இன்று ஹலால் பற்றி சர்ச்சைகள் நம் நாட்டில் சூடுபிடித்து தளர்ந்து மறுபடியும் அது பற்றிய சர்ச்சையைக் கிளப்பி அது சம்பந்தமான விளிப்புணர்வு பெரும்பான்மை இன சகோதரர்களுக்கு ஊட்டப்படுகிறது. இப்படியாக ஹலால் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஹலால் பற்றிய தெளிவின்மையாலாகும். ஆகையால் இதுபோன்ற சந்தர்பங்களில் மாற்றுமத சகோதரர்கள் இது பற்றிய தெளிவை எம்மிடம் எதிர்பார்ப்பர். இதற்காக நாம் ஹலால் பற்றிய சுருக்கமான, தெளிவான விளக்கத்தை அவர்களுக்கு ஊட்ட முதலில் நாம் இது பற்றி தெளிவுடையவர்களாக இருக்க வேண்டும்.
நாம் மாற்றுமத சகோதரர்களுடன் மார்க்கம் சம்பந்தமாக உரையாடும் போது பொதுவாக சில விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும்.
1) உரையாடப்போகும் விடயம் பற்றிய பூரண தெளிவைப் பெற்றிருத்தல்.
2) நாம் முடிந்தளவு அல்குர்ஆன், ஹதீஸிலுள்ள விடயங்களை மேற்கோள் காட்டிப் பேசுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். (உதாரணமாக, அல்குர்ஆனில் இவ்வாறு கூறியுள்ளது... போன்று கூறி உரையாடுவது) ஏனெனில் அந்த சகோதரர் இவை இரண்டையும் ஏற்பதில்லை.
3) அறபு சொற்களை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
4) முடிந்தளவு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள், இஸ்லாத்தைப் பற்றி மாற்றுமத சகோதரர்கள், இஸ்லாத்தை ஏற்றவர்களின் வாக்குமூலங்களைக் மேற்கோள் காட்டிப் பேசவேண்டும்.
5) முடிந்தளவு அந்த சகோதரனின் மார்க்கத்தில் உள்ள விடயங்கள் பற்றிய தெளிவைப் பெற்றிருத்தல் வேண்டும்.
ஒருவர் ஹலால் சர்ச்சை பற்றி எம்மிடம் தெளிவுபெற விரும்பினால் குறைந்தளவு நாம் கீழ்வருகின்றதைப் போன்றாவது விளக்க வேண்டும்.
இஸ்லாம் மார்க்கத்தைப் பொருத்தவரையில் இது அமைதியை இந்த பிரபஞ்சத்தில் நிலைநாட்ட படைப்பாளனால் வழங்கப்பட்டதாகும். இதனால் இதன் கோட்பாடுகளும் போதனைகளும் பிரபஞ்ச அமைதியை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது. உதாரணமாக, இஸ்லாம் மதுபானத்தை முழுமையாகத் தடுத்துள்ளது. ஏனெனில் அதனை உபயோகிப்பதால் உபயோகிக்கும் நபருக்கும் அவரைச் சூழவுள்ளவர்களுக்கும் நிகழும் கெடுதிகளை நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. இதுதான் ஹலாலினால் நாடப்படுவது.
ஹலால் (அனுமதிக்கப்பட்டவை) என்றால் மனிதனுக்கும் இப்பிரபஞ்சத்தில் உள்ளவற்றிற்கும் எவ்வித தீங்கும் விளைவிக்காத அனைத்துவிதமான உணவுகள், செயற்பாடுகள் போன்ற அனைத்துமாகும். இதற்கு எதிர்மாறான கெட்ட, உடலாரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள், சமூகத்தை சீர்குழைக்கும் விடயங்கள் என்பன போன்றவை ஹராம் (தடுக்கப்பட்டவை) ஆகும்.
குறிப்பாக அறிய வேண்டிய ஒரு விடயம்தான், ஹலால் உணவில் மாத்திரம் அல்ல அனைத்துவிடயங்களிலும் உள்ளது. உதாரணமாக இஸ்லாம் ஒரு மனிதனுடைய மானத்தை, செல்வத்தை, இரத்தத்தை (உயிரை) மற்ற மனிதர்களுக்கு ஹராமாக்கியுள்ளது. அதுபோன்றுதான் மனிதனை அதளபாதாளத்திற்கு இட்டுச்செல்லும் வட்டியை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. இதுபோன்று ஏராளமான மனிதனுக்கும் இப்பிரபஞ்சத்திற்கும் ஒவ்வாத விடயங்களை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.
இதனடிப்படையில்தான் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மனிதர்கள் அன்றாடம் பாவிக்கின்ற பாவனைப்பொருள்கள் உணவுப்பொருள்கள் என்பவற்றின் சாதக பாதகங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் சேர்மானங்களின் விளைவுகள் போன்றவற்றை அதுசார்ந்த புத்திஜீவிகளின் உதவியுடன் கண்டறிந்து அடையாளப்படுத்தும் விதமாக ஹலால் சான்றிதழ் ஒன்றை வழங்கி அதனை கண்காணித்துக்கொண்டுள்ளது. இதனால் ஏற்படும் நண்மை முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல. இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்குமாகும். இதனைத்தான் நான் முன்பே தெளிவுபடுத்தினேன்.
நாம் இது போன்று அல்லது இதனைவிட சிறப்பாக அவர்களுக்கு விளக்கம் கொடுத்து அவர்களது அறிவீனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்போதுதான் அமைதிமார்க்கத்தின் அழகை அவர்கள் புரிந்து குறைந்த பட்சம் இந்த மார்க்கத்தைக் எதிர்க்காத அபூதாலிப்களாகவேனும் செயற்படுவார்கள்.
முஆத் முனாஸ் (வரகாபொல)
மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகம்

No comments:
Post a Comment