அகிலத்தின் அருட்கொடை பிறந்த மாதம் அவர் சுமந்து வந்த அருள்பண்பு
எங்கே...??!
وَمَا
أَرْسَلْنَاكَ إلاَّ رَحْمَةً لِلْعَالَمِيْنَ
“(நபியே!) நாம்
உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.”
(21:107)
அருட்கொடை – அருள்
என்பதன் மூலம் விளங்கும் விடயம் என்னவென்றால்;
- அவர் இருப்பதை அனைத்து மனிதர்களும் ஓர் அருளாகத்தான் பார்ப்பார்கள்.
- அவரது இருப்பை நேசிப்பர்.
- அவரது இல்லாமல் இருக்கும் நிலையை குறையாகப் பார்ப்பர்.
- அவரைக்கானும் போது முகமலர்ச்சி ஏற்படும். சந்தோசம் ஏற்படும்.
- இன்னும் வர்ணிக்கமுடியாத ஏராளமான பண்புகள் இருக்கும்….
அருளுக்கு எதிர்
பதமான ‘அதாப்’ என்ற பதம் விளக்கும் விடயங்கள்;
- அவர் இருப்பதை அனைத்து மனிதர்களும் இடைஞ்சலாகப், சஞ்சலமாகப் பார்ப்பர்.
- அவரது இருப்பை வெறுப்பர்.
- அவரது இல்லாமல் இருக்கும் நிலையை நிம்மதியாக பார்ப்பர்.
- அவரைக்கானும் போது வெறுப்பும், கோபமும் பீரிட்டு எழும்..
அல்லாஹ் இந்த வசனத்தில்
அவனது தூதரை அகிலத்தின் அருட்கொடை என்று வர்ணிக்கிறான்.
ஆக அல்லாஹ்வின்
தூதரின் இருப்பு; மனித சமூகத்திற்கு மாத்திரமல்ல, ஜின், விலங்கு, பறவை, தாவர… என்ற
அனைத்து உலகங்களுக்கும் அருளாகும். இதனை தூதரின் வாழ்நாளில் காண்கிறோம். அன்னார் வரைந்த
அகிலத்தின் யாப்பு; அகிலங்களின் நிம்மதி, சந்தோசம், அமைதி, பாதுகாப்பு, சுதந்திரம்...
என்ற அருள் வாசல்களுக்கு திறப்பு விழா கொடுத்தது.
இந்த அருள்பண்பை
அகிலமயப்படுத்திய அண்ணல் பிறந்த மாதத்தில் அன்னாரின் அருள்பண்பை எம் ஆடைகளாக அணிந்து
கொள்ள யார் தயார்....?!
நாம் இந்த புவிப்பந்தில்
நடமாடுவது, இப்பூவுலகுக்கு அருளாக மாறுவது எப்போது..??!! குறைந்த பட்சம்; நமது வீட்டுக்கு,
பாடசாலைக்கு, ஊருக்கு, சமூகத்திற்காவது அருளாக இருந்துவிட்டுப் போகக்கூடாதா..??!!
அருள் உதித்தமாதமாம்
முதல்வசந்தம் (ரபீஉனில் அவ்வல்) அவர் புகழ்பாடியே மறைந்து விட்டது. ஆனால் அவர் சுமந்து
வந்த அருள்பண்பாவது எமது உள்ளங்களில் குடிகொண்டுள்ளதா..??!!
ஆள்மனதில் கைவைத்துக்
கேட்டுப்பார்ப்போம்...
உண்மையில் நான்
இந்த உலகில் நடமாடுவது அருளா? அல்லது அதாபா?
இன்றுடன் நாம்
ஒரு முடிவுக்கு வருவோம்.. “நான் குறைந்த பட்சம் என் வீட்டுக்கு அருளாக இருப்பேன். இன்ஷா
அல்லாஹ்!!”
வரகாபொலை முஆத்
முனாஸ்
No comments:
Post a Comment