Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Tuesday, July 9, 2013

ஜாகிர் நாயக் அவர்களிடம் கல்லூரி மாணவி ஒரு கேள்வி எழுப்பினார் அந்த கேள்வியையும், அதற்க்கு அளித்த பதிளையும் இங்கே...



ஜாகிர் நாயக் அவர்களிடம் கல்லூரி மாணவி ஒரு கேள்வி எழுப்பினார் அந்த கேள்வியையும், அதற்க்கு அளித்த பதிளையும் இங்கே...


கேள்வி :- நானும் என்னுடன் படிக்கும் மாணவர் ஒருவரும் உயிருக்கு உயிரா நேசிக்கின்றோம் (காதல்) ஆனால் எங்கள் திருமணம் நடக்க தாமதமாகிகொண்டே செல்கின்றது . காரணம் நான் இந்து , அவர் முஸ்லீம் அவர் வீட்டில் என்னை முஸ்லீமாக மாற வற்புறுத்துகின்றனர் என் வீட்டில் அவரை இந்துவாக மாற வற்புறுத்துகின்றனர் நன்றாக புரிந்து கொண்ட நாங்கள் இருவரும் ஏன் அவர் அவராகவும் ! நான் நானாகவும் திருமணம் செய்து வாழ முடியாது ?
பதில் :- அம்பாஸிடர் காருக்கு நான்கும் அம்பாஸிடர் சக்கரம் போட்டால் வண்டி சமமாக நெடிய பயணம் செல்லலாம் ! ஒரு சக்கரம் அம்பாஸிடர் சக்கரமும் ஒரு சக்கரம் ட்ராக்டர் சக்கரமும் போட்டால் வண்டி சமமாக செல்லாது . ஒரு பக்கம் உயரமாகவும் , ஒரு பக்கம் சாய்வாகம் வாகனம் சென்றால் நெடிய பயணம் செல்ல முடியுமா ? திருமண வாழ்க்கை என்பது இரண்டு பேரும் புரிந்து நல்ல வாழ்க்கை வாழந்து நெடிய பணம் செல்ல வேண்டும் .
கேள்வி :-அப்படி என்றால் நான் முஸ்லீமாக வேண்டுமா ?
பதில் :- நீங்கள் படித்தவர்கள் குர் ஆன் , ஹதிஸையும் , இந்து தர்மத்தையும் இரண்டையும் படியுங்கள் இந்த உலக வாழ்வையும் , மறுமை வாழ்வையும் வெற்றி அடையகூடிய மார்கம் எது என நீங்களே தேர்வு செய்து நல்ல வாழ்க்கை வாழுங்கள் .
(குறிப்பு :- அடுத்த நாள் அமர்வில் அந்த பெண் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விடுகின்றேன் என கூறினார் என்பது குறிப்பிடதக்கது)
''லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்'
'வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி அவனது தூதராவார்' - என்பதுதான்.

ஜனாதிபதி கலாநிதி முர்சி வெளியிட்டுள்ள செய்தி .

ஜனாதிபதி கலாநிதி முர்சி வெளியிட்டுள்ள செய்தி . 


எகிப்தின் அனைத்து பகுதியிலும் உண்மைக்காக களம் இறங்கியிருக்கும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள் நான் உங்களிடம் தயவாய் வேண்டிக்கொள்வது நீங்கள் உறுதியாக இருங்கள் அல்லாஹ்வின் உதவி மிக சமீபத்தில் உள்ளது .
-Media-

ஆசிரியர்கள் தேவை


ஆசிரியர்கள் தேவை


03-07-2013.
மாதம்பையில் அமைந்துள்ள இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியில் G.C.E. A/L வகுப்புக்களுக்கு பின்வரும் பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் தேவை.

1. வணிகக் கல்வி மற்றும் கணக்கியல் (முழு/பகுதி நேர)
2. ஆங்கிலம் (முழு நேரம்)

தகைமை, அனுபவம் என்பவற்றுக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.
சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை The Registrar, Islahiyyah Arabic College – Old Town , Madampe – 61230 என்ற முகவரிக்கு 2013-07-15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்குடியதாக அனுப்பி வைக்கவும்.


மேலதிக தகவல்களுக்கு:
0777412296,0718019286
islahiyyah@gmail.com

Monday, July 8, 2013

இஸ்லாமிய இணையத்தளங்கள் சில....



கலாநிதி முஹம்மது முர்ஸி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் சில…

"எகிப்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முஹம்மது முர்ஸி அவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் சில....!!


1.அரபுலகிலேயே தேர்தல் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார்.

2.இவர் இன்றைய அரபுலகில் சாதாரன குடிமானாக இருந்து அதிபராக பொறுப்புக்கு வந்த முதலாமர்.

3.இன்றைய அரபுலகில் முழு குர்ஆனையும் மனனம் செய்த முதல் அதிபராவார்.

4.இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்பின் முதல் அதிபராவார்.

5.பொது மக்கள் தம்மை வெளிப்படையாக விமர்சிப்பதற்கு அனுமதியளித்த அரபுலகின் முதல் அதிபர் இவர் தான்.இதனால் 30க்கு மேற்பட்ட சேனல்கள் அவரை இரவு பகலாக விமர்சித்து வந்தன.

6.தாம் சிறைவாசம் அனுபவித்த காலங்களில் சிறை அதிகாரியாக இருந்தவரை சந்தித்து கைகுலுக்கிய உலகின் முதல் அதிபராவார்

7.அரசு அலுவலகங்களில் தமது படத்தை மாட்டி வைப்பதற்கு தடை விதித்த முதல் அரபுலகின் அதிபர் இவர்தான்.

8.சாதாரன பொதுமக்களைப் போலவே வாடகை வீட்டில் குடியிருந்த முதல் அராபிய அதிபர் இவர் தான்.

9.மேலும் சாதாரன எகிப்தியர்கள் பெறும் ஊதியத்தை போல இவரும் சம்பளம் சாதாரன சொற்ப சம்பளத்தையே பெற்றுக் கொண்டார்.

10.விடுமுறை காலங்களில் அரசு செலவில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லாமல் தமது சொந்த செலவிலேயே சென்ற முதல் அதிபராவார்.

தமக்கென்று ஒரு புதிய வரலாற்றை படைத்து சென்றுள்ளார்.. முஹம்மது முர்ஸி.

இன்றைய அரபுலகின் தலைவர்களை இவரோடு ஒப்பிட்டு பார்த்தால் இவர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார் என்ற உண்மை நமக்கு தெரிய வரும்.இவரது பதவி நீக்கத்திற்கு பின்னணியில் அமெரிக்க உளவுத்துறை இருப்பதாக நம்பப்படுகிறது.30 ஆண்டுகள் எகிப்தில் கொடுங்கோல் ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்களின் கரங்கள் இன்னும் ரானுவத்தில் உயர்ந்து இருப்பதையே இவரது பதவி நீக்கம் உணர்த்துகிறது.இவர் பொது மக்களின் பணத்தை கொள்ளையிட்டு தம்மை வளப்படுத்திக் கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

படைத்த இறைவன் அவருக்கு துணை நிற்பானாக….

இன்று (07/07/2013) துருக்கியின் பிரதமர் உர்துகான் ஆற்றிய உரையில்

இன்று (07-070-2013) துருக்கியின் பரதமர் உர்துகான் ஆற்றிய உரையில்:


''நாங்கள் எகிப்து மக்களை மிகவும் நேசிக்கிறோம் ஆனால் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை வண்மையாகக் கண்டிக்கிறோம்.

நாங்கள் ஜனநாயகத்தை விளங்கியதற்கு எதிர்மாறாக எகிப்து இராணுவம் விளங்கியுள்ளது. (இதன் அர்த்தம் ஜனநாயத்தை விளங்கவில்லை என்பதுவே)

நாங்கள் இராணுவ ஆட்சிக்கு மிகவும் எதிராக இருப்போம். அதன் விளைவை நாங்கள் ஏலவே அனுபவித்துள்ளோம்.

துருக்கியில் யாருக்கும் இப்போது ஜனநாயகத்தை மீற முடியாது.

தலை நோன்பில் நீங்கள் கேட்கும் முதல் துஆவில் எகிப்தில் ஜனநாயகத்திற்காகப் போராடும் எமது உறவிற்காக இருக்கட்டும்."

Friday, March 8, 2013

பாப்பரசரருக்கு பணிவிடை செய்த ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய ஆச்சர்யம் மிக்க தகவல்கள்!



16வது பாப்பரசர், ஆசிர்வதிப்பர் எனும் போப்-பெனடிக் இஸ்லாத்தைத் தழுவினாரா? அல்லது இது ஓர் பொய்யான செய்தியா என்பதில் இன்று உலகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பதவியைத் துறந்த போப் பெனடிக் அவர்களின் பின்னால் பல மர்மங்கள் மறைந்திருக்கின்றன.

பாப்பரசரருக்கு பணிவிடை செய்பவர்களுள் ஒருவர் ஆச்சர்யம் மிக்க தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி இருக்கின்றார்.

அவற்றுள், கடந்த ஞாயிறு தினத்தன்று போப் அவர்கள் முஸ்லிம்கள் வணங்குவதற்கு தகுதியான திசையாக எடுக்கும் மக்கா திசையை நோக்கி எழுந்து நின்று வணக்கமொன்றை மேற்கொண்டதாகவும், அது ‘அஸ்ர்’ எனப்படும் முஸ்லிம்களின் ஐவேளைத் தொழுகைகளில் ஒன்றாக இருந்தது’ எனவும் கூறியிருந்தார்.

மேலும் 2006ல் இருந்து இஸ்லாமிய மறையான அல்குர்ஆனைப் படிப்பதில் போப் பெனடிக் அவர்கள் ஆர்வம் காட்டி வந்ததாகவும் கூறியிருந்தார்.

இச்செய்தியைக் கேட்டதும் மீடியாக்கள் அதிர்ச்சியடைந்தன. தங்களது ஒளி-ஒலிபரப்பு சாதனங்களை கீழேவைத்துவிட்டு, வத்திக்கான் வணக்கஸ்தலத்தின் ஊடகப் பிரிவில் போப் அவர்களைக் காண இருந்தவர்கள் வாயடைத்துப் போயினர். நம்ப முடியாமல் தங்களது அலுவலகங்களை நோக்கித் திரும்பினர்.

இதைவிட, ஆம்! போப் அவர்கள் சென் பீட்டர்ஸ் பஸிலிகா தேவாலயத்தின் பல்கனியில் 5 வேளையும் மக்காவை நோக்கி தொழுது வந்திருக்கின்றார் எனவும், அல் குர்ஆனை அவர் படித்து வந்தார் என்பதும் தற்பொழுது வத்திக்கான் சென் பீட்டர்ஸ் தேவாலயத்தின் போப் அவர்களின் அதி நம்பிக்கைக்குரியவர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் மேற்கத்தேய ஆங்கில ஊடகங்கள் இச் செய்தியை மிக இரகசியமாக பேணி கையாண்டு வருவதாகவும், இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

சில கிறிஸ்துவ ஆங்கில ஊடகங்கள் ‘பாப்பரசர் இஸ்லாத்தை தழுவியது எனும் செய்து வெறும் கட்டுக் கதையே’ என்பதாக ஊர்ஜிதப்படுத்தி வருகின்றன.

எப்படி இருந்த பொதிலும் ‘ முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பங்களின் போது முஹம்மது நபி அவர்களை மேற்கோள் காட்டி அமைதிப்படுத்தி வந்ததும், கடவுள் ஒருவர் இருந்தால் நிச்சயமாக அவர் ஒருவரே என்றும் அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது’ எனவும் ஊடகத்திற்கு பகிரங்கமாக சென்ற ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்ததும் உலகறிந்த விடயமே!