கட்டுரைகள்

சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன....
   
    மனித சமுதாயத்தைப் படைத்து அவனுக்கு வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து, அவன் எவ்வாறு வாழவேண்டும் என்பதனையும் தெளிவுபடுத்த வழிகாட்டல்களையும் அவனது தூதர்களுடன் அனுப்பிய அல்லாஹ், இறுதியாக ஒரு பூரணமான, சிறந்த வழிகாட்டியாக எம் கரங்களில் தவழும் புனித குர்ஆனை இறக்கியருளினான்.

    தூதுவர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வாழ்ந்த சூனியம் கொடிகட்டிப் பறந்த காலத்தில், சூனியத்ததையும் மிகைத்த அற்புதத்துடன் எவ்வாறு வந்தாரோ, ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வாழ்ந்த மருத்துவ சமூகம் அறியாத குஷ்டரோகம், பிறவிக்குருடு போன்ற நோய்களுக்கு சுகம் கொடுக்கும் அற்புதத்தோடு எவ்வாறு வந்தாரோ, அதோ போன்று தான் இலக்கணம், இலக்கியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற அறிவியல் சமூகத்தில் அவற்றையும் மிகைக்கக்கூடிய இந்தத் திருக்குர்ஆனுடன் நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இப்பாருக்கு தூதுத்துவத்துக்கு முத்திரையாக வாந்தார்.

    அறிவியல் ஊற்றாக வந்த இந்த குர்ஆன் அன்று முதல் இன்று வரை அனைத்துத் துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்தி, ஏக இறைவனிடமிருந்து வந்த வேதம், வழிகாட்டி என்பதனை நிரூபித்து வருகின்றது.

    அந்த வரிசையில் நிகழ்த்திய சாதனையொன்றுதான் நவீன 21ஆம் நூற்றாண்டான இந்த நூற்றாண்டில் 'வில்லியம் பார்வன்' என்ற ஜேர்மனிய அறிஞரின் தலைமையிலான குழு கண்டுபிடித்து நிரூபித்துக்காட்டிய விஞ்ஞான உண்மையாகும்.

    கொடிகள் போன்ற தாவரங்கள் ஒன்றுடன் ஒன்று கதைத்துக் கொள்கின்றனவா? என்று ஆராய, வில்லியம் பார்வன் என்ற ஜேர்மனிய விரிவுரையாளரின் தலைமையில் ஆய்வொன்றில் ஈடுபட்டனர். அந்த ஆய்வின் விளைவாக தாவரங்களின் ஆணிவேரிலிருந்து ஒரு வகையான ஒலி வெளிப்பட்டு அது அதன் கிளைகளை அடைந்து அந்த ஒலி வெளியாகின்றது என்று அறிந்து கொண்டனர். பின்பு அவர்கள் தாவரங்களிலிருந்து வெளியாகும் ஓசையின் யதார்த்தத்தை தெளிவுபடுத்துமாறு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைத்தார்கள்.

    அவர்கள் அதற்கு தெளிவை கூற முற்படவில்லை என்பது ஒரு புறமிருக்க, அப்படியான எந்தவொரு ஒலியும் தாவரங்களுக்கு இல்லை என்று கடுமையாக மறுத்தது மட்டுமல்லாமல் அவர்கள் ஆச்சாரியத்திற்கு உள்ளாகினார்கள்.

    பின்பு அந்தக் குழு மீண்டும் இரண்டாவது தடவையாக பிரித்தானிய விரிவுரையாளர்களுடன் தமது ஆய்வை செய்துபார்த்தனர். மிகவும் நுட்பமான கமரா மூலம் நடந்த அந்த ஆய்வின் ஐந்தாம் நாளன்று தாவரங்களிலிருந்து வெளியாகிய ஒலி அவர்களை ஆச்சரியத்தின் எல்லைக்கே இட்டுச்சென்றது. அந்த ஆய்வுக்குழுவின் தலைவரான வில்லியம் பார்வனை கலிமா சொல்ல ஆர்வமூட்டியது. அதுதான் அல்லாஹ் அல்லாஹ்.... என்ற திக்ர் முழக்கத்தின் தெளிவான ஓசையாகும்.

    அப்போது அக்குழுவில் இருந்த இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட பரித்தானிய முஸ்லிம், அந்த அறிஞர் குழுவை பார்த்து இவ்வாறு கூறினார். 'தாவரங்களிலிருந்து வெளியாகும் ஒலிக்குரிய தெளிவான விளக்கவுரை 1400 வருடங்களாக எம்மிடம் இருக்கின்றது.' அனைவரும் அசந்து பேய்விட்டனர். அந்தவிளக்கம் இறுதித்தூதருக்கு வழங்கப்பட்ட அறிவியல் அற்புதமான அல்குர்ஆனின் 17வது அத்தியாயமான சூறா பனீஇஸ்ராயீலின் 44வது வசனமாகும். அது இவ்வாறு கூறுகிறது.

تُسَبِّحُ لَهُ السَّمَوَاتُ السَّبْعُ وَالأَرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِنْ مِنْ شَيْءٍ إِلاَّ يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لاَ تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا

'ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவைகளும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றன, இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத (எந்தப்) பொருளும் இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.'

    பின் இந்த ஆய்வின் முடிவாக கீழ்வருவன தீர்மாணிக்கப்பட்டது.
1.    தாவரங்களுக்கும் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் உண்டு.
2.    தாவரங்களிலிருந்து வெளியாகும் ஒலி அதன் ஆணிவேரிலிருந்து வெளிப்பட்டு கிளைகளை சென்றடைகின்றது.

தாவரங்களுக்கு பேச்சு, மூச்சு, உணர்வு என்பன இல்லை என்று வாதிட்டவர்கள் முதன்முதலில் வெளியிட்ட முடிவே இதுவாகும்.

    இஸ்லாமிய சகோதரர்களே! இன்று இவர்கள் தாவரங்களுக்கு சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல், சக்தி உள்ளது என்று சொல்வது போன்று, இப்பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளுக்கும் இந்த ஆற்றல் உள்ளது என்று சொல்ல இன்னும் நெடுங்காலம் இல்லை. ஏனெனில் அல்குர்ஆன், சுன்னா இதனை கூறிவருகின்றது. உதாரணமாக அல் குர்ஆனின் 33வது அத்தியாயமான சூறா அல்அஹ்ஸாபின் 72வது வசனம் இவ்வாறு கூறுகின்றது.

إِنَّا عَرَضْنَا الأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولاً

'நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், அப்போது அதைச்சுமந்துகொள்வதிலிருந்து அவை விலகிக்கொண்டன, இன்னும் அதைச்சுமப்பதிலிருந்து அவை பயந்தன, (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான், நிச்சயமாக அவன் (அமானிதத்தை நிறைவேற்றும் விஷயத்தில்) பெரும் அநியாயக்காரனாக (அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்.'

இதனூடாக வானம், பூமியில் வாழ்கின்ற மனிதன் அல்லாத ஏனைய படைப்புகளும் சிந்தித்துத்தான் முடிவுகளை எடுக்கின்றன என்பது தெளிவாக தென்படுகின்றது.

    ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் கூட தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் புத்தியில்லை என்ற கருத்துடையவர்களாகவே இன்றுவரை இருந்து வருகின்றோம். அப்படியல்ல மாறாக அவற்றுக்கு அல்லாஹ்வுக்கு மாறு செய்து பாவங்கள் புரிவதற்குரிய புத்தியைத்தவிர மற்ற அனைத்து ஆற்றல்களும் வழங்கப்படடுள்ளது.

    நாம் சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வரலாற்றைப் படித்தால் அதில் அவர்கள் பறவை, எறும்பு, காற்று, விலங்குகள் போன்றவற்றின் பாசையை அறிந்து அவற்றுடன் கதைத்ததை காணமுடியும். மேலும் அவரிடம் இருந்த 'ஹுத்ஹுத்' என்ற பறவையின் செயற்பாடுகள், மனிதனல்லாத படைப்புகளுக்கும் சிந்தித்து செயலாற்றும் ஆற்றல் உள்ளது என்பதனை உணர்த்துகின்றது.

    மேலும் அல்குர்ஆன் மற்றும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையிலும் இவற்றுக்கான நிறைய ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக நபிக்கு 12 வயதாக இருக்கும் போது ஆபூதாலிபுடன் ஷாம் தேசத்திற்கு வியாபாரத்திற்காக சென்றபோது, புஸ்ரா நகரைச் சேர்ந்த பஹீரா என்று பிரபல்யமான ஜிர்ஜீஸ் என்ற துறவிளூ நபியவர்கள் கனவாயால் வந்த போது அவருக்கு நபிமார்களுக்கு மாத்திரம் சிரம்பணியும் கற்களும் மரங்களும் சிறம்பணிந்ததாக கூறினார். மேலும் அவரது 40தாவது வயதில் மக்காவிலுள்ள ஒரு கல் அவருக்கு ஸலாம் கூறிவந்தது என்பன போன்றவையாகும். இவை கற்கள், மரங்கள் போன்றவற்றுக்கு சிந்தித்து செயலாற்றும் ஆற்றல் உள்ளது என்பதை நிரூபிக்கின்றது.

    மேலும் உலக முடிவில் முஸ்லிம்கள் யூதர்களை விரட்டி விரட்டி கொலைசெய்யும் சந்தர்ப்பத்தில் அவர்கள் கற்கள், மரங்கள், புதர்களுக்குப் பின்னால் ஒழிந்து கொள்வார்கள். அச்சந்தர்பத்தில் 'கர்காத்' எனும் யூதர்களின் மரத்தைத் தவிர மற்ற அனைத்தும் 'அல்லாஹ்வின் அடியானே! இதோ என்பின்னால் ஒரு யூதன் ஒழிந்திருக்கின்றான் அவனைக் கொல்' என்று காட்டிக் கொடுக்கும்.

    மேலும் அல்குர்ஆன் கூறும்போதுள:

وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلائِكَةُ مِنْ خِيفَتِهِ

'மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர்.'     (அர்ரஃது 13:13)

وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلالُهُمْ بِالْغُدُوِّ وَالآَصَالِ

'வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).'   (அர்ரஃது 13:15)

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا

'அந்நாளில், அது(பூமி) தன் செய்திகளை அறிவிக்கும்.'  (அஸ்ஸில்ஸால் 99:4)

    இதில் இடி, பூமி மற்றும் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும், படைத்த நாயனை அறிந்து அவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக சிரம்பனிவதை எடுத்துக் காட்டுகின்றது. இது அவற்றுக்கு கொடுத்திருக்கும் சிந்தித்து செயலாற்றும் ஆற்றலை நிரூபிக்கின்றது.

    மேலும் இந்த உயிர்களுக்கு மனிதர்கள் அறியாத நிறைய விடயங்களை அறியக்கூடிய ஆற்றல் உள்ளது. இயற்கை அனர்த்தங்களின் போது அதனை இவை முன்கூட்டியே அறிந்து தனது உயிரைக் காத்துக் கொள்கின்றன.

    மேலும் நபியவர்கள் கூறினார்கள். 'நாய் ஊளையிடுவதை செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது ஷைத்தானைக் கண்டு சப்தமிடுகிறது. மேலும் சேவல் கூவுவதை செவியுற்றால் அல்லாஹ்விடம் ரஹ்மத்தை தேடிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது அமரர்களைக் கண்டு சப்தமிடுகிறது.' இவை போன்ற ஏராளமான அறிவிப்புகள் இப்பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளுக்கும் சிந்தித்து செயலாற்றும் ஆற்றல் உள்ளது என்பதை உண்மைப்படுத்துகின்றது. இவை அதி நவீன தொலை நோக்குக் கருவியான நுபுவ்வத்தின் மூலம் வெளிப்பட்டவையாகும். இதனைப் பின்வரும் வசனம் மேலும் தெளிவாக்கும்.

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ وَمَنْ يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِنْ مُكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ

'வானங்களிலுள்ளவைகளும், பூமியிலுள்ளவைகளும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.' (அல்ஹஜ்22:18)

    இது ஒருபுறம் இருக்க மேலே நாம் குறிப்பிட்ட வசனங்களை அவதானித்தோமானால் அதிலே 'தஸ்பீஹ்' மற்றும் 'சிறம்பனிதல்' என்ற வார்த்தைப் பிரயோகங்கள் பிரயோகிக்கப்படுவததை நாம் காணலாம். இவை இரண்டிலும், இந்த தஸ்பீஹ் என்ற பிரயோகத்திற்கு பல அறிஞர்களும் பலவிதமாக கருத்திடுவதை அவதானிக்கலாம். அதில் ஒரு விளக்கம் தான்: 'தஸ்பீஹ் என்பது அல்லாஹ்வைத் துதிப்பது'. அதாவது அவனது வள்ளமையை ஆற்றலை நன்கு அறிந்து அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவனைப் புகழ்வதும் 'திக்ர்' (ஞாபகம்) செய்வதுமாகும். [கான்க (3:190,191)]

    இதற்கு கொடுக்கப்படும் மற்றுமொரு விளக்கம் தான் 'அல்லாஹ்வுக்குரிய பண்புகளை, அவனுடைய அந்தஸ்தை, அவனுக்கேயுரிய வேலைகளை வேறு எந்த வஸ்துக்கும், வேறு எந்தவொரு படைப்புக்கும், வேறு எந்தவொரு சக்திக்கும் கொடுக்காமல் இருப்பது'. அதாவது அல்லாஹ்வுக்கு நிகராக இணையாக அவனுடைய பண்புகள், வேலைகள் என்பவற்றில் யாரையும் இணைக்காமல் இருப்பது என்பதாகும். இக்கருத்தையே பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகின்றது.

سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

'வானங்களிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன. அவனே (யாவரையும்) மிகைத்தவன்ளூ தீர்க்கமான அறிவுடையவன்'. (61:01)

இதனைத் தொடர்ந்து வரும் வசனங்களை அவதானித்தால் அவை பின்வருமாறு கூறுகின்றது.

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ . كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ

'விசுவாசிகளே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகிரீர்கள். நீங்கள் செய்யாததை(ப் பிறருக்குச் செய்ய)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப்பெரியதாகிவிட்டது'. (61:02,03)

    இதில் நாம் அவதானிக்கத் தக்க விடயங்கள் தான் ஒரு மனிதனின் சொல்லும் செயலும் ஒன்றாக அமைய வேண்டும், மேலும் நாம் செய்யாததை செய்வதென்று கூறுவது அல்லாஹ்வால் மிகவும் வெறுக்கத்தக்தொன்றாகும். இந்த இரண்டு கருத்துக்களும் சிரம்பனிதல் என்பதின் விளக்கத்தோடு ஒன்றுபடுகின்றது.

    மேலே நாம் பார்த்த விளக்கங்களில் முதலாவது சொல் சார்ந்தது, இரண்டாவது செயல்சார்ந்தது. இவை இரண்டுமே அவசியமானதே. தாவரங்களிடமோ அல்லது வேறு உயிர்களிடமோ இதனை நாம் தெளிவாகக் கானலாம். உதாரணமாக ஒரு மிளகாய்ச் செடி ஒருபோதும் 'நான் இவ்வளவு காலமும் உங்களுக்கு மிளகாய் தந்தேன்ளூ இதன் பிறகு நான் கத்தரிதான் தருவேன்'. என்று அடம்பிடித்து அதைச் செய்ததுண்டா?

    மேற்கூறிய அனைத்து விடயங்களின் மூலமும் தெளிவாகின்ற ஒரு விடயம் தான் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து, நிராகரித்து வாழ்பவர்களை விட இந்த உயிர்கள் அல்லாஹ்விடம் மேலானது என்பதாகும். இதனால் தான் அல்லாஹ் 7ம் அத்தியாயமான அல்அஃராபின் 179வது வசனத்தில் இத்தகைய மனிதர்களை கால்நடைகளைவிடவும் கேடுகெட்டவர்கள் என்று கூறுகின்றான்.

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالإِنْسِ لَهُمْ قُلُوبٌ لا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آَذَانٌ لا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ

'நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் கேடுகெட்டவர்கள், இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.'

    இதே சந்தர்பத்தில் ஒரு மனிதனுக்கு ஒரு மலக்கின் அந்தஸ்தையும் அடைந்து கொள்ளலாம். எவ்வாறெனில் எமது சொல்லிலும் செயலிலும் இந்த தஸ்பீஹ் வரும் சந்தர்பத்தில் தான் இதில் ஆச்சரியப்படுவதற்கோ, சிந்திப்பதற்கோ ஒன்றும் இல்லை. ஏனெனில் மலக்குகளைவிட மனிதன் உயர்ந்தவன் என்பதனால் தான் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அவருக்கு சிரம்பனியும் படி மலக்குகளை ஏவினான். மேலும் யூஸுப் (அலை) அவர்களைப் பார்த்து அவரது சமூகமே مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ  'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேதவிர வேறில்லை'. என்று சாட்சியம் அளித்தார்கள்.   

    ஆகவே சகோதரர்களே! முதலில் கூறியன போன்ற எண்ணற்ற அற்புதங்கள், அதிசயங்கள் அல்லாஹ்வின் படைப்புகளில் மறைந்துள்ளன. பஞ்ச பூதங்கள் மனிதனுக்கு பயனளிப்பது போன்று தாவரங்களிலும் என்னற்ற பயன்கள் உள்ளன. தாவரம் இல்லை எனில் உயிர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவற்றில் பயன்பாடுகள் உள்ளன. இது போன்ற என்னற்ற அற்புதங்கள், அதிசயங்கள் அல்குர்ஆனில் பொதிந்துள்ளன. இவற்றை ஆராய்ந்து அதிலிருந்து படிப்பினை பெருமாறு அல்குர்ஆனே கூறுகின்றது. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் கால்நடைகளைவிட கேடுகெட்டவர்களாக மாறாமல், உயர்ந்த படைப்பாக இருக்க அல்குர்ஆனை ஆராய்ந்து படித்து அதன்படி வாழ்வோம்.

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ لآَيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ

'நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;, அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.'  (அல்பகறா2:164)


உண்மை உதயத்தில் பிரசுரமாகியது

எம்.எம். முஆத்
(இஸ்லாஹிய்யா வளாகம்-மாதம்பை)
E-Mail: muaadh.munas07@gmail.com

No comments:

Post a Comment