அப்துல் பத்தாஹ் ஸீஸி, வரலாறு நினைவுபடுத்தும் ஒரு புதிய தலைவர்
இஸ்ரேலிய உயர் அதிகாரி ஆமூஸ் கிலாட்
எகிப்திய பாதுகாப்பு அமைச்சர் அப்துல் பத்தாஹ் ஸீஸி எதிர்கால வரலாறு
நினைவுபடுத்தும் ஒரு புதிய தலைவராவார் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின்
அரசியல் மற்றும் இராணுவ பணிப்பாளர் ஆமூஸ் கிலாட் தெரிவித்துள்ளார்.
அழிவிலிருந்து எகிப்தை அவர் காப்பாற்றியுள்ளார் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புக்கான கலாநிலையத்தின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பிராந்தியம் முழுதும் பரவியிருந்த இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்புக்கு சவால் விடக்கூடியவராக ஸீஸி இருக்கிறார் எனக் கூறியிருக்கிறார். இஹ்வான் அமைப்பு இஸ்ரேலை அழிக்கும் கருத்தியலை விட்டுவிடாதிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் சினாய் பகுதியில் எகிப்திய இராணுவம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளைப் பாராட்டிப் பேசிய அவர் இஸ்ரேலிய நலன்களைக் கருத்தில் கொண்டு சினாயில் எடுக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திற்கெதிரான துணிவான நடவடிக்கையை வரலாற்றில் முதற்தடவையாக காண்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ஹமாஸ் இயக்கம் எகிப்தியர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை எகிப்தியர்கள் தற்போது புரிந்து கொள்கின்றனர். காஸா எல்லையோரமாக வாழும் எகிப்தியர்கள் சந்தோசப்படக் கூடியதான பாதுகாப்பு கவசமொன்று ஏற்படுத்தப்படுவது குறித்து நாம் மகிழ்வடைகிறோம். ஹமாஸிற்கு பிராந்தியத்தில் எந்த நண்பர்களும் கிடையாது.
இஸ்ரேலை எதிரியாகப் பார்க்காத பிராந்தியமொன்றாக மத்திய கிழக்கின் சுன்னா முஸ்லிம்களைக் கொண்ட பலம்வாய்ந்த நாடுகள் காணப்படுகின்றன. அவை தீவிர ஜிஹாத் பயங்கரவாதத்திற்கு சவால் விடக்கூடியதாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எகிப்தில் நடந்த இராணுவப் புரட்சியை அமெரிக்கா இராணுவப் புரட்சி என்று வர்ணிப்பதைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேல் வொஷிங்டனுடன் மிகக் கடினமான முயற்சிகளை செலவழித்துள்ளதாக இஸ்ரேலிய ஹெராட்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
எகிப்திய இராணுவ ஜெனரல்களுக்கு உதவியதற்காகவும் வொஷிங்டனுடன் உறவுகளை பல்ப்படுத்தித் தத்தமைக்கும் சியோனிஸ தரப்புக்கு எகிப்திய இராணுவம் நன்றி தெரிவித்திருப்பதாகவும் அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment