இயக்கம் வழ இஸ்லாமா? இஸ்லாம் வழ இயக்கமா?
ஆறாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அறபுத்தீபகட்பத்திற்கு ஒளியூட்டிய இஸ்லாம்ளூ அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் அகிலத்திற்கே ஒளியூட்டிய வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது. அன்று தொடக்கம் இன்று வரை இந்த ஒளி உலகம் முழுவதும் ஒளியூட்டிக் கொண்டிருந்தாலும் இடைக்கிடையே மங்கவும் செய்தது. காரணம் அவ்வப்போது நிலவிய இலக்கு மாறிய பயணங்களே...
தனி மனிதனாக இருந்தாலும், குடும்பமாக இருந்தாலும், நிறுவனங்களாக இருந்தாலும் மற்றும் சமூகமாக இருந்தாலும் அதனது அத்தனை செயற்பாடுகளும் பிரதான இலக்கான சுவனத்தை நோக்கியே நகரவேண்டும். இதனைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
அல்குர்ஆன் தனிமனித மற்றும் குடும்பத்தின் இலக்கை இவ்வாறு கூறுகின்றது: 'உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மனிதர்களையும் கற்களையும் விரகுகளாகக் கொண்ட நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள்..' (66:6) அதாவது நரகத்திலிருந்து காப்பாற்றி சுவனத்தை நோக்கி நகர்த்துங்கள்.
அதேபோன்று கல்வியின் இலக்கை சுன்னா இவ்வாறு பரைசாற்றுகிறது: 'யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் செல்கின்றாரோ, அவனுக்கு அல்லாஹ் சுவனத்திற்கான பாதையை இலகுபடுத்திக் கொடுக்கிறான்.' (அல்ஹதீஸ்) இங்கு ஒருவர் கல்விகற்க செல்கிறார் என்றால் அவர் சுவனத்தை நோக்கி இலகுவாக நகர்கின்றார் என்ற கருத்தை தருகிறது.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி குறித்து நபியவர்கள் கூறும்போது: 'பலவீனமான முஃமினை விட பலமான முஃமின் அல்லாஹ்விடம் சிறப்பானவனாகவும் மிகவும் நேசத்திற்குரியவனாகவும் இருக்கிறான்.' (அல்ஹதீஸ்) இங்கு அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவதற்கான ஒரு வழியாக உடற்பலம் இருக்கிறது. ஆக உடற்பலத்தினூடாக அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்று சுவனத்தை அடையவேண்டும் என்றாகிறது.
இப்படி வாழ்வின் அனைத்து செயற்பாடுகளின் இறுதி இலக்கும் சுவனம் என்பதை இஸ்லாத்தை ஓரளவு கற்ற ஒருவராலும் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும். இந்த இலக்கு மறக்கடிக்கப்பட்டு திசைமாறி குறுகிய ஒரு இலக்கு நோக்கி நகரும் பட்சத்தில் அந்த செயற்பாடுகள் அர்த்தமற்றதாகவும் பொருத்தமற்றதாகவும் மாறிவிடுகின்றது..
வரலாற்றில் இவ்வாறான இலக்குமாறிய பயணங்கள் இஸ்லாத்தின் தேக்க காலங்களாக பேசப்படுகிறது. மத்ஹபுடைய இமாம்கள் தோன்றி மறைந்த காலப்பகுதியில் முஸ்லிம் உலகை ஒரு நோய் தொற்றிக்கொண்டது. அதுதான் தக்லீத் சிந்தனையாகும். இஸ்லாத்தை வாழவைப்பதற்குப் பதிலாக மத்ஹப்களை வளர்க்கும் பணி இதனால் மேலோங்கியது. அதாவது இஸ்லாத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு மத்ஹப்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக, மத்ஹப்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய இஸ்லாம் பயன்படுத்தப்பட்டது.
இதனால் இஸ்லாம் முஸ்லிம்களுக்குள்ளே தேங்கி நின்றது. முஸ்லிம்களுக்கு மத்தியிலும் அடிதடிகள், கைகலப்புகள், முரண்பாடுகள் தோன்றி துண்டாடப்பட்டது.. ஏன்?.. இந்த சமூகத்திற்கு தூதர் இறுதிப்பிரசங்கத்தில் கொடுத்த செய்தியை மறந்துபோனார்கள்.. அதுதான் நீங்கள் இந்தக் குர்ஆனையும், எனது வழிமுறையாகிய சுன்னாவையும் உங்கள் கடைவாய்ப்பற்களால் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.. என்ற கட்டளையாகும். இந்தக் கட்டளையை மறந்து (அதாவது இஸ்லாத்தின் மூள ஊற்றுக்களை மறந்து) அதிலிருந்து வந்த மத்ஹபுடைய புத்தகங்களுக்குள் சுருக்கிக்கொண்டுவிட்டுது. இதனால் இஸ்லாம் தேங்கத்தொடங்கி... சுவனத்தை மறந்து வாழும் ஒரு சமூகமாக மாறியது... இந்த உலகத்தில் எமது மத்ஹப்தான் பெரிய மத்ஹப் என்று போற்றப்படும் வரை உழைக்கத் துவங்கினார்கள். இதனால் பொறாமை, வஞ்சகம், பெருமை, முகஸ்தூதி... போன்ற உளநோய்கள் பரவலாகியது.
இதுபோன்றதொரு நிலை இன்றும் சமூகத்தை ஆட்டம்கானச்செய்திருக்கிறது. அதுதான் இயக்க வெறி என்ற ஒருவகை ஜாஹிலிய்ய சிந்தனையாகும். இஸ்லாத்தை வாழவைத்து அதனூடாக சுவனம் நுழைய வேண்டும் என்ற இலட்சியம் மாறி, தான் சார்ந்த இயக்கத்தை வாழவைப்பதற்காக பாடுபடுகின்றவர்களை உருவாக்கியிருக்கிறது. காரணம் இலக்கில் ஏற்பட்ட பிறழ்வுதான். இன்று இஸ்லாத்தை வாழவைக்க இயக்கத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயக்கத்தை வாழவைக்க இஸ்லாத்தை பயன்படுத்துகிறார்கள்.
இஸ்லாமிய நெஞ்சங்களே!! இஸ்லாம்தான் பூரணத்துவமானது, அனைத்துக் காலங்களுக்கும் பொருந்தக்கூடியது... என்று ஏகப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய இயக்கங்களுக்கு இந்த சிறப்பியல்புகளைக் கொடுக்க முடியாது... இஸ்லாத்திற்குரிய இந்த சிறப்பியல்புகளை இயக்கங்களுக்கு கொடுக்கும் போது இயக்க வட்டாரங்களுக்குள் மாத்திரம் இஸ்லாம் சுருக்கப்படும்... அதுவும் பூரண இஸ்லாம் அல்ல அரைகுறை இஸ்லாம்... இந்த நோயின்காரணமாகத்தான் இஸ்லாம் முஸ்லிம்களுக்குள் மாத்திரம் சுருங்கி செயற்படுகின்றது. இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மாத்திரமான ஒரு கொள்கையா? இல்லை, அது முழு மனிதசமூகத்திற்குமான ஒரு கொள்கை மற்றும் வாழ்க்கை நெறி...
இன்று ஒரு சராசரி முஸ்லிமை அனுகி, உனது அன்றாட செயற்பாடுகள் அனைத்தும் இஸ்லாத்தை வாழவைப்பதினூடாக சுவனத்தை இலக்குவைத்ததாக அமைகின்றதா? அல்லது இயக்கத்தை வாழவைப்பதினூடாக சுவனத்தை இலக்குவைத்ததாக அமைகின்றதா? என்று கேட்டுப்பார்த்தால். தான் சார்ந்த இயக்கத்தை வாழவைத்தல் என்ற பதிளைத்தான் காணமுடியுமாக இருக்கும். இதற்கு, இஸ்லாமிய வாதிகளல்ல இயக்க வாதிகள் சொல்லும் நியாயம், 'எமது இயக்கம் வளர்ந்தால் இஸ்லாம் வளரும். அதனால்தான் இயக்கத்தை வாழவைக்கிறோம். நாம் பேசுவதும் இஸ்லாம் தான். என்ன அதற்கொரு பெயர்வைத்திருக்கிரோம் அவ்வளவுதான்.'
இந்த வார்த்தைகள் சொல்லும் செய்தி இதுதான். 'தன்னுடைய இயக்கம் தான் இஸ்லாத்தைப் பேசுகிறது. அதனால் அனைவரும் எங்களுடைய இயக்கத்திற்கு வாருங்கள். இல்லையேல் நீங்கள் இஸ்லாத்தைவிட்டு தூரச் சென்றுவிடுவீர்கள்..!!' ஆக இன்று பெயர் மாற்றப்பட்ட இஸ்லாம்கள் பல இருக்கிறது. எது உண்மையான இஸ்லாம்? என்ற கேள்விக்குட்படுத்தப்படுகிறது மனிதசமூகம். எப்படி இஸ்லாம் வளரும்?!! ஏனெனில் இஸ்லாம் என்பது ஒன்றுதான், அது பலதாக முடியாது.
இன்னும் சிலர் இப்படியொரு நியாயத்தை வைக்கிறார்கள், 'முதலில் எமது சமூகத்தை திருத்தினால், மற்றைய சமூகங்கள் தானாகவே இஸ்லாத்திற்குள் வரும். அல்லது முதலில் நாம் திருந்திவிட்டு மற்றவர்களை திருத்துவோம்.' முஸ்லிம் சமூகம் மாறும்வரை பொருத்திருந்தால் இழவுகாத்த கிளிபோன்று தான் இருக்கும்... ஏனெனில் அது மனித இயல்பிற்கு அப்பால் பட்டது...
இதனால் தான் இன்று இஸ்லாமியப் பணி முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் சுருங்கிநிற்கிறது. ஏனெனில் தன்னுடைய இயக்கத்தை சார்ந்தவர்கள் மாத்திரம்தான் இஸ்லாத்தில் சரியாக இருக்கிறார்கள் (அதாவது சுவனம் செல்வார்கள்) மற்றவர்கள் வழிதவறியிருக்கிறார்கள். எனவே அவர்களை நேர்வழிப்படுத்த வேண்டும். என்ற என்னத்தில் இயக்கவாதிகளது பார்வை முஸ்லிம்களுக்குள் சுருங்கிவிட்டது. இதனால் பிரதான இலக்கான முழுமனிதசமூகத்திற்கும் இஸ்லாத்தை சொல்லி சுவனத்தை பெறவேண்டும் என்ற சிந்தனை மாறி, இயக்கத்தின் திட்டங்களுக்குள் மாத்திரம் சுற்றித்திரிகிறது இஸ்லாமியப் பணி. இல்லை.. இல்லை.. இயக்கப்பணி.
பிரதான இலக்கு பற்றிய வேட்கை குறைந்து குருங்கால இலக்குநோக்கி அழுத்தம் கொடுக்கும் நிலை எம் சமூகத்தைப் பீடித்திருக்கின்றதற்கான காரணம் என்ன என்று அலசிப்பார்த்தால் ஒரு சில உண்மைகளைக் காணமுடியுமாக இருக்கின்றது.
இன்றைய உலகலாவிய பொருளாதாரக் கொள்கையாக இருக்கலாம், கல்விக் கொள்கையாக இருக்கலாம், திட்டமிடல்களாக இருக்கலாம் அத்தனையும் உலகில் இருக்கும் ஒரு சாதாரன அந்தஸ்தை பெருவதை மைய்யப்படுத்தியே அமைந்திருக்கிறது.
உதாரணமாக கல்விக்கொள்கையை எடுத்தால், சாதாரன தரம், அல்லது உயர்தரம், அல்லது பீஏ பட்டதாரி, அல்லது முதுமானி (MA) பட்டதாரி, அல்லது கலாநிதி பட்டதாரி (PhD) என்று ஒரு கோடுபோட்டு குறுகிய வட்டத்திற்குள் சூழலும் ஒரு போக்கையே காண்கின்றோம். இந்த கற்கைகள் மூலம் சுவனம் என்ற இறுதி இலக்கு குறித்த சிந்தனை இல்லாது போய் உலகத்தில் இருக்கும் ஒரு அந்தஸ்தை பற்றியே கனவுகான வைக்கிறது...
இதேபோன்றுதான் இன்று இஸ்லாத்தை மேலேங்கச் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபடும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் நிறுவனங்களும் தமது திட்டமிடல்களை சுவனம் என்ற இலக்கை மறந்து சிறுசிறு உலக இலக்குகளைக் கொண்டு சுருக்கிக்கொண்டு அல்லாஹ்வையும் அவனது சுவனத்து சுகந்திகளையும் மறந்து வாழும் உலக ஆசாபாசங்களுக்கு அடிமைப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு காரணிகளாக மாறியிருக்கிறது. இந்த நிலை அல்குர்ஆன், சுன்னா மற்றும் ஸீராவை விட்டும் தமது பார்வையைத் திருப்பிளூ மேற்கினதும் யூத சியோனிசவாதிகளினதும் திட்டமிடல்களையும், கொள்கை வகுப்பு விதிகளையும் நோக்கி நகர்த்தியிருக்கிறது...
யூத மற்றும் சியோனிச சக்திகளும் அதற்கு தாரைவார்க்கும் மேற்கும் மனிதனின் கலாச்சார மற்றும் பண்பாட்டு சீரமைப்பில் இந்த உலகிற்கு நலவு பயக்கும் விதமாக ஏதாவது ஒரு விடயத்தை செய்திருக்கிறார்களா? அல்லது கொடுத்திருக்கிறார்களா? என்று கேட்டால், தின்னமாக 'இல்லை' என்ற பதிலே வரும்.
உலகத்தின் கலாசாரத்திலும், பண்பாட்டிலும், நல்லினக்க விழுமியங்களிலும் அழிவையும், அசிங்கத்தையும் கொண்டுவரும் இவர்களது திட்டமிடல்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும்ளூ சுவனத்திற்கு அழைத்துச்செல்லும் பணிக்கு பக்கபலமாக இருக்குமா? சாபக்கேடாக இருக்குமா? இவை இஸ்லாமிய இயக்க செயற்பாடுகளுக்குரிய திட்டமிடல்களில் உள்வாங்கப்பட்டால் இஸ்லாம் துண்டாடப்படுவது உறுதி... அதனைத்தான் நாம் இன்று கண்டுகொண்டிருக்கிறோம்.
இவர்களது சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் என்று அவர்களது அனைத்திற்கும் Boycott பன்னுவோம்... இயக்கங்களுக்கு தேவையான திட்டமிடல்களை அல்குர்ஆன் சுன்னா மற்றும் ஸீராவினூடாகப் பெறுவோம். அதே நேரம் இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களை பயன்படுத்தி, சுவனத்திற்கு அழைத்துச்சொல்லும் இஸ்லாமியப் பணிக்காக இணைந்து செயலாற்றுவோம். இயக்கம் வாழ இஸ்லாம் என்ற போக்கை விட்டுவிட்டு, இஸ்லாம் வாழ இயக்கம் என்ற போர்வைக்குள் வருவோம். இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் பணி பூரணப் பட்டு இஸ்லாம் எழுச்சிபெற ஆரம்பிக்கும்...
'நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை பலமாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் பிரிந்துவிடாதீர்கள்' (3:103)
மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகம்
Yes..movement is just means and Allah and Jennath are goals ...but you need to have means to get into goals....but people who deny movement may be trapped into devil if they go on their own ways
ReplyDelete