Monday, September 9, 2013

ஜனாதிபதி முர்சியின் காலத்துப் பிரச்சினைகள் எங்கே சென்றது??


ஜனாதிபதி முர்சியின் காலத்துப் பிரச்சினைகள் எங்கே சென்றது??


ஜனாதிபதி முர்சி பதவி ஏற்றது முதல் எகிப்திய வரலாறு காணாத பிரச்சினைகளை முகம் கொடுத்தார் இந்த இக்கட்டான நிலையிலும் சிறந்த இஸ்லாமிய விலுமியமான ஆட்சியை கொண்டு வர பெரும் பாடுபட்டார் பெரும்பாலான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் பாதையில் சென்று கொண்டிருந்த போது அதை பொறுத்துக்கொள்ளாத மதச்சார்பற்றவர்கள் முனாபிக்கள் அவருக்கு எதிராக பல சதிகளை தீட்டினர் இருப்பினும் முர்சி அவர்கள் மிகவும் நேர்மையான முறையில் தனது ஆட்சியை முன்னெடுத்தார்.

எகிப்தின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க சுவைஸ் கால்வாயை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபட்டார் நைல் நதி பிரச்சினையை தீர்க்க சூடனுடன் கூட்டு ஒப்பந்தம் செய்தார் அதில் வெற்றியும் கண்டார் .மறுபுறத்தில் அவர் எதிர்கொண்ட பெரும் பிரச்சினை எதியோபியாவின் நைளுக்கு மத்தியில் போடும் அணைக்கட்டு பிரச்சினை இதை தீர்க்க பலமுறைகள் அங்கு சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார் .
இதுவல்லாத சில சில்லறை பிரச்சினைகள் இருந்தது இவைகள் கடந்த எகிப்திய படு மோசமான இரனுவ தலைமைகள் விட்டுச்சென்ற வடுக்கள். அவைகளை எப்படி ஒருவருடத்தில் தீர்க்க முடியும் நிச்சயம் யாராலும் முடியாது.

இவ்வாறு உலகில் சிறந்த நீதியான ஆட்சியை செய்து வந்தவரை பலர் பொய் குற்றச்சாட்டுகள் மூலம் இராணுவத்தின் உதவியுடன் அவரை அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவரை இன்று வரையும் யாருக்கும் தெரியாத இடத்தில் மறைத்து வைத்துள்ளனர் .
இப்போது நம்மில் எழும் கேள்வி என்னவென்றால் முர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டு இரண்டு மாதம் கடந்து விட்ட நிலையில் எகிப்து இதுக்கு முன்னர் எதிர்கொள்ளாத பல பிரச்சினைகளை இப்போது எதிர்கொள்கிறது விலைகள் அதிகரிப்பு மின் பிரச்சினை நீர் பிரச்சினை நைல் நதி பிரச்சினை......இன்னும் பல.

இப்படி எந்த பிரச்சினைகளை சொல்லி ஜனாதிபதி முர்சியின் ஆட்சி தோல்வியான ஆட்சி என்று பொய் கூறி நீக்கினார்களோ அந்த பிரச்சினைகள் இப்போது என்ன தீர்கப்பட்டுள்ளதா அல்லாத மறைக்கப்பட்டுள்ளதா? அதை விட மிகவும் மோசமாகவே இப்போது எகிப்தின் பொருளாதார நிலை உள்ளது இருப்பினும் அவை பற்றி யாரும் பேசுவதாக இல்லை.

இப்போது எகிப்து இஸ்லாமிய தனித்துவத்தை இழந்த நிலையில் பிரையானித்துக்கொண்டிருக்கிறது இது எகிப்திய ஊடகங்களுக்கு விளங்க வில்லையா ஏன் இரனுவ கிளர்ச்சியை ஆதரிப்பவர்களுக்கு கூட விளங்க வில்லையா அல்லது விளங்கியும் நடித்துக்கொண்டிருக்கிறீர்களா?

ஆனால் எகிப்தில் இருக்கும் ஓரிரு முனாபிக்கள் இவை பற்றி பேசுவதில்லை ஏனோ உண்மையே சொன்னால் அவர்களின் வண்டாலம் வெளியே தெரிந்து விடும் என்று நன்மைக்கு உதவி செய்வதை விட்டுட்டு தொழாதவர்களுக்கு பள்ளியை எரித்தவர்களுக்கு பள்ளி இமாம்களை கைது செய்தவர்களுக்கு உலமாக்களை கொன்றவர்களுக்கு பள்ளியை மூடியவர்களுக்கு தாடி வைத்தவர்களை பயங்கர வாதிகள் என்று சொல்பவர்களுக்கு இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் துரோகம் செய்தவர்களுக்கு இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளை தமது நேச நாடாக அங்கீ கரித்தவர்களுக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர் இதன் உள்நோக்கம் என்ன?

உங்களுக்கு இக்வான்கள் மீதுள்ள குரோதமும் அவர்கள் உலகில் சாதித்து விட்டார்கள் என்ற புறாமையை தவிர வேறில்லை அதுக்கு மேலாகவு நீங்கள் இந்த நிகழ்வுகளை உங்கள் கண்முன்னால் கண்டும் ஆதரிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஈமான் அற்ற வெறும் மனித கோத்துகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை உங்களுக்கு ஈமான் எப்படி வரும் தொழுகை என்பது உங்களுக்கு பெரும் சுமையாக உள்ள நிலையில் எப்படி அடுத்த விடையங்களில் உங்களுக்கு நேர்மை இருக்கப்போகிறது.

மைற்கற்கள்.

No comments:

Post a Comment