Wednesday, September 4, 2013

சிரியா: 60 நாட்களுக்குள் தாக்குதலை நடத்த செனட் ஒப்புதல்!

சிரியா: 60 நாட்களுக்குள் தாக்குதலை நடத்த செனட் ஒப்புதல்!

வாஷிங்டன்: சிரியா மீது குறைந்த இராணுவத்தைப் பயன்படுத்தி 60 நாட்களுக்குள் தாக்குதலை நடத்தி முடிக்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
சிரியா மீது இராணுவத் தாக்குதல் நடத்துவது குறித்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் வாக்கெடுப்புக்கு வர உள்ள நிலையில், செனட் சபையின் ஒப்புதலுக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், மிகக் குறைந்த அளவு இராணுவத்தைப் பயன்படுத்தி 60 நாட்களுக்குள் தாக்குதலை முடிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் கூடுதலாக 30 நாட்கள் தாக்குதலை நீட்டித்துக் கொள்ளலாம் என்றும், ஆனால் அதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் செனட் சபை கூறியுள்ளது


பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரா கமிட்டியில் விசாரணை நடந்துவரும் நிலையில் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையிலும் அந்த தீர்மானம் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

No comments:

Post a Comment