Saturday, September 7, 2013

கட்டாரில் நற்குணத்திற்காகப் பாராட்டப்பட்ட இலங்கையர்

கட்டாரில் நற்குணத்திற்காகப் பாராட்டப்பட்ட இலங்கையர்

கட்டாரில் வாகன நிறுத்தும் தொகுதியொன்றில் தவறவிடப்பட்டதாகக் கூறப்படும் 90,000 (சுமார் 32 இலட்சம் ரூபா) கட்டார் ரியால்களை முஹம்மட் நிப்ராஸ் என்ற இலங்கையர் கண்டெடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

அவ்விடத்திலிருந்த காவலாளியூடாக கட்டார் பொலிஸாரிடம் அப்பணத்தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து கட்டார் உள்துறை அமைச்சரின் டுவிட்டர் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பவற்றில் இந்த செய்தி பாராட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டார் பாதுகாப்புத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான பிரிகோடியர் நாஸர் ஜப்பார் அல்நுஸைரியும் இந்த செயலை பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: விடிவெள்ளி

No comments:

Post a Comment