இக்வான்களின் பார்வையில் இஸ்லாம் என்பது “ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம்”
இக்வான் முஸ்லிமூன் என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு வெறும் இருவது
வருடங்களில் இமாம் ஹசனுல் பன்னா கொல்லப்பட்டார் .அப்பொழுது அவர்களுக்கு
வயது 42 ஆகும் .அவர்கள் தனது வாழ்நாளின் போது தனிப்பெரும் சிறப்புப்
பெற்றிருந்ததோடு அவருடைய மறைவிற்குப்பின் பல ஆண்டுகளுக்குப் பின்னரும்
அவரது சிந்தனையினாலும் இயக்கதினாலும் கவரப்பட்டோர் உலகின் நாலா
பக்கங்களிலும் வியாபிதிருந்தார்கள். இஸ்லாம் என்பது வெறுமனே தனிப்பட்ட சில
நம்பிக்கைகளையும் சடங்குகளையும் சார்ந்தது என்பதற்காகத் தொன்றுதொட்டு
மக்கள் புரிந்து வைத்திருந்தமைக்கு மாற்றமாக ,இஸ்லாம் என்பது ஒரு பூரண
வாழ்க்கைத் திட்டம் ,அது சகல துறைகளிலும் மக்களுக்கு வழிகாட்டக் கூடியது
என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தார்கள் . அத்துடன் நின்று விடாது ஒரு
விறுவிறுப்பான இயக்கத்தைத் தோற்று வித்து அதன் செயல்திட்டத்தில்
,இஸ்லாத்தின் கலாசார ,சமூக ,பொருளாதார ,அரசியல் சித்தாந்தங்கள் உட்பட அதன்
முக்கிய கிரியைகள் சம்பந்தப்பட்டப் போதனையளாவில் நின்று விடாத வண்ணம் பல அருமையான செயல் திட்டங்கள் மூலம் நடத்திக் காட்டினார்கள்.
இக்வான்களின் ஆரம்ப காலம் தொட்டே 1926 லிருந்து இமாம் பன்னா அவர்கள் இஸ்லாத்தின் தத்துவங்களை பூரண வடிவில் முன் வைத்தார்கள் .1930 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல் தஹ்லீம் என்ற தலைப்புகளின் கீழ் இக்வான்களின் நெருங்கிய வட்டங்களுக்கு ,இந்த பூரணத் தன்மையைப் பரப்பிவந்தார்கள் .இஸ்லாம் என்பது வாழ்க்கையின் சகல துறைகளிலும் பங்கு கொள்கின்ற ஒரு சம்பூரண திட்டம் என்பதே அவர்களின் போதனையின் மையக் கருத்தாக இருந்தது .அரசு ,நாடு , அரசாங்கம் ,சமூகம் ,நிதி ,அதிகாரம் ,இறக்கம் ,ஒழுக்கம் ,கலாசாரம் ,சட்டம் ,அறிவு அல்லது ஆட்சி ,செல்வம் ,சம்பாத்தியம் , முன்னேற்றம் , போதனை ,போராட்டம் , அல்லது கொள்கை ,இலட்சியமும் , கலப்பற்ற நம்பிக்கையும் , உண்மையான வணக்கமும் ,ஆகிய எல்லா அம்சங்களையும் அது தன்னுள் அடக்கியிருக்கிறது .
இன்று நாம் பார்க்கும் இஸ்லாம் அரைகுரையானது இஸ்லாத்துக்கு முழு பார்வையும் உள்ளது அதை சரியாக விளங்கிக் கொள்வது எமது கடைப்பாடகும் .
நன்றி: Facebook
من تراث الاخوان المسلمين - இஹ்வான்களின் சிந்தனைப் பாரம்பரியத்திலிருந்து
من تراث الاخوان المسلمين - இஹ்வான்களின் சிந்தனைப் பாரம்பரியத்திலிருந்து
No comments:
Post a Comment