மொஹமட் நௌபர் 4 கோல்கள் : பூட்டானை வென்றது இலங்கை!
தெற்காசிய கால்பந்தாட்டச் சம்மேளனக் கிண்ண சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி தனது கடைசி போட்டியில் பூட்டான் அணியை 5:2 கோல்களால் வென்றது.
நேபாளத்தில் நடைபெறும் இத்தொடரின் பி குழவில் இடம்பெற்ற இலங்கை அணி மாலைதீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியுற்று அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தனது கடைசி போட்டியில் பூட்டான் அணியை 5:2 விகிதத்தில் வென்றது.
இலங்கை அணி சார்பாக முஹமட் நௌபர் 19, 26, 50, 90 ஆவது நிமிடங்களில் 4 கோல்களை அடித்தார். இலங்கை அணியின் மற்றொரு கோலை 32 ஆவது நிடத்தில் பேமா டோர்ஜி அடித்தார்.
இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, நேபாளத்துடன் மோதவுள்ளது. மற்றொரு அரையிறுதியில் இந்தியாவும் மாலைதீவும் மோதவுள்ளன.
No comments:
Post a Comment