதமளிக்க முடியும் சரியாத்துறை அறிஞர்கள், அழைப்பாளர்கள், சமூக சீர்திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், பொதுவாக முஸ்லிம்கள் என்ற அனைத்து தரப்பினரும் தவிர்க்க முடியாது வாசிப்பிற்குட்படுத்துவதன் மூலமே இறைத்தூதரின் வாழ்க்கையில் அவர்கையான்ட நுனுக்கமான, தந்திரோபாய படிநிலைகளை அறிந்து கொள்வது சாத்தியமாகும் இந்தப்பின்னனியில் நேரடியாக விடயதானத்திற்குப் புகமுன் இறைத்தூதரின் வரலாற்றின் சிறப்பியல்புகளை மேலோட்டமாக முன்வைப்பது கருப்பொருள் உள்ளக விடயதானத்தை புரிந்து கொள்வதற்கு இலகுவாகவும், தெளிவாகவும் அமையும். அவற்றை எளிதாக விளங்கும் வகையில் பின்வருமாறு சுருக்கமாக முன்வைக்கிறோம்.
உலகில் தோன்றிய நபிமார்கள் சீர்திருத்தவாதிகளின் வரலாறுகளின் நம்பகத்தன்மை வாய்ந்ததும் மிகச்சரியானதுமான வரலாறாக அமைவது நபிகளாரின் வரலாறு மாத்திரமே இதைவிடம் மேலானது நபிகளாரின் வாழ்க்கை வரலாறு நம்பத்தகுந்த ஆதாரபூர்வ அறிவிப்புகளினூடாகவே கிடைத்தது. அவர்களது வரலாற்றில் இடம்பெற்ற எந்தவொரு முக்கியமான பெரிய சிறிய நிகழ்வுகளிலும் சந்தேகம் ஏற்படுவதற்கான எத்தகையதொரு சந்தர்ப்பத்தையும் அவை விட்டுவைக்கவில்லை. ஏலவே அனுப்பப்பட்ட எந்தவொரு தூதருடைய வரலாற்றுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பம்சமாக இது காணப்படுகிறது. உதாரணத்திற்கு மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய வரலாற்றை பொருத்தவரையில் அவர்;களுடைய வாழ்வில் இடம்பெற்ற நம்பகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோடு யூதர்களினால் புனையப்பட்ட இடைச்செருகள்களும் கலந்துள்ளன. ஆவ்வாறே பிரிதொரு உதாரணமாக ஈஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வரலாற்;றை நோக்கும் போது கிறிஸ்தவ ஆலையங்களினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள இன்ஜீல் உண்மையில் ஈஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மரணித்து பல நூறு வருடங்கள் கழித்;த பின்னரே பிரதிசெய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. குறித்த இந்த நூல் அக்காலத்தில் கிறிஸ்தவர்களிடயே பரந்து காணப்பட்ட நூற்றுக்கனக்கான இன்ஜீல் வேத நூல்களை அடிப்படையாகக் கொண்டு எத்தகைய அறிவுபூர்வமான வழிமுறையையும் பின்பற்றாமலே உருவாக்கப்பட்டது.
உலகில் பரந்து காணப்படும் மதங்களைச் சுமந்து வந்த தூதர்களுடைய வரலாறுகளின் நிலமையே இவ்வாறு எனின் உலகில் பல நூறு மில்லியன் சனத்தொகையினர் பின்பற்றும் தத்துவஞானிகள், மதங்களை உருவாக்கியவர்களின் வரலாறுகள் எவ்வளவு தூரம் சந்தேகங்களுக்கிடமானவையாக இருக்க முடியும் என்பதை எம்மால் ஊகித்துக் கொள்ள முடியும்
இறைத்தூதரின் முன்மாதிரி மாறிவரும் உலகமயமாக்கங்களுக்கு அப்பால் இறுதி நாள்வரை வழிகாட்டலுக்கு நிரப்பம்பெற்றது. புவியீர்ப்புச்சக்தியைத் தாண்டி இன்றைய விஞ்ஞான, அறிவியல், தொழிநுட்ப யுகம் கூறுவது போன்று மனிதன் தனது இருப்பிடத்தை செவ்வாய்க்கிரகத்தில் அமைப்பதாக இருந்தாலும் சரி, அங்கும் மனித வாழ்வின் நிலைத்தலுக்கு இறைத்தூதரின் வழிகாட்டல்கள், அனுகுமுறைகள் அவசியப்பாற் பட்டதல்ல என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பின்னனியல் இறைத்தூதரின் வாழ்வியல் முன்மாதிரிகளை ஒட்டு மொத்தமான பார்வைகளைத் தவிர்த்து இறைத்தூதரின் தஃவா அனுகு முறையை அவர் கையான்ட படிநிலை அனுகு முறையை மாத்திரம் இங்கு முன்வைக்கின்றோம்.
இந்நோக்கில் இறைத்தூதரின் தஃவா வாழ்வை அல்லது அணுகுமுறையை இத்தலைப்பின் கீழ் பூரணமாக நோக்குவதைத் தவிர்த்து அவர் கையாண்ட தஃவாவின் படிநிலைக் கட்டங்களை அடையாளப்படுத்தலாகவே இது அமைகிறது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இறைத்தூதர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு பிறகுள்ள வாழ்க்கையை இரண்டாக வகைப்படுத்தலாம். அவை, அன்றிருந்த பௌதீக மனித வேறுபாடுகளால் ஒன்றுக்கொண்று தன்மையால் மாறுபடுகின்றது.
1. மக்காவில் வாழ்ந்த காலம் - 13 வருடங்கள்
2. மதீனாவில் வாழ்ந்த காலம் - 10 வருடங்கள்
அதேபோல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் அழைப்புப் பணியில் கடந்தவந்த பாதைகளை ஆழ்ந்து கவனிக்கும் போது ஒரு படிநிலை, தந்திரோபாய அணுகுமுறையை கையாண்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். மக்கா வாழ்க்கையில் நபிகளாரின் தஃவாப் படிநிலை மூன்று கட்டங்களாக அமைந்திருந்தது.
1. மறைமுக அழைப்பு –
இது மூன்று ஆண்டுகள் எனக் குறிப்பிடப் படுகிறது. ஸுறா முத்தஸ்ஸிரின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டதும் ஏகத்துவ அழைப்பிற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தயாரானார்கள். ஆரம்பமாக நெருங்கிய குடும்பத்தார்கள், மற்றும் நெருங்கிய நன்பர்களில் தனது நம்பிக்கைக் குரியவர்களுக்கும் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார்கள். உண்மையை நேசிப்பவர்கள் நல்லவர் என தான் அன்னியவர்களுக்கு ஏகத்துவத்தை எத்திவைத்தார்கள். இவர்கள் அஸ்ஸாபிகூன் அல்அவ்வலூன் முந்தியவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இதில் முதலில் மணைவி கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) பின்னர் அடிமை ஸைத் இப்னு ஹாரிஸா, நபிகளாரின் பராமரிப்பில் இருந்த அலி இப்னு அபீதாலிப், தோழர் அபூ பக்கர் (ரழியல்லாஹு அன்ஹும்) என்று நீண்டு செல்கிறது. உண்மையில் இதை உற்றுநோக்குகையில் படிநிலை உணுகுமுறையை எம்மால் அவதானிக்க முடியும். முதலில் தனது வாழ்க்கைத் துணை, பின்னர் தனது அடிமை, பின்னர் தனது பராமரிப்பில் உள்ளவர்கள், பின்னர் தனது நண்பர்கள் என்று நீண்டு செல்கிறது.
இக்காலப்பிரிவில் நபிகளாரின் படிநிலை ஏகத்துவ விளக்கங்களைக் கற்றுக்கொடுத்தல் நற்பண்புகளில் ஆர்வமூட்டி அவர்களின் இதயங்களைத் தூய்மைப்படுத்தும், இறைவசனங்களை ஓதிக்கான்பித்தல் என்ற தனிநபர் தஃவாவையே மேற்கொண்டார்கள். இம்மூன்று ஆண்டுகளும் குறைஷிகள் மட்டும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அழைப்புப் பணியை அறிந்திருந்தனர்.
2. இறைத்தூதரின் அடுத்தகட்ட படிநிலை
முதலாம் பிரிவில் இரகசியப் பிரச்சாரத்தில் உள்வாங்கப்பட்ட தனிநபர்களின் கூட்டுமொத்த மனித வளத்துடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தார்கள். இது பகிரங்க அழைப்பு என அடையாளப்படுத்தப் படுகிறது.
'நிர் உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!' (அல்குர்ஆன் 26:14)
இந்த வசனம் இறக்கப்பட்டதும் இஸ்லாமிய அழைப்பைப் பகிரங்கப்படுத்தி, தீமையை நன்மையால் எதிர்கொள்ளல் வேண்டும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்க கட்டளைபிரப்பிக்கப்பட்டது. இந்தப் பிண்ணனியில் ஹாஷிம் கிளையார், முத்தலிப் வம்சத்தில் சிலரும் இணைக்கப்பட்டனர். சற்று பிந்திய காலத்தில் அபூதாலிப் தனக்கு பாதுகாப்பாளிப்பார் என்பதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உறுதியாக அறிந்த பின்னர் ஸபா மலை உச்சியில் ஏறிநின்று 'யா ஸபாஹா.. யா ஸபாஹா!' என்று சப்தமிட்டார். பிறகு குறைஷி வம்சத்தின் ஒவ்வொரு பிரிவுகளையும் அழைத்தார்கள். சத்தியத்தின் பக்கம் மக்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் வேதனை குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்து ஒவ்வொரு கூட்டத்தரின் பெயர்களையும் தனித்தனியாகவும், பொதுவாகவும் கூவி அழைப்புவிடுத்த படிநிலை அணுகுமுறையை இங்கு நாம் கண்டு கொள்கிறோம்.
அதே போல் இக்காலப்பிரிவில் அவரின் தூதுத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராக பல எதிர்ப்பலைகள் தோன்றி எத்தகைய இன்னல்களுக்கு அவரும் அவரது தோழர்களும் முகம்கொடுத்தார்கள் என்பது நாம் அறிந்ததே. விரிவஞ்சி அவைகள் தவிர்க்கப்பட்டது விடயதானம் மாத்திரம் இங்க கருத்தில் கௌ;ளப்படுகிறது. இத்தகைய கால கட்டத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் இலகுவாக்கி அவற்றிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க மதினுட்பமான அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி இரண்டு திட்டங்களை வகுத்தார்கள். அவ்விரு திட்டங்களும் அழைப்புப் பணியை வழிநடாத்துவதிலும் இலட்சியத்தை அடைவதிலும் பற்பல பலன்களை ஈட்டித்தந்தன.
1. அழைப்புப் பணிக்க மைய்யமாகவும், ஒழுக்கப் போதனைகளுக்கு உறைவிடமாகவும் அர்கம் இப்னு அபில் அர்க்கம் அல்மக்ஸுமி என்பவரின் வீட்டைத் தேர்ந்தொடுத்தார். முஸ்லிம்கள் இரகசியமாக ஒன்றுகூட அவ்வீட்டை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தேர்ந்தெடுத்து, அல்குர்ஆனை ஓதிக்கான்பித்து அவர்களுக்கு அதன் பன்புகளையும் சட்ட ஞானங்களையும் கற்றுக்கொடுத்தார்கள். இன்றைய பரிபாஷையில் கூறுவதாக இருந்தால் தஃவா மத்திய நிலையம் என அழைக்கலாம்.
2. முஸ்லிம்களை ஹபஷாவிற்கு குடிபேருமாறு கட்டளையிட்டார்கள். நபித்துவத்தின் நான்காம் ஆண்டு நடு அல்லது இறுதிப்பகுதியில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பாளர்கள் வரம்புமீற ஆரம்பித்தார்கள். தொடக்கத்தில் குறைவாக தென்பட்ட துண்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததை அவதானித்த போது,'அல்லாஹ்வுடைய பூமி நெருக்கடியானதல்ல. எனவே இடம்பெயரும் வழியைத் தேர்ந்தெடுங்கள்.' என்று சுட்டிக்காட்டப்பட்ட அத்தியாயம் ஸுமரில் உள்ள 10ஆம் வசனம் இறங்கியதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கட்டளைப் படி நபித்தோழர்களின் ஒரு குழுவினர் ஹபஷாவிற்கு நாடு துறந்து சென்றனர்.
உண்மையில் இறைத்தூதரின் தூதுப்பணி, செயற்பாடுகளை குறைஷிகள் வன்மையாக எதிர்த்து இறைத்தூதருக்கும் அவரின் தோழர்களுக்கும் இழைத்த கொடுமைகள் நாம் அறிந்ததே. இவாவாறான நிலைமைகளில் இறைத்தூதரின் சமூகம் மேற்கொண் எதிர்ப்பு நடவடிக்கை பின்வருமாறே அமைந்தது.
1. உச்சகட்ட பொருமை
2. பொருமையுடன் கூடிய பொருமை
3. பகிரங்கமாகப் போராடல்
அதேவேலை இறைத்தூதர் அவர்கள் பிரபஞ்சப் படைப்பாளனுடன் நெருங்கிய தொடர்பையும் ஆதரவையும் முழுமையாக பெருகின்ற படிநிலையைக் கையாண்டார்கள். இதே தொடரில் குறைஷிகளின் செயற்பாடுகள் ரஸுல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிரா நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்ற போதும் இறைத்தூதர் ஒரு போதும் தனது பணியை விட்டுவிடவோ தாமதப்படுத்தவோ இல்லாமல் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி தனக்கிருக்கும் மனித பௌதீக இயலுமைகளுக்கேற்ப தனது பணியை முன்னொடுத்தார்கள். துயர ஆண்டில் தனக்குப் பக்கபலமாக இருந்தவர்களின் பிரிவிற்குப் பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சமூகம் குறைஷிகளின் மிக அதிகமான கொடுமைகளுக்கு ஆளானார்கள். இக்காலப்பிரிவில் முஸ்லிம்களிடமிருந்த பொருமையும் உறுதியும் நிலைகுலையாமையும் வியப்புக்குரியது. உண்மையில் இஸ்லாமிய அழைப்பின் நோக்கம் முற்றிலும் அறியாமையால் நிரம்பிய கொள்கைகளையும் அதன் அநியாயமான சடங்குகளையும் அடியோடு அழித்துவிடுவதாகும். இதன் மூலம் பூமி அனைத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உலகிலுள்ள அனைத்து அரசியல் அமைப்புகளையும் வெற்றிகண்டு முழு மனித சமூகத்திற்கும் அல்லாஹிவின் பொருத்தத்தின் பால் வழிகாட்டுவது என்ற விடயத்தை இறைத்தூதரின் தோழர்கள் இஸ்லாத்தின் செய்தியை ஏற்ற மக்காவாழ் மனிதர்கள் புரிந்து வைத்திரந்தனர். இந்த புரிதல் தான் சோதனைகளுக்கப்பாலும் நிலைத்திருப்பதற்கு பின்னனியாக அமைந்தது. அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையும், உள்ளங்களை ஈர்க்கும் ரஸுலுல்லாஹ்வின் தலைமைத்துவமும், அமானிதங்களைச் சுமந்ததன் தார்மீக உந்துதல்களும் மறுமை மீதான நம்பிக்கைகள் என்பன தான் அசாதாரண சூழலில் இறைத்தூதரின் சமூகம் கையாண்ட அணுகுமுறை என்பதை புரிந்து கொள்ளலாம். அதுமாத்திரமல்லாமல் எதிர்காலம் பற்றி அல்லாஹ் அக்கால முஸ்லிம்களுக்கு கூறிய சுப செய்திகள் மேலும் ஒரு உந்து சக்தியை வழங்கி அவர்களை தஃவா வாழ்வில் இஸ்திரப்படுத்தியது. துன்பம் துயரங்களைச் சகித்து பழிவாங்கும் மனப்பாங்களை நீக்கி ஆன்மிக பலத்துடன் மன்னிக்கும் பன்பாட்டை இறைத்தூதரின் கூட்டு மொத்த மனிதவளத்துக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
3. மூன்றாம் கட்டம்
மக்காவின் எல்லைகளுக்கப்பால் அல்லாஹ்வையும் தூதுத்துவத்தையும் அறிமுகப்படுத்தும் அடுத்த கட்டத்தை நோக்கி இறைத்தூதர் பயனிக்கிறார்கள். நபித்துவத்தின் 10ஆம் ஆண்டு தனது அடிமை ஸைத் இப்னு ஹாரிஸாவுடன் தாயிபிற்கு கால்நடையாகச் சென்று கால் நடையாகவே திரும்பி வந்தார்கள். வந்த வழியிலிருந்த ஒவ்வொரு கூட்டத்தாருக்கும், பிரமுகர்களுக்கும் இஸ்லாமிய அழைப்பு கொடுக்கப்பட்டும் யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. அடுத்து இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கோத்திரங்களுக்கும் தனிநபர்களுக்கும் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தல் ஹஜ்ஜுடைய காலம் நெருங்கும் போது மக்கள் அனைவரும் பல திசைகளிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வருவார்கள் அவர்களின் ஒவ்வொரு கோத்திரத்தினருக்கும் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி அதன் பக்கம் அழைக்கும் உபாயத்தை தனது தஃவாவின் அடுத்த கட்ட நகர்வாக மேற்கொண்டார்கள். நுபுவ்வத்தின் நான்காம் ஆண்டிலிருந்து இவ்வாறுதான் மக்களை அழைத்தார்கள். என்றாலும் நுபுவ்வத்தின் 10ஆம் ஆண்டிலிருந்து நான் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து வைப்பதற்கு எனக்கு இடம் கொடுத்து உதவி செய்து எதிரிகளிடமிருந்து எனக்கு பாதுகாப்பளியுங்கள் என்று மேலும் ஒரு கோரிக்கையை முன்வைத்து அழைப்புவிடுத்தர்கள். நபித்துவத்தின் 4ஆம் ஆண்டிலிருந்த மெல்ல மெல்ல ஆரம்பித்த அழைப்புப் பணி மதீனா செல்லும் வரை நீடித்தது. இன்னன்ன கோத்திரங்களை நுபுவ்வத்தின் 10ஆம் ஆண்டு உருதிப்பட கூற முடியாவிட்டாலும் பெரும்பாலான கோத்திரங்களை நுபுவ்வத்தின் 10ஆம் ஆண்டு தான் அழைத்தார்கள்.
நபித்துவத்தின் 11ஆம் ஆண்டு ஹஜ் காலத்தில் அகபா என்ற இடத்தில் ஹஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த ஆறு இளைஞர்களை சந்திக்கிறார்கள். இந்தச் சந்திப்பு ரஸுலுல்லாஹ்வின் தஃவாவின் அடுத்த கட்ட நகர்விற்ற அடர்த்தியையும் பக்க பலத்தையும் கொடுத்தது. இந்த ஆறு இளைஞர்களும் புனித இஸ்லாத்தை ஏற்று மதீனாவில் நலிவுற்ற சமூக அமைப்பை மனித நலன் பேனும் சமூக ஒழுங்குகளைக் கொண்ட உன்னதமான மாற்றத்தின் அத்திவாரங்களாக இருந்தார்கள். இப்னு ஹிஷாம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுவது போல் இந்து ஆறுபேரும் மதீனாவிற்கு இஸ்லாமிய அழைப்பை எடுத்துச் சென்றார்கள். அங்கு மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பற்றி பேசப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு ஒரு பக்கம் இயலுமை, இயலாமை, இன்பம், துன்பம், வெற்றி, தோல் என்ற இரண்டிற்கும் அப்பால் நபிகளாரின் மிஃராஜ் பயணம் அமைந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அர்கள் மக்காவில் தனது தஃவாப்பணியை அன்றிருந்த சூழ்நிலைக்கு பொருத்தமான சாதகமான வளங்களைக் கொண்டு அதனைத் தனக்கு வழுவாகப் பயன்படுத்தி அவ்வாறு பெறப்பட்ட அல்லது இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களையும், அதன் பின்னரான வளங்களையும் உச்சமாகப் பயன்படுத்தி கட்டம் கட்டமாக தனது பணிகளை முன்னொடுத்தார்கள். உண்மையில் எந்வொரு விடயத்தையும் சாதாரணமாக சாதிக்க முடியாது சாதாரண வெற்றிகளுக்குக் கூட கட்டம் கட்டமான நகர்வு அவசியம். அது இயற்கையின் இயல்பு அதனைத் தாண்டும் போது வெற்றியின் ஸ்திரப்படும் எனவே இதே அணுகுமுறையைத் தான் இறைத்தூதரும் கையாண்டார்கள். அன்றிருந்த உலகிலும் குறிப்பாக அரபுலக நாடுகளிலும் மனித உறவுகள் எவ்வாறு அமைந்திருந்தன நாகரீக கலாச்சாரங்கள் எவ்வாறு எமைந்திருந்தன என்பதை வரலாற்றை வாசிப்பிற்கு உற்படுத்துவதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இத்தகைய ஒரு கால கட்டத்தில் புவியியல் ரீதியான கேந்திர பிராந்தியத்திலிருந்து எவ்வாறு அல்லாஹ்வையும் அவனது அவனது தூதையும் அறிமுகப்படுத்துவது என்று மிக நுணுக்கமாகத் திட்டமிட்ட அதை எவ்வாறு மக்காவில் நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் இதனூடாக புரிந்து கொள்ளலாம். மிஃராஜைத் தொடர்ந்து வின்னுலகிற்கு நபியவர்களை அழைத்து புதியதொரு உத்வேகத்தைக் கொடுத்து அடுத்த கட்ட நகர்வுக்க நபியவர்களை அல்லாஹ் தயார்படுத்தினான். இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்திற்கான அடிப்படைக் கொள்கைகள் ஒழுக்கங்கள், கலாச்சாரங்கள், சமூக ஒழுங்குகள் என்பன எவ்வாறு அமைய வேண்டும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தனி நாட்டையும் அதிகாரத்தையும் கொடுக்கும் போது அந்த சமுதாயம் கடைபிடிக்க வேண்டிய சட்டதிட்டங்களை அல்லாஹ் நபியவர்களுக்கு கூறினான். அதேபோன்று வெகுவிரைவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தையும் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை விரிவாக்குவதற்கு ஒரு மைய்யத்தை அல்லாஹ் எனக்கு தர இருப்பதாக மக்கா இறுதியில் இடம்பெற்ற இந்த வின்னுலகப் பயணம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அமைந்தது.
ஒட்டுமொத்தமாக நோக்குகின்றபோது மக்காவில் நபியவர்களின் கட்டம் கட்டமான அழைப்புப் பணியின் முதன்மையான அம்சம் கருத்தியல் பலமாகும். அதாவது, அல்லாஹ்வைப் பற்றியும் அவனது அவதானத்தின் மீதும் நன்மை செய்து விசுவாசமாக நடக்கக்கூடியவர்களை அவன் கண்காணிக்கிறான் என்பதன் மீதும் மக்கள் கொள்கின்ற நம்பிக்கை (ஈமான்), ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்ளுங்கள இணைவைப்பதை விட்டும் விலகிவிடுங்கள். மற்றவர்களுக்க அடிபனிவதை விட்டு அல்லாஹ்வின் அடிமைகளாக திகழுங்கள். மறுமையில் இறைவனுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் உங்களுடைய உலக வாழ்வின் முழு அமைப்பையும் நிலை நாட்டுங்கள் என்ற போக்கில் இறைத்தூதரின் மக்கா காலப்பிரிவின் தஃவாவின் கட்டம் கட்டமான நகவுகளாக இருந்தன.
மதீனாவில்.....
படைப்பினங்களிலே சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்து, அவனைத் தனது பிரதிநிதியாக ஆக்கிய, படைப்பாளனாகிய அல்லாஹ், மனிதன் எவ்வாறு வாழவேண்டும், அவனது இலக்கு என்ன, அதை எவ்வாறு அடைவது,... என்பதையும் தனது தூதர்கள் மூலம் காட்டித்தந்துள்ளான். ஆந்த வரிசையில் இறுதியாக வந்த நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த உலகத்தின் சட்ட யாப்பாக அல்குர்ஆனை மாற்றும் முயற்சியில் ஒரு படிமுறை வழிமுறையை கையாண்டுள்ளார் என்பதை அவரது சீறா உணர்த்துகிறது. அந்த வகையில் அவர் மதீனாவில் ஒரு சமூகத்தை உருவாக்கி ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பாக் கண்டம் வரை வரிந்த சாம்ராஜ்ய உருவாக்கத்திற்கு எவ்வாறு அடித்தளமிட்டார் என்பதை சற்று நோக்குவோம்.
1. முதலாம் அகபா உடன்படிக்கை (நுபுவ்வத் - 12)
மக்காவாசிகளின் கெடுபிடிகள் அதிகரித்த போது தான் கான நினைத்த உன்னத சமூகத்தை உருவாக்க மக்காவுக்கு வெளியே ஹபஷா, தாயிப், மதீனா... என்று இடங்களை ஆராய்ந்து பார்த்தார். அதனடிப்படையில் நுபுவ்வத் 12 ஹஜ்ஜுக்காக மக்கா வந்த கோத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார். அவர்களில் மதீனாவிலிருந்து வந்த ஒவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்களைச் சேர்ந்த சுமார் 15 பேர் அடங்கிய நபியவர்களை ஏற்று மதீனாவில் இடம் தருவதாக வாக்களித்தார்கள்.
பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது தூதைப் பிரச்சாரம் செய்வதற்காக முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களையும் கூடவே அனுப்பிவைத்தார். அவர் அங்கு சென்று அஸ்அத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் இணைந்து பெரும் சமூகமொன்றை இஸ்லாத்தின் பக்கம் இணைத்தார்கள்.
2. இரண்டாம் அகபா உடன்படிக்கை (நுபுவ்வத் - 13)
பின் அடுத்த வருடம் ஹஜ்ஜுக்கு வரும் போது தம்முடன் எழுபதிற்கும் மேற்பட்டவர்களை கூட்டிவந்து, நபியவர்களுக்கு உறுதியான ஒரு பைஅத்தை அளித்தார்கள். பின் அவர்களிலிருந்து 12 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை மதீனாவில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பிரச்சாரகர்களாக அனுப்பி வைத்தார்கள்.
3. ஹிஜ்ரத் (நுபுவ்வத் - 14)
இவ்வாறாக மதீனா உருவாகிக் கொண்டிருக்கும் போது மக்காவில் தான் உருவாக்கிய தனி ஆளுமைகளை மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்யுமாறு பணித்தார்கள். அப்போது அந்த தனி ஆளுமைகளை மதீனா சமூகம் அரவனைத்துக் கொண்டு ஒரு சமூகமாக மாறியது.
இவ்வாறு பெரும்பாலான சஹாபாக்கள் ஹிஜ்ரத் சென்ற பின் இறுதியாக நபியவர்கள் திட்டமிட்டு, குறைஷி வாலிபர்கள் கூரிய வாள்களுடன் வீட்டை முற்றுகையிட்டிருந்த வேலை அவர்களது கண்ணில் படாது நுபுவ்வத் 14 ஸபர் மாதம் பிறை 27 நடுநிசியில் மதீனா நோக்கி தனது உற்ற தோழன் அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் பயனமாகிறார்.
தான் அடைய இருக்கும் அந்த உன்னத இலக்கை அடைய ஒரு சமூகத்தை நோக்கி போக இருக்கும் அவர் அந்த இலக்கை அடைய எடுத்த முன்னெடுப்புகள் கவனிக்கத்தக்கது.
- இறைவனுடன் நேரடி தொடர்பு பெற்ற ஒருவர், ஓர் உத்தமப் புத்திரர், யூதர்களின் கெடுபிடிகளிலிருந்து உங்களைக் காப்பற்றக் கூடிய ஒருவர் உங்களை நோக்கி வரஇருக்கிறார் என, முதலில் மதீனாவில் பிரச்சாரம் செய்து, அந்த மக்களை நபியை ஏற்கும் மனப்பாங்கிற்கு மாற்றினார்.
- பின் அந்த நபி மூலம் உருவாக்கப்பட்ட முன்மாதிரிகளையும் மதீனா சமூகம் காண்கிறது. அதனால் நபியின் தேவையை மேலும் உணர்கிறார்கள்.
- இவ்வாறு எதிர்பார்ப்புடன் இருக்கும் சமயம், உடனடியாக மதீனா நுழையாது குபாவில் தங்கி அங்கு சமூகத்தை ஒன்றினைக்கும் தளமான மஸ்ஜிதொன்ரை நிறுவி, அதிலே ஜும்ஆத் தொழுகையையும் அறிமுகம் செய்து, மதீனத்து மக்களின் எதிர்ப்பார்ப்பு பிழைக்குமோ என்றிருக்கும் வேலையில் எந்தவித பதற்றமோ, கர்வமோ இன்றி நபியவர்கள் ஸனிய்யதுல் வதா என்ற மலைப்பாங்கான பிரதேசத்திலிருந்து மதீனாவினுல் பிரவேசித்தார்கள். இந்த நிகழ்விற்கு பின்வரும் உதாரணத்தை கூறுவது அதனை இன்னும் தெளிவாக உணர்ந்து கொள்ள போதுமானதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
ஒரு தாய் தனது முதற் குழந்தையைப் பிரசவிக்க வைத்தியசாலை செல்கின்றாள். அந்த குழந்தையைக் கண்டு சந்தோஷப்பட குடும்பத்தார்கள் தவித்துக்கொண்டிருக்கும் வேலையில் குழந்தை பிரசவிக்காதோ என் ஏக்கத்தில் இருக்கும் சமயம் அந்தக் குழந்தை எந்தக் குறையுமின்றி பிரசவமாகின்றது. என்றால் அங்குள்ள உறவுகளுக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
இவ்வாறாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவினுள் நுழைந்த போது அந்த மக்களின் எண்ணங்களை புரிய, அவர்கள் நபியை வரவேற்க பாடிய கவிவரிகள் சான்றாய் உள்ளன.
நமக்கு முழுநிலா தோன்றியது,
ஸனிய்யதுல் வதா என்ற மலைப்பாங்கான பிரதேசத்திலிருந்து.
அல்லாஹ்விற்காக அழைப்பவர் அழைக்கும் போதெல்லாம்,
நாம் நன்றி செலுத்துவது கடமையாயிற்று.
எங்களுக்கு அனுப்பப்பட்டவரே!
பின்பற்றத் தகுந்த மார்க்கத்தைத் தான் கொணர்ந்தீரே!
உம் வருகை மூலம் மதீனாவிற்கு ஒளியூட்டினீர்.
சிறந்த அழைப்பாளனே உம்மை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம்.
இக்கவிவரிகள்,அம்மக்கள் எவ்வாறு நபிக்கு கட்டுப்பட்டார்கள் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
4. புதிய சமூகத்தைக் கட்டியெழுப்ப முதல் பணி மஸ்ஜிதுந் நபவியை நிறுவுவது.
நபியவர்கள் தான் நினைத்த அந்த உன்னதமான சமூகத்தை உருவாக்க ஒரு மைய்யப் புள்ளியை உருவாக்க முடிவெடுத்து, இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமான ஒரு காணியைப் பெற்று, அந்த இடத்தில் ஒரு மஸ்ஜிதை நிறுவி, அதனுடன் அனைத்துத் தரப்பினரும் தொடர்பு வைக்க வேண்டும் என்பதற்காக. அதனைக் கல்விக் கூடமாகவும், வியாபாரச் சந்தையாகவும், இறைவனுடன் தொடர்புபடுத்தும் ஓர் இறையில்லமாகவும், அரசியல் அமர்வுகளை நடாத்தும் ஒரு பாராளுமன்றமாகவும் அதனை மாற்றியமைத்தார். இதன் போது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அந்தப் மைய்யப் புள்ளியோடு தொடர்புபட்டனர்.
5. சகோதரத்ததுவ ஒப்பந்தம்
முஹாஜிர்கள் என்றும் அன்ஸார்கள் என்றும் இருவேறு பிரிவாக இருந்த அந்த சமூகத்தை ஒரு சமூகமாக இணைக்க வேண்டிய கடப்பாட்டை உணர்ந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அன்ஸார்களளுடன் முஹாஜிர்களை இணைத்து அவர்களை சகோதரர்களாக மாற்றினார்கள். இந்த மாற்றம், தான் அனுபவித்த அழகிய மனைவியர்களை நிறுத்தி இதில் உமக்கு விரும்பியவளைக் கேளுங்கள் நான் அதனை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன் என்று ஒரு அன்ஸாரி சகோதரர் முஹாஜிர் சகோதரரைப் பார்த்துக் கூறும் அளவிற்கு மாறி, அந்த இரு பிரிவினரும் ஒரு தாய் பிள்ளைகள் போன்று மாறினார்கள். இவ்வாறு முஸ்லிம்களிடமிருந்து பிரிவினைகளை நீக்கி சுமூகமான நிலைக்கு கொண்டு வருகிறார்.
6. இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்
மேற் சொன்ன பிரகாரம் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு வழுவான பிணைப்பை ஏற்படுத்தி விட்டு, முஸ்லிம்களைச் சூழவுள்ள முஸ்லிம் அல்லாதவர்களுடன் சமூக உறவை சிறப்பாகவும் சாதகமாகவும் அமைத்து முழு நாட்டையும் ஒருமைப்படுத்த வேண்டும் என்ற தேவையை உணர்ந்தார்கள். அதனடிப்படையில் சுயநோக்கங்களும், இனவெறியும் நிரம்பியிருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல், பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஒப்பந்தத்தை அவர்களுடன் கைச்சாத்திட்டு, முழு மதீனாவையும் நிம்மதி, பாதுகாப்பு என்ற போர்வையால் போர்த்தி, ஒர் ஒருமைப்பாடான சூழ்நிலைக்கு கொண்டுவந்தார்கள்.
7. குறைஷிகளுடன் ஆயுதமேந்திப் போராடுதல்
இவ்வாறு மதீனாவை ஓர் ஒருமைப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, ஒரு சுமூகமான, பாதுகாப்பான நிலையை கண்டபின், முஸ்லிம்களை வேறோடு பிடுங்கி எரிய வேண்டும் என்று கச்சைகெட்டிக்கொண்டு இறங்கியிருந்த குறைஷிகளின் மீது தமது கவனத்தைத் திருப்பினார். அந்தவகையில் அவர்களுடன் பத்ர், உஹத், கந்தக்... என்று பல தற்காப்பு யுத்தங்களை மேற்கொண்டு அந்த சிறிய அரசின் அதிகாரத்தை காப்பாற்றிக் கொண்டது மற்றுமல்லாது அவர்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வையும் பதியச் செய்தார்கள்.
8. யூதர்களுடன் போராடுதல்
இவ்வாறு குறைஷிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் வேலையில், மதீனாவிற்கு உள்ளே இருந்து முஸ்லிம்களுடன் குரோதம் இருந்தும் அதை வெளிக்காட்டாமல் மறைத்து வைத்திருந்த யூதர்கள் தமது நயவஞ்சகத்தை காட்டி முஸ்லிம்களுக்கு எதிராகவும், குறைஷிகளுக்கு சார்பாகவும் செயற்பட முற்பட்டார்கள். உடனே நபியவர்கள் இந்நயவஞ்சகர்களின் பக்கம் தமது கவனத்தைத் திருப்பினார்கள்.
பனூ கைனுகா, பனூ நழ்ர், பனூ குரைழா என ஒவ்வொன்றாக மதீனாவிலிருந்து வெளியேற்றி மதீனாவை மீண்டும் அமைதிப்படுத்தினார்.
9. ஹுதைபியா உடன்படிக்கை
இவ்வாறாக குறைஷிகளும் ஓரளவு அடக்கப்பட்டு, யூதர்களும் விரட்டப்பட்ட பின் நபியவர்கள் ஹிஜ்ரி 6 துல் கஃதா மாதம் தான் கண்ட கனவிற்கேற்ப ஆயரம் பேரளவிலான சஹாபாக்களுடன் புனித மக்கமா நகரிற்கு உம்ரா செய்வதற்காக சென்றார்கள். இதை அறிந்த குறைஷிகள் எப்படியாவது இவர்களைத் தடுக்க வேண்டும் என்று கச்சைக் கட்டிக்கொண்டு செலாற்றலானார்கள். அப்போது முஸ்லிம்கள் நாம் போர் செய்வதற்காக வரவில்லை, கஃபாவைத் தரிசித்துவிட்டுச் செல்லவே வந்தோம் என்பதை தெளிவுபடுத்த உஸ்மான (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அனுப்பினார்கள்.
நீண்ட நேரமாகியும் நபித்தோழர் உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வராததால், அவர் கொலை செய்யப்பட்டார் என வதந்தியும் அவ்விடத்தில் பரவ, நபியவர்கள் எதற்கும் என சஹாபாக்களிடம் யுத்தம் செய்ய பைஅதுர் ரிழ்வான் என அழைக்கப்படும் உன்னதமான அந்த சத்தியப்பிரமாணத்தை எடுத்து, தயார் நிலையில் இருந்தார்கள். அப்போது உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் திரும்பி வந்ததும், குறைஷிகளோடு ஒர் ஒப்பந்தம் செய்யத் தலைப்பட்டனர்.
இதன் பிரகாரம் நபியவர்களுக்கும், குரைஷிகளின் சார்பில் சுஹைல் இப்னு அம்ரிற்கும் மத்தியில் ஹிஜ்ரி 6 துல்கஃதா மாதம் ஹுதைபியா எனும் இடத்தில் ஓர் ஒப்பந்தம் நடைபெற்றது. அதன் அம்சங்கள் வருமாறு:
i. நபியவர்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும். மக்காவிற்குள் நுழையக்கூடாது. அடுத்தவருடம் முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களுடன் வரலாம். ஆனால், அவற்றை உரைகளுக்குள் வைத்திருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித தொந்தரவும் கொடுக்கப்படமாட்டாது.
ii. பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யக்கூடாது.
iii. யாரொருவர் முஹம்மதுடன் ஒப்பந்தத்திலும் உடன்படிக்கையிலும் சேர்ந்துகொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். குறைஷிகளின் ஒப்பந்தத்திலும் உடன்படிக்கையிலும் சேர்ந்து கொள்பவர்கள் அதில் சேர்ந்து கொள்ளலாம். எந்தவொரு கிளையினரும் இந்த இரு வகுப்பினரில் ஒருவருடன் சேர்ந்து கொள்கிறாரோ அவர் அந்த வகுப்பாரையே சேர்ந்தவராவார். அதற்குப் பின் அந்தக் கிளையினருடன் யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அது அந்த வகுப்பினர் அனைவர் மீதும் அத்துமீறியதாகும்.
iv. குறைஷிகளில் யாராவது தன் பாதுகாவலரான நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மத் அவரை குறைஷிகளிடம் திருப்பி அனுப்பிட வேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவர் முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்படமாட்டார்.
இவ்வாறு போடப்பட்ட ஒப்பந்த அம்சங்களுக்கமைய முஸ்லிம்கள் செயற்பட இவை முஸ்லிம்களுக்கு முற்றிலும் சார்பாக மாறியது.
10. ஏனைய சாம்ராஜ்யங்களுக்கு தூதை எத்திவைத்தல்
இவ்வாறு குறைஷிகள் முற்றாக விலகியிருப்பது நபியவர்களுக்கு ரோம், பாரசீக சாம்ராஜ்யங்களுக்கு தூதை எத்திவைக்க ஏதுவாய் அமைய்ய, அவர்களுக்கு பல தூதுவர்கள் மூலம் இஸ்லாத்தை இராஜதந்திர அடிப்படையில் எத்திவைத்தார்கள்.
அதன் பின் அங்கிருந்து வந்த எதிர்ப்புக்களைக் கலைந்து அவர்களுடனும் ஒரு சில போராட்டங்களை மேற்கொண்டு தமது பலத்தை அவர்களுக்கு உணர்த்தி இஸ்லாத்தை ஒரு நிலைக்கு கொண்டுவந்தார்கள்.
11. மக்கா வெற்றி
இவ்வாறாக வெளி சாம்ராஜ்யங்களுக்கும் இஸ்லாத்தை ஓரளவு எடுத்துக் கூறிவிட்டு இருக்கும் நிலையில் குறைஷிகளின் ஒரு செயல் மூலம் ஹுதைபியா ஒப்பந்தம் தானாக முறிந்தது. அப்போது நபியவர்கள் ஹிஜ்ரி 8 இரகசியமாக ஒரு படையைத் திரட்டி முழு அரபிகளினது பிரதான இடமாக விளங்கிய கஃபாவையும், மக்காவையும் வெற்றி கொள்ளச் செல்லும் சமயம் குறைஷிகள் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி கட்டுப்பட்டவர்களாக முஸ்லிம்களிடம் சரணடைந்தார்கள்.
பின் நபியவர்கள் கஃபாவில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை நொருக்கிவிட்டு, ஓரிறைக் கொள்கையை முழங்கும் பாங்கோசையை எழுப்பி மக்காவையும் ஒர் அமைதியான பாதுகாப்பான தேசமாக மாற்றினார்.
இவ்வாறு நபியவர்கள் கட்டம் கட்டமாக தனது முன்னொடுப்புகளை மேற்கொண்டு செய்ற்பட்ட பின்பு அல்குர்ஆன் கூறியதுபோன்று மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தினுள் பிரவேசித்தார்கள். பின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதன் மூலம் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதியாக மாறி ஹிஜ்ரி 11 ரபிஉல் அவ்வல் பிறை 12 திங்கட் கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் தனது 63வது வயதில் இவ்வுலகிற்கு ஒளியூட்டி பல ஆளுமைகளை உருவாக்கிய திருப்தியுடன் இவ்வுலகிற்கு பிரியாவிடை கொடுத்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Good article
ReplyDelete