Monday, October 14, 2013

அமெரிக்கா அபாய கட்டத்தினுள் நுழைந்துள்ளது

-உலக வங்கியின் தலைவர்-

அமெரிக்கா மிக அபாயகரமான கட்டத்தினுள் நுழைந்துள்ளதாக உலக வங்கியின் தலைவர் ஜீம் யோங் கீம் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் வரவுசெலவுத்திட்ட நெருக்கடி மற்றும் அமெரிக்காவின் பொதுக் கடன் எல்லையை அதிகரித்தல் தொடர்பான நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் கடந்த சனியன்று தோல்வியடைந்ததை அடுத்தே அவர் இவ்வெச்சரிக்ககையை விடுத்துள்ளார்.

உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் வருடாந்த இணை மாநாட்டின் முடிவில் கருத்து வெளியிட்ட கீம், அதி அபாயகரமான கட்டத்தினுள் நுழைவதற்கு இன்னும் 5 நாட்கள் எஞ்சியுள்ளன. இறுதிக் காலக்கெடு நெருங்கும் போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. வளர்ந்த பொருளாதார நாடுகளுக்கும் இது மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்பாக இந்நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால் அமெரிக்காவிலும் உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் மிக மோசமான பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் அமெரிக்க பொருளாதாரம் மீதான நம்பிக்கையில் பெரும் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத்திட்டம் மற்றும் நாட்டின் பொதுக் கடன் எல்லையை அதிகரித்தல் தொடர்பாக அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையில் தோன்றியுள்ள கருத்துமுரண்பாடுகளை இவ்வாறான நிலையைத் தோற்றுவித்துள்ளது.

No comments:

Post a Comment