பலஸ்தீன் காஸ்ஸாவில் ஆளும் ஹமாஸ் தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கான
சதித்திட்டத்தை முறியடித்துள்ள ஹமாஸ், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில்
ஈடுபட்ட தம்ரூத் (கிளர்ச்சியாளர்கள்) பலரை கைது செய்துள்ளதாக
தெரிவித்துள்ளது.
காஸ்ஸாவில் மோதலை உருவாக்க இஸ்ரேல் உருவாக்கிய சதித் திட்டத்தின் அடிப்படையிலேயே தான் செயல்பட்டதாக ஒரு இளைஞர் கூறும் வாக்குமூலம் அடங்கிய வீடியோவையும் ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
எகிப்தில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸியின் தலைமையிலான அரசை கவிழ்த்த மாதிரியில் இஸ்மாயீல் ஹானிய்யா தலைமையிலான ஹமாஸ் அரசையும் கவிழ்க்கும் கிளர்ச்சியாளர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்று ஹமாஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல், சில அரபு நாடுகள், சில ஃபத்ஹ் தலைவர்கள் இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ளதாக கைதான இளைஞர் குற்றம் சாட்டுகிறார். இவரைக் குறித்த விபரங்களை ஹமாஸ் வெளியிடவில்லை.
ஃபத்ஹின் முன்னாள் தலைவர் முஹம்மது தஹ்லானை காஸ்ஸாவின் அதிபராக்க வேண்டும் என்பதை இச்சதித்திட்டத்தின் நோக்கமாகும். முன்னர் காஸ்ஸா முனையில் பாதுகாப்பு பொறுப்பை வகித்திருந்த தஹ்லான் இக்குற்றச்சாட்டை மறுக்கிறார்.
ஃபத்ஹ் ஆளும் ஃபலஸ்தீன் ஆணையத்தில் ரகசிய உளவுப் பிரிவான பி.எஸ்.எஃப். இஸ்ரேலுக்காக தன்னை அணுகியதாக அந்த இளைஞர் கூறுகிறார். ஆட்சி கவிழ்ப்பு மூலம் காஸ்ஸாவை இரத்தக் களரியாக மாற்றுவதாக தான் கூறியதாகவும், தனக்கு பணம் கிடைத்ததாகவும் அந்த இளைஞர் கூறுகிறார்.
இஸ்லாத்தின் எழுச்சியை தடுப்பதே கிளர்ச்சியாளர்களின் நோக்கம் என்றும், இவர்களுக்கு இஸ்ரேலுடன் தொடர்பு இருப்பதாகவும் ஹமாஸின் செய்தி தொடர்பாளர் இஸ்லாம் கஹ்வான் கூறுகிறார்.
By முஸ்லிம் சமூகம்
No comments:
Post a Comment