Wednesday, September 4, 2013

எகிப்தில் அல் ஜெஸீரா உள்ளிட்ட தொலைக்காட்சி சேவைகளுக்குத் தடை..

எகிப்தில் அல் ஜெஸீரா உள்ளிட்ட தொலைக்காட்சி சேவைகளுக்குத் தடை..


எகிப்தில் செயல்படும் 4 தொலைக்காட்சி செனல்களின் ஒளிபரப்பை நிறுத்த எகிப்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான அல்ஹாபிழ் முஹம்மத் முர்சி இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பின் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதோடு பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் எகிப்தில் பிரபல அரபுலக செனலான அல் ஜெஸீரா, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்குச் சொந்தமான அஹ்ரார் 25 மற்றும் இஸ்லாமிய செனல்களான அல்-யர்மூக் மற்றும் அல்-குத்ஸ் ஆகிய நான்கு செனல்களும் இனி மேல் ஒளிபரப்பக் கூடாது என எகிப்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment