Thursday, September 5, 2013

ஞானசார தேரரின் ஆவேசம்-முஸ்லீம்கள் இந்நாட்டைச் சீரழிக்கின்றனர்

ஞானசார தேரரின் ஆவேசம்-முஸ்லீம்கள் இந்நாட்டைச் சீரழிக்கின்றனர்


நாட்டைச் சீரழிப்பதிற்கும் சிங்கள மக்களை கருவறுப்பதற்கும் இந்த நாட்டு சிங்கள மக்களின் வாக்குகளை பெற்ற முஸ்லீம் அரசியல்வாதிகளும் சூழ்ச்சி செய்து வருகின்றனர். கடந்த வாரம் துறைமுகத்தில் சுங்கத் திணைக்களத்தினரால் 17500 டின்களில் கிரீஸ் என்று சொல்லி போதைப்பொருள் கொள்களன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இக் கொள்களன்கள் பாக்கிஸ்தானில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்டது.

நேற்று (3)பொதுபலசேனவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கிருலப்பனை பொலிசிற்கு அருகில் உள்ள பண்சலையில் புதிய அலுவலகத்தில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தகவல்தருகையில்,

தெற்காசியாவிலேயே முதற்தடவையாக இப்பாரிய தொகை போதைப்பொருள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பாக்கிஸ்தான் பிரஜையும் மாளிகாவத்தையைச் சேர்ந்த ஒருவர் குருநாகளில் ஹாட்வெயார் கடை வியாபாரியும் சம்பந்தப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை முஸலீம் வியாபாரி; மகோவில் உள்ள களஞ்சியசாலையிலேயே இக் கொள்களன்களை கொண்டுசெல்ல தயாரக இருந்துள்ளார்.

சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வரும் முஸ்லீம் அரசியலவாதிகளே இதற்குப் பின்னால் உள்ளனர். இதனையே நாம் கடந்த மாதம் கொலண்நாவைப் பிரதேசம் பாதாளக்கோஸ்டியும் போதைப்பொருள் விற்பனைசெய்யும் பிரதேசமாக மாறியுள்ளது. இதற்காக சிங்கள சமுகம் விழிப்பாக இருக்க வேண்டும் என கொலண்நாவையில் நடாத்திய கூட்டததில்; சொல்லியிருந்தோம்.

முஸ்லீம்கள் இந்த நாட்டைச் சீரழித்து வருகின்றனர். ஹெரேயின் சிக்ரட் பாபுல் போன்ற பொருட்களை கொண்டுவந்து சிங்கள இளைஞர்களை சீரழித்து வருகின்றனர். இலங்கையில் முஸ்லீம்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லீம் பெண்களில் 100வீதமான பெண்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள். பர்தாவைப் பயண்படுத்தியே அவர்கள் இந்த வியாபாரத்தை மிக இலகுவாகச் செய்கின்றார்கள். அண்மையில் பாதாளக்கோஸ்டி மாமிஸ் மற்றும் பாஜி இவர்கள் எல்லாம் இந்த பர்தாவைப்பயண்படுத்தியே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அதற்காகவே பர்தாவை எதிர்த்தோம்.

பாக்கிஸ்தான மற்றும் ஆப்கணிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் சுற்றுலா விசாக்களில் இலங்கை வந்துள்ளனர். இவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களாவர். முஸ்லீம்கள் திட்டமிட்ட அடிப்படையில் இந்த நாட்டை சீரழிக்கிறார்கள் என்பது கண்கூடாத் தெரிகின்றது. இந்த போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதன் பிண்ணயில் சிங்கள வாக்குகளை பெற்ற முஸ்லீம் அரசியல் வாதிகள் மௌனமாக உள்ளனர். இக்குற்றம் பற்றி இந்த நாட்டில் உள்ள முஸ்லீம் அரசியல் வாதிகள், இயங்கங்கள் உலாமா சபைகள் என்ன செய்கின்றனர்.

தாக்கப்பட்ட கிராண்பாஸ் பள்ளிவாசல் கூட இதுபோன்ற போதைப்பொருள் கடத்தி வைப்பதற்கான ஒரு களஞ்சியசாலை அதற்காகவே அப்பிரதேச சிங்கள மக்கள் பௌத்த தேரர்கள் அதனை உடைத்தனர். முஸ்லீம்கள் சிங்களப் பாடசாலைகளுக்கு அருகில் பாபுல் கடைகளைப் போட்டு சிங்கள மாணவர்கள் 13-15 வயதுடைய மாணவர்களை போதைக்கு அடிமையாக்குகின்றனர். மேலும் பாக்கிஸ்தானில் இருந்து சிங்களப் பெண்களின் வயிற்றில் உள்ள கருவை அழிப்பதற்கான மருந்துகளை கொண்டுவருவதிலும் ஈடுபட்டுள்ளனர்.

சுங்கத் திணைக்களத்தின் அறிக்கையை பரீட்சித்துப்பார்த்தால் 70 வீதமான முஸ்லீம்களே கடத்தல்வியாபாரம், சிகரட், போதைப்பொருள் தேயிலைதூள்களில் வேறு மாற்றுத்தூள், பாக்கிஸ்தானில் இருந்து பழவகைகள் மருந்துகள் கொண்டுவரும் போர்வையில் பாரிய மோசடிகளைச் செய்துவருகின்றனர்.

ஆப்பாவி றிசான நபீக்கின் தலையை வெட்டிக் கொலை செய்தனர். இந்த போதைப்பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லீம் வியாபாரிகளின் தலையை வெட்டிக் கொலை செய்ய சரிஆ நீதி மற்றும் உலமா சபை முன்வருவார்களா ?

புpரபாகரன் போதைப்பொருட்கள் கடத்தி புலிகள் இயக்கத்தை உருவாக்கினார். அதே போன்று பாக்கிஸ்தான், ஆப்கணிஸ்தான் தீவிரபோக்குடையவர்களிடமிருந்து போதைப்பொருள் ஊடாக நிதி சேகரித்து முஸ்லீம்களும் இந்த நாட்டை கருவருக்க நினைக்கின்றார்கள். ஹலால் சம்பந்தப்பட்ட விடயத்தில் உலமா சபையும் மஹாசங்கத்தினரும் இந்த அரசையும் பாதுகாப்புப்படை மற்றும் சிங்கள மக்களையும் ஏமாற்றி விட்டனர். தொடர்ந்தும் ஹலால் நடைமுறையில் உள்ளது. என ஞானதேரர் உரையாற்றினர்.

No comments:

Post a Comment