அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள், 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒருவன் தான் நினைத்ததற்கேற்ப அவனுக்கு கூலி உண்டு...' (அல்புஹாரி, முஸ்லிம்) மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் பின்வருமாறு கூறினார்கள், 'நிச்சயமாக அல்லாஹுத் தஆலா உங்களது தோற்றங்களையே உடற்கட்டமைப்புக்களையோ பார்த்துக் கூலிகொடுப்பதில்லை மாறாக உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்த்து கூலி கொடுக்கிறான்.' (முஸ்லிம்) இப்படியான ஏராளமான அறிவிப்புக்கள் எங்களது உள்ளத்தில் இருக்கும் விடயத்திற்குத் தான் அல்லாஹ்விடம் அந்தஸ்து உண்டு என்று கூறிக்கொண்டிருக்கின்றது. இந்த வரிசையில் எமது உள்ளங்களை பொதுவாக நான்கு வகையாக வகைப்படுத்திப் பார்க்கலாம்.
'ஏ அமைதியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் உமது இறைவன் பக்கம் மீளுவாயாக. மேலும் நீன் என் அடியார்களில் ஒருவாராகச் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவனத்தில் நுழைந்து கொள்வாயாக!' (89:27-30)
'அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், செவிப்புலன்களிலும் முத்திரையிட்டுவிட்டான், இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.' (02:07)
'நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித்தளத்தில்தான் இருப்பார்கள். அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காணமாட்டீர்.' (04:145)
இவற்றில் எமது உள்ளம் எது என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஏனெனில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், 'அறிந்து கொள்ளுங்கள், உங்கள் உடலிலே ஒரு சதைப்பிண்டம் இருக்கிறது, அது சீர்பெற்றால் உடல்முழுதும் சீர்பெறும். அது சீர்கெட்டுவிட்டால் முழு உடலும் சீர் கெட்டுவிடும். அறிந்துகொள்ளுங்கள், அதுதான் இதயாமாகும், உள்ளமாகும்.' (அல்புஹாரி:52, முஸ்லிம்:1599)
ஆகவே நாம் எமது எண்ணங்களைச் சீர்படுத்துவதன் மூலம் எமது உள்ளத்தை சுவனம் அழைக்கும் அமைதியான உயிருள்ள உள்ளமாக மாற்றி ஈருலக வெற்றியைத் தமதாக்கிக் கொள்வோம். இன்ஷh அல்லாஹ்.
(1997/01/14-20ஆம் திகதி அல்-முஜ்தமா சஞ்சிகையில் 64ஆம் பக்கம் பிரசுரிக்கப்பட்ட ஆக்கத்தைத் தழுவி எழுதப்பட்டது.)
1. அமைதியான உயிர்மையான உள்ளம்
இது வெண்மையான, ஈமான் மூலம் அமைதிகண்ட உள்ளமாகும். இதிலே உளத்தூய்மையினதும், உறுதியினதும் பிரகாரசம் பிரகாசித்துக்கொண்டிருக்கும். மேலும் இதிலே அல்லாஹ்வினதும் அவனை நேசிப்பவர்களினதும் நேசமும் அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் நிரம்பியிருக்கும். இதுவே ஒரு முஃமினின் உள்ளமாகும். இவ்வகையான உள்ளத்தை பார்த்து அல்லாஹ் பின்வருமாறு அழைப்பு விடுக்கிறான்.
'ஏ அமைதியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் உமது இறைவன் பக்கம் மீளுவாயாக. மேலும் நீன் என் அடியார்களில் ஒருவாராகச் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவனத்தில் நுழைந்து கொள்வாயாக!' (89:27-30)
2. மரணித்த உள்ளம்
இது பாழடைந்துபோன, ஈமானுக்கு முரணான, அநியாயம் இழைக்கக்கூடிய உள்ளமாகும். இது ஜின் iஷத்தான்கள் குடிகொள்ளும் பாழடைந்த இருள்மயமான வீட்டுக்கு ஒப்பானதாகும். மேலும் இது நிராகரிப்பு, பாவ காரியங்கள், அத்துமீறல்கள் என்பவற்றைக் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். இதுவே ஒரு நிராகரிப்பாளனின் உள்ளமாகும். இதனை நரகம் அழைத்துக் கொண்டிருக்கும்.
3. நோயுற்ற உள்ளம்
இந்த உள்ளம் ஈமானுக்கும் நயவஞ்சகத்திற்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருக்கும். சில சமயம் தெளிவாகவும், மற்றும் சில சந்தர்ப்பங்களில் மயக்கமாகவும் இருக்கும். இதிலே மனோ இச்சையினதும், குழப்பங்களினதும் வாடை அலைமோதும். மேலும் இதிலே சில சந்தர்ப்பங்களில் iஷத்தானின் செயல்களுக்கு அங்கீகாரமும், மேலும் சில சந்தர்ப்பங்களில் புறக்கணிப்பும் கூடவே இருக்கும். இதுமே ஈமானின் பலகீனமானவர்களின் உள்ளமாகும். இந்நிலையில் தொடர்ந்திருக்கும் சந்தர்ப்பத்தில் அவ்வுள்ளம் மரணித்த உள்ளமாக மாறும். ஆகையால் அவர் தன் உள்ளத்தை உயிருள்ள அமைதியான உள்ளமாக மாற்றும் சந்தர்ப்பத்தில்தான் சுவனம் அவரை அழைக்கும்.
4. தலைகீழான உள்ளம்
இது வெறுமையான உள்ளமாகும். இது தலைகீழாக வைக்கப்பட்ட ஒரு குடத்திற்கு ஒப்பானதாகும். அதன் மேல் ஏதாவது ஒன்றை இட்டால் அது வழிந்து வெளியே கொட்டுமே தவிர உள்ளே செல்லாது. மேலும் இது தனது மனோ இச்சை எதைச் சொல்கிறதோ அதைத் தவிர நல்லது எது, கெட்டது எது? என்பதை அறியாது. இதுதான் ஒரு நயவஞ்சகனின் உள்ளமாகும். இந்த உள்ளத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது:'அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், செவிப்புலன்களிலும் முத்திரையிட்டுவிட்டான், இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.' (02:07)
'நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித்தளத்தில்தான் இருப்பார்கள். அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காணமாட்டீர்.' (04:145)
இவற்றில் எமது உள்ளம் எது என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஏனெனில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், 'அறிந்து கொள்ளுங்கள், உங்கள் உடலிலே ஒரு சதைப்பிண்டம் இருக்கிறது, அது சீர்பெற்றால் உடல்முழுதும் சீர்பெறும். அது சீர்கெட்டுவிட்டால் முழு உடலும் சீர் கெட்டுவிடும். அறிந்துகொள்ளுங்கள், அதுதான் இதயாமாகும், உள்ளமாகும்.' (அல்புஹாரி:52, முஸ்லிம்:1599)
ஆகவே நாம் எமது எண்ணங்களைச் சீர்படுத்துவதன் மூலம் எமது உள்ளத்தை சுவனம் அழைக்கும் அமைதியான உயிருள்ள உள்ளமாக மாற்றி ஈருலக வெற்றியைத் தமதாக்கிக் கொள்வோம். இன்ஷh அல்லாஹ்.
(1997/01/14-20ஆம் திகதி அல்-முஜ்தமா சஞ்சிகையில் 64ஆம் பக்கம் பிரசுரிக்கப்பட்ட ஆக்கத்தைத் தழுவி எழுதப்பட்டது.)
No comments:
Post a Comment