50இற்கும் மேற்பட்ட இடங்களில் சிரியாவில் மூன்று நாட்கள் வரை குண்டு வீச அமெரிக்கா திட்டம்
இரசாயன ஆயுதம் பயன்படுத்திய விவகாரத்தில் சிரியா மீது இராணுவத் தாக்குதல் நடாத்த அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. குறைந்தபட்ச அளவில் இந்தத் தாக்குதல் நடாத்தப்படும் என கூறப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலை எவ்வாறு, எப்படி நடாத்துவது? என்பது குறித்து இராணுவ தலைமையக (பென்டகன்) அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அநேகமாக சிரியா மீது போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் 72 மணி நேரம் (3 நாட்கள்) குண்டு வீசப்படும் என தெரிகிறது. முதலில் 50 இடங்களை இலக்கு வைத்து இருந்தார்கள். தற்போது மேலும் சில இடங்களை சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். அமெரிக்க இராணுவத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் இந்தத் தகவல்களை உறுதி செய்வதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர பிரபல பத்திரிகை தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment