Thursday, March 17, 2016

மனிதர்களுக்கு இல்லாத கண்ணியம் காகிதங்களுக்கு...!!!!!!

மனிதர்களுக்கு இல்லாத கண்ணியம் காகிதங்களுக்கு..!!!

என்னாவொரு உலகம்..??!!

ஆறாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் அரபுலகம் இருந்த நிலையை சற்று மீட்டிப்பாருங்கள். எஜமான் அடிமைக் கலாச்சாரம் கொடிகெட்டிப் பறந்தது. பாவகாரியங்கள் சர்வசாதாரணமாகியது. இப்படி எத்தனையோ...

இதில் எஜமான் அடிமைக் கலாச்சாரத்தைப் பொருத்தவரையில். அக்காலத்தில் இருந்த சமூகப் பிரமுகர்கள்தான் உயர்ந்த இஸ்தானத்தில் வைத்து நோக்கப்பட்டார்கள். அவர்கள் வரும்போது மற்றவர்கள் எழுந்து நிற்கவேண்டும். அவர்கள் கலந்துகொள்ளும் இடங்களுக்கு மற்றவர்கள் வரக்கூடாது. அவர்களுக்குத்தான் சபையில் முதலிடம். அவர்கள் வருகையின் பின்தான் கூட்டங்கள், நிகழ்வுகள் ஆரம்பமாகும். அவர்களுக்கு பணிவிடை செய்வதிலேயே மற்றவர்கள் காலம் கடத்த வேண்டும். இப்படி ஏராளம்!! ஏராளம்!!

இந்த சமூகத்தைத் தாழைகீழ் மாற்றம் செய்ய சத்தியத் தூதான அல்குர்ஆனோடும் சுன்னாவோடும் களம் வந்த தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்ளூ வெறும் 25 வருடங்களுக்குள் அதனை நிறைவேற்றிக் காட்டினார்கள். இந்த எஜமான் அடிமைக் கலாச்சாரத்தை துண்டுதுண்டாக உடைப்பதாகவே இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களானளூ ஷஹாதத் கலிமா, தொழுகை, ஸகாத், நோன்பு மற்றும் ஹஜ் என்பன இருந்துவருகிறது.

இஸ்லாம்; என்றும் எப்போதும் எந்த நிலையிலும் விட்டு விடுவதற்கு அனுமதிக்காத ஐங்காலத் தொழுகையில் இத்தகைய எஜமானிய சிந்தனையை தகர்த்தெரிகிறது.

ஸப்பில் யாருக்கும் இடம்பிடித்துவைக்க முடியாது. யார் யார் வருகின்றார்களோ அவர்கள் முன்னே வந்து நிற்கவேண்டும். நேரம் வந்ததும் தொழுகை நடாத்த வேண்டும். பிரமுகர்கள் வரும்வரை காத்திருப்பதில்லை. ஸப்புகளிளே காலோடு கால் சேர்த்து, தோலோடு தோல் சேர்த்து நெருக்கமாக நிற்க வேண்டும். யார் முன்சென்று தொழுகை நடாத்தினாலும் தொழ வேண்டும். தொழுகையின் இருதியில் இரண்டு பக்கமும் ஸலாம் சொல்லிக்கொள்ள வேண்டும். இதேபோன்றுதான் ஹஜ்ஜும்.

தொழுகையில் இறைவன் கற்றுத்தரும் இந்த மனிதத்துவத்தை தொழுகையை விட்டு வெளியேறியதும் எமது வாழ்க்கையில் காணமுடியாதுள்ளது. எமது இயக்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள்... ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் இந்த மனிதத்துவம் பேணப்படுவதில்லை. பணத்தால், பட்டம் பதவிகளால், குடும்ப கௌரவங்களால் சமூகத்தில் முன்னிலையில் இருக்கும் மனிதர்களுக்குளூ ஏஐP வீஐபீ (பிரமுகர்) வரிசை என்று முன்வரிசைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அவர்கள் வரும் வரை நிகழ்வு ஆரம்பிக்கப்படாது. இத்தகையவர்களுக்குத்தான் கருத்துச்செல்லவும் கதைக்கவும் உரிமையிருக்கும். மற்றவர்கள் கதைத்தாலும் அது தட்டிக்களிக்கப்படும். இப்படி ஏராளம்!! ஏராளம்!! நாபியவர்கள் அல்குர்ஆன், சுன்னா மற்றும் இஸ்லாத்தின் கடமைகள் மூலம் தகர்த்தெரிந்த இந்த எஜமானிய்யத் எனும் ஜாஹிலிய்ய சிந்தனை எங்கிருந்து பெறப்பட்டதோ தெரியாது..?!! நஊது பில்லாஹி மின்ஹா!! அல்லாஹ்தான் எம்மைக் காப்பாற்ற வேண்டும்.!!

இதே போன்று தான் ஹஜ் கடமையில் முழுக்க முழுக்க இந்த மனிதத்துவத்தை படித்துவிட்டு ஊர் வருகின்ற அனேகர் ஹாஜியார் என்ற ஒரு அந்தஸ்தையும் பெயருக்கு முன்னால் பொரித்துக்கொண்டு. கௌரவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள். இது எங்கிருந்து பெறப்பட்ட நடைமுறையோ..?!! பணம் மற்றும் சான்றிதழ்கள் என்ற வெரும் காகிதங்களுக்காக கண்ணியத்தை எதிர்பார்க்கும், கொடுக்கும் சமூகமாக மாறியிருக்கிறது. அல்லாஹ் இந்த காகிதங்களிலா கண்ணியத்தை வைத்திருக்கிறான்..?!!

இல்லை, இயல்பிலேயே அல்லாஹ் மனிதனை கண்ணியப்படுத்தியிருக்கிறான். மனிதன் என்றால் அவனை கண்ணியப்படுத்த வேண்டும். இதுதான் இஸ்லாத்தின் போதனை. மனிதனை மதிக்காத மார்க்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அல்குர்ஆன் சொல்கிறது: 'நாம் ஆதமுடைய மக்களை கண்ணியப்படுத்தினோம்.' (17:70) அல்லாஹ்வே தனது வேதத்தின் மூலம் இவ்வாறு கண்ணியப்படுத்திய பின் எவ்வாறு சிலர் சிலரைத் தாழ்வாகக் கருத முடியும்?! ஒருவனுக்கு உயர்வு கிடைக்குமானால் அது இஸ்லாத்தால் மாத்திரமே கிடைக்கும். ஆக ஒருவன் ஷஹாதத் கலிமாவை மொழிந்து அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட ஒரு முஸ்லிமாகின்ற பட்சத்தில் அவன் கண்ணியம் பெருகின்றான். ஒருவன் இஸ்லாத்தில் நுழைந்த பின்னரும் அவனிடம் இருக்கும் தக்வா எனும் இறையச்சத்தை வைத்து அவனது கண்ணியம் கூடும் குறையும். ஆனால் தக்வா எனும் இறையச்சத்தை அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே.

ஒருவன் அறிவாலோ... அந்தஸ்தாலோ... பதவியாலோ... பட்டங்களாலோ... செல்வத்தாலோ... சிறந்த சந்ததிகளாளோ... நிறத்தாலோ... மொழியாலோ... இப்படியான எந்த ஒன்றாலும் கண்ணியத்தை அடைந்துகொள்ள முடியாது. இந்த வேறுபாடுகள் கலந்து வாழ்கின்றபோது பரஸ்பர அறிமுகத்திற்கே. இந்த விடயங்களை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்;
'மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். பின்னர், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டுளூ உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.' (49:13)

மேலும் நபியவர்களுக்கும் இந்த பிரமுகர் சிந்தனை வந்து கண்தெரியாத உம்மிமக்தூம் என்ற நபித்தோழரை புறக்கனித்ததற்கு ஸுறா அபஸயினூடாக கண்டனம் தெரிவித்து அல்லாஹ் திருத்திய நிகழ்வையும் எம்மவர்கள் ஞாபகமூட்டிக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகம் மனிதத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட ஒரு கட்டிடத்தைப்போல் இருக்கவேண்டும். ஒரே உடலின் அங்கங்கள்போல் இருக்க வேண்டும். இதன் மூலம்தான் எமது உள்ளார்ந்த இணைப்பு ஆரோக்கியமுள்ளதாகவம் பலமுள்ளதாகவும் மாறும். ஈமானியப் பிணைப்பு வளரும்.

மேலும் பணம், பட்டம், பதவி மற்றும் அந்தஸ்த்து என்ற காகிதங்களைக் கொண்டு கண்ணியத்தை கொடுக்கும் மேற்கெத்தேய ஜாஹிலிய்ய சிந்தனையிலிருந்து விடுபட்டு, இஸ்லாத்தின் சிந்தனையின் பக்கம் எமது தலைகளைத் திருப்பி, அல்குர்ஆன், சுன்னா மற்றும் ஸீராவின் ஒளியில் மனிதனை மனிதனாக மதித்து... இஸ்லாத்தின் ஒளியில் வாழும் சகோதரத்துவ சமூகமாக மாறி. வெற்றியை நோக்கி நடைபோடுவோம் இன்ஷா அல்லாஹ்!!

'நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவனம் நுழைய மாட்டீர்கள்! நீங்கள் பரஸ்பரம் அன்பு பாராட்டாதவரை ஈமான் கொள்ளமாட்டீர்கள்!' (முஸ்லிம்)


வரகாபொலை முஆத் முனாஸ்

No comments:

Post a Comment