Friday, September 6, 2013

இலங்கை ஒரு மியன்மாராகுமா..??!!

இலங்கை

ஒரு மியன்மாராகுமா..??!!!


இஸ்லாத்தின் வரலாற்றையும் தற்கால முஸ்லிம் உம்மத்தின் நிலையையும் சற்று உன்னிப்பாக அவதானித்தால் ஓர் உண்மையை விளங்கக்கூடியதாக இருக்கிறது. அதுதான் முஸ்லிம்களை நோக்கி சோதனைகள் வரும். முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவார்கள். எவ்வாறு தான் இருந்தாலும் முஸ்லிம்கள்தான் வெற்றி பெருவார்கள். என்பதாகும். இந்த விடயம் காலத்திற்கு மிகவும் பொருத்தம் என்று கருதியதால் இந்த ஆக்கத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

அல்லாஹுத்தஆலா தனது வேதத்திலே, 'நபியே! விசுவாசிகளிடம் நீர் கூறுவீராக: உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய உயிர்களும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவியரும், உங்களுடைய குடும்பத்தினரும், நீங்கள் எதனைச் சம்பாதித்து வைத்திருக்கிறீர்களோ அந்தச் செல்வங்களும், நீங்கள் எதனுடைய நஷ்டத்தைப் பயப்படுகிறீர்களோ அத்தகைய வியாபாரமும், நீங்கள் எதனை திருப்திப் படுத்துகிறீர்களோ அத்தகைய உங்கள் குடியிருப்பிடங்களும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவனுடைய பாதையில் போர் செய்வதையும் விட உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால், அப்போது நீங்கள் அல்லாஹ்வுடைய கட்டளை (சோதனை) வரும் வரையில் எதிர்ப்பாத்திருங்கள் மேலும், பாவிகளான கூட்டத்தினரை, அல்லாஹ் நேர்வழியில் செலுத்தவும் மாட்டான்.' (சூறதுத் தஃபா 9:24) என்கிறான்.

இந்த வசனத்தின் ஒளியில் பார்த்தால். இந்த சமூகம் சோதனைகளை கேட்டு வாங்குவது போன்றுள்ளது. ஏனெனில் இன்றைய முஸ்லிம் சமூகம் பொதுவாக அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மேலாக தங்களது சொத்துக்களையும், அனைத்து செல்வங்களையுமே நேசிக்கின்றனர். இதற்கு உதாரணமாக, ஒருவருடைய வீட்டை இஸ்லாத்தின் எதிரிகள் எரித்து விட்டார்கள் என்று வைத்தால். அவர், இது அல்லாஹ் எனக்குத் தந்தது. அவன்தான் இப்போது திருப்பி எடுத்துள்ளான் என்பாரா? அல்லது தனக்குத்தெரிந்த தூசன வார்த்தைகளால் எரித்தவர்கள் மீது எரிந்து விழுவாரா?.. இரண்டாவது தான் எம் எல்லோரினதும் பதிலாக இருக்கும்.

இது ஒருபுறமிருக்க வரலாற்றில் எமது சமூகத்தின் நிலையை ஒரு கனம் மீட்டிப்பார்ப்போம். முதலில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கால சமூகத்தினர் எதிர்நோக்கிய சோதனைகளைப்பார்த்தால், இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களுக்கு ஓர் அச்சநிலை இருந்தது. அதுதான் நான் இஸ்லாத்தை ஏற்றது எனது எஜமானுக்கு தெரிந்து விடுமோ..? நான் நபியை சந்திப்பதை குறைஷிகள் கண்டுவிடுவார்களோ..? என்ற அச்சமாகும். அதனைத் தொடர்ந்து, அந்த சமூகத்தை அபூதாலிப் பல்லத்தாக்கில் மாதக்கணக்கில் வைத்து பொருளாதார தடை மூலம் சோதிக்கப்பட்டார்கள். அதன்பின் முஸ்லிம்களுக்கெதிராக போர்தொடுத்து பலரைச் சஹீதாக்கினார்கள். அத்தனையையும் எதிர்கொண்டு அந்த சமூகம் உயர்ந்த சமூகமாக மாறியது.

இன்று எகிப்தைப்பார்த்தாலும் இப்படித்தான். முதலில் அப்துந்நாஸர், அன்வர் சாதாத், ஹுஸ்னி முபாரக் போன்றவர்களின் ஆட்சியில் இஸ்லாமிய வாதிகள் எப்போது சிறைபிடிக்கப்படுவார்கள், தூக்குமரம் ஏறுவார்கள் என்ற அச்சம் இருந்தது. அதனைத் தொடர்ந்து முர்ஸியின் ஆட்சியிலும் முபாரக்கின் அடிவருடிகளான இராணுவத்திடம் நாட்டின் 40% மான சொத்து இருந்ததால் எப்போது இவர்கள் இதனைத் தடுப்பார்களோ என்ற அச்சம் இருந்தது. அதனைத் தொடர்ந்து இராணுவம் கேஸ்வாயுவையும், குடிநீரையும், மின்சாரத்தையும்.... தடுத்துவைத்து பொருளாதார நெருக்கடியை உருவாக்கினார்கள். பின் முர்ஸியை ஆட்சிகவிழ்த்து இஸ்லாமிய வாதிகளின் உயிர்களைக் கொன்று குவிக்கிறார்கள்.

மியன்மாரைப் பொருத்தவரையில், ஆரம்பத்தில் ரோஹின்யா இன முஸ்லிம்களுக்கு 969 புசழரி என்ற பௌத்த இனவாதக் குழுவின் நடவடிக்கைகளால் ஒரு வகையான பீதி நிலையொன்று உருவாகியது. அதனைத் தொடர்ந்து அந்தக் குழு முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களையும் நசுக்கியது. அதனைத் தொடர்ந்து உயிர்ப்படுகொலைகள் நிகழ்ந்தது.... இவ்வாறு தான் உலகமெங்கும் முஸ்லிம்களுக்கு சோதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த சோதனைகளின் ஒழுங்கை பின்வரும் வசனத்துடன் உரசிப்பார்த்தால் இலங்கையில் அடுத்தது என்ன நிகழும் என்பதை எங்களால் ஊகிக்க முடியுமாகவுள்ளது.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான், '(விசுவாசம் கொண்டோரே!) பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள், கனிக(ளின் விளைச்சல்க)ள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம்ளூ மேலும் (நபியே! இவற்றைப்) பொறுத்துக் கொள்பவர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக!' (சூறதுல் பகறா 2:155)

இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் ஒரு சமூகத்தை சோதிக்கநாடினால் பின்வரும் படிமுறையைக் கையாள்வதைக் காண்கிறோம்.

1. அச்சமான நிலை
2. பொருளாதாரம்
3. உயிரிழப்பு

இந்த ஒழுங்கில் தான் இலங்கை முஸ்லிம்களான நாமும் சோதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோமோ என்று என்னத் தூண்டுகிறது. ஏனெனில்,

இலங்கையில் ஆரம்பத்தில் கிறீஸ் பூதம், டீடீளு மற்றும் சிங்கள ராவயா போன்ற பௌத்த தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளால் ஒரு அச்சமான நிலையைக் கொண்டு சோதனைகள் தொடர்ந்தது. பின் அந்தக் குழுக்கள் ஹலால் சான்றிதழ் ரத்துச் செய்யப்பட வேண்டும், முஸ்லிம்களின் பொருட்களை ஒருவரும் வாங்கக்கூடாது, முஸ்லிம்களின் கடைகளுக்குக் கூட செல்லக்கூடாது.... என்று முஸ்லிம்களின் பொருளாதாரத்திற்கு வேட்டுவைத்தார்கள். பின் அதனுடன் சேர்ந்தாற்போல் பள்ளிவாயல்களின் மீது தமது கவனத்தை திருப்பியவன்னம் இருக்கிறார்கள்..... வரலாற்றிலும் சமகாலத்திலும் அச்சமான நிலை, பொருளாதாரத்தைத் தொடர்ந்து உயிர்ப்படுகொலைகள்தான் நடந்தும் நடந்தவன்னமும் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன நடக்கும் என்ற வினா ஒரு புதிராகவே இருந்து வருகிறது.

மேற் சொன்ன அல்குர்ஆன் வசனம் மற்றும் மேலே நினைவூட்டப்பட்டுள்ள வரலாற்று, சமகால நிகழ்வுகளின் அடிப்படையில் அடுத்ததாக இலங்கையும் ஒரு மியன்மாராக, எகிப்தாக, சிரியாவாக, காஷ்மீராக இன்னும் இதுபோன்ற தேசங்களாக மாறலாம் என்ற ஊகத்தை தருகிறது. ஏனெனில் இப்படி நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சிலர் கதைக்கிறார்கள், 'அப்படியல்ல இவ்வாறு இலங்கையில் நடக்க எந்த வாய்ப்பும் இல்லை. இப்படி நடந்தால் அரபுநாட்டால் வயிறு நிறப்பும் இலங்கைக்குத் தான் ஆபத்து, அரபுநாடுகள் சும்மாவிடாது' என்று. இந்தக் கூற்றை எம்மால் நூற்றுக்கு நூறு நம்ப முடியாது. மாறாக சில வேலை அப்படி அவர்கள் உதவலாம் என்றே கூறமுடியும். ஏனெனில் இன்று எகிப்து கொலைக் களமாக மாற அரபு அரசர்களும் அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் பின்னனிக் காரணம். ஆகையால் அடுத்து இலங்கையும் ஒரு மியன்மாராக மாறலாம் என்று ஊகிக்கலாம்.

இப்படி இலங்கை முஸ்லிம்களது நிலையும் மாறுமானால் நாம் என்ன செய்ய? என்பது எமது அடுத்த வினாவாகும். அதற்கு சிலர், 'நாம் அஞ்சத் தேவையில்லை அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக் கொள்வான். நாம் அவனிடம் இருகரம் ஏந்துவோம்' என்கிறார்கள். இந்த நிலைப்பாடு சரிதானா? ஆரம்பத்தில் நாம் கூறியது போன்று அல்லாஹ்வுக்கு நிகராக எமது சொத்துக்களையும் செல்வங்களையும் நேசித்து நாமே சோதனைகளைக் கேட்டு வாங்கிவிட்டு, அது எம்மிடம் வந்ததும், அவனிடம் திரும்பி இந்த சோதனையை அகற்றிவிடு என்று சொல்லுகிறோம். இது தனக்கு அனைத்தும் இருந்தபோது படைபாபளனை மறந்து விட்டு, எமது விருப்பத்திற்குரியவைகள் இழக்கும் போது அவனிடம் உதவிகேட்பது போன்றல்லவா இருக்கின்றது. இது எவ்வளவு பெரிய நன்றி கெட்டத்தனம். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளை அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் கடுமையாக கண்டிக்கிறான். உதாரணமாக அல்லாஹ் சூறா லுக்மானிலே 32 ஆவது வசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்.

'(கடலில் பிரயாணிக்கும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள், மேல் முகடுகளைப்போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில் அல்லாஹ்விடம் மாத்திரமே எந்தவித கலப்பும் இல்லாமல் அவர்கள் அழைத்துப் பரிரார்த்திக்கின்றனர்ளூ (பின் அல்லாஹ்) அவர்களைக் காப்பாற்றி கரை சேர்த்துவிட்டால், அப்போது அவர்களில் (அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளும்) நீதமானவர்களும் உண்டுளூ இன்னும் மிக நன்றிகெட்ட பெரும் சிதிகாரர்களைத் தவிர, (மற்றெவரும்) நம்முடைய அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை.' என்று கூறிவிட்டு அல்லாஹ்வையும் மறுமை நாளையும் பயந்து கொள்ளும் படி அல்லாஹ் எச்சரிக்கிறான். ஆகவே நாம் இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளாக மாத்திரம் இருக்கக் கூடாது.

அப்படியானால் என்ன செய்வது? என்ற வினா எழும். அதற்கு அல்குர்ஆன் இவ்விதம் பதிலளிக்கிறது.

'விசுவாசம் கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுங்கள்ளூ நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.' (2:53)

இவ்வாறு முற்றிலும் அல்லாஹ்விற்குரியவர்களாக மாறி அவனுடைய உதவியைமாத்திரம் எதிர்பார்த்திருங்கள் என்று கூறிவிட்டு அல்லாஹ் அடுத்த வசனத்தில் பின்வருமாறு கூறுகின்றான்.

'இன்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகின்றவர்களை மரணித்தோர் என நீங்கள் கூறவேண்டாம்ளூ மாறாக, அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்ளூ எனினும் நீங்கள் அதனை உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்.'
இந்த வசனம் ஷஹீத்களைப் பற்றி கூறுகின்றது. அப்படியென்றால் அல்லாஹ்விடம் பிரார்த்தித்து விட்டு சும்மா இருக்காமல் களத்தில் குதித்து போராடுங்கள் அப்போது தான் உங்களுக்கு வெற்றிகிடைக்கும் என்று சொல்லிவிட்டு. அடுத்த வசனத்தில்,

'(விசுவாசம் கொண்டோரே!) பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள், கனிக(ளின் விளைச்சல்க)ள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம்ளூ மேலும் (நபியே! இவற்றைப்) பொறுத்துக் கொள்பவர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக!' என்கிறான்.

இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ், நீங்கள் களத்தில் குதித்து போராடும் போது உங்களுக்கு இப்படியான பல சோதனைகள் வரும். உதாரணமாக உங்களது உயிருக்கு ஆபத்துக்கள் வரும், உங்களது வீடுகள் சொத்துக்கள் நொருக்கப்படும், உங்களது உறவினர்கள் நண்பர்கள் சமூகத்தினர் கொல்லப்படுவார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும். என்று கூறிவிட்டு இப்படித்தான் பொறுமைசாலிகள் என்று அடுத்தவசனத்தில் கூறுகின்றான்.

'அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்கு ஏதேனும் ஒரு சோதனை ஏற்பட்டால், 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம்ளூ நிச்சயமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கின்றோம்' என்று கூறுவார்கள்.'

இந்த வசனம் சோதனையின் போது எமது நேசத்திற்குரியவைகள் எம்மைவிட்டு சென்றால் இழப்புக்குக் காரணமாக இருந்தவர்களை திட்டித் தீர்க்காமல். அல்லாஹ்வையே சார்ந்திருப்பார்கள் என்கிறது. அதனைத் தொடர்ந்து அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

'அத்தகையோர், அவர்கள் மீதுதான் அவர்களுடைய இரட்சகனிடமிருந்து நல்லாசியும், கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், அவர்கள்தான் நேர்வழியைப் பெற்றவர்கள்.' இப்படியாக அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றவர்களுக்குத் தான் அல்லாஹ் சுவனத்தைக் கொடுக்கின்றான் என்று சூறதுல் பஜ்ரின் 27-30 வரையான ஆயத்துக்கள் சுட்டுகின்றது.

'(அல்லாஹ்வின் கட்டளைகளை உண்மைப்படுத்துவதைக் கொண்டு) அமைதியைப் பெற்ற ஆத்மாவே! நீ உன் இரட்சகன் பக்கம் (அவனைத்) திருப்தியடைந்த நிலையிலும், அவனால் பெருந்திக்கொள்ளப்பட்ட நிலையிலும் மீள்வாயாக! நீ எனது அடியார்(களான நபிமார்கள், ஷுஹதாக்கள், நல்லோர்களின் கூட்டங்)களில் ஒருவராகி எனது சுவனத்தில் நுழைந்துவிடுவாயாக! (என்று அல்லாஹ் கூறுவான்)'

இவ்வாறாக உலகம் பூராகவும் முஸ்லிம்களுக்கு சோதனை வருவது இன்னுமொன்றையும் உணர்த்துகிறது. அதனை பின்வரும் அல்குர்ஆன் வசனங்களின் மூலம் தெளிவுபெறலாம்.

'(விசுவாசங் கொண்டோரே!) நீங்கள் தைரியத்தை இழந்துவிடவேண்டாம் கவலையும் பட வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், நீங்கள்தாம் மிக்க மேலானவர்கள். உங்களுக்கு காயம் ஏற்பட்டதென்றால் (அதைப் பற்றி அதைரியமடையாதீர்கள். ஏனென்றால்) அந்த மக்களுக்கு, இதைப் போன்றே காயம் ஏற்பட்டுள்ளதுளூ அந்த சோதனையான நாட்களை மனிதர்களுக்கிடையில் மாறி மாறி வரும்படி நாம் செய்கின்றோம். ஏனென்றால், (உங்களில்) உண்மையாகவே விசுவாசங்கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறிவதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரைத் தத்தம் செய்யும் மாபெரும்) தியாகிகளை அவன் எடு(த்தறிவி)ப்பதற்காகவுமே (இவ்வாறு செய்கின்றான்.) இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.' (ஆலு இம்ரான் 3:139-140)

இந்த வசனம் மூலம் அல்லாஹ் சோதனைகளை எங்களுக்கு மத்தியில் மாறி மாறி வரச்செய்வது எங்களிலுள்ள சுவனவாசிகளையும், அநியாயக்காரர்களையும் பரித்தரிந்து சுவனவாசிகளுக்கு சுவனத்தை பரிசளிப்பதற்காகும் என்பதனைத் தெளிவுபடுத்துகிறது. இப்பொழுது இந்தசோதனையை எகிப்து போன்ற நாடுகளில் நிதர்சனமாக கண்டுகொண்டிருக்கிறோம். நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஷஹீதுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். அதேபோன்று முஸ்லிம் சமூகத்தின் எதிரிகளையும் அல்லாஹ்வின் எதிரிகளையும் தெளிவாகக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேலை அல்லாஹ் இலங்கையிலிருந்து சுவனத்துக்குரியவர்களை தேர்ந்தெடுப்பதற்கு இந்த சோதனையை இலங்கையிலும் கொண்டுவரலாம். மேலுள்ள வசனங்களைத் தொடர்ந்து வரும் 142ஆம் வசனம் இப்படிக் கூறுகிறது.

'(விசுவாசங் கொண்டோரே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) யுத்தம் செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் பரிசோதித்து அறியாமலும், இன்னும் (துன்பங்களை பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார், என்பதை அவன் அறியாமலும், நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாமென்று எண்ணிக்கொண்டிருக்கின்றீர்களா?'

ஆகவே சகோதரர்களே! எமது சமூகத்தை நாம்தான் காப்பாற்ற வேண்டும். நிச்சயமாக நாம் சோதிக்கப்படுவோம். அப்படி சோதிக்கப்பட்டால் அந்த சோதனையினூடாக நாம் சுவனத்தை அடையக்கூடியவர்களாக நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். ஆகவே இப்படியான சோதனை எம்மை நோக்கி வரமுன் நாம் எம்மை அல்லாஹ்விற்குரியவர்களாக மாற்றிக்கொண்டு. இப்படியான சோதனையிலிருந்து எம்மை காப்பாற்றுவாயாக என்று இறைவனிடம் இருகரம் ஏந்துவோம்.


முஆத் முனாஸ் (வரகாபொலை)
மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகம்

No comments:

Post a Comment