Wednesday, September 4, 2013

இன்று சர்வதேச ஹிஜாப் தினம் (9 - 4)

இன்று சர்வதேச ஹிஜாப் தினம் (9 - 4)


ஒரு பெண் தன் உடலில் ஆடை ஏதுமின்றி வீதியில் உலா வருவதற்கு உரிமையும் சுதந்திரமும் உள்ள பிரான்ஸ்-ல்தான் 2003-ம் ஆண்டில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும், ஜெர்மனில் வசித்து வந்த #மர்வா_அல்_ஷர்பீனி என்ற 32 வயது இஸ்லாமிய பெண்மணி ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டார்.

அதுவும், ஹிஜாப் அணிந்தது குறித்த அரசின் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்த அந்த பெண், ஹிஜாப் அணிவதற்கு எதிர்க்க்கருத்து கொண்ட கும்பலால் "ஜெர்மனி நீதிமன்ற வளாகத்திலேயே" 2009 ஜூலை 1 ந்தேதி, அவரது கணவரும் இரண்டரை வயது கைக்குழந்தையும் உடனிருகையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கோர படுகொலையை எதிர்த்து, உலக முஸ்லிம் அமைப்புக்கள் ஆலோசித்து, "செப்டம்பர் 4" ஐ "உலக ஹிஜாப் தினமாக" அனுஷ்டிக்க முடிவெடுக்கப்பட்டது. அன்று முதல், முஸ்லிம் உலகில் இந்த நாள் உலக "ஹிஜாப்" தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாள், ஹிஜாப் அணியும் உரிமைக்காக தனது இன்னுயிரை நீத்த சகோ.மர்வா அல் ஷர்பீனியின் வீர-தீர செயலை நினைவு படுத்துவதற்காக மட்டுமல்ல..!

மேலும், ஹிஜாப் அணியும் பெண்களுக்கு இதை காரணம் காட்டி... கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களின் கதவுகள் வேகமாக அடைக்கப்பட்டு வரும் இந்நாளில்...

"ஒரு பெண் தன் உடலை மறைக்கும் கண்ணியமான ஆடையை தன் எண்ணப்படி அணிய விரும்புவதும், அதை இந்த ஆணாதிக்க உலகம் அவரின் உடலை ஆடையால் மறைக்க பரந்த மனப்பான்மையோடு அனுமதிப்பதும்தான் நிஜமான பெண்ணுரிமை..!"

...என்று பறை சாற்றவே, இந்த "சர்வதேச ஹிஜாப் தினம்" எனும் நிஜமான பெண்ணுரிமை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது..!

No comments:

Post a Comment