முர்ஸியையும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் – ஷெய்குல் அஸ்ஹரின் ஆலோசகர்
முர்ஸியையும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும்படி ஷெய்குல் அஸ்ஹரின் ஆலோசகர் ஷெய்க் ஹஸன் ஷாபிஈ வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய நல்லிணக்கத்துக்கான முன்னெடுக்கப்புக்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே இவர்கள் விடுதலை செய்யப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், இடைக்கால நிர்வாகத்தை நான்கு மாதங்களுடன் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,
புரட்சிக்கு எதிரானோர் என்று தெளிவாகத் தெரிந்தோருடன் இணைந்து செயற்படுவது
மிகப் பெரும் குறையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment