இஸ்லாமும் விஞ்ஞானமும்
அல் குர்ஆன் ஒளியில் மனிதபறப்பின் அற்புதம்
விரிவடையும் பிரபஞ்சம் | |
وَاسَّمَاءَ بَنَيْنَهَابِاَيْدٍ وَّاِنَّالَمُوْسِعُوْن َ "மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்" (51:47)
|
நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.
நம் விழிகளில் வியப்பை தேக்கி வைக்கும் இந்த அழகிய விண்மீன் கூட்டங்கள் எந்தவித ஒழுங்கமைப்பும் , கட்டுப்கோப்பும் இன்றி வானில் சிதறிக் கிடப்பதில்லை. அவை கட்டமைப்பிற்குள் செயல்பட்டு, கீழ்படிந்து இயங்கி வருகின்றன.
எல்லையில்லாமல் அகண்டு விரிந்துக் கிடக்கும் இந்த அண்டவெளி வெற்றிடத்தில், நட்சத்திரங்கள் ஒரு குழுவாக வாழ்ந்து வருகின்றன. சிறிய, பெரிய குழுக்கள் பலவற்றை உள்ளடக்கி இருக்கும் இந்த விண்மீன் குழுக்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு தொடர்புக் கொண்டவை. ஒன்று மற்றொன்றை தன்பால் ஈர்த்துக் கொண்டும், மற்றவற்றால் ஈர்க்கப்பட்டும், இணங்கி இணைந்து இயங்குகின்றன.
".........the total number of stars in the universe is probably something like the total number of grains of sand on all the seashores of the world. Such is the littleness of our home in space when measured up against the total substance of the universe."
"உலகில் உள்ள எல்லா கடற்கரைகளிலும் எவ்வளவு மணற் துகள்கள் நிறைந்து உள்ளனவோ, அதைப் போன்றதொரு தொகை கொண்டதாகவே இந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் யாவும் திகழ்கின்றன.
இப்பேரண்டத்தில் பொதிந்துக் கிடக்கும் பொருட்கள் அனைத்துடனும் நாம் நமது புவி எனும் வீட்டை கொஞ்சம் அளந்து பார்ப்போமெனில், அதுஇந்த வின்வெளியில் ஓர் அற்பத் தூசாகவே காட்சி தரும்." ஒரு Galaxy யில் மட்டும் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளதாம். நாம் ஆகாயத்தில் காணும் விண்மீன் கூட்டத்தை பால்வீதி Milky Way என்கின்றனர். இந்த 10,000 கோடி நட்சத்திரங்களில் மின்னி மிளிரும் ஒரு நட்சத்திரம் தான் நமது சூரியன். Miky Way, Galaxy அடுத்துள்ள கேலக்ஸிக்கு பெயர் அண்ரோமிடா கேலக்ஸி என்று பெயர். இந்த கேலக்ஸியில் மட்டும் 40,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன.
ஒரு விண்மீன் குழுவில் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளது போல் இந்த பேரண்டத்தில் 10,000 கோடி Galaxy கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நட்சத்திரக் கூட்டங்கள் ஒன்றை விட்டு மற்றொன்று எண்ணிப்பார்க்க முடியாத வேகத்தில் ஓடுகின்றன.سَنُرِيْهِمْ اَيَتِنَافِىالآْفَاقِ وَفيِْ اَنْفُسِهمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقَُّ اَوَلَمْ يَكْفِ بِربِّكَ اَنَّهُ عَلَىَكُلِّ شَيْءٍ شَهِيْدٌ
"நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை பிரபஞ்சத்தின் பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்கு காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?" (41:53)
வியப்பும் மலைப்பும் தோன்ற விரிந்து காணப்படும் இந்த அற்புதமான பேரண்டத்தை அளித்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதை இன்றைய அறிவியல் தெளிவாக்குகின்றன.
அஅனைத்து உயிரினமும் நீரிலிருந்து தோன்றின |
أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاء كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَநிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? 21:30 سورة النورஇந்த திருமறை வசனத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். நமது உடலிலுள்ள உயிரணுவின் (Cell) உள்ளீடாய் விளங்கும் (Cytoplasm) 80%சதவிகிதம் தண்ணீரையே அடிப்படையாய் கொண்டுள்ளது. மேலும் பெரும்பாலான உயிரினங்கள் 50% முதல் 90% சதவிகிதம் வரை தண்ணீரையே அடிப்படையாய் கொண்டுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் நீறைக் கொண்டே படைக்கப்பட்டுள்ளது என்பதை 14 நூற்றாண்டுகளுக்கு எந்த ஒரு மனிதனும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியுமா?இன்னும் தண்ணீருக்கே தட்டுப்பாடு உள்ள நிலையில் அரேபிய பாலைப் பெருவெளியில் வசிக்கும் ஓர் அரேபியன் இவ்வாறு எண்ணிப் பார்த்திருக்க முடியுமா?விலங்கினங்களை நீரிலிருந்தே படைத்ததாக பின்வரும் வசனம் எடுத்துக்கூறுகிறது.اللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِن مَّاء فَمِنْهُم مَّن يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُم مَّن يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاء إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌமேலும், எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். 24:45 سورة الفرقانஅதே போன்று பின்வரும் வசனமும் நீரிலிருந்தே மனிதனின் படைப்பு தொடங்கியுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاء بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِيرًاஇன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். 25:54 سورة الفرقان
நிலவின் ஒளி பிரதிபலிப்பு நிலவு தன்னுடைய ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்றே முந்தைய நாகரிங்கள் கருதின. ஆனால் இன்றோ நிலவின் அதன் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்ற உண்மையை இன்றைய அறிவியல் எடுத்து கூறுகின்றது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் வசனத்தில்...
تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاء بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُّنِيرًاவான (மண்டல)த்தில் கோளங்கள் வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.سورة الفرقان 25:61திருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் 'ஷம்ஸ்' இதனை 'ஸிராஜ்' (ஒளிவிளக்கு) 'வஹ்ஹாஜ்' (பிரகாசிக்கும் விளக்கு) 'தியா' (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.சந்திரனை குறிக்கும் அரபுச் சொல் 'கமர்' என்பதாகும். இந்த சந்திரனை 'முனீர் என்றும் வர்ணிக்கிறது. 'முனீர்' என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட 'வஹ்ஹாஜ்' 'தியா' 'ஸிராஜ்' ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட 'நூர்' அல்லது 'முனீர்' என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை.சூரியனிலிருந்தும், சந்திரனிலிருந்தும் பெறப்படும் ஒளியின் இயல்பை எடுத்துக் கூறும் வசனங்களைப் பாருங்கள்.هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاء وَالْقَمَرَ نُورًا"அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்" سورة يونس 10:5أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًاஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படி படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான். 71:15,16 سورة نوح
கடல்கள் இடையே உள்ள திரைகள் |
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَنِ بَيْنَهُمَا بَرْزَخٌ لاَّيَبْغِيَنஅவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)
அரபி மூலத்தில் பர்ஸக் எனும் சொல் இடம் பெறுகின்றது.இதன் பொருள் ஒரு தடுப்பு அல்லது பிரிவினை என்பதாகும். இந்தத் தடுப்பு என்பது ஜடரீதியான (Material) அல்லது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு அல்ல. 'மரஜா' எனும் அரபிச் சொல்லின் அசலான அர்த்தம் அவர்கள் இருவரும் சந்தித்து கலந்து கொண்டனர் என்பதாகும்.
இன்றைய நவீன அறிவியல் இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது.
ஆனால், ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சி உறுதி செய்துள்ளார்.
மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றது.
وَهُوَالَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هَذَاعَذْبٌ فُرَاتٌ وَّهَذَامِلْحٌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًامَّحْجُوْرًا அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)
நதி முகத்துவாரங்களில், அதாவது இரண்டு நதிகள் சந்திக்கும் இடங்களில் உப்பு நீரிலிருந்து சுவைமிகு நீரை தனியாகப் பிரித்து அடையாளம் காட்டும் ஒரு திரை அல்லது மண்டலம் (Pycnocline Zone) உள்ளது. (இம்மண்டலத்தையே திருக்குர்ஆன் திருக்குர்ஆன் ஹிஜ்ரம் மஹ்ஜூரா என்று குறிப்பிடுகின்றது.) இப்பிரிவினை மண்டலம் சுவை நீரிலிருந்தும், உப்பு நீரிலிருந்த்தும் வித்தியாசமான அளவு உப்புத்தன்மை கொண்டுள்ளது.
இந்த இயற்கை நிகழ்வு கடலின் பல்வேறு இடங்களில் ஏற்படுகின்றது. மத்தியத்தரைக்கடலுக்குள் ஓடி மறையும் எகிப்தின் நைல் நதியிலும் இது நிகழ்கின்றது.
சமுத்திர ஆழங்களில் மண்டிக்கிடக்கும் மையிருள் |
أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍஅல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. 24:40 سورة النورகடல் ஆழங்களில் மண்டிகிடக்கும் மையிருட்டை நவீன கருவி சாதனங்களால் தான் விஞ்ஞானிகளால் உறுதி செய்திட முடிந்தது என ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கலகத்தில் பணியாற்றிய பேராசிரியர் துர்கா ராவ் கூறினார். எந்த ஒரு பொருளின் துணையில்லாமல் 20 முதல் 30 மீட்டர் அளவுக்கு மேல் மனிதர்கள் கடலுக்குள்ளே மூழ்குவது இயலாத காரியமாகும். அதேப்போன்று 200 மீட்டருக்கும் அப்பாற்பட்ட ஆழத்தில் கடல் பகுதிகளில் மனிதன் உயிர் வாழ்ந்திட முடியாது.இந்த இறை வசனம் எல்லா கடல்களையும் குறிக்காது. காரணம் எல்லா கடல்களும் அடுக்கடுக்காய் மையிருள் திரைகள் படிந்துள்ளன என்று கூற முடியாது. "ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்" என்ற திர்க்குர்ஆன் கூற்றுப்படி அது ஆழ்கடலையே குறிக்கும். ஆழ் கடலில் இருள்திரைகள் அடுக்கடுக்காய் படிந்து கிடக்க இரண்டு முக்கிய காரணங்கள் அடிப்படையாகும்.ஓர் ஒழிக்கதிர் ஏழு வர்ணங்களைக் கொண்டுள்ளது. இவை ஊதா(Violet), ஆழ்ந்த நீலம்(Indigo), நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறம், சிகப்பு ஆகியன. இந்த சூரிய ஒளிக்கதிர் நீரை கடக்கும்போது ஒளிச்சிதைவு (Refraction of Light) ஏற்படுகின்றது. 10 முதல் 15 மீட்டர் மேலளவு கொண்ட நீர் சிகப்பு நிறத்தை உள்வாங்கி உறிஞ்சிக் கொள்கின்றது. எனவே நீரில் மூழ்கும் ஒருவர் அந்நீருக்கு கீழ் 25 மீட்டர் ஆழத்தில் சென்றவர் அடிபட்டு இரத்தம் கசிந்தால் இரத்ததின் சிகப்பு நிறத்தை கண்ணால் பார்க்க முடியாது. காரணம் இந்த ஆழத்திற்கு சிகப்பு நிறம் ஊடுருவிச் செல்வதில்லை.அவ்வாறு ஆரஞ்சு நிறம் 30 முதல் 50 மீட்டர் வரையும், மஞ்சல் நிறம் 50 முதல் 100 வரையும், பச்சை நிறம் 100 முதல் 200 வரையும், நீல நிறம் 200 மீட்டருக்கு அப்பால் வரையும் ஊதாவும், கருநீலமும் 200 மீட்டருக்கு அப்பாலும் ஊடுருவிச் செல்கின்றன. இவ்வாறு பல்வேறு வர்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக படிப்படியாக கருமை அடைந்துக்கொண்டே செல்லும். கடலில் 1000 மீட்டருக்கு கீழ் உள்ள ஆழத்தில் முழுமையான இருள் ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.ஒளிக்கதிர்கள் கடலின் மேற்பரப்பை சென்றடைகின்றபோது அது கடலலையின் மேற்பரப்பால் பிரதிபலிக்கப்பட்டு அதற்கு ஓர் ஒளிப்பிரகாசமான தோற்றத்தை வழங்கிவிடுகின்றது. ஒளியை பிரதிபலித்து இருளை ஏற்படுத்துவது கடலலைகளே! பிரதிபலிக்கப்படாத ஒளியோ கடல் ஆழங்களுக்குள் ஊடுருவிச் சென்று விடுகின்றது. ஆகவே கடலானது இரண்டு பகுதிகளை கொண்டதாக மாறி விடுகின்றது.கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் ஆழமான அடிநீரை கடலின் உள்ளே உள்ள அலைகள் மூடிக்கொள்கின்றன. இதற்கு காரணம் கடல் ஆழத்தின் நீர் அதன் மேற்பரப்பில் உள்ள நீரை விட அதிகமான அடர்த்தித் தன்மைக் கொண்டதாக இருப்பதே! கடலின் உள்ளே உள்ள அலைகளுக்கு கீழ்தான் இருள் கவியத் தொடங்கும். அப்பொழுது அந்த ஆழத்தில் வசிக்கும் மீன் இனங்கள் கூட பார்வையை இழந்துவிடக் கூடும். அம்மீனனங்களின் உடலிலிருந்து வெளிப்படும் சொந்த ஒளி மட்டுமே அவற்றுக்கு வழிகாட்டும். இதனை மிகச் சரியாக திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது;ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை....வேறு வார்த்தைகளால் சொன்னால் இந்த அலைகளுக்கு அப்பால் இன்னும் அதிகமான அலை வடிவங்கள் உள்ளன. அதாவது இவை அனைத்தும் கடலின் மேற்பரப்பில் காணப்படுபவை.இறை வசனம் மேலும் கூறுகின்றது;அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன.விளக்கிக் கூறப்பட்ட இம்மேகங்கள் யாவும் ஒன்று மற்றொன்றின் மேல் தடுப்பு சுவர்களாய் அமைந்து கடலின் பல்வேறு அலை மட்டங்களில் நிறங்களை உள்வாங்கி கருமையை தோற்றுவிக்கின்றன.பேராசிரியர் துர்க்கா ராவ் இறுதியாக இவ்வாறு கூறினார்."1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கடலலையின் நிகழ்வை குறித்து ஒரு சாதாரண மனிதன் இவ்வளவு தெளிவாக கூறி இருக்க முடியாது. எனவே இயற்கைக் கடந்த தெய்வீக ஊற்றிலிருந்தே இந்தச் செய்தித் தகவல்கள் வந்திருக்க முடியும்."
நீரின் சுழற்சி
நீரின் சுழற்சி பற்றி நிகழ்கால மனிதன் அறிந்திருக்கும் கோட்பாட்டை Bernard Palissy என்பவர் தான் முதன் முறையாக கி.பி 1580ல் விளக்கிச் சொன்னார். சமுத்திரத்திலுள்ள நீர் எவ்வாறு கரு மேகங்களாக உருவெடுக்கின்றது என்பதை அவரே விளக்கிச் சொன்னார்.உருண்டு திரண்ட வெண் மேகங்கள் நிலத்தை நோக்கி மெல்ல நகர்கின்றன. கடலிலிருந்து உயர எழுந்து குளிர்ந்து கெட்டியாகி நிலத்தில் மழைத்துளிகளாய் விழுகின்றன. இவ்வாறு விழுந்த மழைத்துளிகள் ஏரிகளாய், நதிகளாய் மாறி மீண்டும் சமுத்திரத்திற்கே திரும்பிச் செல்கின்றன. இவை தொடர் நிகழ்ச்சியாய் நிகழ்கின்றன.கி.மு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தேல்ஸ் (Thales of Miletus) என்பார் கடலின் மேற்பரப்பில் உள்ள நீர்த்திவலைகள் காற்றின் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்டு நிலம் நோக்கி மழைத்துளியாய் விழுகின்றது என நம்பினார். ஆரம்ப காலத்தில் நிலத்தடி நீரின் நிலை பற்றிய அறிவை மக்கள் அறிந்திருக்கவில்லை.
இந்நீரியல் கோட்பாட்டின்படி நீரானது குளிர்ந்த மலைப் பொதும்புகளில் உறைந்து நிலத்தடி நீர் நிறைந்த ஏரிகளாய் உருவாயின. அந்த ஏரிகளோ நீரூற்று பொங்கிப் பாய உதவின என்று கருதப்பட்டது. ஆனால், பூமியின் பிளவுகளில் கசிந்து உட்புகும் மழை நீரே ஏரிகளும், நீரூற்றுகளும் தோன்றக் காரணமாய் உள்ளது என்பதை நாம் இன்று அறிந்துள்ளோம். நீரின் சுழற்சி குறித்து திருக்குர்ஆனில் விளக்கப்பட்டுள்ளது.
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاء مَاء فَسَلَكَهُ يَنَابِيعَ فِي الْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِ زَرْعًا مُّخْتَلِفًا أَلْوَانُهُநீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக்கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. 39:21 سورة الزمروَيُنَزِّلُ مِنَ السَّمَاء مَاء فَيُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ
அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. 30:24 سورة الروم
وَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَமேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிடவும் நாம் சக்தியுடையோம். 23:18 سورةالمؤمنونஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாமறிந்த வகையில் எந்த ஒரு மூல நூலும் நீரின் சுழற்சி குறித்து இவ்வளவு துல்லியமாக வர்ணித்திடவில்லை.
ஈத்தம் பழம் கொண்டு நோன்பு திறப்பதன் சிறப்பு
பொதுவாக முஸ்லிம்கள் நோன்பு திறக்கும்போது ஈத்தம் பழம் கொண்டு நோன்பு திறப்பது வழக்கம். இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் வழிமுறையும் கூட.
“ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழம் கொண்டு நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது பாக்கியமுடையது. அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும். அது அனைத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.
உண்மையில் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தையும் சேர்த்துக்கொள்வதால் அது மனித உடலுக்குப் பல்வேறு அனுகூலங்களை அளிக்கின்றது. ஒரு நோன்பாளி சுமார் 13½ மணிநேரங்கள் தொடர்ந்தும் பசித்திரு;பதனால் அவனது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு வெகுவாகக் குறைகின்றது. எனவே பேரீத்தம் பழத்தை உட்கொள்ளும்போது அது விரைவாகச் சக்கரையின் அளவை ஈடுசெய்து விடுகின்றது. காரணம் ஈத்தம் பழத்தில் 75 – 87 இற்கு இடைப்பட்ட வீத அளவு சக்கரை காணப்படுகின்றது. அத்தோடு 55 வீதமான குலுகோஸும் அடங்கியுள்ளது. எனவே ஈத்தம் பழத்தை உட்கொள்ளும்போது அதிலுள்ள சக்கரையும் குலுகோஸும் விரைவாக உறிஞ்சப்பட்டு இரத்தத்துடன் கலக்கின்றன. பின்பு உடல் பூராகவும் விணியோகமாகி எமக்குப் புத்துணர்வு ஏற்படுகின்றது.
நோன்பாளி விட்டமின்களடங்கிய வேறு பண்டங்களை உண்ணும்போது அவை சமிபாட்டுத்தொகுதியை அடைந்ததன் பின்பே இரத்தத்துடன் கலக்கின்றன. அதனால் உடல் எதிர்பார்க்கின்ற அளவு துரிதமாக சக்கரை, குலுகோஸு போன்றவற்றை உடலால் பெற முடிவதில்லை. இதன் காரணமாகவே ஈத்தம் பழம் கொண்டு நாம் நோன்பு திறக்கின்றோம்.
இவைமட்டுமன்றி ஈத்தம் பழத்தில் காபோவைத்ரேட், கொழுப்பு, கனியுப்பு, உயிர்ச்சத்துக்கள் என்பனவும் உண்டு. அத்தோடு இது ஈரலுக்குப் பலத்தையும் அளிக்கின்றது. மேலும் எமது உமிழ் நீரிலுள்ள நோய்க்கிருமிகளையும் அழித்துவிடுகின்றது.
முளையவியல் ஆராய்ச்சிகளுக்கு ஆர்வமூட்டும்வகையில் அல்குர்ஆனும் ஹதீஸ{ம் பல்வேறு ஆதாரபூர்வமான தகவல்களைத் தருகின்றன. மனித உருவாக்கம் பற்றிப் பல்வேறு கருத்துவேறுபாடுகள் கடந்த நூற்றாண்டுகளில் காணப்பட்டபோதிலும் பிற்பட்ட காலங்களில் அவை பிழையானவையென நிரூபிக்கப்பட்டன. அன்று மருத்துவத் தொழிநுட்பம் வளர்ச்சியுற்றிறாமையே இதற்குக் காரணம். ஆனால் 21ஆம் நூற்றாண்டின் மருத்துவத் தொழிநுட்பக் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியின் விளைவாக தாயின் கருவறையில் குழந்தையின் ஒவ்வொருகட்ட வளர்ச்சிப் படிமுறைகளையும் துல்லியமாக அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையில்21ஆம் நூற்றாண்டில் அறியப்பட்டுள்ள இக்கருவளர்ச்சி பற்றிய உண்மைகளை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆனும்;ஹதீஸ{ம் கூறியிருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். எனவே இன்றைய கருவளர்ச்சிக் கண்டுபிடிப்புகள் எவ்வாறு அல்குர்ஆனுடன் பொருந்தி நிற்கின்றன என்று பார்ப்போம்.
﴿إِنَّا خَلَقْنَا الإِنسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ “நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்.”(76:2)
“ஒருமுறை யூத மதத்தைப் பின்பற்றும் ஒருவர் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து “ ஏ முஹம்மதே! மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “ஓ யூதனே! மனிதன் ஆணினதும் பெண்ணினதும் கலப்புத் துளியிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான்”என்றார்கள். உடனே அந்த யூதர் “முன் வந்த நபிமார்களும் இவ்வாறுதான் கூறினார்கள்” என்றார்.” (முஸ்னத் அஹ்மத்)
அணு முதல் அண்டசாராசரம் வரை அனைத்தும் வல்ல நாயன் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. பிரபஞ்சம் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. எனவே அவற்றிடத்தில் எந்தக் குலப்பத்தையும் காண முடியாது. ஆனால் மனிதன் இறைவனுக்கு மாறுசெய்பவனாகவே உள்ளான். எனவேதான் அவன் வாழும் இடமெல்லாம் குழப்பம் விளைகின்றது. இயற்கை மனிதனை இஸ்லாத்தின் பால் அழைக்கின்றது. இஸ்லாம் அவனை இறைவனிடத்தில் கொண்டு செல்கின்றது.
அல் குர்ஆனின் அதிசயம் (சிசு உறுவாக்கம்)
அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் விண்ணியல், பூகோளவியல்,இரசாயனவியல், விலங்கியல்,முளையவியல் என பல்வேறு அறிவியல் கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவை வெறுமனே விஞ்ஞானத் தகவல்களாக மாத்திரமல்லாமல் இறை இருப்பை உறுதிப்படுத்தவும் ஈமானைப் பலப்படுத்தவுமான ஏற்பாடுகளாகவுமேதான் காணப்படுகின்றன. “விஞ்ஞானமோ, தொழிநுட்பமோ, அதுசார் உபகரணங்களோ கண்டுபிடிக்கப்பட்டிராத அந்த 6ஆம் நூற்றாண்டில் இதுபோன்ற அறிவியல் உண்மைகளைக் கச்சிதமாகக் கூறுவது எவ்வாறு சாத்தியம்?” என்று சிந்திக்கும்போதுதான் இஸ்லாம் இறைவழிகாட்டலின் கீழ் முஹம்மத் நபியவர்களால் போதிக்கப்பட்ட ஒரு இறைமார்க்கம் என்பது நிரூபனமாகின்றது. அந்த அறிவியல் உண்மைகளில் பலதைக் கண்டறிந்துள்ள இன்றைய நவீன விஞ்ஞானம் இன்னும் பலதைக் கண்டுபடிக்கவில்லை என்பதும் உண்மைதான்.
முளையவியல் ஆராய்ச்சிகளுக்கு ஆர்வமூட்டும்வகையில் அல்குர்ஆனும் ஹதீஸ{ம் பல்வேறு ஆதாரபூர்வமான தகவல்களைத் தருகின்றன. மனித உருவாக்கம் பற்றிப் பல்வேறு கருத்துவேறுபாடுகள் கடந்த நூற்றாண்டுகளில் காணப்பட்டபோதிலும் பிற்பட்ட காலங்களில் அவை பிழையானவையென நிரூபிக்கப்பட்டன. அன்று மருத்துவத் தொழிநுட்பம் வளர்ச்சியுற்றிறாமையே இதற்குக் காரணம். ஆனால் 21ஆம் நூற்றாண்டின் மருத்துவத் தொழிநுட்பக் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியின் விளைவாக தாயின் கருவறையில் குழந்தையின் ஒவ்வொருகட்ட வளர்ச்சிப் படிமுறைகளையும் துல்லியமாக அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையில்21ஆம் நூற்றாண்டில் அறியப்பட்டுள்ள இக்கருவளர்ச்சி பற்றிய உண்மைகளை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆனும்;ஹதீஸ{ம் கூறியிருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். எனவே இன்றைய கருவளர்ச்சிக் கண்டுபிடிப்புகள் எவ்வாறு அல்குர்ஆனுடன் பொருந்தி நிற்கின்றன என்று பார்ப்போம்.
சிசு உருவாக்கம் பற்றிய பழமைக் கருத்துக்கள் :
கடந்த மூன்று நூற்றாண்டுகளாக தாயின் கருவறையில் சிசு உருவாக்கம் மற்றும் சிசு வளர்ச்சி பற்றிய பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவிவந்துள்ளன.
1 Aristotle, Galan என்போர் “பெண்ணின் மாதவிடாய் இரத்தம் கர்ப்பப்பையில் உறைவதனூடாகவே சிசு உருவாகின்றது”என்றனர். இக்கருத்து கி.பி. 16ஆம் நூற்றாண்டுவரை ஆதிக்கம் செலுத்தியது.
2 1694 இல் நுணுக்குக்காட்டி கண்டுபிடிக்கப்பட்டதும் மனிதன் முழு வடிவத்தில் சிறிய அமைப்பில் விந்தினுள் காணப்படுகின்றான் என்ற கருத்து உருவானது. இதனைச் சித்தரிக்கும் விதத்தில் Hartsoekerஎன்பவர் ஒரு வரை படத்தையும் வரைந்து வெளியிட்டார். இதன்மூலம் மனித உருவாக்கத்தில் ஆணின் பங்கு மட்டுமே உள்ளது என்ற வாதம் நிலவியது.
3 1727 இல் பெண்ணின் சினை முட்டை கண்டுபிடிக்கப்பட்டதும் குழந்தை உருவாக்கத்தில் பெண் மட்டுமே பங்களிப்புச் செய்கிறாள் என்ற வாதம் உருவானது. ஆணின் விந்தினுள் மனிதன் எவ்வாறு சிரிய அமைப்பில் காணப்படுகின்றானோ அதே வடிவில்தான் பெண்ணின் சினை முட்டையிலும் மனிதன் காணப்படுகின்றான் என்ற கருத்து உருவாகி 1775ஆம் ஆண்டுவரைக்கும் நீடித்தது.
இக்கருத்துக்கள் அக்காலப்பகுதிகளில் உண்மையானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பிற்பட்ட காலங்களில் அவை பிழையென உறுதிப்படுத்தப்பட்டன. அக்கருத்துக்கள் உறுதியான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலமல்லாது வெறும் யூகங்களின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டிருந்தன. அக்கால மருத்துவத் தொழிநுட்ப வளர்ச்சிகளின் வசதிகளுக்கமையவே அம்முடிவுகள் பெறப்பட்டன என்பதால் அவற்றைப்பற்றி குறை கூறுவதற்கில்லை.
எனினும் 21 ஆம் நூற்றாண்டின் அதீத மருத்துவத் தொழிநுட்ப வளர்ச்சி,தாயின் கருவறையையும் கருவறையினுள் உள்ள சிசுவையும் சிசுவின் உடலினுள் உள்ள பகுதிகளையும் கூட அலசி ஆராயும் சாத்தியத்தினைத் தந்துள்ளது. எனவே ஒரு சிசுவின் படிப்படியான வளர்ச்சிக்கட்டங்களைத் துல்லியமாக இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தினால் அறிய முடியுமாக உள்ளது என்பதனை நாம் ஆரம்பமாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
சிசு உருவாக்கம் பற்றிய அல்குர்ஆனின் கருத்துக்கள் :
4 நாம் மேலே பார்த்த கற்பனைக் கருத்துக்களை விட்டும் விஞ்ஞான பூர்வமான ஒரு கருத்தை அல்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது. மனித உருவாக்கத்திற்கு ஒரு ஆணினது விந்தணுவும் பெண்ணினது சினை முட்டையும் கட்டாயம் அவசியம் என்பதை இன்றைய விஞ்ஞானம் நிருபித்துள்ளது. இதனையே 14நூற்றாண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆன் இவ்வாறு கூறிவிட்டுள்ளது.
﴿إِنَّا خَلَقْنَا الإِنسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ “நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்.”(76:2)
﴿ يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்.” (49:13)
﴿خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ . يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ﴾
“குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் (பெண்ணின் மார்பகங்களுக்கு மேல்) நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது.” (86:6,7)
“ஒருமுறை யூத மதத்தைப் பின்பற்றும் ஒருவர் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து “ ஏ முஹம்மதே! மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “ஓ யூதனே! மனிதன் ஆணினதும் பெண்ணினதும் கலப்புத் துளியிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான்”என்றார்கள். உடனே அந்த யூதர் “முன் வந்த நபிமார்களும் இவ்வாறுதான் கூறினார்கள்” என்றார்.” (முஸ்னத் அஹ்மத்)
ஆக மனித உருவாக்கத்தின் மூலம் எது? என்பதை அல்குர்ஆனும் ஹதீஸ{ம் ஆரம்பமாகவே இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளதோடு இன்றைய மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளுக்கு சான்றிதழ் வழங்கி அவற்றை உண்மைப் படுத்தவும் செய்கின்றன.
கருவறையில் சிசு வளர்ச்சி :
ஒரு தடவையில் ஆணிலிருந்து 2-4ml அளவான விந்து வெளிப்படுத்தப்படுகின்றது. 1ml அளவான விந்தில் சுமார் 120மில்லியன் விந்தணுக்கள் காணப்படுகின்றன. இதில் ஒரு அணு மாத்திரமே பெண்ணின் சினை முட்டையுன் இணைந்து கருக்கட்ட ஆரம்பிக்கின்றது. இதனை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
(ما من كل الماء يكون الولد) “முழுத்திரவத்திலிருந்தும் குழந்தை உருவாவதில்லை” (முஸ்லிம்)
(ما من كل الماء يكون الولد) “முழுத்திரவத்திலிருந்தும் குழந்தை உருவாவதில்லை” (முஸ்லிம்)
ஆணின் விந்து பெண்ணில் செலுத்தப்பட்டு 24 மணி நேரங்களுக்குள்,பலோப்பியன் குழாயினூடாக கருவறையை நோக்கி வந்துகொண்டிருக்கும் பெண்ணின் சினை முட்டையுடன் இணைந்து கருக்கட்ட ஆரம்பிக்கின்றது. அவ்வாறு இணைந்தது முதல் 5மணிநேரங்களில் ஆணின் 23 நிறமூர்த்தங்களும் (Chromosome)பெண்ணின் 23 நிறமூர்த்தங்களும் (Ovum Chromosome) சேர்ந்து மொத்தமாக 46 நிறமூர்த்தங்களின் துணையோடு பரம்பரைப் பதிவு நிரல் (Genatic Programe) ஒன்று அக்கலத்தினில் உருவாக்கப் படுகின்றது. இங்கு ஆணின் நிறமூர்த்தம் XX என்ற அமைப்பிலும் பெண்ணின் நிறமூர்த்தம் XY என்ற அமைப்பிலும் காணப்படுகின்றன. பின்னர் பலோப்பியன் குழாயினூடாக விந்தினதும் சினை முட்டையினதும் சேர்க்கையான அக்கலப்புத்துளி 6 ஆம் நாளில் கருவறையை வந்தடையும். இக்கலப்புத் துளியையே அல்குர்ஆன் نطفة امشاجஎன்கின்றது.
﴿إِنَّا خَلَقْنَا الإِنسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ﴾ “நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்.”(76:2) விஞ்ஞானம் இதனை ணுலபழவந என்கின்றது. இது கருவறையை நோக்கி வரும்போதே 2,4,8,16 என்ற பெருமானத்தில் ஒரு கடினமான உரையினுல் (Zona Pellucida) பருமனில் எவ்வித மாற்றமும் ஏற்படாத நிலையில் பல கலங்களாகப் பிரிகையடையும். இது Morula எனப்படுகின்றது.
கருவறையை நோக்கி வரும் வழியின் 4ஆம் நாளில் Zygote - Blastocystஎன்ற சூழாக விருத்தியடைய ஆரம்பித்து 6ஆம் நாள் கருவறையை வந்தடைகின்றது. பின்பு அங்கு இஸ்திரமாக 10 நாட்கள் نطفة امشاج என்ற நிலையில் தங்கியிருக்கும். இந்தத் தங்கு நிலையையே அல்குர்ஆன் ﴿فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ. إِلَى قَدَرٍ مَّعْلُومٍ﴾ “குறிப்பிட்டதொரு (கால) அளவுவரை அதனைப் பாதுகாப்பான இடத்தில் அமைத்தோம்” (77:21,22) ﴿ ثم َجَعَلْنَاهُ نطفة فِي قَرَارٍ مَّكِينٍ﴾ “பின்னர் ஒரு பாதுகாப்பான இடத்தில் (கருவறையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.” (23:13) என்கின்றது. உண்மையில் தங்குமிடம் என்பது அங்கிருந்துகொண்டே சகல தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியுமான அமைப்பில் அனைத்து வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும்.
பாதுகாப்பான தங்குமிடம் :
அந்தவகையில் தாயின் கருவறை மிகப் பொருத்தமானதொரு தங்குமிடமாகக் காணப்படுகின்றது. இலகுவான முறையில் ஒட்சிசன் வாயுவையும் போசனைப் பதார்த்தங்களையும் பெறக்கூடிய வகையில் இக்கருவறை இருப்பதோடு இயல்பான விதத்தில் தொழிற்படுவதற்கு உகந்த இடமாகவும் இது காணப்படுகின்றது.
பாதுகாப்பான இடம் என்ற கருத்தில் நோக்கினால் அதற்கும் பொருத்தமாகவே قَرَار என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கருவறை தாயின் இடுப்புக்குழியின் மையத்தில் அமைந்துள்ளமை முதல் பாதுகாப்பு வலயமாகும். கருவறைக்குப் பின்பக்கம் உள்ள முதுகந்தண்டு இரண்டாவது பாதுகாப்பு வலயம். மூன்றாவது பாதுகாப்பு உத்தியாக பின்பக்கம் உள்ள தசை நார்கள் காணப்படுகின்றன.
இப்பாதுகாப்பு முறையினை இன்னும் சற்று விரிவாக அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ خَلْقًا مِن بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ﴾ ﴿يَخْلُقُكُمْ “உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கின்றான்.”(39:6) இங்கு மூன்று இருள்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் சரியான விளக்கத்தை Torontoபல்கலைக்கழக மருத்துவ பிரிவின் பீடாதிபதியும் முளையவியற் துறைப் பேராசிரியருமான Dr. Emeritus Keith Moore (a) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார். அம்மூன்று இருள்களுமாவன :
1/ தாயின் வயிற்றறைச் சுவர் (Abdominal wall)
2/ கருவறையின் சுவர் (Uterine wall)
3/ சிசுவைச் சூழ இருக்கும் மென்சவ்வுப் படலமும் அம்னியோன் பாய்மமும் (Amniotic membrance) இப்பாய்மத்தில் கரு பாதுகாப்பாக மிதந்துகொண்டிருக்கும். (படம் :5,6)
قَرَار مَّكِينٍ என்ற பதத்தின் மூலம் எவ்வளவு ஆழமான விளக்கத்தை அல்லாஹ் கூறியிருக்கின்றான் என்று பாருங்கள். அல்குர்ஆன் சொற்சுருக்கத்துடனும் ஆனால் பொருட்செறிவுடனும் இவ்வாறு கூறுவது அதன் அற்புதத்தன்மைக்கு மற்றுமொரு ஆதாரமாகும்.
கருவறையை வந்தடைந்த சூழ் கருப்பை சுவரில் தங்கி அதனுள் புதைந்து உள்ளே வேர்விட்டு “சூழ் வித்தகம்- Placenta” என்ற நிலைக்கு மாறுகின்றது. இதுவே அலகா علقة எனப்படுகின்றது. சூழ் கருவறைச் சுவரில் புதைந்து வேர்விடும் நிகழ்வானது உண்மையில் ஒரு வித்தினை நிலத்தில் நட்டு அது வேர்விட்டு வளரும் செயற்பாட்டினை ஒத்திருக்கும். (படம்:7) அவ்வேரினூடாக சூழ் வித்தகம் ஒட்சிசன் வாயு,போசாக்குகள் இன்னும் இரத்தம் என்பவற்றை உறிஞ்சி வளர்ச்சியுற ஆரம்பிக்கும். இதன்போது அந்த சூழ் வித்தகம் கருவறைச் சுவற்றில் தொங்கிய நிலையிலேயே காணப்படும். இதனை அல்குர்ஆன் :
﴿ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً﴾ “பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக்கட்டியாகப் படைத்தோம்” (23:14) என்று கூறுகின்றது. இந்த Placenta வைக்குறிக்க அல்குர்ஆன் علقة என்ற பதத்தைப் பிரயோகித்துள்ளது. علقة என்பதற்கு பல கருத்துக்கள் காணப்படினும் அவற்றில் மூன்று முக்கியமானவையாகும்.
முதலாவது கருத்து:
علقة என்றால் ஏதாவதொன்றில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் என்று ஒரு கருத்து காணப்படுகின்றது. உண்மையில் இந்த علقة சூழ் வித்தகமானது கர்ப்பப்பைச் சுவரில் தொங்கிக்கொண்டே இருக்கின்றது.
இரண்டாவது கருத்து:
علقة என்ற பதம் இரத்தக் கட்டி என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது. இக்கட்டத்தில் எளிமையான வடிவில் இதயமும் குருதிச் சுற்றோட்டத்தொகுதியும் உருவாக்கப்பட்டிருக்கும். எனினும் சுற்றோட்டம் இயங்கு நிலையில் இருக்காது. இதன்போது علقة வின் தோற்றம் சிவப்பு நிறத்தில் ஒரு இரத்தக்கட்டியை ஒத்திருக்கும். இதனை அல்லாஹ் இரத்தக்கட்டியாகப் படைத்தோம் என்று கூறுகின்றான். (23:14)
மூன்றாவது கருத்து:
இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைக்கும் علقة என்றே குறிப்பிடப்படுகின்றது. அத்தோடு அட்டையும் தொற்றிக்கொள்ளும் தன்மைகொண்ட ஒரு புலு இனம் என்பதையும் நாம் அறிவோம். இந்த சூழ் வித்தகத்தின் படிப்படியான வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அது கோள வடிவத்திலிருந்து மாறி நீண்டு விடுகின்றது. அப்போது அது ஒரு அட்டையின் வடிவத்தை ஒத்திருக்கும். (படம்:10) அதுமட்டுமன்றி அட்டை இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதுபோன்றே இக்கட்டத்தில் علقةவும் கர்ப்பப்பைச் சுவரில் தொற்றிக்கொண்டு ஒட்சிசனையும் போசனைப் பதார்த்தங்களையும் இரத்தத்தின் வழியாக உறிஞ்சிக்கொண்டிருக்கும். எனவே இவ் அர்த்தமும் அல்குர்ஆனின் மொழி அற்புதத்திற்குச் சான்று பகர்கின்றது. இதனை மற்றுமொரு இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். ﴿ خلق الإنسان من علق ﴾“மனிதனை (அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்) இரத்தக்கட்டியிலிருந்து அவன் படைத்தான்” (96:02) இவை அல்குர்ஆனின் மொழியற்புதத்தை எடுத்துக்காட்டுகின்றன.
அல்குர்ஆனின் மொழியாழத்தை விளங்க மற்றுமொரு விடயத்தை இங்கு அவதானிப்போம். مضغة என்பதற்கு பற்களால் மெல்லப்பட்ட ஒரு பொருள் என்றும் கருத்ருத்துக்கொள்ளப்படுகின்றது. இதற்கு வாயிலிடப்பட்டு மெல்லப்பட்ட ஒரு Chewing gum இனை உதாரணமாக் கொள்ளலாம். அதன் ஓரங்களில் எவ்வாறு வரிசையாகப் பல்லின் பதிவுகள் காணப்படுமோ அதை ஒத்த வடிவத்தையே مضغة வும் கொண்டிருக்கும். ( இந்நிலையில் கரு இரண்டும் கெட்டான் நிலையில் அதாவது மத்திமமான ஒரு நிலையில் இருக்கும். சரியானதொரு தோற்றம் இன்றி பாதி உருவத்தில் காட்சியளிக்கும். இதனையே அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.
﴿ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ ﴾“நிச்சயமாக நாம் (ஆரம்பமாக) உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் பின்னர் இரத்தக் கட்டியிலிருந்தும் பின்னர் (முறையாகப்) படைக்கப்பட்ட (அல்லது முறையாகப்) படைக்கப்படாத தசைக் கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்.” (22:05)
مضغة அமைப்பைத் தொடந்து கருவில் என்பு வளர்ச்சி ஆரம்பிக்கின்றது.عظام என்பது என்பைக் குறிக்கின்றது. இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். ﴿فخلقنا المضغة عظاما﴾ “பின்னர் அம்மாமிசத் துண்டை எழும்புகளாகப் படைத்தோம்.”(23:14) என்பு வளர்ச்சி குறிப்பிட்டதொரு காலத்துக்குள் முற்றாகப் பூரணமடைகின்றது என்று கூற முடியாது. ஏனெனில் ஒரு மனிதனின் என்பு வளர்ச்சியானது அவனது 20-25 வயது வரைக்கும் நீடித்துச் செல்கின்றது. கருவறையினில் முளையத்தின் ஆரம்ப நிலைக்கான என்பு வளர்ச்சியே நடைபெறுகின்றது. என்பு வளர்ச்சியினைத் தொடர்ந்து அவற்றைச் சூழ தசைகள் உருவாகின்றன. முளையத்தின் என்பு மற்றும் தசை உருவாக்கங்கள் சுமார் 15நாட்களில் நடைபெறுகின்றன. இச்செயற்பாட்டினை அல்குர்ஆன் இவ்வாறு பிரஸ்தாபிக்கின்றது. ﴿ فكسونا العظام لحما﴾ “பின்னர் அவ்வெழும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்.” (23:14)
No comments:
Post a Comment