எகிப்தில் மக்கள் வாக்கடுப்பு மூலம் தெரிவு
செய்யப்பட்ட ஜனாதிபதி முர்சி அவர்களை இஸ்லாத்தின் துரோகிகள் அவருக்கு எதிராக பல
சதிகளை செய்து எகிப்திய இராணுவம் மூலம் கிளர்ச்சியை ஏற்படுத்தி அவரை பலவந்தமாக
பதவி நீக்கியது உலக அரசியல் வரலாற்றில் பாரிய தாக்கத்தை செலுத்தி வருவது அனைவரும் அறிந்த விடயமாகும் .
ஜனாதிபதி முர்சி அவர்களை பதவி நீக்க
கோடிக்கணக்கான பணங்களை அமெரிக்கா ,இஸ்ரேல் ,சவூதி அரேபியா ,குவைத் ,பஹ்ரைன் ,போன்ற
நாடுகள் செலவழித்ததும் நீங்கள் அறிந்த விடயமே இதை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும்
ஜனாதிபதி அவர்கள் மீண்டும் பதவிக்கு வர வேண்டும் என கூறிவருகின்றனர் .
அதன் முன்னணி நாடாக துருக்கி ,கத்தார்
,திகழ்கிறது அதிலும் துருக்கி பலத்த ஆதரவை இதுவரை வழங்கி வருகிறது அந்த வகையில்
எகிப்தில் முர்சி பதவி விலத்தப்பட்டது முதல் இதுவரையும் இராணுவம் மற்றும் போலிஸ்
படைகளின் தாக்குதலில் சுமார் 8000 பேர்
கொல்லப்பட்டுள்ளனர் 15000 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர் 30000 கும் அதிகமானவர்கள்
காயப்பட்டுள்ளனர் இருப்பினும் எகிப்தில் இன்னும் ஆர்ப்பாட்டம் ஓய்ந்த பாடில்லை .
இக்வான்களுக்கு
எகிப்தில் நடைபெற்ற கொடுமைகள் இதுவரைக்கும் எந்த ஒரு இயக்கத்துக்கும் இடம்பெற்றது
கிடையாது அந்த அலவுகும் துயரத்தை அவர்கள் தான்கிவருவது அவர்களின் ஈமானிய
உறுதியையும் இஸ்லாத்தில் அவர்கள் கொண்டுள்ள பற்றையும் காட்டுகிறது .
இவைகளை நினைவு கூறும்
வகையில் துருக்கியில் பல முன்னெடுப்புக்கள் நடைபெற்றுள்ளது .
= துருக்கியின்
இஸ்தான்புல்லில் உள்ள ஒரு சதுக்கத்துக்கு எகிப்தின் பிரபால மைதானமான ராபிஆ என்ற
பெயர் அங்குள்ள ஒரு மைதானத்துக்கு சூட்டப்பட்டுள்ளது .
= துருக்கியின்
மிகவும் பிரதான வீதிகளில் ஒன்றுக்கு எகிப்திய ஜனாதிபதி முர்சி அவர்களை நினைவு
படுத்தும் வகையில் அவரின் பெயர் சூடப்பட்டுள்ளது .
= துருக்கிய சிறுவர்
வைத்தியசாலை ஒன்றுக்கு எகிப்தின் இக்வான் தலைவர்களில் ஒருவரான கலாநிதி முஹம்மத் பெல்தாஜி அவர்களின் மகளின் பெயர் அஸ்மா
பெல்தாஜி என்று சூட்டப்பட்டுள்ளது .
= துருக்கியின் ஒரு
பூங்காவுக்கு ராபிஆ அல் அத்தஅவிய்யா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது .
= இன்னும் பல கடைகள் ,
வாகனங்கள் , பிள்ளைகளின் பெயர்கள் ராபிஆ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .இது மட்டுமல்லாது
துருக்கியில் பாட்டு சினிமா கலைநிகழ்ச்சிகள் தொடர்பான நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது .
= அரச இடங்களில் பர்தா
அணிவது நீண்ட காலமாக தடையில் இருந்தது அதற்க்கான அணைத்து தடைகளும்
நீக்கப்பட்டுள்ளது .
உண்மையில் துருக்கியின் பிரதமர் இஸ்லாமிய உம்மதுக்கு
செய்து வரும் பணி அளப்பெரியது அல்லாஹ் அவருக்கு இன்னும் உதவிகளை வழங்குவானாக ஆமீன்
.
No comments:
Post a Comment