பொதுபலசேனாவை அழிப்பதற்கு பௌத்தமக்கள் கிளர்ந்து எழுமாறு விஜித்த தேரர் அரைகூவல்
இந்த நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களை அரசாங்கம் மற்றும் தற்போதைய
ஜனாதிபதியிடமிருந்து வேறுபடுத்துவதற்கே பொதுபலசேனவின் செயலாளர் ஞானதேரர்
முயற்சிக்கின்றனர். இந் நிகழ்ச்சிநிரலை செயற்படுத்துவதற்காகவே அவருக்கு
நோர்வே, அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நிதியுதவி வழங்குகின்றது. அவர்
அடிக்கடி இந் நாடுகளுக்கு ஏன் சென்று வருகின்றார்.
அந்த நாடுகளில் உள்ள இனவாதிகள் பிரிவினைவாதிகள் இலங்கையின் சமாதானத்தை
விரும்பாத சில பிரநிதிகளிலிடமிருந்து பாரிய நிதியுதவியையும் பொதுபலசேனா
பெற்று வருகின்றார்.
பொதுபலசேனாவை இந்த நாட்டில் இருந்தும்
தூரப்படுத்தி முற்றாக அழிப்பதற்கு அரசாங்கமும் ஜனாதிபதியும் மற்றும்
பௌத்தமக்களும் கிளர்ந்து எழுமாறு விஜித்த தேரர் அரைகூவல் விடுத்தார்.
இன்று (10)ஆம் திகதி கொழும்பு ஹோட்டேல் நிப்போனில் நடைபெற்ற ஊடகவியளார்
மாநாட்டினை ஒழுங்கு செய்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் வத்தேகம நாமந்த தேரர், வட்டரக்க விஜித்த தேரர் நிமல் ரண்ஜித் ஆகியோறும் உரையாற்றினார்கள்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
அண்மையில் பொதுபலசேனா மய்யங்கனைக்குச் சென்று முஸ்லீம்களது கடைகளுக்குச்
சென்று பொருட்களை வாங்கவேண்டாம். அவர்களது கடைகளில் வாங்கிய பொருட்;களை
யாரும் வீடுகளுக்கு கொண்டுவந்தால் அதனை பறித்து மடுவில் போடுவோம். அவர்களது
தேத்தண்னீரில் 3 முறை துப்பிப்போட்டே உங்களுக்கு தேத்தண்னியை ஊற்றித்
தருகின்றார்கள் எனக் கூறினார்கள்.
ஆனால் பொதுபலசேனாவில் உள்ள
ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒன்ரைக்கோடிக்கு மேல் பெறுமதி வாய்நத் பராடோ
ஜீப்களை வைத்துள்ளனர். இதற்கு யார் நிதி வழங்கியது. ஆனால் மயங்கனையில்
முவேலையும் மரவள்ளிக்கிழங்கும் சாப்பிடும் அப்பாவி ஏழைமக்களிடம் சென்று
முஸ்லீம் கடைகளில் பொருட்கள் வாங்கவேண்டாம். அவர்களிடம் செல்ல வேண்டாம்.
வியாபார கொடுக்கல் வாங்கள்களைச் செய்யவேண்டாம் எனச் சொல்லி அந்த மக்களுக்கு
இனத் துவேசத்தை ஊட்டுகின்றனர்.
நான் கடந்த நோன்பு காலத்தில்
பதுளையில் உள்ள பாடசாலையொன்றில் முஸ்லீம்களின் ரமலான் நோன்பில் கலந்து
கொண்டு அவர்களுக்கு நோன்பு திறக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு
உரையாற்றிய்தற்காக அப்பகுதியல் உள்ள பொதுபல சேன உறுப்பினர்களும் ஆமதுறு
இருவரும் சேர்ந்து எண்னைத் தாக்கினார்கள் நான் கொழும்பு சென்று
கொண்டிருந்து வேனை நொருக்கி 30 பேர் பொல் தடிகளுடன் வாகணத்தையும்
சேதப்படுத்தி எண்னையும் அடித்து நொருக்கினார்கள் கடந்த ஒரு மாதகாலமாக நான்
கொழும்பில் அங்கும் இங்குமாக உள்ள பன்சலைகளில் தங்கி இருந்து களுத்து
முறிவுக்கு வைத்தியம் செய்துவருகின்றேன்.
முடியுமானால் என்னுடன் பொதுபலசேனவின் ஞானசேரத் தேரர் எதாவது தொலைக்காட்சியில் விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றேன்.
ஞானதேரர் 40 ஆமதுருக்களின் மஞ்ச உடைகளை கழற்றியதாகச் சொல்கின்றார். இதனைச்
செய்வதற்கு அவருக்கு உரிமை கிடையாது. இந்த நாட்டில் பௌத்த மற்றும் ;சங்க
சபைகள் உள்ளது. அவர்களாளே இதனைச் செய்ய முடியும். பொதுபலசேனாவில் 1இலட்சம்
பேரை உருவாக்கியுள்ளதாகக் ஞானத் தேரர் கூறுகின்றார். அவரின் பின்புலம்
என்ன? அவர் பல குற்ற்ம் இழைத்தவர் இவர்களுக்கு எதிராக இந்த நாட்டில் உள்ள
கிரிஸ்த்தவர்கள் மௌலவிமார்கள் குருக்கள், தேரர்கள் ஒன்றினைந்து நாடு
பூராவும் சென்று கூட்டங்களை நாங்கள் நடத்த உள்ளோம்.
கடந்த
காலத்தில் சகல மக்களும் ஒரு நாட்டவர்கள் இலங்கையர்கள் அவரவர் மதங்கள்
நல்லவற்றையே போதிக்கின்றன. சகலரும் ஜக்கியமாகவும் சமாதானமாகவும் இந்த
நாட்டில் வாழ்வதற்கு நாங்கள் சகல மத இன மக்களையும் சேர்ந்து பல
சந்திப்புக்களை நடாத்த உள்ளோம்.
போதைப்பொருளை யார் கடத்தினாலும்
முஸ்லீம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஞானதேரர் குறை
கூறுகின்றார். அவர்களை பிடித்து பாதுகாப்பபு பிரிவினரிடம் அவர் ஒப்படைக்க
முடியுமே
பாராளுமன்றத்தில் உள்ள எந்தவொரு முஸ்லீம் எம். பி யும்
ஒருபோதும் சாரய வார்கள் திறப்பதற்காக அரசிடம் இருந்து பேமிட் எடுக்கவில்லை.
பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய எமது எம்.பி மார்கள்தான் சாரய வார் பேமிட்
எடுத்துள்ளார்கள். அண்மையில் கூட சாரய ஸ்பிரிட் கொள்களன்களில் இற்க்குமதி
செய்தவர்கள் யார் ? ஏன் இதைப் பற்றி ஞானதேரர் பேசுவதில்லை.
அது
மட்டுமல்ல வாசுதேவ நானயக்கார ராஜித்தசேனரத்தின, திஸ்ச விதாரண ஆகிய நல்ல
அமைச்சர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டாம் என்வும் ஞானத் தேரர்
சொல்கின்றார்.
ஜனாதிபதி கண்டியில் முஸ்லீம்கள் மத்தியில்
அண்மையில் சந்தித்து உரையாற்றும்போது முஸ்லீம்களையும் அவர்களது மதத்தையும்
அவரிடமிருந்து வேறுபடுத்த முடியாது. அவற்றினை பாதுகாக்க நான் பாடுபடுவேண்
எனச் சொல்லியிருக்கின்றார். அத்துடன் ஓழுவில் துறைமுக திறப்பு விழாவின்
போது ஒரு இனத்திற்கும் மட்டும் அபிவிருத்தி செய்ய முடியாது சகல
இனத்திற்கும் அபிவிருத்தி செய்யவேண்டும் எனவும் ஜனாதிபதி உரையாற்றியதையும்
தேரர் உதாரணம் காட்டினார்.
ஆகவே இது போன்ற ஞானத் தேரர்களை
அரசாங்கமும் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் உடனடியாகச் செயல்பட்டு
பொதுபலசேனாவைக் கட்டுப்படுத்தல் வேண்டும். எனவும் தேரர் உரையாற்றினார்.
No comments:
Post a Comment