யார் இந்த புத்தர்?, புத்த மதம் ஓர் ஆய்வு
புத்த மதத்தைப் பற்றி ஆராயப் புகுமுன் ஒரு விஷயத்தை மனதில் இருத்திக்
கொள்ள வேண்டும். புத்தர் என்ன தான் போதித்தார் என்று நாம் தெளிவாக
அறிந்துக் கொள்ள எத்தகைய வழிமுறையும் இல்லை. தன் வாழ்நாளில் புத்தர் நூல்
எதனையும் எழுதவில்லை. தன்னுடைய வழிமுறையை விளக்கிக் கூறும் வண்ணம் தன்னுடைய
போதனைகளைத் திரட்டித் தொகுக்கும் பணியை அவர் ஊக்குவிக்கவில்லை.
அவரைப் பின்பற்றியவர்களும் அவருடைய வாழ்நாளிலோ அல்லது அதனை அடுத்து வந்த காலகட்டத்திலோ இப்பணியில் ஈடுபட்டதற்கான வரலாற்று ஆதாரமும் இல்லை.
புத்தர் இறந்து ஒரு நூற்றாண்டுக்குப்பிறகு வைசாலியில் கூடிய பேரவையில் நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் புத்தமத கொள்கைகளும் நெறிமுறைகளும் உருக்கொடுக்கப்பட்டன அதனால் அப்பேரவையில் கூடிய புத்த புத்த பிக்குகள் மெய்த்தன்மையையும் உள்ளீட்டையும் மாற்றியமைத்து விட்டார்கள் என (201.Secret Books of the Buddist)தீப்வம்ஸா,வின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
புத்தருடைய போதனைகளை நூலக்கம் செய்யும் பணி அப்போதிலிருந்து தொடங்கியது ஏறக்குறைய 400 ஆண்டுகாலம் அதாவது கி.பி.முதல் நூற்றாண்டு வரை இப்பணி தொடர்ந்தது கடைசியில் மீண்டும் கொன்னகத் திரிபுகளால் பாதிப்படைந்து அதனுடைய அடிப்படைக் கோட்பாடுகளே தடம் புரண்டு போயின எனவே புத்தர் நூல்கள் என்று எதனையும் எடுத்துக் கொண்டு விட முடியாது கனிஷ்கர் காலத்து இறுதி வடிவாக்கத்திலிருந்து தப்பிப் பிழைத்து நம்மை சேர்ந்துள்ள ஆகமங்களையே தவிர வேறு இல்லை அம்மூன்று நூல்களும் திரிபிடகம் என்றழைக்கப்படுகின்றன.
'திரிபிடகம் என்றால் பாலி மொழியில் ‘மூன்று கூடைகள்’ என்று பொருளாம்.
1. விநய பிடகம் - ஒழுக்கங்கள் நியமங்கள் பற்றியது. தொகுத்தவர் யாரேன்று அறியப்படவில்லை. கி.மு. 350 முதல் கி.மு.250 வரை பற்பல காலகட்டங்களில் உருவாகியுள்ளது.
2.ஸுத்த பிடகம் -வெற்றிக்கான வழிகள்,ஒழுக்க நியதிகளைப் பற்றியது . புத்தருடைய விளக்கங்களே பெரும்பாலும் உள்ளன. தொகுப்பாசிரியர், காலம் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் இல்லை.
3.அமிதம்ம பிடகம் -ஒழுக்க நியதிகள், புலன்களுக்கு அப்பாற்பட்ட நுண்ணிய விடயங்கள் தொடர்பானது.கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இறுதியில் எழுதப்பட்டது என்ற குறிப்பு மட்டும் உள்ளது.
கெளதம புத்தர் உண்மையிலேயே என்ன போதித்தார் என்பது நமக்குத் தெரியாது. புத்தருடைய போதனைகளாக இந்த நூல்கள் முன்வைக்கும் விஷயங்களைப் பற்றியே இனி பார்க்கப்போகிறோம்.
புத்த மதம் உலகில் நீண்டகாலம் தொடர்ந்து இன்றும் நிலைத்திருப்பதற்குக் காரணம்,ஆள்வோரையும் சமூக அமைப்பையும் எதிர்த்துப் போராடி வலிமையானதொரு பண்பாட்டு நெறியை நிலை நாட்டியதால் அல்ல! மாறாக, ஆள்வோர் எத்தகைய கொடுங்கோலர்களாக இருந்தாலும் அவர்க்கு பணிந்து கட்டுண்டு கிடக்க வேண்டும் என்று போதித்தது தான் காரணம்!
சரி விஷயத்துக்கு வருவோம். யார் இந்த புத்தர் ?
உலகில் தோன்றிய மற்ற தத்துவ ஞானிகள்,சிந்தனையாளர் களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்தொரு கோணத்தில் மனித வாழ்வை அணுகியுள்ளர் .மனிதன் எதற்காக இவ்வுலகில் தோன்றினான்? அவன் எவ்வாறு வாழ வேண்டும் என்கிற விஷயங்களில் பக்கம் அவர் சிந்தனையைச் செலுத்தவே இல்லை. ஆகையால் இயல்பாகவே அவர் மனிதன் எத்தகைய முறைப்படி வாழ்ந்தால் தனக்கும் தான்சார்ந்த மனித இனத்துக்கும் பயன் சேர்க்க முடியும் என்பது குறித்து எங்குமே பிரச்சாரம் செய்யவில்லை.
மனித வாழ்வில் தோன்றுகின்ற சோதனைகளுக்கும் மற்றங்களுக்கும் என்ன காரணம்? குழந்தைப் பருவம், வலிபம்,முதுமை,ஆரோக்கியம்,ந
பல்லாண்டு காலம் சிந்தித்தும் தியானத்தில் ஆழ்ந்தும் இக்கேள்விக்கு விடை காண அவர் முயற்சித்தார். விடையாக அவர் கண்டது என்னவெனில் வாழ்க்கை என்பதே ஒரு சோதனை.அதில் மனிதன் சிக்கிக் கொண்டுள்ளான். பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படுகின்ற எல்லா மாற்றங்களும் அச்சோதனைகளின் வடிவங்களே! மனிதப் பிறப்புக்கென தனிப்பட்ட எந்தவோரு காரணமும் கிடையாது.
வீணாகவே அவன் படைக்கப்பட்டுள்ளான்.துன்பங
ஆசை எனும் தளையிலிருந்து அவன் விடுபடாத வரை அவன் இறந்து கொண்டேயிருப்பான். மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேயிருப்பான்.இதிலிருந்
உலகத்தோடு எந்தவிதமான தொடர்பையும் மனிதன் வைத்துக் கொள்ளக் கூடாது .எதையாவது நேசிப்பது,எதையாவது எதிர்ப்பது,எதன் மீதாவது பிரியம் வைப்பது -எதுவுமே இருக்கக் கூடாது. பாசம்,அன்பு,பிரியம் அனைத்தையும் உள்ளத்திலிருந்து துடைத்துவிட்டு உலகோடு எத்தொடர்பும் கொள்ளதிருக்க வேண்டும். இத்தொடர்புகள் அவன் மறுபடியும் பிறக்கக் காரணமாய் அமைகின்றன. இவற்றை அறுப்பதால் இருப்பிலிருந்து விடுபட்டு ‘இல்லாமை’ நோக்கி நகர முடியும்.இதுதான் ‘நிர்வாணம்’ இந்த நிர்வாண நிலையை மனிதன் அடைய வேண்டும் என்றே பெளத்தம் போதிக்கின்றது.
நிர்வாண நிலையை எவ்வாறு அடைவது?
நிர்வாண நிலையை அடைய எட்டுக் கட்டளைகளான. (பாலி மொழியில்)
1.சம்மாதிட்டி
2.சம்மாசங்ப்போ
3.சம்மா வாசா
4.சம்மா கம்மந்தோ
5.சம்மா ஜீவோ
6.சம்மா வாயா மோ
7.சம்மா ஸதி
8.சம்மா சமாதி
எட்டுக் கட்டளைகளின் பொருள் என்ன? என்பதை பார்ப்போம்.
1.நல்ல நோக்கம் (சம்மாதிட்டி)-நான்கு அடிப்படை மெய்ம்மைகளையும் நன்கு உணர்ந்திருத்தல். (நான்கு மெய்ம்மைகள் என்றால் 1.துன்பம் 2.துன்பத்திற்கான காரணம்,3.துன்பத்தை நீக்கும் தீர்வு 4.துன்பத்தை நீக்கும் தீர்வுக்கான வழிமுறை )
2.நல்ல உறுதி (சம்மாசங்கப்போ)-ஆசைகளைத் துறப்பதற்கான நெஞ்சுரம்,மற்றவர்களுக்கு தீது பயக்காமல் உரியினங்களுக்கு துன்பமிழைக்காமல் விலகி இருக்கும் தன்மை.
3.நல்ல வாக்கு (சம்மா வாசா)-பொய்,புறம்,கோள்,வசவு
4.நல்ல செயல்(சம்மா கம்மந்தோ)-தீய நடத்தை,உயிர்க் கொலை,மோசடியிலிருந்து விலகி இருத்தல்.
5.நல்ல ஜீவனம்(சம்மா ஜீவோ)-முறையான வழிகளில் வருமானம் ஈட்டல்
6.நல்ல முயற்சி(சம்மா வாயா மோ)-தர்ம கட்டளையின்படி செயல்படுதல்.
7.நல்ல நினைவு(சம்மா ஸதி)-கடந்தகால செயல்களை நினைவிலிருத்தல்
8.நல்ல தியானம்(சம்மா சமாதி)-சுகம்,சந்தோஷத்தை விட்டு விட்டு இல்லாமை எனும் நிர்வாண நிலையை முன்னோக்கியிருத்தால்.
அஷ்டாங்க மார்க்கத்தை செயற்படுத்த பத்து கட்டளைகளை புத்தர் அறிவித்துள்ளார்.ஐந்து வலியுறுத்தப்பட்டுள்ளன.மற்ற
1.உயிர்க்கொலை புரியாமை
2.களவு செய்யாமை
3.காமம் கொள்ளமை
4.பொய் சொல்லாமை
5.மது அருந்தாமை
6.தகாத நேரத்தில் உணவு அருந்தலைத் தவிர்த்தல்
7.ஒழுக்கமற்ற செயல்கள் வேடிக்கை விளையாட்டுகளைத் தவிர்த்தல்.
8.நறுமணம்,மலர்கள்,ஆபரண அலங்கரிப்பைத் தவிர்த்தால்.
9.பஞ்சணைகளை,ஆடம்பர நடைமுறைகளைத் தவிர்த்தல்.
10.பொன்னையும் வெள்ளியையும் வைக்காதிருத்தல்.
இந்த ‘எட்டும்’ ‘பத்தும்’ தாம் பெளத்த மத தத்துவத்தையே விளக்கின்றன. வருமானம், சமுதாயம் தொடர்பாக தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு பெளத்த மதம் காட்டும் வழிகாட்டுதல்கள் யாவும் ‘சுய மறுப்’பை’யும் உலகு துறப்பையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன. சுயத்தை மறுக்காமல் அதனுடைய இலக்கான நிர்வாணத்தை அடைய இயலாது.
ஆகையால் அதற்காக பல்வேறு கடினமான பயிற்சிகளை பெளத்தம் அறிமுகப்படுத்தியது. அழகுணர்வு மனதை விட்டு நீங்க வேண்டும் என்பதற்காக தாடி,மீசை,தலை முடிகளைப் பிடுங்கிப் பிடுங்கியே அகற்றுவது; நின்று கொண்டே இருப்பது; முள்படுக்கை,ஆணிப் படுக்கைளையே பயன்படுத்துவது; உடம்பில் மண்ணையோ சேறையோ பூசிக் கொள்வது; இன்னும் இது போன்ற ‘தொல்லை’களை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் வயிலாக ஆன்மாவை நிர்மூலமாக்குவது பற்றை ஒன்றும் இல்லாமல் செய்வது(பெளத்தம் போதிக்கும் இவை போன்ற பயிற்சிகளை Dialogues of Buddha நூலில் காணலாம்)
இது எதோ முற்றும் துறந்த புத்தபிக்குகளுக்கு உள்ள பயிற்சி என்று நினைத்து விடாதீர்கள்.
தாரண வாழ்க்கைக்கும் இதே போன்ற வழிமுறை களையே பெளத்தம் கடைப்பிடிக்கச் சொல்கின்றது. பக்கம் பக்கமாக அவை விரிவடைகின்றன.
சாராம்சத்தை மட்டும் இங்கு காண்போம்.
நான்கு விஷயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும்.
1.ஆண்-பெண் கல்வி கூடாது.
2.புல்லைக் கூட திருடக் கூடாது
3.உயிருள்ள சின்னசிறு உயிர்க்கும் தீமை பயத்தலாகாது.
4.இயற்கைக்கு மற்றமாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகது.
துறவற வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு புத்தாடைகளை அணியலாகாது. குப்பைகளில் வீசப்பட்ட பழந்துணிகளையும் பிணங்களைப் போர்த்திய ஆடைகளையும் பொறுக்கி அவற்றை விரிப்பாக்கிக் கொள்ள வேண்டும்.
(ஒர் இளவரசி புதைக்கப்பட்ட பிறகு அங்கு வந்த புத்தர் புதை குழியைத் தோண்டி உடலைச் சுற்றியிருந்த துணியை நீக்கி அருகிலிருந்த ஒரு வாய்க்காலில் கழுவித் தோய்த்து ஆடையாக்கிக் கொண்டார்) (காண்க:நூல்:Sant Hilaire, Budha and His Religion)
இத்தகைய கந்தலாடைகளும் மூன்றுக்கு மேல் இருக்கக் கூடாது. வருமானம் ஈட்ட எந்த முயற்சியும் செய்யக் கூடாது. பிக்ஷைப் பாத்திரமேந்தி (திருவோடு) வீடு வீடாகச் சென்று பிக்ஷை எடுக்க வேண்டும். பெளத்தைப் பொறுத்தவரை இதுவே தூய உணவாகும்.
(பிக்ஷை எடுப்பதினால்தான் ‘பிக்ஷு’(பிக்கு) என்றழைக்கப்படுகிறார்கள்.பு
தங்குவதற்காக வீடு எதையும் கட்டிக் கொள்ளக் கூடாது. வனாந்தரங்களில் மர நிழல்களிலேயே உறைய வேண்டும். நோயுற்றால் நிவாரணமடைய மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது. சிறுநீர் கழிவதே போதுமான நிவாரணம் ஆகும். உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளக் கூடாது. தேவைப்பட்டால் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குளித்துக் கொள்ளலாம்.
பணத்தை கைவசம் வைத்துக் கொள்ளவே கூடாது. வியாபாரம். வணிகம், கொடுக்கல்-வாங்கல்,தொழில் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விலகியிருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பொன்னையோ வெள்ளியையோ பயன்படுத்தக் கூடாது.
(இங்கு (சவூதியில்) புத்த மதத்தை பற்றுடன் பின்பற்றக்கூடிய இலங்கையை சேர்ந்த சிங்கள நண்பர்களை சந்தித்து ஆய்வுக்காக கதைத்து கொண்டிருக்கும் போது மேலே கூறப்பட்ட சட்டதிட்டங்களை பின்பற்ற முடியுமா? என்று கேள்வியை வைத்தேன் அதற்கு அவர் சொன்ன ஒரே பதில் இன்றைக்கு புத்தர் சொன்னதை அப்படியே பின்பற்றி வாழ நினைத்தால் உயிர் வாழ முடியாது என்றார்.)
பெளத்த மதத்தை பொருத்த வரை அடிப்படை ஆதார விஷயங்களைப் பொறுத்தவரை பெளத்தம் அடிமுதல் நுனிவரை ஒரு தவறான கோட்பாடகவே காட்சியளிக்கின்றது.தவறான ஒரு கோணத்திலிருந்து அது மனித வாழ்வை அணுகியுள்ளது.தவறான இலக்கைக் குறிக்கோளகக் கொண்டுள்ளது.தவறான ஒரு பதையை,அதை அடையும் வழியாகச் சுட்டிக் காண்பிக்கிறது.
உலக நிகழ்வுகளையும் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும் கண்டு புத்தர் திகைத்துக் குழம்பிப் போனார். அதற்கான உண்மையான காரணம் என்னவென்று அவர் தேடவில்லை.அழமாக உள்ளிறங்கி அலசிப் பார்க்கவில்லை.உயர் குறிக்கோளை நோக்கி நெஞ்சுரத்தோடு பயணிக்கவில்லை.மாறாக மேலோட்டமாக மனிதப் பிரச்சினைகளை அணுகிப் பார்த்து வாழ்க்கையே வீண் என்னும் எளிய முடிவுக்கு விரைவில் வந்து விட்டார்.
மனிதனுடைய அறிவு,உணர்வு,சிந்தனை,பற்று
உடற்திறன்கள் என்று அவனிடமுள்ள அனைத்துமே அவனைத் துன்பத்தில் தள்ளுகின்றனவேன்றி வேறு எச்செயலுக்கும் பயன்படுவதில்லஇவ்வுலகின்களஞ
உலகத் துன்பங்களைக் கண்டு பீதியடைந்து உலகத்தையே துறந்து விட்டவன் சமூகத்தோடும் கூட்டமைப்போடும் உள்ள அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டு தன்னுடைய ‘வெற்றி’யை மட்டும் இலக்காக்கிக் கொண்டவன், அந்த’வெற்றி’அல்லது ’நிர்வாண’ நிலையை அடைவதற்காக-உலகத்துக்குள் அல்ல-உலகத்துக்கு வெளியே வெகுதூரம் அழைத்துப் போகின்ற பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் தன்னுடைய சொந்தக்காரர்கள்,தான் சார்ந்திருக்கின்ற சமூகம்,தன்னுடைய நாடு,தன் சக மனிதர்களுடைய நலன்களுக்காக வீரத்தோடு பாடுபடுவான் என்று எதிர்பார்க்க முடியுமா?
சமூகத்தைச் சீர்திருத்துவதற்காகவும் முன்னேற்றுவதற்காகவும் தன்னுடைய உடற்திறமைகளையும் அறித்திறனையும் செலுத்துவான் என்றோ,வைராக்கியம் செறிந்த திடநெஞ்சோடு தன்னுடைய பொருளையும் ஆன்மாவையும் அதில் ஈடுபடுத்துவான் என்றோ,அநீதி, அராஜகம்,அக்கிரமம்,அட்டுழிய
இன்னும் சொல்லப் போனால் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைப்படி அதற்கு அனுமதியும் இல்லை.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய அனைத்து சீர்திருத்தவாதிகளையும்,தூத
மாறாக அந்தந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த கண்ணியவன்கள் மீது இட்டுக்கட்டி பொய் சொல்லி விட்டார்கள் என்றே சொன்னார்கள் நீங்கள் திறந்த மனதோடு நபிமொழிகளையும் குர்ஆனையும் ஆய்வு செய்தால் இவைகள் தெரிய வரும்.
இந்துத்துவவாதிகள்,பின்நவீன
முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இவர்கள் அனைவரும் தங்கள் எழுத்திலும் மேடை பேச்சிலும் புத்தரையும், சூஃபிஸ கொள்கையும் புகழ்வதை பார்த்திருக்கிறேன். படித்திருக்கிறேன்.ஒன்றுகொன
அதற்கு பிறகு பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.
.இஸ்லாத்தையும் அதன் உண்மை அடிப்படைக் கொள்கைகளான குர்ஆன் ஹதீஸ்களையும் மற்ற கொள்கையை சார்ந்த அனைவரும் கடித்துக் குதறுகிறார்களே ஏன்? பிராண்டி எடுக்கிறார்களே ஏன்? இதற்கும் பதில் கிடைத்தது ஆம் இஸ்லாம் இயங்குவியல் மார்க்க்கம் இவர்கள் செயல்படுத்த துடிக்கிற கொள்கைகளுக்கு தொந்தரவாக எதிராக நிற்கின்ற மார்க்கம்.
இதை நான சும்மா நுனிப்புல் மேய்ந்துவிட்டு சொல்லவில்லை வரலாறுகள் இதற்கு சாட்சி பகர்கின்றன.
சரி விஷயத்துக்கு வருவோம்
புத்த மதம் தன்னுடைய இயங்குவியலற்ற தன்மையால் உலகமெங்கும் பெயர் சொல்லும்படியான பண்பாட்டையோ கலாச்சாரத்தையோ பெளத்தத்தால் ஸ்தாபிக்க இயலவில்லை.வேறொரு பண்பாட்டின் மீது வீரியமான தாக்கத்தை ஏற்ப்படுத்துமளவு வலிமை கொண்டதாக மாறவும் இயலவில்லை.பெளத்தம் சென்றடைந்த நாடுகளில் ஒழுக்கவாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியதென்னவோ உண்மைதான்! எனினும் அந்நாடுகளின் சமூக அமைப்பையோ அரசியல் அமைப்பையோ பெளத்தம் மாற்றி அமைக்கவில்லை;அதற்கான முயற்சிகளிலும் இறங்கவில்லை.
உலகின் பல்வேறு இடங்களுக்கும் பெளத்தம் பரவியுள்ளது.மத்திய ஆசிய நாடுகளிலும் கிழக்ககாசிய நாடுகளிலும் பெளத்தம் பரவியதைப் போன்று வேறு சமயநெறிகள் பரவவில்லை.கவனத்தைக் கவரும்படி பெருந்திரளான மக்கள் பெளத்தத்தைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் ஏதேனுமொரு சமூகத்தின் வாழ்க்கையில் புரட்சிகரமான மாறுதல்களை பெளத்தம் ஏற்படுத்தியுள்ளது என்பதையோ சாதனை ஒன்றையேனும் ஏற்படுத்தியுள்ளது என்பதையோ வரலாறு நெடுக தேடிப்பார்த்தாலும் காணக்கிடைக்காது.
நேர்மாற்றமாக வேறேதேனும் சமயத்தோடு அல்லது பண்பாட்டோடு மோதுகின்ற சூழல் எங்காவது ஏற்பட்டால் பெளத்தம் தோற்றுப் போயிருப்பதையே நாம் காண்கிறோம். பெளத்த மதம் இந்தியாவில் தோன்றியது.நீண்டதொரு காலம் இங்கேயே பல்கிப் பெருகியது.கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலும் நான்கில் மூன்று பகுதியினர் அதாவது ஏறக்குறைய மூக்கால் பாகம் பெளத்தத்தையே பின்பற்றி வந்தனர்.கி.பி. நான்காம் நூற்றாண்டில் ‘பாஹியான்’ இந்தியாவிற்கு வந்த போதும் இங்கு மக்களிடையே பெளத்தம் செல்வாக்கு பெற்றிருந்தது.
ஆனால் அதன்பிறகு பிராமண மதம் தலைதூக்கியபோது ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்குள் பெளத்தம் சுத்தமாக துடைத் தெறியப்பட்டுவிட்டது.இன்றைக
அவ்வாறே அசோகர் காலத்தில் ஆஃப்கானிஸ்தானத்தில் பெளத்தம் பரவியிருந்தது.கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் காபூலை ஆண்ட மன்னர் மீனாந்தர் பெளத்தத்தைத் தழுவியிருந்தார்.ஆனால் ஆஃப்கானில் இஸ்லாம் அடியெடுத்து வைத்ததும் ஒரு கணம்கூட அதனை எதிர்கொள்ள பெளத்தத்தால் இயலவில்லை.
’தாவோயிசம்’ உடைய ஒத்துழைப்பு உதவியின் கருணையினால் சீனாவில் பெளத்தம் பரவியது.இல்லையென்றால் கன்பூஸியஸின் சமயநெறி அதை ஒழித்தே விட்டிருக்கும்.
‘ஷிண்டோ’ சமயநெறியை அட்ஜெஸ்ட் செய்துகொண்டு கொடுத்தும் பெற்றும்தான் ஜப்பானில் அதனால் நிலைகொள்ள முடிந்தது.தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அடிப்படைக் கோட்பாடுகளையும் அர்ப்பணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
எவ்விடத்திலும் அரசமைப்பையோ சீரழிந்துபோன சமூக அமைப்பையோ எதிர்த்து அது குரல் கொடுத்ததே கிடையாது.அரசியலுக்கு பெளத்தத்தில் இடமே கிடையாது.அரசை மற்றும் முயற்சிகளுக்கு பதிலாக, நல்ல அரசோ தீய அரசோ அதற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து ஒழகவேண்டும் என்றே பெளத்தம் போதிக்கின்றது.தீய சக்திகளுக்கு எதிராகவும் வாய் திறவாது கட்டுப்படவேண்டும் எனும் போதனைகளின்காரணமாக என்ன தான் கொடுமைப் படுத்தப்பட்டாலும் பெளத்தர்கள் அதிருப்திப் பெருமூச்சு விடுவதில்லை.
மற்ற பிறவிகளில் செய்த தீமைகளின் விளைவுகள் தற்போது துன்பங்களாகத் தொடருகின்றன.கொடுமைப் படுத்துவோர் மீது யாதொரு குற்றமும் கிடையாது.நாமிழைத்த தீவினைகளின் பலாபலன்களே அவை! அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும்.(நூல்:Buddha and His Religion .P.150,151.)
ஒரு தீய அரசுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? அதிருப்தி அடைவதற்குப் பதிலாக இத்தகைய சமயங்களை அவை ஆதரித்து போற்றவல்லவா செய்யும்? தாம் செய்யும் தீமைகளுக்கு இவர்கள் எதிர்த்து முனகக் கூடமாட்டார்கள் என்பதால், அரசுகள் பெளத்தத்தை வரவேற்கின்றன அதே நேரத்தில், தடை செய்யாமல் கொடுமைகளைப் புரிகின்றன; லஞ்ச -லாவண்ய நிர்வாகத்தைத் தொடர்கின்றன.
பெளத்த மதம் பரவத்துவங்கிய உடனே மகத நாட்டு மன்னர் பீமபஸாரன் பெளத்தத்தைத் தழுவிக் கொண்டார்.பெளத்தத்துக்கு ஆதரவாக அரசாங்க ஆணையையும் வெளியிட்டார்.தொடர்ந்து அவருடைய மகன் அஜித்த சத்ருவும் பெளத்தத்தின் தீவிர ஆதரவாளாராக மாறினார். கோசல நாட்டு மன்னர் அக்னிதத்தன் வலியச் சென்று தன் நாட்டில் பெளத்தத்தை வரவேற்றார்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இன்னோரு வலிமைகொண்ட மன்னரான ஹரிஷ் பெளத்தத்துக்கு எல்லாவகையிலும் வீறு கொண்டு துணை புரிந்தார். பிராமணர்கள் அவரைக் கொலை செய்யவும் சதி செய்தனர்.
இந்திய அல்லாது திபெத்,மங்கோலியா நாடுகளில் கிப்லாய் கான் பெளத்தத்துக்கு எல்லா உதவிகளையும் செய்தார்.பெளத்தம் பரவுவது அரசியல் ரீதியாக தனக்கு நன்று என்பதை அவர் உணர்ந்தர்.பெளத்த சமயப் பிரச்சாரகர்களை சீனாவுக்கு மன்னர் மங்க்டே வரவழைத்தார். இவ்வாறாக பல மன்னர்கள் உதவி ஒத்தாசை புரிந்துள்ளதை வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
இறுதியாக ஒன்று
ஆக நான் என்ன நோக்கத்திற்காக ஆய்வு செய்தேன் என்பதை தெரிவித்து விட்டேன் இன்னும் வேறு கோனங்களில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.
புத்த மதம் இயங்குவியல் மதமா? என்ற கோனத்தில் செய்த ஆய்வு இதோடு முற்று பெறுகிறது..............
No comments:
Post a Comment