Monday, October 14, 2013

சீறிலங்கா தௌஹீத் ஜமாத்தின் உப தலைவர் சகோ / ரஸ்மின் அவர்களின் எகிப்து சிரியா குறித்த உரையின் பொய்களுக்கான மறுப்பு

சகோதரர் ரஸ்மின் அவர்களின் எகிப்து சிரியா குறித்த உரையை கேட்க கிடைத்தது அதில் மிகவும் ஒரு சிறு பிள்ளைத்தனமாக பேசுவதை பார்க்கும் போது அவரின் உலக அறிவையும் மார்க்க அறிவையும் தெரிந்து கொள்ள முடிந்தது .
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் அரபு நாடுகளில் ஏற்பட்ட அடக்கு முறைக்கு எதிரான புரட்சிகளை மிகவும் காரசாரமாக வாய் கிழிய கத்துகிறார் என்னோமோ நானும் நல்ல கெட்டிக்காரர் என்று அவரின் உரைகளை பலதை கேட்டுள்ளேன் அவரின் இந்த உரையை கேட்ட போது அவரின் உண்மையான முகவரியை புரிந்து கொண்டேன் .
எகிப்தில் நடந்தது புரட்சி இல்லையாம் இஸ்லாத்துக்கும் அதுக்கும் தொடர்பு இல்லையாம் இப்படி வாய்க்கு வந்த மாதிரி அனைவரையும் திட்டி தீர்க்கிறார் கடைசியாக அவர் இக்வான்களை அவரின் அறியாமையை கொண்டு விளக்குகிறார் .
எகிப்தில் நான் எழு வருடமாக உள்ளேன் முபாரக்கின் காலத்திலும் வாழ்ந்துள்ளேன் முர்சியின் காலத்திலும் வாழ்ந்துள்ளேன் அதுக்கு பிறகும் இங்கு வாழ்த்து வருகிறான் எகிப்தில் என்ன நடக்கிறது என்று பல கட்டுரைகளை எழுதுள்ளேன் அதைப்பற்றி பேச அவரை விட நான் சிறந்தவன் என்ற வகையில் இங்கு அவரின் பொய்களுக்கு சிறந்த பதிலை ஆதாரத்துடன் தரலாம் என நினைக்கிறேன் .
எகிப்தில் முர்சி இராணுவத்தால் நீக்கப்பட்டது முதல் பல அடக்கு முறைகள் இங்கு நடைபெற்று வருகிறது அவைகள் பின்வருமாறு :
எகிப்தில் இயங்கிவந்த முழு இஸ்லாமிய சனல்களும் இன்று வரை மூடப்பட்டுள்ளது அந்தவகையில் 18 சானல்கள் இதுவரையும் மூடப்பட்டுள்ளது .
தொடர்ந்தேற்சியான கைது நடவடிக்கைகள் இன்று வரை நடைபெறுகிறது .
பல பள்ளிகளில் ஜும்மா இல்லாமல் மூடப்பட்டுள்ளது 55 ஆயிரம் இமாம்கள் அரச பதவியில் இருந்து விலதப்பட்டுள்ளனர் .
இதுவரைக்கும் 5000 கும் அதிகமானவார்கள் கொல்லப்பட்துள்ளனர்
20000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயப்பட்டுள்ளனர்
1000 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
தாடி வைத்த ஒரு சலபி சகோதரரை அவரின் கடையுடன் சேர்த்து நெருப்பு வைத்துள்ளனர் .
பல பள்ளிகள் இன்று வரைக்கும் மூடப்பட்டுள்ளது எரிக்கப்பட்டுள்ளது
எகிப்தின் சினாய் என்ற பகுதியில் பயங்கரவாதம் என்ற பெயரில் தினமும் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர் .
இப்படி எகிப்து தலை குப்பற மாறி கிடக்கும் போது உலக அறிவு சற்றேனும் இல்லாமல் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் எகிப்தில் இருக்கும் பல சலபி சகோதரர்களையும் கூட  கோபாம் மூட்டியுள்ளது என்ன இவர் இப்படி உண்மைக்கு முரணாக பேசுகிறார் என்று கூட அவர்களை யோசிக்க தூண்டியுள்ளது .
இவ்வாறு நிலைமை இருக்க இக்வான்களை தாக்க ஆரம்பிக்கிறார் அவர்கள் வீடுகில் ஒளிந்து கொண்டு பொது மக்களை ஏவி விட்டு அவர்கள் நின்மதியாக இருப்பதாக அவர்கள் மீது பெரும் அவதூறை சொல்கின்றார் அவர்கள் ஒழிந்தா இருந்தார்கள் என்று நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன் பல ஆதாரத்தை காண்பிக்கிறேன் .
இக்வாங்களின் மேல் மட்டம் தொடங்கி அடிமட்டம் வரை யார் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என பாருங்கள் :
ஒன்று :இக்வாங்களின் முர்சித் முகமத் பதீஹ் :
இவரின் மகன் அம்மார் கொல்லப்பட்டுள்ளார் , அவரையும் கைது செய்துள்ளனர் அவரின் வீட்டையும் எரித்துள்ளனர் அவரின் பணத்தை வங்கியில் தஜ்மீத் தடை செய்துள்ளனர் அவரின் முழு சொத்தும் சீரழிக்கப்பட்டுள்ளது அவரின் குடும்பம் முற்றாக சீரளிக்கப்பட்டுள்ளது அவரை கைது செய்து தாறுமாறாக அடித்ததில் அவரின் பற்கள் கூட உடைந்துள்ளது இவர் உலகில் மிகவும் சக்தி வைந்தவர்களில் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டவர் .
இரண்டு : இக்வாங்களின் பிரதி தலைவர் கைரத் சாதிர் : 
இவரை கைது செய்துள்ளனர் இவரின் மகள் ஹப்ஸா மற்றும்  அவர்களின் கணவன் பொருளியாளர்  கொல்லப்பட்டுள்ளனர்,
சாதிர் அவர்களை கைது செய்யும்போது அவர் மனைவியுடன் தூங்கியிருந்த அறையை உடைத்து சென்று அவரை கைது செய்துள்ளனர் அவரின் மனைவியின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளனர் இதுமட்டுமல்லாது அவரின் மகன் சஹ்த் என்பவர் 23 வயதுதான் அவரையும் கைது செய்துள்ளனர் ,அவரின் முழு கம்பெனிகளையும் முடக்கியுள்ளனர்  அவரின் பணத்தையும் எடுக்க முடியாது தஜ்மீத் செய்துள்ளனர் இப்படி அவரின் குடும்பத்தை திட்டமிட்டு கருவருதுள்ளனர் .
மூன்று : இக்வாங்களின் முன்னால் முர்சித் கலாநிதி மஹ்தீ ஆகிப் : 
இவரை கைது செய்துள்ளனர் இவரின் குடும்பத்தை சீரழித்து வீதியில் இறக்கியுள்ளனர் இவரின் பணம் அணைத்து தஜ்மீத் செய்யப்பட்டுள்ளது .
நான்கு :எகிப்தின் ஜனாதிபதி முர்சி : அவரை பதவி நீக்கியது முதல் இதுவரைக்கும் எங்கு இருக்கிறார்கள் என்று தன் மனைவிக்கு கூட தெரியாமல் ஒலிக்கப்பட்டுள்ளார் அவரின் மனைவியை கைது செய்து பின்னர் அடித்து துரத்தியுள்ளனர் அவரின் மகன்களை இதுவரையும் தேடிக்கொண்டே இருக்கின்றனர் .
ஐந்து : இக்வாங்களின் தலைவர்களில் ஒருவர் முஹம்மத் பெல்தாஜி : இவரின் மகள் அஸ்மா வை சுட்டுகொண்டுள்ளனர் இவரையும் கைது செய்துள்ளனர் இவரின் வீடு முற்றாக உடைக்கப்பட்டுள்ளது .
ஆறு : இக்வாங்களின் நீதிக்கும் சுதந்திரத்துக்குமான  கட்சியின் தலைவர் சஹ்துள் கதாதினி : இவரை முர்சியை விலத்தி அடுத்த கணமே கைது செய்துள்ளனர் இவர் எகிப்தின் முன்னாள் சபா நாயகர் இன்று வரைக்கும் சிறையில் வாடுகிறார் .
ஏழு : கலாநிதி முகமது சுல்தான் : இவர் இக்வாங்களின் வளிகாட்டிகளில் ஒருவர் இவரின் மகன் அப்துர்ரஹ்மான் கொல்லப்பட்டுள்ளார் இவரை ரம்சீஸ் என்ற சதுக்கத்தில் காடையர்கள் பிடித்து அடித்துள்ளனர் .
எட்டு : பொருளியலாளர் முன்னாள் எகிப்தின் மாவட்ட அமைச்சர் சஹ்துள் ஹுசைனி : இவர் இக்வாங்களின் திட்டமிடல் பொறுப்பாளர் இவரை கைது செய்துள்ளனர் இவரின் வீடு முற்றாக உடைக்கப்பட்டு அவரின் கார் தீ வைக்கப்பட்டு இவரின் முழு சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளது .
ஒம்பது : அலெக்ஸ்சாண்ரியாவின் பிரதி தலைவர் ஹசன் பிரன்ஸ் :கலாநிதி ஹசன் அவர்கள் இக்வாங்களின் தலைவர்களில் ஒருவர் சிறந்த எழுத்தாளர் இவரை இராணுவம் கைது செய்துள்ளது .
பத்து :இதுவல்லாத மிக முக்கிய இக்வான்களுக்கு ஆதரவான தலைமைகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்  : கலாநிதி சேஹ் ஹாசிம் சலாஹ் இஸ்மாயில் அவர்கள் இவர் எகிப்தின் சிங்கம் என அழைக்கப்படுவார் இவர் முன்னாள் எகிப்தின் ஜனாதிபதி வேர்ப்பளரும் ஆவார்.
கலாநிதி அபுல் அலா மாழி இவர் எகிப்தின் ஹிஸ்புல் வசத் கட்சியின் தலைவர் சிறந்த இஸ்லாமிய அறிஞ்ர் இவரையும் இராணுவம் கைது செய்துள்ளது .
இதே கட்சியின் உப தலைவர் லோயர்  இஸ்ஸாம் சுல்தான் இன்னும் சப்வத் ஹிஜாசி அப்துல் மாஜித் ,சுமார் ,கலாநிதி அப்துல் மக்சூத் ,சேஹ் ஜிப்ரீல் ,எகிப்தின் குரான் துறை மேல் நிலை பட்டதாரி சேஹ் கலாநிதி அல் மஹ்சராவி இன்னும் பலர்  உங்களுக்கு ஆயிரம் பேரை உதாரணமாக காட்ட முடியும் இவர்கள் இக்வான்கள் அல்ல இவர்கள் இஸ்லாத்தை கொண்டு வர பாடுபடுகிறார்கள் .
ஏன் நான் இங்குதான் உள்ளேன் முர்சியை விலத்தியது முதல் என்ன நடைபெறுகிறது என்று உங்களை விட எனக்கு அதில் அனுபவம் அதிகம்  உங்களுக்கு எகிப்து குறித்தும் இக்வான்கள் குறித்தும் சிலர் தவறான செய்திகளை தந்துள்ளனர் வாய்க்கு வந்தது மாதிரி நீங்கள் பேசுவது நீங்கள் தலைமை தங்கும் ஜமாத்தை இழிவு படுத்துவதாக நான் கருதுகிறேன் .
எகிப்தில் என்ன நடக்கிறது என்று நான் உங்களுக்கு முழுவதையும் ஆதாரமாக நிருபிக்க தயாராக உள்ளேன் நீங்கள் தயாரா? பொய்களை ஒரு இஸ்லாமிய பிரசாரமாக செய்வதை இட்டு அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் .
இன்னும் நிறைய விடையங்கள் பேசவும் எழுதவும் உல்லது நீங்கள் திறந்த மனதுடன் இருப்பின் நேரடியாக உங்களை சந்தித்து நீங்கள் எவ்வளவு தவறான கருத்துக்களை பொதுமக்களுக்கு சொல்லியுள்ளீர்கள்  என்பதை என்னால் நிருபிக்க முடியும்.
உங்களிடம்// இக்வான்கள் யாரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற வில்லை// என்பதற்கு தகுந்த ஆதாரத்தை எதிர்பார்க்கின்றேன் .அப்படி உங்களால் நிருபிக்க முடிய வில்லை என்றால் நீங்கள் பொதுமன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறீர்களா ?
என்பதையும் கேட்டு உங்கள் பதிலை எதிர்பார்த்து நிறைவு செய்கின்றேன்
உங்கள் உரையின் இன்னும் பல தவறுகள் உள்ளது அவை குறித்தும் நான் எழுத தயாராக உள்ளேன் இன்ஷாஅல்லாஹ் எல்லா வற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன் யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து உன்னுடை திருப்பிதியை பெறக்கூடிய கோட்டத்தில் எங்களை ஆக்கி அருள்வாயாக . 
قل موتوا بغيظكم ان الله عليم بذات الصدور " آل عمران   119 
   
இப்திஹார் இஸ்லாஹி 
சமூக வரலாற்று ஆய்வாளர்
BA HONS (SPECIAL GEN -HISTORY) AL AZHARI
ஈமெயில் : ifthiharislahi@yahoo.com.sg
          : +201122956348
     Skype : ifthihar1984

No comments:

Post a Comment