எகிப்து திருப்பிக் கிடைக்கும் போது முழு உம்மத்தும் திருப்பிக் கிடைத்துவிடும்
இமாம் ஹஸனுல் பன்னா இஸ்லாமிய உம்மத்தினதும் எகிப்தினதும் இஹ்வான்களினதும் பெருமையாக உள்ளார். அவர்களது சிந்தனை நடுநிலையானது.
எகிப்தில் நடந்தது ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சட்டரீதியான தலைவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு இராணுவப் புரட்சி என்பதற்கு எகிப்திலும் அதற்கு வெளியிலும் உள்ள அனைவரும் சாட்சியாக உள்ளனர்.
எகிப்தில் நடந்தது இரத்தம் தோய்ந்த பாசிச இராணுவப் புரட்சியாகும். இராணுவம் மனிதாபினத்தை படுகொலை செய்திருக்கிறது.
உம்மத்தை 40 வருடங்கள் பின்தள்ளக் கூடிய இராணுவப் புரட்சியை உம்மத் எப்படி ஏற்றுக் கொள்ளும்!
இராணுவப் புரட்சியின் முதல் கட்டம் சிவில் ஆட்சியாளரை நீக்குவதாகும். இரண்டாவது கட்டம் பொம்மை தலைவரொன்றை நியமிப்பது. மூன்றாவது கட்டமாக அடக்குமுறையும் ஊடகங்களுக்கு பூட்டுப் போடுவதும். நான்காவது, சிவில் உடையில் இராணுவம் தலைமைத்துவத்திற்கு வருவது.
அறபு பிராந்தியம் கடந்து செல்லும் காலகட்டம் சீர்கெட்ட ஆட்சியாளர்கள் ஒவ்வொன்றாய் வீழ்ந்து செல்லும் வசந்த காலமாகும்.
அறபு வசந்தத்தைத் தொடர்ந்து வந்த காலப்பகுதி மக்கள் தமது சட்டபூர்வத்தன்மையை மீளப் பெறுவதற்காக இரண்டு வருடமாக போராடிய புயல்நிறைந்த காலமாகும்.
நம்பிக்கையீனம் கொள்ள வேண்டாம் என்றும் களவாடப்பட்ட தமது சட்டபூர்வத்தன்மையை மீளப் பெறுவதில் தொடர்ந்தும் சாத்வீகப் போராட்டத்தை முன்கொண்டு செல்லுமாறும் அறபு மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
எகிப்திலும் அதற்கு வெளியிலும் உள்ள மதகுருமார்கள் இராணுவப் புரட்சிக்கு வக்காளத்து வாங்கும் வேலைத்திட்டத்திலும் வெகுஜனத்தை தூரப்படுத்தி அவர்களை அடக்கி ஒடுக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்லாம் அனைத்துக் காலத்திற்கும் அனைத்து இடத்திற்கும் சாலப் பொருத்தம் என்பது இஹ்வான்களின் ஸ்தாபகர் இமாம் ஹஸனுல் பன்னாவின் தூதுக்குப் பின்னரே எமது உம்மத்தில் ஆழவேரூண்டியிருக்கிறது.
வாக்குப் பெட்டிகளை நிராகரித்து வன்முறைக்குள் இழுத்து அதன் பெறுபேறுகளை சிதைக்கும் வகையில் இஸ்லாமிய வாதிகள் மீது கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டன.
முர்ஸி தனது சொற்ப ஆட்சிக் காலத்தில் அவருக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்த நிலையில் தனக்குரிய சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்ளவில்லை.
எகிப்தில் இருந்த இராணுவ ஆட்சியாளர்களுக்கு பணஉதவி செய்வதிலிருந்து அல்லாஹ் குவைத் அரசாங்கத்தை காப்பாற்றினான். மத்திய கிழக்கு மக்கள் இராணுவப் போக்கை மறுக்கின்றனர்.
இஹ்வான் அமைப்பு பல தசாப்தங்களாக சிறைக்க்கூடங்களுக்குள்ளே இருந்து வருகிறது. இராணுவப் புரட்சியாளர்களின் ஊடகங்கள் புரட்சிக்கு முன்பும்தான் பின்பும்தான் அவர்களை ஒடுக்கியே வந்திருக்கிறது.
முபாரக்கிற்குப் பின்னர் அரசியலை முன்னுக்கு கொண்டு போகவேண்டாம் என்று நான் இஹ்வான்களை உபதேசித்தேன். எனினும் அஹ்மத் ஷபீக்கின் வெற்றியைத் தடுக்க அவர்கள் அதிகாரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.
எகிப்திய புரட்சி வெற்றி பெரும். ஏனெனில், அசத்தியத்திற்கு ஒரு தவணை உண்டு. இறுதியில் சத்தியமே வெற்றி பெரும்.
இரவு நேர ஆர்ப்பாட்டங்களுக்காக மக்கள் வீதிக்கு இறங்குகின்றமை இரத்தம் தோய்ந்த இராணுவப் புரட்சியை நிராகரிப்பதில் மக்கள் மிகப் பிடிவாதமாக உள்ளiமையைக் காட்டுகிறது.
வன்முறையில் சறுக்கி வீழ்ந்திட வேண்டாம் என சட்டபூர்வத்தன்மைக்கு உதவும் கூட்டணியை நான் எச்சிரிக்கிறேன்.
எகிப்தின் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு, முர்ஸியை மீளவும் பதவியில் அமர்த்துவதாகும். அதன்பின்பு நேரகாலத்துடன் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதுமாகும்.
இராணுவம் சிரியாவின் நிலைமையைப் போன்ற தொன்றுக்கே எகிப்தை கொண்டு செல்லுகிறது.
நாங்கள் பிரச்சாரகர்கள். மக்களைப் பார்த்து நரகவாதி சுவனவாதி எனத் தீர்ப்பு சொல்லும் நீதிபதிகள் அல்ல.
எகிப்திய புரட்சியை நான் பாராட்டுகிறேன். அது அமைப்புக்களை ஊடகவியலாளர்களை அறிஞர்களை நாடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது.
நம்பிக்கையீனம் கொள்வது குறித்தும் சரணடைவது குறித்தும் எச்சரிக்கிறேன். நம்பிக்கையீனத்தால் தியாகங்களை குழப்பிட கொள்ளவேண்டாம்.
புரட்சிகள் சுதந்திரத்தை நோக்கியும் இன்னொருவரை உள்வாங்கிக் கொள்ளுமாறும் அழைக்கின்றன. தற்போது நடப்பது போன்று வன்முறை மற்றும் கொலைக்கு அது அழைக்க வில்லை.
எகிப்து இஸ்லாமிய உம்மத்தின் முன்னோடி. எழுச்சியின் மத்திய நிலையம். எகிப்து திருப்பிக் கிடைக்கும் போது முழு உம்மத்தும் திருப்பிக் கிடைத்துவிடும்.
எகிப்தை தவிர்த்து இஸ்லாமிய உம்மத் எழுச்சி பெறாது. எனவேதான் அது எமது கவனத்திற்குரியதாயிருக்கிறது.
(கலாநிதி தாரிக் சுவைதான் அண்மையில் அல் ஜஸீரா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய விடயங்களின் சுருக்கக் குறிப்புகள்)
-கலாநிதி தாரிக் சுவைதான்
- தமிழில் : A W M Basir
No comments:
Post a Comment