Monday, October 14, 2013

இனிமேல் Grade 5 Scholarship தரம் 7 அல்லது 8இல்

6660531072
ஓக்டோபர் 1ஆம் திகதி சிறுவர் தினத்தன்று ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடக் கூடாது மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தரம் 7 அல்லது தரம் 8 இல் தான் நடாத்தப்பட வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம, சுகாதரா அமைச்சு உட்பட மேலும் 35 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த கலந்துரையாடலில் முடிவெடுத்துள்ளனர்.

வெளிவந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை தொடர்ந்து பல மாணவர்கள் மனஉளைச்சலுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதுடன் சிறுவர் தினத்தில் பெறுபேறுகள் வெளியிட கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்தால் பிள்ளைகளின் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இது தொடர்பாக  மனித உரிமைகள் ஆணையாளர் இந்த நிறுவனங்களுக்கிடையிலான கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சிறுவர் தினத்தன்று பரீட்சை பெறுபேறுகள் வெளியிட்படாமல் வேறு தினத்தில் வெளியிடப்படும், மற்றும் பிள்ளைகளால் சமாளிக்கக் கூடிய வயதில் அதாவது தரம் 7 அல்லது தரம் 8 இல் இப்பரீட்சையை நடாத்துவதற்கு இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைத்து நிறுவனங்களும் பொது உடன்பாடு ஒன்றுக்கு வந்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் கலாநிதி பிரதீபா மஹானாம அவர்கள் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதரா அமைச்சின் முக்கிய அதிகாரி ஒருவர் புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்பட வேண்டும் என ஆலோசனை முன்வைத்தார், இப்பரீட்சையால் மாணவர்கள் உளரீதியான பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் இவர் தெரிவித்தார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர்கள் இப்புலமைப்பரிசில் பரீட்சை முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென தமது ஆலோசனைகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment