சர்வதேசம்

தென்னாசியாவின் வறுமைப் பிரச்சனை

ஒரு மனிதன் தனது அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத ஒரு நிலைமை வறுமை எனப்படும்.
இவ்வறுமையானது பல நாடுகளிலும் பல இடங்களிலும் காணப்படுகின்றது.
இவ்வறுமையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
01. தனி வறுமை
ஒருவரது அடிப்படைத் தேவையை அவர் நிறைவேற்ற முடியாத நிலை தனி வறுமை எனப்படும்.
02. சார்பு வறுமை
இன்னொருவருடன் ஒருவரை ஒப்பிட்டு நோக்குவது சார்பு வறுமை எனப்படும்.
1990ல் உலக அபிவிருத்தி அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது..
- World development report – “ ஆகக் குறைந்த ஒரு தரத்தையாவது பெற்றுக் கொள்ள முடியாத நிலை வறுமை எனப்படும்”.
- Mahbubul haq – Pakistan, 1990, “ மனிதன் தனது சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதற்கு இன்றியமையாத தேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை”
- World development report 1999ல் “ நீண்ட , ஆரோக்கியமான, திறன்மிக்க, திறமையான மற்றும் மரியாதையான ஒரு வாழ்க்கைத் தரத்தை அடைந்து கொள்வதற்குரிய சந்தர்ப்பங்களையும் தெரிவுகளையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை”.
வறுமையின் உறைவிடம் தென்னாசியா எனக் குறிப்பிடுவர்.
உலக வங்கியின் 2003ம் ஆண்டு அறிக்கையின் படி உலகின் வறுமையான மக்களின் 68% தென்னாசியாவிலேயே காணப்படுகின்றனர்.
வறுமையை அளவிடுவதற்கான இரண்டு குறிகாட்டிகள் இருக்கின்றன.
01 . ஒரு நாளைக்கு ஒரு டொலரினை விடக் குறைவாகப் பெறுபவர்கள்.
02 . இரண்டு டொலரினை விடக் குறைவாகப் பெறுபவர்கள்.
தென்னாசிய நாடுகளின் தலாவருமானம் ( வருடத்திற்கு )
இலங்கை 1558 டொலர்
இந்தியா 965 டொலர்
பங்களாதேஷ் 444 டொலர்
நேபாள் 400 டொலர்
பூட்டான் 1454 டொலர்
மாலைதீவு 2968 டொலர்
ஆப்கானிஸ்தான் 362டொலர்
பாகிஸ்தான் 909 டொலர்
இது 2007ம் ஆண்டு கணீப்பீடு ஆகும்.
வறுமைக்கான காரணங்கள்
01. அதிகரித்த குடித் தொகை
தென்னாசியாவில் அதிகளவு சனத் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகின்றது.
தென்னாசிய நாடுகளும் அவற்றின் குடித் தொகையும் ( மில்லி. )
நாடு குடித்தொகை
இந்தியா 1132
பாகிஸ்தான் 169
ஆப்கானிஸ்தான் 32
நேபாளம் 28
இலங்கை 20
தென்னாசிய நாடுகளும் அவற்றின் இயற்கை அதிகரிப்பு வீதமும்
பாகிஸ்தான் 36%
நேபாளம் 17%
இந்தியா 29%
இலங்கை 29%
02. பொருளாதாரம்
தென்னாசியாவில் எந்தத் துறையில் முக்கியத்துவம் கூடுதலாக இருக்கின்றது என நோக்கும் போது விவசாயத் துறையை பொருளாதாரத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இத்துறையில் காணப்படும் குறைபாடுகள் பெருமளவு பாதிப்பினை பொருளாதாரத்தில் ஏற்படுத்துகின்றது.
வேலையின்மை
குறை தொழில்
பருவ கால வேலை என்பன இத்துறையில் நிலவும் பிரச்சனைகளாகும்.
இதேவேளை கைத் தொழில் நாடுகள் அதிகளவு முன்னேற்றமடைந்து காணப்படுவதனை அவதானிக்கலாம்.
03. அரசியல் ஸ்திரமற்ற நிலை.
உதாரணமாக இலங்கையில் நிலவிய 30 ஆண்டுகளுக்கு மேலான யுத்த நிலை, நேபாளம்.
இவ்யுத்த நிலைமை காரணமாக இராணுவச் செலவீனங்கள் இந்நாடுகளில் அதிகம். எனவே இவற்றை ஈடு செய்ய பொருட்கள், சேவைகளின் விலைகள் கூட்டப்பட்டன.
04. சமமற்ற வருமானப் பங்கீடு
05. கல்வித் துறையில் பின்னடைந்து காணப்படுதல்.
06. பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கைகள்.
தென்னாசியாவில் அதிகளவு கையடக்கத் தொலை பேசியை பயன்படுத்துவபவர்களாக இலங்கையர்கள் காணப்படுகிறார்கள். இலங்கையில் ஒரு கோடியே 60 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கையடக்கத் தொலைபேசியே பயன்படுத்துகிறார்கள். இது மொத்த சனத் தொகையில் 84% வீதமாகும். இதன் மூலம் கூடுதல் வருவாயே வெளி நாட்டுக் கம்பனியே பெறுகின்றன.
டயலொக் – மலேசியா
மொபிடல் – ஜப்பான்
ஏர்டெல் – இந்தியா
இத்டிஸாலாத் – ஐக்கிய அரபு இராச்சியம்
Celltell Australia
07. பொருத்தமற்ற திட்டங்கள்
உதாரணமாக கமுதா வீட்டுத் திட்டம்
08. வீண் செலவுகள்.
பாராளுமன்றத்திற்கு வருடத்திற்கு 100 கோடி ரூபாய் செலவாகிறது.
அதாவது ஒரு நாளைக்கு சராசரியா 28 இலட்சம்
இதில் சாப்பாட்டுக்கான செலவு மட்டுமே 05 கோடியாகும்.
அதிலும் மிகக் குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்கப்படுகின்றன. காலை உணவு 60/=
பகல் உணவு 100/=
மாத சம்பளம் 2 ½ லட்சம்
மக்கள் பணம் தான் இச்செலவீனங்களை ஈடு செய்ய வரியாக அரசுக்கு வருகிறது.
வறுமையின் விளைவுகள்
01. பிள்ளைகளின் எதிர் காலம் வீணாகுதல்
02. தற்கொலை
03. தொற்று நோய்களை உருவாக்கும்
04. சமூக விரோதச் செயல்கள் அதிகரிக்கும். இதற்கு ஆபிரிக்காவின் சகாராப் பகுதி மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
05. மந்த போஷனம் – அதிக மந்த போசனம் கொண்ட மக்களை கொண்ட பிரதேசமாக தென்னாசியா விளங்குகின்றது.
06. சுகாதார சீர் கேடுகள் – வைத்தியசாலைகளில் சரியான மருந்து வசதிகள் இல்லை.
07. சமூக ஏற்றத் தாழ்வு
08. மூளைசாலிகள் வெளியேற்றம்

No comments:

Post a Comment