அமெரிக்காவுக்கு சிரியா கடும் கண்டனம்!
டமஸ்கஸ்: சிரியா மீது இராணுவத் தாக்குதல் தொடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருவதற்கு சிரியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. “ஒபாமாவும், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனும் மரத்தின் உச்சிக்கு ஏறி விட்டு எப்படி இறங்குவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்” என்று சிரியாவின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி பஷார் அல் ஜாப்பரி கூறியதாக சிரியா அரசு செய்தி நிறுவனமான SANA செய்தி வெளியிட்டுள்ளது. சிரியன் டிவிக்கு அளித்த பெட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “அமெரிக்காவிலுள்ள தீவிரவாத வலது சாரிகள், நியோ ஜியோனிஸ்டுகள், இஸ்ரேல், துருக்கி, சில அரபு நாடுகள் ஆகியவற்றின் அழுத்தம் தாங்க முடியாமல், வேறு வழியில்லாமல் ஒபாமா இதனை அறிவித்துள்ளார்” என்று அவர் தனது பேட்டியில் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment