Thursday, March 17, 2016

ஒற்றைக் கண்ணில் குவியும் முக்கோண அரசியல்: யூதம்|டொன்மே|ஷீஆ

ஒற்றைக் கண்ணில் குவியும் முக்கோண அரசியல்
யூதம்|டொன்மே|ஷீஆ

சமகால உலக நடப்புகளையும், உலக முடிவுக்கால நிகழ்வுகள் குறித்த ஹதீஸ்களையும் ஒப்பீட்டு ரீதியாக அணுகும் போது பல உண்மைகளை காணமுடியுமாக உள்ளது. அந்த அடிப்படையில் இந்த ஆக்கத்தினூடாக ஒற்றைக்கண் அரசியல் எனும் தஜ்ஜாலியத்திற்கான திட்டமிடலோ என்று சந்தேகிக்க முடியுமான ஒரு உண்மை குறித்து அலசுவோம். இன்ஷா அல்லாஹ்.

தஜ்ஜால் எனும் ஒற்றைக் கண்ணையுடையவன் ஈரானின் இஸ்பஹான் என்ற பிரதேசத்திலிருந்து வெளியாகி, ஜெரூசலத்தை மையப்படுத்தி முழு உலகையும் ஆட்சி செய்வான் என்பது ஹதீஸ்களினூடாக விளங்கும் ஓர் உண்மையாகும். இரவு வந்தால் பகல் வருவது எவ்வளவு உண்மையோ அதேபோன்று உண்மையான விடயமாகத்தான் இது தொடர்பான விடயங்களும் ஹதீஸ்களில் இடம்பெற்றிருக்கிறது.

இன்றைய உலக விவகாரங்களை அவதானிக்கும் போது இந்த தஜ்ஜாலிய ஆட்சிக்கான தயார்படுத்தல்கள் முத்திசைகளிலிருந்தும் திட்டமிட்டு நடாத்தப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முதல் திசை: யூதம் (இஸ்ரவேலில்)

யூதம் என்பது பனூ இஸ்ரவேலர்களில் நெறிபுரண்ட ஒரு மதமாகும். இன்று இவர்கள் பலஸ்தீன மன்னில் ஒரு பகுதியை அபகரித்து இஸ்ரேல் என பெயரிட்டு அதனை ஆட்சிசெய்து வருகின்றது. இவர்கள் தல்மூத் மற்றும் கப்பாலா என்ற மாந்திரீகங்களை வேதமாக ஏற்று நடக்கின்றனர்.

இவர்கள் மஸீஹ் எனும் தமது தீர்க்கதரிசியை எதிர்பார்த்தவர்களாக வாழ்கின்றனர். அந்த மஸீஹைக் கொண்டு ஜெரூசலத்தை மையப்படுத்தி முழு உலகையும் ஆட்சிபுரிவதாக சொல்கின்றனர்.

இவர்கள் எதிர்பார்க்கும் மஸீஹின் பண்புகள்:

  • பல்லாண்டுகாலமாக மறைவாக வாழ்ந்து கொண்டிருப்பவர்
  • வாலிபனாக வெளியாகி யூதர்களைக் கொண்டு முழு உலகையும் ஆட்சிபுரிவார்
  • சில பிரதிகளைக் கொண்டுவந்து அல்குர்ஆன் பொய்யானது. இதுதான் உண்மையான வேதம் என்று கூறி மக்களை அவன் பக்கம் அழைப்பான்
  • மரணித்தவர்களை உயிர்பிப்பான்;
  • வரண்ட பிரதேசங்களில் மழை பொழியவைப்பான்
  • புட்பூண்டுகள் வளராத தரையில் அவற்றை முளைபிப்பான்
  • புதையல்களை வெளிப்படுத்துவான்

இன்னும் ஏராளம்...

மேலும் இவர்களது வேதமான தல்மூத் விபச்சாரத்தை அனுமதிக்கிறது. மேலும் இவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேலைகள் தொழுதுவருகிறார்கள் (ஷஹாரீத், மன்ஹா, மஆரீப் என்பனவே அவை). மேலும் தமது இறுதி தீர்கதரிசியான தஜ்ஜால் வந்து ஆட்சிப் பொருப்பை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் வெற்றிகரமாக உலகம் தழுவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறார்கள்.

இரண்டாவது திசை: டொன்மே (துருக்கியில்)

டொன்மே என்பவர்கள் துருக்கியில் வாழ்ந்து வருகின்ற ஒரு யூத பரம்பரையாகும். இவர்கள் செப்டாய் செவி என்ற யூத மதப்போதகரின் வழியில் வந்தவர்கள். துருக்கி கலீபாவால் சிறையில் அடைக்கப்பட்ட இவன் தன்னை பொய்யாக முஸ்லிம் என பிரகடனப்படுத்திக் கொண்டு உள்ளுக்குள் யூதமதத்தைக் கடைபிடித்து வந்தான். இவனது சகாக்களையும் இதே கொள்கையில் வழிநடாத்தினான். தங்களது இறுதி மஸீஹ் வரும் வரை முஸ்லிமாக நடித்து உள்ளுக்குள் யூதத்தை பின்பற்றும் (தகிய்யா) கொள்கையில் நிலைத்திருக்குமாறு வசிய்யத் செய்தான்.

இவர்கள் இன்றுவரை தம்மை இஸ்லாத்தின் காவலர்கள் என்று காட்டிக்கொண்டு இஸ்லாத்தில் சந்தேகங்களையும், தஜ்ஜாலியத்தையும் புகுத்தி மக்களை வழிகெடுத்து பல பிரிவுகளாக பிரித்து அந்தப் பகுதியில் குழப்பம் விளைவிப்பதில் வெற்றிகண்டுள்ளார்கள். இவர்களின் பல இலட்சம் குடும்பங்கள் இன்றும் துருக்கியில் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய கிலாபத்தை உடைத்து துருக்கியை நாசப்படுத்திய முஸ்தபா கமால் பாஷாவும் இந்த சமூகத்தை சார்ந்தவனே.

இவர்கள் யூதர்களின் கொள்கைகளை உடையவர்கள் ஆனால் வெளியில் இஸ்லாமியர்களைப் போன்று காட்டிக்கொண்டு தனிப்பிரிவாக வாழ்ந்து வருகிறார்கள்...

மூன்றாவது திசை: ஷீஆ (ஈரானை மையப்படுத்தி)

ஷீஆ என்பது, அலி (ரழி) அவர்களுக்கே ஆட்சி சொந்தமானது என்று வாதிடும் ஒரு குழுவினர். இவர்கள் பொதுவாக நபி (ஸல்) அவர்களது குடும்பத்தினருக்கே ஆட்சி பொருப்பு சொந்தமானது என்று வாதிடும் குழுவாக அறியப்பட்டிருக்கிறனர். இன்று இவர்கள் ஈரானை மையப்படுத்தி தமது ஷீஆ ஆட்சியை நடாத்துகிறார்கள்.

இவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவனின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு கொள்கையாக மாற்றம் பெற்ற குழுவினர்கள். யூதனான இவன் உஸ்மான் (ரழி) அவர்களது காலத்தில் பொய்யாக இஸ்லாத்தை பிரகடனப்படுத்தி, அஹ்லுல்பைத் என்ற விடயத்தை மையப்படுத்தி இஸ்லாத்தில் புதிதாக இணைந்தவர்களை தன்வசப்படுத்தி முஸ்லிம் உம்மத்தை பிளவுபடுத்தினான்.

படிப்படியாக இவன் இந்த சிந்தனையை ஒரு கொள்கையாக மாற்றியமைத்தான். அவற்றில் சிலது வருமாறு:


  • இமாமிய்யத் - அலி (ரழி) அவர்களின் குடும்பத்திற்கே ஆட்சி சொந்தமானது.
  • அல்குர்ஆன் பொய்யானது. உண்மையான குர்ஆனை மறைந்திருக்கும் கடைசி இமாம் கொண்டுவருவார்.
  • விபச்சாரத்திற்கு முத்ஆ என்று பெயரிட்டு அதனை மார்க்கமாக்கியுள்ளனர்.
  • ஐவேலைத் தொழுகைகளை மூன்று நேரங்களில் தொழுகின்றனர்.
  • இவர்கள் எதிர்பார்க்கும் கடைசி இமாம் மஹ்தி குறித்து:
    • 1200 வருடங்களாக மறைவாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
    • வாலிபராக வெளியாகி முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கி வழிநடாத்துவார்.
    • உண்மையான அல்குர்ஆனை கொண்டுவந்து அதனை நோக்கி மக்களை அழைப்பார்.
    • இறந்தவர்களை உயிர்பிக்கும் சக்தியுடையவராக இருப்பார்.

இன்னும் பல...

 இவர்கள் தங்களது இறுதி இமாமை எதிர்பார்த்தவர்களாக இருக்கிறார்கள். இன்று இவர்கள் ஈரானை மைய்யமாக வைத்து தங்களது கொள்கையை உலகம் பூராக பரப்பி வருகிறார்கள்.

இந்த மூன்று தரப்பினரிலும் டொன்மே மற்றும் யூதம் என்பன தெளிவாக தஜ்ஜாலை எதிர்பார்க்கும் தஜ்ஜாலிய கொள்கை வாதிகள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த யூதத் தோடு இன்றைய ஷீஆ மதத்தை ஒப்புநோக்கும் போது சில உண்மைகள் தோன்றும்.

யூதம்


  • பாரசீக பூமியான இஸ்ரேலை மைய்யப்படுத்தி தங்களது ஆட்சியை மேற்கொள்கின்றனர்.
  • அகண்ட இஸ்ரேல் கொள்கை.
  • மூன்று நேரத் தொழுகை
  • விபச்சாரம், நரபலி மற்றும் இரத்தமோட்டல் என்பன மார்க்கத்தில் அனுமதித்தவை.
  • மஸீஹுத் தஜ்ஜாலை இறுதி தீர்க்கதரிசியாக எதிர்பார்க்கின்றனர்.
    • பல்லாண்டுகாலமாக மறைவாக வாழ்ந்து கொண்டிருப்பவன்
    • வாலிபனாக வெளியாகி யூதர்களைக் கொண்டு முழு உலகையும் ஆட்சிபுரிவார்
    • சில பிரதிகளைக் கொண்டுவந்து அல்குர்ஆன் பொய்யானது. இதுதான் உண்மையான வேதம் என்று கூறி மக்களை அதன் பக்கம் அழைப்பான்
    • மரணித்தவர்களை உயிர்பிப்பார்
  • இன்னும் பல...


ஷீஆ


  • பாரசீக பூமியான ஈரானை மைய்யப்படுத்தி தங்களது ஆட்சியை மேற்கொள்கின்றனர்.
  • அகண்ட பாரசீகக் கொள்கை.
  • மூன்று நேரத் தொழுகை (இவர்கள் ஐங்காலத் தொழுகைகளை மூன்று நேரத்திற்கு சேர்த்து தொழுகிறார்கள்)
  • விபச்சாரம், நரபலி மற்றும் இரத்தமோட்டல் என்பன மார்க்கத்தில் அனுமதித்தவை.
  • இமாம் மஹ்தியை தங்களது இறுதி இமாமாக எதிர்பார்க்கின்றனர்.
    • 1200 வருடங்களாக மறைவாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
    • வாலிபராக வெளியாகி முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கி வழிநடாத்துவார்.
    • உண்மையான அல்குர்ஆனை கொண்டுவந்து அதனை நோக்கி மக்களை அழைப்பார்.
    • மரணித்தவர்களை உயிர்பிப்பார்
  • இன்னும் பல...


இந்த சுருக்கமான ஒப்பீட்டுடன் பின்வரும் ஹதீஸ்களை விளங்க முயற்சிப்போம்.

'தஜ்ஜால் ஈரானிலுள்ள (இன்றைய்ய ஷீயா நாடு) இஸ்பஹானிலிருந்து வெளிவருவான். அவனுடன் 70,000 பாரசீக யூதர்கள் சேர்ந்துகொள்வார்கள். அவர்கள் அனைவரும் ஈரானிய சால்வை (உடை) அணிந்திருப்பார்கள்.' (முஸ்லிம்:7043)

இந்த நபிமொழியுடன் மேலுள்ள ஒப்பீட்டை அவதானிக்கும் போது பலத்த சந்தேகம் ஒன்று தோன்றுகிறது. இப்னு ஸபா என்ற யூதனால் உருவாக்கப்பட்ட கொள்கை யூதம் சார்ந்த கொள்கையாகத்தானே இருக்க வேண்டும். ஷீயாக்கள் தங்களது கடைசி இமாமை எதிர்பார்க்கின்ற போது அதே பண்புகளைக் கொண்ட தஜ்ஜால் அந்த ஊரிலிருந்து வெளிப்படுவான். அப்போது இப்னு ஸபாவிற்கு ஏமாந்தது போன்று கொடிய தஜ்ஜாலை ஈமான் கொள்ளக் கூடும். பின் அந்த ஷீயாக்களை தமது படையினராக எடுத்துக் கொண்டு இஸ்ரவேலை மையமாகக் கொண்டு முழு உலகிற்குமான  தனது ஆட்சியை பிரகடனப்படுத்துவான்.

ஷீஆ கொள்கையை வடிவமைத்த யூதனான இப்னு ஸபா தனது தஜ்ஜாலை ஆதரிக்கும் கூட்டமாக அவர்களது கொள்கையை வகுத்திருப்பது ஆச்சரியமானதல்ல. அதுவும் தஜ்ஜால் வெளிப்படும் அதே பூமியில் நிலைகொள்ளச் செய்திருப்பதும் ஆச்சரியமல்ல. ஆக ஹதீஸில் வரும் ஈரானிய சால்வை (உடை) அணிந்த 70,000 பாரசீக யூதர்கள் இந்த ஷீஆக்களாக இருக்கலாம். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.!

மேலும் நபியவர்கள் சொன்னார்கள், 'கப்ருடைய விசாரனை எவ்வளவு உண்மையோ அதே போன்று தஜ்ஜால் ஒவ்வொருவரிடமும் வருவது நிச்சயமாகும்.' (முஸ்லிம்)

நபியவர்கள் காலம் தொட்டு இன்றுவரை தஜ்ஜாலியத் ஒவ்வொருவரது வீட்டுக் கதவையும் தட்டியிருக்கிறது, தட்டிக்கொண்டிருக்கிறது. அது எந்த வடிவிலாக இருந்தாலும் சரியே. இதனை வரலாறும் சமகால நிகழ்வுகளும் கோடிட்டுக் காட்டுகிறது. ஷீஆ என்ற மதம் இன்று எங்கள் ஒவ்வொருவரது வீட்டுக் கதவையும் தட்டி எமது ஈமானுக்கு சோதனையாக மாறிவருகிறது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், '(தஜ்ஜாலாகிய) அவன் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கிடையே வெளிப்படுவான். வலப்புறமும், இடப்புறமும் குழப்பத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ்வின் அடியார்களே! உறுதியாக இருங்கள்.'
இன்று இந்த பகுதிகளில் ஷீஆக்களினூடாக பெரும் குழப்பம் நிகழ்ந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்த உண்மையே.

மேலும் நபி (ஸல்) அவாகள் கூறினார்கள், 'தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையே 'காபிர்' என்று எழுதப்பட்டிருக்கும். அவனது செயற்பாடுகளை வெறுப்பவர்கள் அதனைப் படிப்பார்கள்.' (திர்மிதி:2337) இன்னோரிடத்தில் முஃமின்களுக்கு மாத்திரமே இது விளங்கும் என்றுள்ளது.

தஜ்ஜாலியத்தை வெறுத்து ஈமானில் உறுதியாக இருப்பவர்களுக்கு மாதிரம்தான் காபிர் என்று முத்திரை குத்தப்பட்ட தஜ்ஜாலியத் தெளிவாக விளங்கும். ஆக ஈமானில் பலவீனப்பட்டவர்கள் உலக ஆசைகளுக்கும், இச்சைகளுக்கும் அடிமைப்பட்டு அதனை ஆதரித்து வாழும் மனிதர்களுக்கு இவனது நிராகரிப்பு விளங்காமல், அவனை உண்மையானவன் என்று நம்பி பின்பற்றுவர். (இன்று ஷீஆக் கொள்கைக்கும் ஈமானில் பலவீனப்பட்டு உலக ஆசைகளுக்கும், இச்சைகளுக்கும் அடிமைப்பட்டு அதனை ஆதரித்து வாழும் மனிதர்களே மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்த உண்மை)




ஷீஆக்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளைக் காட்டும் போடோக்கள்.....
 
 


 

 















யூதர்களுடன் ஒன்றிப்போகும் இவர்களது சில இபாதத்கள்...

 


குறிப்பு: இவர்களுக்கு மத்தியிலுள்ள இரகசியக் காதல் குறித்த ஏராளமான தகவள்கள் கசிந்துள்ளன... இவை குறித்து ஏராளமான ஆக்கங்களும் வெளியாகியுள்ளன...

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அல்லாஹ் எம் அனைவரையும் தஜ்ஜாலின் கொடுதியில் இருந்து காப்பாற்றி ஈமானில் உறுதியாய் இருக்க அருள் புரிய வேண்டும்...




வரகாபொலை முஆத் முனாஸ்
மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகம்

உளத்தூய்மையும் இறைகாதலும்

உளத்தூய்மையும் இறைகாதலும்

தூய்மை, சுத்தம் என்று பேசும் போதெல்லாம் இரண்டுவகையான சுத்தங்கள் குறித்த பேச்சு முன்னுரிமைப்படுத்தப்படுகின்றது. அவை இரண்டில் ஒன்று புறச்சுத்தம், மற்றையது உளச்சுத்தம். இதில் புறச்சுத்தம் குறித்து பேசவேண்டிய அவசியம் இல்லை என்றுசொல்லும் அளவிற்கு புறச்சுத்தம் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் இருந்தாலும் சுத்தம் குறித்துபேசும் போது அதனை விட்டுவிட்டு செல்லமுடியாது என்ற ரீதியில் அதனை சற்று சுருக்கமாக எழுதுகிறேன்.

இன்று ஒரு மனிதன் பிறந்தது முதல் அவனது இரப்பு வரை அவனது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து அம்சங்களுக்குமான புறச்சுத்த ஏற்பாடுகள் வகை வகையாக விளம்பரப்படுத்தப்படுகின்றது. எந்தளவுக்கொனில் முகத்துக்கு, உடம்புக்கு, தலைக்கு.... என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் வௌ;வேறாக... ஒவ்வொரு உருப்புக்கும் வேறாகவும் வாசனைத்திரவியங்கள் என்றும் சவர்க்காரங்கள் என்றும் எத்தனையோ விதமான அழகு சாதனங்கள் இன்று கடைத்தெருக்களை நிரப்பியிருக்கிறது. இதனைத்தான் மேற்கும் அதனது ஊடகங்களும் இனி இல்லை என்ற அளவிற்கு ஆர்வமூட்டி ஆசையூட்டி விளம்பரப்படுத்தி வயிறுவளர்க்கிறது.

ஆனால் உளத்தூய்மை என்ற ஒரு விடயம் இன்று மறக்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு விடயமாக தொடர்ந்து இருந்துவருகின்றது. ஆனால் இஸ்லாம் இது குறித்து அலாதியான கவனத்தை செலுத்துகின்றது என்பதை அதனை ஓரளவு கற்றவர்களாலும் புரிந்துகொள்ள இயலுமாக இருக்கும். ஆக நான் இந்த ஆக்கத்தினூடாக மரக்கடிக்கப்பட்டிருக்கும் இந்த உளத்துய்மையை உங்களது உள்ளங்களில் விதைக்கவிரும்புகிறேன்.. இன்ஷா அல்லாஹ்...

ஒரு மனிதனுடைய வார்த்தையில், செயற்பாட்டில், அவனது வாழ்வில், மரணத்தில், மௌனத்தில், பேச்சில், வணக்கத்தில்... என்று இந்த உலகத்தில் உள்ள அனைத்து செயற்பாடுகளையும் ஒரே ஒரு விடயத்தை நாடிசெயற்படுத்துவது உளத்தூய்மையாகும். அந்த ஒரு விடயம் தான் அல்லாஹூத்தஆலாவின் திருப்பொருத்தமாகும். இதனால்தான் இஹ்லாஸ் எனும் உளத்தூய்மை மிகவும் கடினமான ஒன்றாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் காணப்படுகின்றது.

நாம் எந்த ஒரு விடயத்தையும் ஒருவரைநாடி செய்ய வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட நபர் எம்மிடத்தில் மதிப்பிலும், அந்தஸ்திலும், அன்பிலும் அதி உச்ச இடத்தைப் பெற்றவராக, மேலும் அனைத்திலும் மேலான எமது உற்ற நேசராக மாறவேண்டும். அப்படிமாறும் பட்சத்தில் தான் நாம் ஒவ்வொரு விடயத்தையும் குறித்த அந்த நபரை நாடியே செய்ய முடியும். ஆகவேதான் நான் சொல்கிறேன் ஒருவர் மீது நாம் அலாதியான பிரியம் வைத்தால் தான் அவருக்கு நாம் தூய்மையாக நடக்க முடியும்.

உதாரணமாக| இன்று இளைஞர் யுவதிகளை ஆட்கொண்டிருக்கும் காதல் என்ற கலாச்சாரத்தைப் பாருங்கள். இரு காதலர்களுக்கு மத்தியில் இருக்கின்ற உறவைப் பாருங்கள்... சிரிப்பதும்-சிந்திப்பதும், அழுவதும்-அசிங்கப்படுவதும், உண்ணுவதும்-பருகுவதும், ஆடை அணிவதும்-அலங்காரம் இடுவதும்... என்று தங்களது அனைத்துவிதமான செயற்பாடுகளையும் ஒரு காதலன் தனது காதலிக்காகவே செய்கிறான், அவளது நினைவிலேதான் செய்கிறான், ஒருவிடயத்தை செய்யும் போது அவள் இதனை விரும்புவாளோ? வெறுப்பாளோ? என்று ஏராளமான கேள்விகளுடனேயே செய்கிறான்... இன்னும் ஏராளம்... ஒரு படைப்பை நேசித்ததாலே இத்தனை தூய்மை அந்த உறவில்...!!

இதனையும் மீறி| இந்தக் காதல் எம்மைப் படைத்த இறைவனோடு வருமானால் எமது அனைத்து செயற்பாடுகளும் அவனை நோக்கியே நகரும்... அந்த நகர்வைத்தான் நாம் இஹ்லாஸ்-உளத்தூய்மை என்று சொல்கிறோம். அதனை விடுத்து இந்தக் காதலை நாம் அல்லாஹ்வின் ஒரு அற்பப்படைப்பிற்கு செலுத்துவோமானால் அது அல்லாஹ்விற்கு செய்யும் இணைவைப்பு என்று குர்ஆன் பரைசாற்றுகின்றது...

'அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாகவைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்.'ஆனால் நம்பிக்கைகொண்டவர்கள் அல்லாஹ்வை தீவிரமாககாதல் கொள்வார்கள்.' (2:165)

இந்த வசனம் கூறும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று சூழுரைக்கும் இணைவைத்தல் என்ற பாவம் எதனால் வந்தது? அந்த மனிதர்கள் அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப அல்லாஹ் அல்லாதவர்களை நேசித்ததே... பின்னர் ஈமான் கொண்டவர்களை பற்றிப் பேசும்போது அல்லாஹ் கூறுவது, அவர்கள் அல்லாஹ்வை தீவிரமாக நேசம் கொள்வார்கள்...

ஆக நேசத்தை அல்லாஹ்விற்கு மாத்திரம் செலுத்தும் போது இஹ்லாஸ் எம் உள்ளத்தை அலங்கரிக்கும் என்பது நியதியே...

இறை நேசத்தை அதிகரித்து உளத்தூய்மையை உறுதிப்படுத்த சில வழிமுறைகள்...

1. الذكر - இறைநினைவு

திக்ர் என்பது அல்லாஹ்வின் நினைவிலேயே எமது அத்தனை செயற்பாடுகளையும் மேற்கொள்வதாகும். உதாரணமாக ஒரு மனிதன் கைப்பேசியில் மிக்க ஆர்வம் கொண்டவனாயிருந்தால் சமூகத்தில் அவரது நிலை பின்வருமாறு இருக்கும். எங்குசென்றாலும், யாருடனும், எச்சந்தர்ப்பத்திலும்... அவனது உதடுகள் கைப்பேசி... கைப்பேசி... என்றே உளரிக்கொண்டிருக்கும்... இது தான் நியதி... ஏனெனில் தான் விரும்புவதை அடுத்த மனிதர்கள் விரும்பாவிட்டாலும் விரும்பினாலும் அதனை அலட்டிக் கொள்ளாது அதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பது அவனது நிலை.. இதனால் தான் அல்லாஹ் அவனை நினைவு கூர்வது குறித்து பின்வருமாறு கூறுகின்றான்...

'அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள். (அப்படியென்றால் அவர்கள் எந்தநிலையில், எந்த இடத்தில் எப்படியிருந்தாலும் அவர்களது வேலை அல்லாஹ்வை நினைவுபடுத்துவதாகும். இது தான் திக்ர்) வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, (அப்படியென்றால் ஒரு படைப்பைப் பார்த்தாலும் அதனூடாக அவன் அல்லாஹ்வைத்தான் காண்கிறான்.. உதாரணமாக அல்லாஹ்வின் படைப்பான எதிர்பால் இனத்தைக் காண்கிறான், ஒரு ஆண் இன்னொரு பெண்ணைக் காண்கிறான், அப்போது அவனுக்கு இறைவனின் ஞாபகம் வரும், அவனது தடை உத்தரவு நினைவில் வரும்.. உடனே தன் பார்வையை மறுபக்கமாக திருப்பிக் கொள்வான்) 'எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!' (பின் அல்லாஹ்வைத் துதித்துதான் செய்த பாவத்திற்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்பான்...) (3:191)

ஆக திக்ர் என்பது ஒரு மனிதனுடைய பேச்சிலும், நடத்தையிலும், உடையிலும், நடையிலும், இன்னோரன்ன அனைத்து செயற்பாடுகளிலும் இறைவனை நினைவுகூர்வதாகவே அமையும்... இதனைத் தான் மேற்சொன்ன இறைவசனமும் சுட்டிநிற்கிறது.

2. المراقبة - இறை அவதானம்

நாம் மிகவும் நேசிக்கின்ற, கண்ணியமாக கருதுகின்ற ஒரு உயிருக்கு முன்னால் நாகரிகமான முறையிலும், பாவமற்ற உத்தமப் புருஷராகவுமே நாம் வாழவிரும்புகின்றோம்... ஆனால் நாம் நேசிக்கும் இறைவன் முன்னிலையில் பாவம் செய்வதை அலட்டிக்கொள்ளாமலே வாழ்கிறோம்... காரணம் இன்று நவீன உலகம் கண்டுபிடித்திருக்கும் CCTV, Hidden கெமராக்களுக்கு இருக்கும் பயம்; எல்லாம் வள்ள இறைவனின் பார்வைக்கும் கேள்விக்கும் இல்லை...

காரிருளில் கருங்கல்லில் பயணிக்கும் கட்டெரும்பைப் பார்க்கிறான் அதன் சப்தத்தையும் கேட்கிறான் அவன்.. இன்று இலட்சம் பேருக்கு முன்னால் எனது பாவம் அரங்கேரப்போகிறது என்ற அச்சம் எம் ஆழ்மனதை ஆர்பரிக்கின்றது... ஆனால் நளை மஹ்ஷரில் உலகின் அனைத்துப் படைப்புகளுக்கு முன்னாலும் அல்லாஹ்வின் கமராவில் பதியப்பட்ட பதிவுகள் அம்பலமாகப் போகின்றது என்ற கவளை வருவதில்லை.. இந்தக் கவளையோடும், அச்சத்தோடும் வாழ்வது தான் இறை அவதானம் குறித்துசிந்திக்கத் தூண்டுதலாக அமையும்.

3. تلاوة القرآن– அல்குர்ஆன் ஓதுதல்

இறைவனின் வார்த்தைகளோடு இரண்டர சங்கமித்து அவனோடு உறவாடும் இனியபொழுதுகள் அல்குர்ஆனை பாராயனம் செய்வதில் கிடைக்கிறது.. என் காதலனின் காவியம் என் கல்பை கரைக்கிறது.. ஆனால் இறைவனுடனான காதலில் அவன் வார்த்தைகள் என் கல்பின் கரைகளைக் கூட கரைப்பதில்லை.. இது உண்மையான நேசமா..? என என்னத்தோன்றுகிறது.. அந்தக் குர்ஆனோடுநான் களிக்கும் நேரங்கள் என் வாழ்வில் விரல்விட்டு என்னும் நிமிடங்களாகவே இருக்கின்றது.. உள்ளங்களுக்கு உயிர்கொடுக்கும் ஜீவகாவியமான இந்தக் குர்ஆனுடனான உறவு அந்தக் காவியத்தின் சொந்தக்காரனுடனான உறவை பலப்படுத்தும்..

இறை காதலினூடாக உள்ளத்தை தூய்மைப்படுத்த இவை மாத்திரமல்ல, இன்னும் எத்தனையே வழிமுறைகளை இறைவன் தந்திருக்கின்றான்.. அந்த வழிமுறைகளை வாழ்க்கையில் வாழவைத்து வளம்மிக்க வாழ்க்கைக்கு அத்திவாரமிடுவோம்... இன்ஷா அல்லாஹ்.!!!

اللُّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَ مَنْ يُحِبُّكَ، وَالْعَمَلَ الَّذِيْ يُبَلِّغْنِيْ حُبَّكَ. اَللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِيْ، وَأَهْلِيْ، وَمِنَ الْمَاءِ الْبَارِدِ..

யாஅல்லாஹ்! நான் உனது நேசத்தையும், உன்னை நேசித்தவர்களின் நேசத்தையும், உன்னுடனான நேசத்தை அதிகரிக்கும் அமல்களையும் கேட்கிறேன். யாஅல்லாஹ்! உன்னுடனான நேசத்தை எனக்கு விருப்பமான எனது உயிர், குடும்பம் மற்றும் குளிர்ந்த நீர் ஆகியவற்றை விட மேலானதாக ஆக்கித்தருவாயாக!!! ஆமீன்.. ஆமீன்.. யாரப்பல் ஆலமீன்..




வரகாபொலை முஆத் முனாஸ்
மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகம்

இயக்கம் வழ இஸ்லாமா? இஸ்லாம் வழ இயக்கமா?

இயக்கம் வழ இஸ்லாமா? இஸ்லாம் வழ இயக்கமா?

ஆறாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அறபுத்தீபகட்பத்திற்கு ஒளியூட்டிய இஸ்லாம்ளூ அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் அகிலத்திற்கே ஒளியூட்டிய வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது. அன்று தொடக்கம் இன்று வரை இந்த ஒளி உலகம் முழுவதும் ஒளியூட்டிக் கொண்டிருந்தாலும் இடைக்கிடையே மங்கவும் செய்தது. காரணம் அவ்வப்போது நிலவிய இலக்கு மாறிய பயணங்களே...

முஸ்லிமின் ஒரே இலக்கு சுவனத்தை அடைவதாகவே இருக்க வேண்டும். அதற்காக இந்த குறுகிய வாழ்க்கையை பயன்படுத்த வேண்டும். இந்த சுவனம் என்ற இலக்கு தனிமனித இலக்கு மாத்திரமன்று மாறாக முஸ்லிம் குடும்பங்களின், நிறுவனங்களின், இயக்கங்களின் மற்றும் இந்த சமூகத்தின் ஒவ்வொரு அலகினதும் இலக்காகும்.

தனி மனிதனாக இருந்தாலும், குடும்பமாக இருந்தாலும், நிறுவனங்களாக இருந்தாலும் மற்றும் சமூகமாக இருந்தாலும் அதனது அத்தனை செயற்பாடுகளும் பிரதான இலக்கான சுவனத்தை நோக்கியே நகரவேண்டும். இதனைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அல்குர்ஆன் தனிமனித மற்றும் குடும்பத்தின் இலக்கை இவ்வாறு கூறுகின்றது: 'உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மனிதர்களையும் கற்களையும் விரகுகளாகக் கொண்ட நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள்..' (66:6) அதாவது நரகத்திலிருந்து காப்பாற்றி சுவனத்தை நோக்கி நகர்த்துங்கள்.

அதேபோன்று கல்வியின் இலக்கை சுன்னா இவ்வாறு பரைசாற்றுகிறது: 'யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் செல்கின்றாரோ, அவனுக்கு அல்லாஹ் சுவனத்திற்கான பாதையை இலகுபடுத்திக் கொடுக்கிறான்.' (அல்ஹதீஸ்) இங்கு ஒருவர் கல்விகற்க செல்கிறார் என்றால் அவர் சுவனத்தை நோக்கி இலகுவாக நகர்கின்றார் என்ற கருத்தை தருகிறது.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி குறித்து நபியவர்கள் கூறும்போது: 'பலவீனமான முஃமினை விட பலமான முஃமின் அல்லாஹ்விடம் சிறப்பானவனாகவும் மிகவும் நேசத்திற்குரியவனாகவும் இருக்கிறான்.' (அல்ஹதீஸ்) இங்கு அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவதற்கான ஒரு வழியாக உடற்பலம் இருக்கிறது. ஆக உடற்பலத்தினூடாக அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்று சுவனத்தை அடையவேண்டும் என்றாகிறது.

இப்படி வாழ்வின் அனைத்து செயற்பாடுகளின் இறுதி இலக்கும் சுவனம் என்பதை இஸ்லாத்தை ஓரளவு கற்ற ஒருவராலும் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும். இந்த இலக்கு மறக்கடிக்கப்பட்டு திசைமாறி குறுகிய ஒரு இலக்கு நோக்கி நகரும் பட்சத்தில் அந்த செயற்பாடுகள் அர்த்தமற்றதாகவும் பொருத்தமற்றதாகவும் மாறிவிடுகின்றது..

வரலாற்றில் இவ்வாறான இலக்குமாறிய பயணங்கள் இஸ்லாத்தின் தேக்க காலங்களாக பேசப்படுகிறது. மத்ஹபுடைய இமாம்கள் தோன்றி மறைந்த காலப்பகுதியில் முஸ்லிம் உலகை ஒரு நோய் தொற்றிக்கொண்டது. அதுதான் தக்லீத் சிந்தனையாகும். இஸ்லாத்தை வாழவைப்பதற்குப் பதிலாக மத்ஹப்களை வளர்க்கும் பணி இதனால் மேலோங்கியது. அதாவது இஸ்லாத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு மத்ஹப்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக, மத்ஹப்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய இஸ்லாம் பயன்படுத்தப்பட்டது.

இதனால் இஸ்லாம் முஸ்லிம்களுக்குள்ளே தேங்கி நின்றது. முஸ்லிம்களுக்கு மத்தியிலும் அடிதடிகள், கைகலப்புகள், முரண்பாடுகள் தோன்றி துண்டாடப்பட்டது.. ஏன்?.. இந்த சமூகத்திற்கு தூதர் இறுதிப்பிரசங்கத்தில் கொடுத்த செய்தியை மறந்துபோனார்கள்.. அதுதான் நீங்கள் இந்தக் குர்ஆனையும், எனது வழிமுறையாகிய சுன்னாவையும் உங்கள் கடைவாய்ப்பற்களால் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.. என்ற கட்டளையாகும். இந்தக் கட்டளையை மறந்து (அதாவது இஸ்லாத்தின் மூள ஊற்றுக்களை மறந்து) அதிலிருந்து வந்த மத்ஹபுடைய புத்தகங்களுக்குள் சுருக்கிக்கொண்டுவிட்டுது. இதனால் இஸ்லாம் தேங்கத்தொடங்கி... சுவனத்தை மறந்து வாழும் ஒரு சமூகமாக மாறியது... இந்த உலகத்தில் எமது மத்ஹப்தான் பெரிய மத்ஹப் என்று போற்றப்படும் வரை உழைக்கத் துவங்கினார்கள். இதனால் பொறாமை, வஞ்சகம், பெருமை, முகஸ்தூதி... போன்ற உளநோய்கள் பரவலாகியது.

இதுபோன்றதொரு நிலை இன்றும் சமூகத்தை ஆட்டம்கானச்செய்திருக்கிறது. அதுதான் இயக்க வெறி என்ற ஒருவகை ஜாஹிலிய்ய சிந்தனையாகும். இஸ்லாத்தை வாழவைத்து அதனூடாக சுவனம் நுழைய வேண்டும் என்ற இலட்சியம் மாறி, தான் சார்ந்த இயக்கத்தை வாழவைப்பதற்காக பாடுபடுகின்றவர்களை உருவாக்கியிருக்கிறது. காரணம் இலக்கில் ஏற்பட்ட பிறழ்வுதான். இன்று இஸ்லாத்தை வாழவைக்க இயக்கத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயக்கத்தை வாழவைக்க இஸ்லாத்தை பயன்படுத்துகிறார்கள்.

இஸ்லாமிய நெஞ்சங்களே!! இஸ்லாம்தான் பூரணத்துவமானது, அனைத்துக் காலங்களுக்கும் பொருந்தக்கூடியது... என்று ஏகப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய இயக்கங்களுக்கு இந்த சிறப்பியல்புகளைக் கொடுக்க முடியாது... இஸ்லாத்திற்குரிய இந்த சிறப்பியல்புகளை இயக்கங்களுக்கு கொடுக்கும் போது இயக்க வட்டாரங்களுக்குள் மாத்திரம் இஸ்லாம் சுருக்கப்படும்... அதுவும் பூரண இஸ்லாம் அல்ல அரைகுறை இஸ்லாம்... இந்த நோயின்காரணமாகத்தான் இஸ்லாம் முஸ்லிம்களுக்குள் மாத்திரம் சுருங்கி செயற்படுகின்றது. இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மாத்திரமான ஒரு கொள்கையா? இல்லை, அது முழு மனிதசமூகத்திற்குமான ஒரு கொள்கை மற்றும் வாழ்க்கை நெறி...

இன்று ஒரு சராசரி முஸ்லிமை அனுகி, உனது அன்றாட செயற்பாடுகள் அனைத்தும் இஸ்லாத்தை வாழவைப்பதினூடாக சுவனத்தை இலக்குவைத்ததாக அமைகின்றதா? அல்லது இயக்கத்தை வாழவைப்பதினூடாக சுவனத்தை இலக்குவைத்ததாக அமைகின்றதா? என்று கேட்டுப்பார்த்தால். தான் சார்ந்த இயக்கத்தை வாழவைத்தல் என்ற பதிளைத்தான் காணமுடியுமாக இருக்கும். இதற்கு, இஸ்லாமிய வாதிகளல்ல இயக்க வாதிகள் சொல்லும் நியாயம், 'எமது இயக்கம் வளர்ந்தால் இஸ்லாம் வளரும். அதனால்தான் இயக்கத்தை வாழவைக்கிறோம். நாம் பேசுவதும் இஸ்லாம் தான். என்ன அதற்கொரு பெயர்வைத்திருக்கிரோம் அவ்வளவுதான்.'

இந்த வார்த்தைகள் சொல்லும் செய்தி இதுதான். 'தன்னுடைய இயக்கம் தான் இஸ்லாத்தைப் பேசுகிறது. அதனால் அனைவரும் எங்களுடைய இயக்கத்திற்கு வாருங்கள். இல்லையேல் நீங்கள் இஸ்லாத்தைவிட்டு தூரச் சென்றுவிடுவீர்கள்..!!' ஆக இன்று பெயர் மாற்றப்பட்ட இஸ்லாம்கள் பல இருக்கிறது. எது உண்மையான இஸ்லாம்? என்ற கேள்விக்குட்படுத்தப்படுகிறது மனிதசமூகம். எப்படி இஸ்லாம் வளரும்?!! ஏனெனில் இஸ்லாம் என்பது ஒன்றுதான், அது பலதாக முடியாது.

இன்னும் சிலர் இப்படியொரு நியாயத்தை வைக்கிறார்கள், 'முதலில் எமது சமூகத்தை திருத்தினால், மற்றைய சமூகங்கள் தானாகவே இஸ்லாத்திற்குள் வரும். அல்லது முதலில் நாம் திருந்திவிட்டு மற்றவர்களை திருத்துவோம்.' முஸ்லிம் சமூகம் மாறும்வரை பொருத்திருந்தால் இழவுகாத்த கிளிபோன்று தான் இருக்கும்... ஏனெனில் அது மனித இயல்பிற்கு அப்பால் பட்டது...

இதனால் தான் இன்று இஸ்லாமியப் பணி முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் சுருங்கிநிற்கிறது. ஏனெனில் தன்னுடைய இயக்கத்தை சார்ந்தவர்கள் மாத்திரம்தான் இஸ்லாத்தில் சரியாக இருக்கிறார்கள் (அதாவது சுவனம் செல்வார்கள்) மற்றவர்கள் வழிதவறியிருக்கிறார்கள். எனவே அவர்களை நேர்வழிப்படுத்த வேண்டும். என்ற என்னத்தில் இயக்கவாதிகளது பார்வை முஸ்லிம்களுக்குள் சுருங்கிவிட்டது. இதனால் பிரதான இலக்கான முழுமனிதசமூகத்திற்கும் இஸ்லாத்தை சொல்லி சுவனத்தை பெறவேண்டும் என்ற சிந்தனை மாறி, இயக்கத்தின் திட்டங்களுக்குள் மாத்திரம் சுற்றித்திரிகிறது இஸ்லாமியப் பணி. இல்லை.. இல்லை.. இயக்கப்பணி.

பிரதான இலக்கு பற்றிய வேட்கை குறைந்து குருங்கால இலக்குநோக்கி அழுத்தம் கொடுக்கும் நிலை எம் சமூகத்தைப் பீடித்திருக்கின்றதற்கான காரணம் என்ன என்று அலசிப்பார்த்தால் ஒரு சில உண்மைகளைக் காணமுடியுமாக இருக்கின்றது.

இன்றைய உலகலாவிய பொருளாதாரக் கொள்கையாக இருக்கலாம், கல்விக் கொள்கையாக இருக்கலாம், திட்டமிடல்களாக இருக்கலாம் அத்தனையும் உலகில் இருக்கும் ஒரு சாதாரன அந்தஸ்தை பெருவதை மைய்யப்படுத்தியே அமைந்திருக்கிறது.

உதாரணமாக கல்விக்கொள்கையை எடுத்தால், சாதாரன தரம், அல்லது உயர்தரம், அல்லது பீஏ பட்டதாரி, அல்லது முதுமானி (MA) பட்டதாரி, அல்லது கலாநிதி பட்டதாரி (PhD) என்று ஒரு கோடுபோட்டு குறுகிய வட்டத்திற்குள் சூழலும் ஒரு போக்கையே காண்கின்றோம். இந்த கற்கைகள் மூலம் சுவனம் என்ற இறுதி இலக்கு குறித்த சிந்தனை இல்லாது போய் உலகத்தில் இருக்கும் ஒரு அந்தஸ்தை பற்றியே கனவுகான வைக்கிறது...

இதேபோன்றுதான் இன்று இஸ்லாத்தை மேலேங்கச் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபடும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் நிறுவனங்களும் தமது திட்டமிடல்களை சுவனம் என்ற இலக்கை மறந்து சிறுசிறு உலக இலக்குகளைக் கொண்டு சுருக்கிக்கொண்டு அல்லாஹ்வையும் அவனது சுவனத்து சுகந்திகளையும் மறந்து வாழும் உலக ஆசாபாசங்களுக்கு அடிமைப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு காரணிகளாக மாறியிருக்கிறது. இந்த நிலை அல்குர்ஆன், சுன்னா மற்றும் ஸீராவை விட்டும் தமது பார்வையைத் திருப்பிளூ மேற்கினதும் யூத சியோனிசவாதிகளினதும் திட்டமிடல்களையும், கொள்கை வகுப்பு விதிகளையும் நோக்கி நகர்த்தியிருக்கிறது...

யூத மற்றும் சியோனிச சக்திகளும் அதற்கு தாரைவார்க்கும் மேற்கும் மனிதனின் கலாச்சார மற்றும் பண்பாட்டு சீரமைப்பில் இந்த உலகிற்கு நலவு பயக்கும் விதமாக ஏதாவது ஒரு விடயத்தை செய்திருக்கிறார்களா? அல்லது கொடுத்திருக்கிறார்களா? என்று கேட்டால், தின்னமாக 'இல்லை' என்ற பதிலே வரும்.

உலகத்தின் கலாசாரத்திலும், பண்பாட்டிலும், நல்லினக்க விழுமியங்களிலும் அழிவையும், அசிங்கத்தையும் கொண்டுவரும் இவர்களது திட்டமிடல்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும்ளூ சுவனத்திற்கு அழைத்துச்செல்லும் பணிக்கு பக்கபலமாக இருக்குமா? சாபக்கேடாக இருக்குமா? இவை இஸ்லாமிய இயக்க செயற்பாடுகளுக்குரிய திட்டமிடல்களில் உள்வாங்கப்பட்டால் இஸ்லாம் துண்டாடப்படுவது உறுதி... அதனைத்தான் நாம் இன்று கண்டுகொண்டிருக்கிறோம்.

இவர்களது சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் என்று அவர்களது அனைத்திற்கும் Boycott பன்னுவோம்... இயக்கங்களுக்கு தேவையான திட்டமிடல்களை அல்குர்ஆன் சுன்னா மற்றும் ஸீராவினூடாகப் பெறுவோம். அதே நேரம் இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களை பயன்படுத்தி, சுவனத்திற்கு அழைத்துச்சொல்லும் இஸ்லாமியப் பணிக்காக இணைந்து செயலாற்றுவோம். இயக்கம் வாழ இஸ்லாம் என்ற போக்கை விட்டுவிட்டு, இஸ்லாம் வாழ இயக்கம் என்ற போர்வைக்குள் வருவோம். இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் பணி பூரணப் பட்டு இஸ்லாம் எழுச்சிபெற ஆரம்பிக்கும்...

'நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை பலமாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் பிரிந்துவிடாதீர்கள்' (3:103)

வரகாபொலை முஆத் முனாஸ்
மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகம்

அகிலத்தின் அருட்கொடை பிறந்த மாதம் அவர் சுமந்து வந்த அருள்பண்பு எங்கே...??!

அகிலத்தின் அருட்கொடை பிறந்த மாதம் அவர் சுமந்து வந்த அருள்பண்பு எங்கே...??!


அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றி அல்குர்ஆன் கூறும் போது;

وَمَا أَرْسَلْنَاكَ إلاَّ رَحْمَةً لِلْعَالَمِيْنَ

“(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.” (21:107)

அருட்கொடை – அருள் என்பதன் மூலம் விளங்கும் விடயம் என்னவென்றால்;
  • அவர் இருப்பதை அனைத்து மனிதர்களும் ஓர் அருளாகத்தான் பார்ப்பார்கள்.
  • அவரது இருப்பை நேசிப்பர்.
  • அவரது இல்லாமல் இருக்கும் நிலையை குறையாகப் பார்ப்பர்.
  • அவரைக்கானும் போது முகமலர்ச்சி ஏற்படும். சந்தோசம் ஏற்படும்.
  • இன்னும் வர்ணிக்கமுடியாத ஏராளமான பண்புகள் இருக்கும்….

அருளுக்கு எதிர் பதமான ‘அதாப்’ என்ற பதம் விளக்கும் விடயங்கள்;
  • அவர் இருப்பதை அனைத்து மனிதர்களும் இடைஞ்சலாகப், சஞ்சலமாகப் பார்ப்பர்.
  • அவரது இருப்பை வெறுப்பர்.
  • அவரது இல்லாமல் இருக்கும் நிலையை நிம்மதியாக பார்ப்பர்.
  • அவரைக்கானும் போது வெறுப்பும், கோபமும் பீரிட்டு எழும்..

அல்லாஹ் இந்த வசனத்தில் அவனது தூதரை அகிலத்தின் அருட்கொடை என்று வர்ணிக்கிறான்.

ஆக அல்லாஹ்வின் தூதரின் இருப்பு; மனித சமூகத்திற்கு மாத்திரமல்ல, ஜின், விலங்கு, பறவை, தாவர… என்ற அனைத்து உலகங்களுக்கும் அருளாகும். இதனை தூதரின் வாழ்நாளில் காண்கிறோம். அன்னார் வரைந்த அகிலத்தின் யாப்பு; அகிலங்களின் நிம்மதி, சந்தோசம், அமைதி, பாதுகாப்பு, சுதந்திரம்... என்ற அருள் வாசல்களுக்கு திறப்பு விழா கொடுத்தது.

இந்த அருள்பண்பை அகிலமயப்படுத்திய அண்ணல் பிறந்த மாதத்தில் அன்னாரின் அருள்பண்பை எம் ஆடைகளாக அணிந்து கொள்ள யார் தயார்....?!

நாம் இந்த புவிப்பந்தில் நடமாடுவது, இப்பூவுலகுக்கு அருளாக மாறுவது எப்போது..??!! குறைந்த பட்சம்; நமது வீட்டுக்கு, பாடசாலைக்கு, ஊருக்கு, சமூகத்திற்காவது அருளாக இருந்துவிட்டுப் போகக்கூடாதா..??!!

அருள் உதித்தமாதமாம் முதல்வசந்தம் (ரபீஉனில் அவ்வல்) அவர் புகழ்பாடியே மறைந்து விட்டது. ஆனால் அவர் சுமந்து வந்த அருள்பண்பாவது எமது உள்ளங்களில் குடிகொண்டுள்ளதா..??!!

ஆள்மனதில் கைவைத்துக் கேட்டுப்பார்ப்போம்...
உண்மையில் நான் இந்த உலகில் நடமாடுவது அருளா? அல்லது அதாபா?

இன்றுடன் நாம் ஒரு முடிவுக்கு வருவோம்.. “நான் குறைந்த பட்சம் என் வீட்டுக்கு அருளாக இருப்பேன். இன்ஷா அல்லாஹ்!!”



வரகாபொலை முஆத் முனாஸ்

மனிதர்களுக்கு இல்லாத கண்ணியம் காகிதங்களுக்கு...!!!!!!

மனிதர்களுக்கு இல்லாத கண்ணியம் காகிதங்களுக்கு..!!!

என்னாவொரு உலகம்..??!!

ஆறாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் அரபுலகம் இருந்த நிலையை சற்று மீட்டிப்பாருங்கள். எஜமான் அடிமைக் கலாச்சாரம் கொடிகெட்டிப் பறந்தது. பாவகாரியங்கள் சர்வசாதாரணமாகியது. இப்படி எத்தனையோ...

இதில் எஜமான் அடிமைக் கலாச்சாரத்தைப் பொருத்தவரையில். அக்காலத்தில் இருந்த சமூகப் பிரமுகர்கள்தான் உயர்ந்த இஸ்தானத்தில் வைத்து நோக்கப்பட்டார்கள். அவர்கள் வரும்போது மற்றவர்கள் எழுந்து நிற்கவேண்டும். அவர்கள் கலந்துகொள்ளும் இடங்களுக்கு மற்றவர்கள் வரக்கூடாது. அவர்களுக்குத்தான் சபையில் முதலிடம். அவர்கள் வருகையின் பின்தான் கூட்டங்கள், நிகழ்வுகள் ஆரம்பமாகும். அவர்களுக்கு பணிவிடை செய்வதிலேயே மற்றவர்கள் காலம் கடத்த வேண்டும். இப்படி ஏராளம்!! ஏராளம்!!

இந்த சமூகத்தைத் தாழைகீழ் மாற்றம் செய்ய சத்தியத் தூதான அல்குர்ஆனோடும் சுன்னாவோடும் களம் வந்த தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்ளூ வெறும் 25 வருடங்களுக்குள் அதனை நிறைவேற்றிக் காட்டினார்கள். இந்த எஜமான் அடிமைக் கலாச்சாரத்தை துண்டுதுண்டாக உடைப்பதாகவே இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களானளூ ஷஹாதத் கலிமா, தொழுகை, ஸகாத், நோன்பு மற்றும் ஹஜ் என்பன இருந்துவருகிறது.

இஸ்லாம்; என்றும் எப்போதும் எந்த நிலையிலும் விட்டு விடுவதற்கு அனுமதிக்காத ஐங்காலத் தொழுகையில் இத்தகைய எஜமானிய சிந்தனையை தகர்த்தெரிகிறது.

ஸப்பில் யாருக்கும் இடம்பிடித்துவைக்க முடியாது. யார் யார் வருகின்றார்களோ அவர்கள் முன்னே வந்து நிற்கவேண்டும். நேரம் வந்ததும் தொழுகை நடாத்த வேண்டும். பிரமுகர்கள் வரும்வரை காத்திருப்பதில்லை. ஸப்புகளிளே காலோடு கால் சேர்த்து, தோலோடு தோல் சேர்த்து நெருக்கமாக நிற்க வேண்டும். யார் முன்சென்று தொழுகை நடாத்தினாலும் தொழ வேண்டும். தொழுகையின் இருதியில் இரண்டு பக்கமும் ஸலாம் சொல்லிக்கொள்ள வேண்டும். இதேபோன்றுதான் ஹஜ்ஜும்.

தொழுகையில் இறைவன் கற்றுத்தரும் இந்த மனிதத்துவத்தை தொழுகையை விட்டு வெளியேறியதும் எமது வாழ்க்கையில் காணமுடியாதுள்ளது. எமது இயக்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள்... ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் இந்த மனிதத்துவம் பேணப்படுவதில்லை. பணத்தால், பட்டம் பதவிகளால், குடும்ப கௌரவங்களால் சமூகத்தில் முன்னிலையில் இருக்கும் மனிதர்களுக்குளூ ஏஐP வீஐபீ (பிரமுகர்) வரிசை என்று முன்வரிசைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அவர்கள் வரும் வரை நிகழ்வு ஆரம்பிக்கப்படாது. இத்தகையவர்களுக்குத்தான் கருத்துச்செல்லவும் கதைக்கவும் உரிமையிருக்கும். மற்றவர்கள் கதைத்தாலும் அது தட்டிக்களிக்கப்படும். இப்படி ஏராளம்!! ஏராளம்!! நாபியவர்கள் அல்குர்ஆன், சுன்னா மற்றும் இஸ்லாத்தின் கடமைகள் மூலம் தகர்த்தெரிந்த இந்த எஜமானிய்யத் எனும் ஜாஹிலிய்ய சிந்தனை எங்கிருந்து பெறப்பட்டதோ தெரியாது..?!! நஊது பில்லாஹி மின்ஹா!! அல்லாஹ்தான் எம்மைக் காப்பாற்ற வேண்டும்.!!

இதே போன்று தான் ஹஜ் கடமையில் முழுக்க முழுக்க இந்த மனிதத்துவத்தை படித்துவிட்டு ஊர் வருகின்ற அனேகர் ஹாஜியார் என்ற ஒரு அந்தஸ்தையும் பெயருக்கு முன்னால் பொரித்துக்கொண்டு. கௌரவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள். இது எங்கிருந்து பெறப்பட்ட நடைமுறையோ..?!! பணம் மற்றும் சான்றிதழ்கள் என்ற வெரும் காகிதங்களுக்காக கண்ணியத்தை எதிர்பார்க்கும், கொடுக்கும் சமூகமாக மாறியிருக்கிறது. அல்லாஹ் இந்த காகிதங்களிலா கண்ணியத்தை வைத்திருக்கிறான்..?!!

இல்லை, இயல்பிலேயே அல்லாஹ் மனிதனை கண்ணியப்படுத்தியிருக்கிறான். மனிதன் என்றால் அவனை கண்ணியப்படுத்த வேண்டும். இதுதான் இஸ்லாத்தின் போதனை. மனிதனை மதிக்காத மார்க்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அல்குர்ஆன் சொல்கிறது: 'நாம் ஆதமுடைய மக்களை கண்ணியப்படுத்தினோம்.' (17:70) அல்லாஹ்வே தனது வேதத்தின் மூலம் இவ்வாறு கண்ணியப்படுத்திய பின் எவ்வாறு சிலர் சிலரைத் தாழ்வாகக் கருத முடியும்?! ஒருவனுக்கு உயர்வு கிடைக்குமானால் அது இஸ்லாத்தால் மாத்திரமே கிடைக்கும். ஆக ஒருவன் ஷஹாதத் கலிமாவை மொழிந்து அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட ஒரு முஸ்லிமாகின்ற பட்சத்தில் அவன் கண்ணியம் பெருகின்றான். ஒருவன் இஸ்லாத்தில் நுழைந்த பின்னரும் அவனிடம் இருக்கும் தக்வா எனும் இறையச்சத்தை வைத்து அவனது கண்ணியம் கூடும் குறையும். ஆனால் தக்வா எனும் இறையச்சத்தை அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே.

ஒருவன் அறிவாலோ... அந்தஸ்தாலோ... பதவியாலோ... பட்டங்களாலோ... செல்வத்தாலோ... சிறந்த சந்ததிகளாளோ... நிறத்தாலோ... மொழியாலோ... இப்படியான எந்த ஒன்றாலும் கண்ணியத்தை அடைந்துகொள்ள முடியாது. இந்த வேறுபாடுகள் கலந்து வாழ்கின்றபோது பரஸ்பர அறிமுகத்திற்கே. இந்த விடயங்களை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்;
'மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். பின்னர், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டுளூ உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.' (49:13)

மேலும் நபியவர்களுக்கும் இந்த பிரமுகர் சிந்தனை வந்து கண்தெரியாத உம்மிமக்தூம் என்ற நபித்தோழரை புறக்கனித்ததற்கு ஸுறா அபஸயினூடாக கண்டனம் தெரிவித்து அல்லாஹ் திருத்திய நிகழ்வையும் எம்மவர்கள் ஞாபகமூட்டிக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகம் மனிதத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட ஒரு கட்டிடத்தைப்போல் இருக்கவேண்டும். ஒரே உடலின் அங்கங்கள்போல் இருக்க வேண்டும். இதன் மூலம்தான் எமது உள்ளார்ந்த இணைப்பு ஆரோக்கியமுள்ளதாகவம் பலமுள்ளதாகவும் மாறும். ஈமானியப் பிணைப்பு வளரும்.

மேலும் பணம், பட்டம், பதவி மற்றும் அந்தஸ்த்து என்ற காகிதங்களைக் கொண்டு கண்ணியத்தை கொடுக்கும் மேற்கெத்தேய ஜாஹிலிய்ய சிந்தனையிலிருந்து விடுபட்டு, இஸ்லாத்தின் சிந்தனையின் பக்கம் எமது தலைகளைத் திருப்பி, அல்குர்ஆன், சுன்னா மற்றும் ஸீராவின் ஒளியில் மனிதனை மனிதனாக மதித்து... இஸ்லாத்தின் ஒளியில் வாழும் சகோதரத்துவ சமூகமாக மாறி. வெற்றியை நோக்கி நடைபோடுவோம் இன்ஷா அல்லாஹ்!!

'நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவனம் நுழைய மாட்டீர்கள்! நீங்கள் பரஸ்பரம் அன்பு பாராட்டாதவரை ஈமான் கொள்ளமாட்டீர்கள்!' (முஸ்லிம்)


வரகாபொலை முஆத் முனாஸ்

Friday, November 7, 2014

பரம்பரை முஸ்லிம்களும் புர்காவும்.. காட்டிகொடுப்புக்களும்

ஹஸன் பின் ஹரீஸ்: முஸ்லிம்களும் புர்காவும் என்ற தலைப்பில் எனது புதிய தொகுப்பை மேற்கொள்ள நினைத்தேன், காரணம் 12-03-2013 ஆம் அன்று Neth F.M, Belumgala  எனும் நிகழ்ச்சியில், எமது புர்காவை அணியும் சகோதரிகளை அடிப்படைவாத முஸ்லிம்கள் எனவும், சம்பிரதாய முஸ்லிம்கள் இப்படி அணியவில்லை எனவும் கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இவர்களுக்கு உதவியாக இருந்தவர் ஒரு முஸ்லிம் என்று சொல்லுவது  கவலையாக உள்ளது, தன்னை ” லங்கா ஜம்மியத்துல் உலமா ” எனும் அமைப்பின் ஊடக பேச்சாளர் என்று அறிமுகப்படுத்தி, இவர்களின் இந்த நாடகத்தை சிறப்பாக அரங்கேற்ற உறுதுணையாக இருந்தார்.
“ எவ்வளவு அடித்தாலும் முஸ்லிம்கள் தாங்கி கொள்கிறார்கள், அவர்கள் ரொம்ப நல்லவர்கள் ” என்று இவர்கள் நினத்தால்போன்று ஹலால் பிரச்சினையை முடிவுக்குள் கொண்டுவரமுன் இன்னொரு தாக்குதலை நாட்டில் உருவாக்குவதற்கு இவர்கள் முயற்சிகிறார்கள் என்பது தெளிவான உண்மை,
அன்று கண்டி நகரில் வங்கி கொள்ளையில் முகமுடி ஒருவர் விளையாட்டு துப்பாகியுடன் பிடிபட்டார், இது ஒரு முஸ்லிம்களை இலக்கு வைத்து செய்த சதி என அனைவராலும் சந்தேகிக்கப்பட்டது.
அதே போல் சில நாட்களில் இந்த நாடகம் அரங்கேறியது.
இதற்க்கு முன் ” ஹலாலும் முஸ்லிம்களும் ” என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை  NethF.M Belumgala உண்மையான பார்வையில் செய்தார்கள், இதற்க்கு பெருன்பான்மை இனத்தின் மத்தியில் பெரும் பிரசின்னை ஏற்பட்டது,
உண்மையில் இது Neth F.M ற்கு பெரும் அவமானமாக இருந்தது. இதை மக்கள் மத்தியில் இருந்து அழித்து, தனது நற்பெயரை பெருன்பான்மை மக்களிடையே மீண்டும் தக்கவைத்து கொள்ள இவர்கள் தெரிந்து  எடுத்த தலைப்பு  ”புர்கா”.
இதற்க்கு துனை சென்ற எமது  Iliyas cader (” லங்கா ஜம்மியத்துல் உலமா ” எனும் அமைப்பின் ஊடக பேச்சாளர்)  நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது. … ……………………………., சமுதாயத்தை காட்டி கொடுப்பதும் ஒன்று தான் என இவருக்கு தெரியாதோ என்னமோ.
இவர் கூறினார், மத்திய கிழக்கில் இருந்து வரும் பணம் , முஸ்லிம் பெண்களை இந்த ஆடை அணிய வைத்துள்ளது என்று, ஆனால் இவரின் கருத்தை கேட்ட அனைவருக்கும் தெரியும் யார் அந்நிய சக்திகளுக்கு விலை போகியுள்ளார் என்று.
தனக்கு இஸ்லாமியர்களின் பாரம்பரியம் பற்றிய அறிவு இல்லையென்றால் அதுபற்றி தான் கதைக்ககூடாது.
இவரின் கூற்று படி, முஸ்லிம்கள் இருவகையாம்
1. பாரம்பரிய முஸ்லிம்கள்
2. அடிப்படைவாத முஸ்லிம்கள்
உண்மையில் முஸ்லிம் அன்றும் ஒரு வகைதான், இன்றும் ஒருவகைதான், என்றுமொருவகைதான்.
முன்னையகாலத்தில் மார்க்க அறிஞர்கள் குறைவாக இருந்தார்கள், அம்மக்கள் ஒரு குறிப்பிட்ட அமல்களை செய்துகொண்டு இருந்தார்கள். ஆனால் இன்று மார்க்க அறிஞர்களும், முப்திமார்களும் அதிகமாக உள்ளனர், மக்களுக்கு மார்க்கத்தின் தெளிவு அவசரமாக சென்று கிட்டுகிறது,
இதற்க்கு பெரும் பங்கு வகிப்பது  தொலைதொடர்ப்பு சாதனங்கள், இணையதளமும்.
அதனால் மக்கள் இன்று அதிகமாக தாடி வைப்பவர்களாகவும், அதிகமான பெண்கள் பூரண ஹிஜாபை அணிபவர்கலாகவும் உள்ளனர். இதனால் இவர்களை   அடிப்படைவாத முஸ்லிம்கள்  என கூறுவது எந்த வகையில் பொருந்தும்?
எனது இந்த தொகுப்பின் முக்கியமான தலைப்புக்கு வருகின்றேன்.
அதாவது முன்னையகாலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் புர்காவை அணிதுள்ளர்கள் என்பதற்கான சான்றை முன்வைக்கிறேன். அதாவது 1ஆவது சிலுவை யுத்தம், 5 நாடுகள் ஒன்று சேர்ந்து இஸ்லாத்திற்கு எதிராக செய்த போராட்டம், 3 வருடங்கள் நடைபெற்றது ,முடிவில் இவர்கள் palestine ஐ கைபற்றினார்கள் .
Palestine ன் எல்லை புற நகரமான Jerusalam ல் இவர்களின் முதலாவது ஆலயத்தை கட்டினார்கள்.
இவர்கள் Jerusalamன் கோட்டைகளை புனர்நிர்மாணம் செய்யும் போது அங்கு ஓர் சுரங்க பாதையை கண்டார்கள், இந்த சுரங்கத்தில் இவர்களுக்கு ஓர் அதிர்ச்சியான உண்மை தென்பட்டது, அதாவது அங்கு வாழ்ந்த யூதர்கள், யூத மதம் அற்ற ஓர் ரகசிய மதத்தை பின்பற்றியுள்ளார்கள் என்று,
இதற்க்கு சான்றாக அங்கு வரையப்பட எஹிப்தின் கடவுள்களின் உருவங்கள் கண்டறியப்பட்டது,
குறிப்பாக “வாஸ்ரிக் “, “ஐரிஸ் “, மற்றும் “ஹோரேஷ் ” போன்ற பெரும் கடவுள்களின் உருவங்கள் இருந்தது. இவர்கள் இவற்றை ஆராய்ச்சி செய்தார்கள், இவர்கள் இதற்க்கு வழங்கிய பெயர் “KABAALA “ஆகும்.
இது தொடர்பாக பல புத்தகங்களை வெளியிட்டார்கள், “Kabaala”, “The name of Kabaala”, “Numbers of Kabaala”, “Secret of Kaballa”, “Religon Of Kabaala” nd “What is Kaballa”.இவர்கள் ஒருவகையான பயங்கரவாத யூதர்கள், இவர்கள் அந்த  “வாஸ்ரிக் “, “ஐரிஸ் “, மற்றும் “ஹோரேஷ் ” கடவுள்களை வணங்க கூடியவர்கள்.
இவர்கள் நம்பினார்கள் இந்த கடவுள்களிடம் மூன்று ரகசியமான சகித்கள் உள்ளன,
1.Rulling Power/ ஆட்சி
2. Magic power/ Black magic power/  சூனியம்
3. Sexism /  காமத்தை தூண்டக்கூடிய Sexism
அந்த மொத்த சக்திகளையும் ஒன்றுசேர்த்து உலகில் Kabbalaaகளின் ஆட்சி அமைய வேண்டும் என்று  இவர்களின் நோக்கம். இவர்கள் அங்கு இருந்து தப்பி சென்று உலகின் பல நாடுகளில் தமது திட்டங்களை நடத்தி வந்தார்கள்.
இவ்வாறு காலம் கடக்க..
648ம் ஆண்டு “Sabbatai Zevi “  எனும் யூதன்  TURKEY இல் இருந்து தலைதூக்குகின்றான்,
அவன் கூறுகின்றான் தான் இந்த rulling power ஐ எடுத்து தருவதாக, இவன் “Dönmeh”  எனும் வம்சத்தை சார்ந்தவன்.இவன் தன்னை நபியாக சொன்னான் யூதர்கள் இவனை ஆதரித்தார்கள், அவர்கள் இவனை Palestine கொண்டு போய் கிரிடத்தை அணிவித்து சிம்மாசனத்தில் அமரவைதார்கள்.
இவரின் இந்த செயலை அறிந்த 4ம் மஹ்மூத் எனும் துர்க்கியை ஆண்ட அரசன், அவர் ,இவரை கைதுசெய்து,  துர்க்கியிற்க்கு கொண்டு அழைத்து வந்தார், பின்பு இவர் இஸ்லாத்தை தழுவியதாக வரலாறு பதிவாகி உள்ளது. இத்துடன் இவர்பற்றிய தகவல் முடிவுறுகிறது.
இப்படி யூதர்கள் இஸ்லாத்திற்கு எதிராக பல சதிகளை செய்கிறார்கள், இருத்தும் அவர்களுக்கு ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. காலம் கடக்க, ஆங்கிலயர்கள் முயற்ச்சி செய்கிறார்கள், இதற்க்கு இவர்களுக்கு உதவிய ஆங்கிலயர், “ Mr. Hempher  (The British Spy)”.
இவரின்  “ The SECRET DIARY OF Mr. HEMPER’S “ எனும் புத்தகத்தில் பதிவாகியுள்ள வாக்கியங்களை பார்க்கும் போது அன்றைய கால முஸ்லிம் பெண்கள் புர்காவை அணிந்து உள்ளர்கள் என தெளிவாக பதிவாகி உள்ளது.
1740ல்  வந்த இந்த “ The SECRET DIARY OF Mr. HEMPER’S “ ல் 50ம் பக்கத்தில் இவ்வாறு பதிவாகி உள்ளது.
அதாவது , ” முஸ்லிம் பெண்கள் தங்கள் முகங்களை மூடுகின்றார்கள். இதை தவறான முறையில் வழி நடத்தினால், முஸ்லிம்களை வீழ்த்துவதற்க்கு எங்களால் முடியும்.இதை நாம் ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்.”…….
மேலும் அதே புத்தகத்தில் 55ம் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளான்.
” நாங்கள் இஸ்லாமியர்களை வீழ்த்த வேண்டும் என்றால், முதலில் இஸ்லாம் முஸ்லிம் பெண்களை துஷ்பிரயோகம் செய்கிறது என்று எனும் செய்தியை அவர்களுக்கு மத்தியில் பரப்பவேண்டும், இதற்க்கு சார்பாக குரான் வசனங்களையும், ஹதீஸ்களையும் பாவிக்கவேண்டும், நாம் இப்படிசெய்தால் முஸ்லிம் பெண்கள் நிச்சியமாக வெளியே வந்து விடுவார்கள்”.
மேலும் அவன் குறிப்பிடும் போது, ”நாங்கள் முஸ்லிம்களை வீழ்த்துவது என்றால், எங்கள் அழகான பெண்களை அக்காலத்தில் உள்ள சிறந்த பல்கலைகலகங்களுக்கு  அனுப்ப வேண்டும், அவர்கள் அங்கு சென்று படித்து எமது  missionaries வேலைகளையும் செய்ய வேண்டும் .அவர்கள் மக்களிடம் சொல்லவேண்டும்  எமக்கு புர்கா தேவையில்லை என்று, இவர்கள் இப்படி செல்லும் போது எமது இன்னோர் கூட்டம், அரைநிர்வாணமாக முஸ்லிம்களுக்கு மத்தியில் வந்து போகவேண்டும்,
நாம் அப்படி செய்தால், முஸ்லிம் வாலிபர்களின்  பார்வைகளை இவர்கள் மீது ஏற்படும், இது இப்படி இருக்க, முஸ்லிம் பெண்கள் யோசிப்பார்கள், எங்கள் ஆண்கள் எங்களை பார்க்கமாட்டார்கள், எனவே நாங்களும் இப்படி எமது ஆடைகளை மாற்றவேண்டும், இவர்கள் கவர்ச்சியை நோக்கிசெல்ல, இவர்களின் ஆடைகள், கொஞ்சம் கொஞ்சமாக  களைக்க ஆரம்பிப்பார்கள்” என 1740ம் ஆண்டு இவர்கள் திட்டம் திட்டினார்கள்.
இவரின் இந்த வாக்கியங்களை படிக்கும் போது, 1740ம் ஆண்டு உஸ்மானியா சாம்ராஜியத்தை வீழ்த்துவதற்கு இவர்களுக்கு Nuclear weapons or Missiles இருக்கவில்லை, அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் பெண்கள்…. பெண்களின் புர்காவை கழற்றுவதன் மூலம் 1000 வருடம் இருந்த  உஸ்மானியா சாம்ராஜியத்தை வீழ்த்தினார்கள்.
இவர்கள் தங்கள் missionaries களை  Turkey மற்றும் Iran போன்ற நாடுகளுக்கு அனுப்பி, அவர்களின் வேலைகளை வெற்றிகரமாக செய்து கொண்டுஇருந்தார்கள்.
இவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற முதல் படியாக தேர்ந்து எடுத்த நபர் ஒரு யூதன் அல்ல, ஒரு முஸ்லிம்…அவன் பெயர் “ Mustafa Kemal Atatürk” இவரின் வம்சம் Dönmeh”  , அதாவது 1626ம் ஆண்டு தன்னை நபியாக அறிமுகபடுத்திய அந்த “Sabbatai Zevi “  அவரின் பரம்பரையை சேர்ந்தவன்.இவன் படித்த பாடசாலை ஒரு யூத பாடசாலை, இதற்க்கு ஆதாரமாக நான் International Konwledge Box “wikipedia” ஐ முன்வைக்குகிறேன்.
பின்பு இவன் யுத்த சட்டங்களை படித்தான், பின் ஒரு சங்கத்தை உருவாக்கினான், அதற்க்கு “துர்கி முன்னேற்ற கழகம்”, என பெயர் வைத்தான். இதற்க்கு இடையில் 1ஆவது உலகமகாயுத்தம் நடைபெற்றது, அதில் இவர் பங்குபெற்றார், இந்த யுத்தத்தில் உஸ்மானியா சாம்ராஜியம் வீழ்த்தபட்டது.
பின்பு துர்கி இன் முதல் ஜனாதிபதியாக  “ Mustafa Kemal Atatürk” தேர்ந்து எடுக்கபட்டார். ஆட்சிக்கு வந்த அவன் மூன்று வேலைகளை முதன்மையாக செய்தான்.
1. அந்நேரம் இல்  இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலில் இருந்தது, அதை மாற்றி “ SWISS CIVIL LAW” கொண்டு வந்தான்.
2. பெண்கள் படிக்க வேண்டும் என்றால் முகத்தை மூடிக்கொண்டு படிக்க முடியாது,ஆண்கள் வேறு பெண்கள் வேறு படிக்க முடியாது, எல்லோரும் ஒன்றாக சேர்ந்துபடிக்கவேண்டும்.
மேலும் பெண்கள் வேயில் காலங்களில் முகத்தை மூடிக்கொண்டு செல்கிறார்கள் இதுபெண் துஷ்பிரயோகம் என்றும் சொன்னான்.
3. அரபு மொழி எழுத்து மொழியாக இருந்த Turkeyஇல் ஆங்கிலத்தை எழுத்து மொழியாகமாற்றினான்.
இவை அனைத்தையும் விட இவன் செய்த மிகவும் கொடூரமான வேலை என்னவென்றால், “ முன்முதலாக ஒரு பெண்ணின் முகத்தை திறந்து, அதற்க்கு ஒரு வைபவத்தை நடத்தினான்”.. நஹுதுபில்லாஹ்.
1920ம் ஆண்டுகளில் வந்த Turkeyயின் Video clips பார்க்கும் போது அதில் 12 பெண்களில் 10 பெண்கள் முகத்தை முடியவர்களாகவே உள்ளனர்.இவை அனைத்தையும், முன்னைய/ பரம்பரையான முஸ்லிம்கள் முகத்தை மூடவில்லை என்றும் சொல்லிக்கொண்டு இருக்கும் அந்த கூட்டதினருக்கு ஆதாரமாக முன்வைக்குகிறேன்.
முகத்தை மூடுவது ” ஜாகிளியத்” என்றால் முகத்தை திறப்பது “நாசராநியத் ” என்பதை மறந்திட வேண்டாம் .. கசப்பான உண்மை என்னவென்றால், முகத்தை முடிக்கொண்டு செல்லும் அந்த பெண்களுக்கு இல்லாத வருத்தமும், கஷ்டமும் எமது பார்த்து கொண்டு இருக்கும் ஆண்களுக்கு உள்ளது, நோய் யாரிடம் உள்ளது என்பது தெளிவாக புரிகிறது..
எமது நாட்டில் இன்றுவரைக்கும் ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை புர்கா அணிந்த பெண்களினால், யார் புர்காவை அணிகிறார்களோ அவர்கள் அனைவரும் தமது சொந்த விருபத்துடனே அணிகிறார்கள்.
இது இப்படி உலகில் நடக்க, நமது இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம் தாய்மார்களும் இந்த ஆடையை அணிந்தார்கள் என்பதிற்க்கு வரலாறு சான்று பகிர்கிறது. முன்னைய காலங்களில்  எமது தாய்மார்கள் வாகனங்களில் ஏதாவது பயணம் மேற்கொள்ளும் போது பிடவைகளால்  வாகனங்களை மறைத்து கொண்டு சென்றார்கள், மேலும் வீடுகளில் திரை சீலை (curtain) பாவித்து தங்களை உலகிடம் இருந்து மறைத்து வாழ்ந்து  வந்தார்கள் .
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை பார்க்கும் போது, அரேபியாவில் இருந்து பெண்கள் வரவில்லை, ஆண்கள் வந்து இங்குள்ள பெண்களை மணமுடித்தார்கள், இதனால் இவர்களிடம் பூரன ஹிஜாப் வர காலம் சென்றது. மற்றும் அன்றைய நிகழ்ச்சியில் எமது சகோதரரர் சொன்னார், நிக்காப் அணிய கூடிய Saudi Arabiaல்  Rape cases கூட நடப்பதாக,
உண்மையில் நடக்கலாம் ஆனால், ஆதாரத்துடன் சொல்கிறேன், உலகில் மற்றைய அணைத்து நாடுகளிடமும் ஒப்பிடும் போது அது மிகவும் மிக குறைவாகவே உள்ளது. இஸ்லாம் ஹிஜாப் ஊடாக பெண்களை பாதுகாத்து மதிதுள்ளது என்பதே தெளிவான உண்மை…..
.St.Marry, St.Fathima போன்ற ஆலயங்களில் உள்ள சிலைகளை பார்க்கும் போது முன்னிய கால பெண்கள் “Jilbab” போன்ற ஓர் ஆடையை அணிதுள்ளர்கள் என தெளிவாக புரிகிறது…
“வாரலாற்ற்க்கு ஆதாரம் செதுக்கலும், சில்லைகளும்..
எமது இந்த காலத்திலும் “ Mustafa Kemal Atatürk” கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள், இவர்களிடம் இருந்து எமது சமுதாயத்தை பாதுகாப்பது எம் அனைவரினதும் தலையாய் கடமை என்பதை மறந்திட வேண்டாம்…
அன்றும், இன்றும் ..“மாற்று மதத்தவர்கள் திட்டம் தீட்ட, நமது முஸ்லிம்கள் அவற்றிக்குஅடிபணிகிறார்கள் என்பது கவலையான செயல்..” வல்ல அல்லாஹ் நம் அனைவைரையும் சமுதாயதிற்கு பிரயோசனம் உள்ளவர்களாக ஆக்கிவைபானாக!.
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
குறிப்பு :
இஸ்லாமிய ஷரியாவின் படி முக்கியத்தை மூடுவது கட்டாயமானது அல்ல ஆனால் ஒரு முஸ்லிம் பெண் தனது   முக்கியத்தை மூடும் உரிமையை கொண்டுள்ளாள் . ஆனால் சமகால  முக்கிய இமாம்கள் சில  முக்கியத்தை மூடுவதை இஸ்லாமிய சட்டமாக அல்லாமல் அது ஒரு அரேபிய  வழக்கமாக் கருதுகிறார்கள் .

Friday, August 22, 2014

ஒரு சமூகநிறுவனத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்



ஒரு சமூகநிறுவனத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

ஒரு குறிப்பிட்ட சமூக நிறுவனத்தின் (eg: சமூகம், இயக்கங்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள்....) ஆயுட்காலத்தில் பிரதானமான மூன்று பருவங்களை சந்திக்கின்றது. அவை,
i.              வளர்ச்சிப் பருவம்
ii.             வாடிவதங்குப் பருவம்
iii.            அழுகிதுர்வாடைவீசும் பருவம்
இதில் ஒவ்வொரு பருவமும் தனித்தனிபண்புகளைக் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது. அதனை இன்ஷா அல்லாஹ் சற்று சுருக்கமாக தெளிவுபடுத்துவதே இந்தகட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

i.          வளர்ச்சிப் பருவம்
இப்பருவம் தான் ஒரு சமூகநிறுவனத்தின் மிகவும் ஆரேக்கியமான பருவமாகும். இப்பருவத்தில் அந்நிறுவனமானது அதனது கொள்கைகளையும், மேன்மை-யையும் பற்றிப் பேசுகின்ற இன்னும் அதனைக் கட்டிக்காப்பதற்காக தமக்குச் சொந்தமான அனைத்தையும் தியாகம் செய்கின்ற ஊழியர்களைக் கொண்டிருக்கும்.

மேலும் அந்நிறுவனமானது இத்தகைய கொள்கைப்பிடிப்புள்ள தமது ஊழியர்களை மிகவும் பெருமதிவாய்ந்த சொத்தாகக் கருதி அவர்களை கௌரவப்படுத்தி பாதுகாத்து தன்னோடே வைத்திருக்கும். மேலும் அத்தகைய ஊழியர்களின் கருத்துக்களையும், அனுபவங்களையும் அந்நிறுவனமானது சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும் மேலும் எதிர்பார்க்கும். எந்தளவிற்கெனில், இந்த கொள்கைபிடிப்புள்ள ஊழியர்கள் சமூகமட்டத்தில் அறிவு-அந்தஸ்து, பட்டம்-பதவி என்பவற்றில் மிகவும் தாழ்ந்தவர்களாக இருப்பினும் சரியே.

இதற்கு உதாரணமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உருவாக்கிய சஹாபா சமூகத்தைக் குறிப்பிடலாம். அந்த அற்புத சமூகத்தில் அறபு சமூகமே புறக்கனித்து, இழிவானவர்களாகவும், மிகவும் கீழான மனித விலங்குகளாகவும் கருதி ஒதுக்கித் அப்புறம் தள்ளிய மேலும் செல்லாக்காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வாங்கப்பட்ட அபீஸீனிய கருப்பு அடிமைகள் நபியின் தூய கொள்கையை சுமந்த ஊழியர்களாக மாறிய போது அவர்களை அந்த கொள்கைசார் சமூகம் பார்த்த விதம் அகம்பாவமும், அந்தஸ்தும் தலைக்கேறிய அறபுத் தலைவர்களை ஆச்சரியப்படுத்தியது.

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபியின் செயலாளராகச் செயற்பட்ட அதேவேளை அந்த சமூகத்தின் மத்திய இஸ்தலமாக திகழ்ந்த மஸ்ஜிதுன் நபவியின் முஅத்தினாக (அழைப்பாளராக) கடமையாற்றினார். அதேபோன்று ஹப்பாப் இப்னுஅரத் (ரழியல்லாஹு அன்ஹு), யாசிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் குடும்பம், அந்நிய தேசத்துமக்களான ஸல்மான அல்பாரிஸி (ரழியல்லாஹு அன்ஹு), ஸுஹைப் அர்ரூமி (ரழியல்லாஹு அன்ஹு) என்று ஏராளமானவர்களின் நிலை இவ்வாறு தான் இருந்தது.

இப்படியாக இந்தக் கொள்கைக்காக தம்மையே அர்ப்பணம் செய்யும் இத்தகைய தியாகிகள் மனிதர்களின் பார்வையில் அற்பர்களாக இருப்பினும் அவர்களை, ஒரு தாய்க்கோழி தனது குஞ்சுகளை சிறகுகளால் அணைத்துக்கொள்வது போன்று அனைத்துக்கொள்ளுமாறு ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் தெளிவாக கட்டளை பிரப்பித்துள்ளான்.

 وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهُ وَلاَتَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ
'(நபியே!) தங்களுடைய, ரப்பைகாலையிலும், மாலையிலும் (பிரார்த்தனைசெய்து) அழைத்துக் கொண்டு, அவனுடையதிருமுகத்தை (திருப் பொருத்தத்தை) நாடியவர்களாகவும் இருப்பவர்களுடன், உம்மை நீர் பொறுமையுடன் கட்டுப்படுத்திக் கொள்வீராக!' (18:28)

 وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ
'முஃமின்களில் உம்மைப் பின்பற்றியோருக்கு, உம்முடைய (பரிவுஎனும்) இறக்கையை தாழ்த்துவீராக!' (26:215)

 அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடக்க முற்பட்ட போது அல்லாஹ் கண்டித்து வசனம் இறக்கிய நிகழ்வைப் பாருங்கள். நபியவர்கள் குறைஷித் தலைவர்களுடன் முக்கியமான ஒரு அமர்வை மேற்கொண்டிருந்த போது, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) என்ற கண்தெரியாத நபித்தோழர் வந்து இஸ்லாத்தின் கொள்கைகளைக் கற்றுத் தரும்படி நபியிடம் வேண்டுகிறார். இதை ஜீரனிக்க முடியாத நபியவர்கள் அவரைப் பொருட்படுத்தாது கடுகடுத்து முகத்தை அவரைவிட்டும் திருப்பிக்கொண்டார்கள். உடனே இந்த செயலை கண்டிக்கும் முகமாக அல்லாஹ் பின்வரும் வசனங்களை இறக்கினான்.

عَبَسَ وَتَوَلَّى۝ اَنْ جَآءَهُ الْأَعْمَى۝........ وَأَمَّا مَنْ جَآءَكَ يَسْعَى۝ وَهُوَ يَخْشَى۝ فَأَنْتَ عَنْهُ تَلَهَّى۝
'(நமதுநபியாகிய) அவர்கடுகடுத்தார். மேலும் முகத்தைத் திருப்பிக் கொண்டார். பார்வையற்றவர் அவரிடம் வந்ததற்காக.......... இன்னும், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ அவரே (அல்லாஹ்வை) அஞ்சியவராக (உம்மிடம் வர) நீரோ அவரை விட்டும் பராமுகமாகிவிடுகிறீர்.' (80:1,2....8,9,10)

இத்தகைய தியாகிகளை நபியவர்கள் எந்தளவிற்கு மதித்தார்கள் என்பதற்கு பின்வரும் சம்பவம் சான்றுபகரும் எனக்கருதுகிறேன். ஹுதைபியா உடண்படிக்கை முறிந்த போது மக்காவை வெற்றி கொள்ள நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிகவும் இரகசியமாக ஆயத்தப்படுத்துவதை ஹாதிப் இப்னுஅபீபல்தஆ (ரழியல்லாஹு அன்ஹு) என்ற நபித்தோழர் மக்காவில் வசிக்கும் தன் குடும்பத்தினருக்கு இரகசியமாக தெரியப்படுத்த முனைந்த போது, உமர் இப்னுல் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆவேசப்பட்டு, 'ஹாதிபின் கழுத்தை சீவ எனக்கு அனுமதி தாருங்கள்' எனநபியிடம் அனுமதிகேட்டு கர்ஜித்தார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அமைதியாக, 'இவர் இஸ்லாத்தின் முதல் போராட்டமான பத்ர்களத்தில் தனது உயிரை பனயம் வைத்து கொள்கைப் பிடிப்போடு போராடியவரல்லவா?' மேலும், 'அல்லாஹ் இவரின் முன்பின் பாவங்களை மன்னித்து விட்டானல்லவா?' எனவே நாமும் இவரை மன்னித்துவிட வேண்டும். இவர் இராஜதந்திர குற்றம் புரிந்தாலும் பரவாயில்லை. அவர் மதிக்கப்பட வேண்டியவர்' என்ற தோரணையில் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை ஆறுதல் படுத்தி ஹாதிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை மன்னித்துவிட்டார்கள்.

இதுதான் ஒரு சமூகநிறுவனத்தின் ஆரோக்கியமான பருவத்தின் ஆரோக்கியமான நிலையாகும். சுருக்கமாகக் கூறுவதாயின்,
  •  குறிப்பிட்ட சமூக நிறுவனத்தின் ஊழியர்கள் கொள்கையைச் சுமந்து அதற்காகவே வாழ்பவர்களாக இருப்பார்கள்.
  • இத்தகையகொள்கைப்பிடிப்புள்ளஊழியர்கள் சமூகமட்டத்தில் அற்பர்களாககருதப்படுபவர்களாக இருப்பினும் அவர்கள் மேலானவர்களாகமதிக்கப்பட்டார்கள், கன்னியப்படுத்தப்பட்டார்கள்.மேலும் இவர்களதுகருத்துக்களும் ஆலோசனைகளும் ஏற்கப்பட்டது.
  • குறிப்பிட்ட அந்நிறுவனம் இவர்களை அணைத்துக்கொள்வதற்கான அனைத்துவித ஏற்பாடுகளையும் செய்தது.


ii.         வாடிவதங்கும் பருவம்
பொதுவாக இந்தப் பருவத்தில் ஊழியர்கள் கொள்கையைச் சுமந்து அதன்பின்னால் சுற்றித்திரிவதற்குப் பதிலாக தனி நபர்களை நம்பி அவர்களை சுமந்துகொண்டு சுற்றத் துவங்குவார்கள். எந்தளவிற்கெனில் அக்குறிப்பிட்ட தனிநபரின் கருத்துக்களும், ஆலோசனைகளுமே ஊழியர்களில் தங்கியிருக்கும் மேலும் பிரதிபளிக்கும். ஊழியர்களின் பேசுபொருளாகவும் இவையே இருக்கும். இவற்றுக்கு மாற்றமான, எதிரான கருத்துக்கள் தட்டப்படும் மேலும் புறக்கணிக்கப்படும். மேலும் இவ்வாறாக மாற்றுக் கருத்துக்களைச் சொல்பவர்கள் மட்டம்தட்டப்படுவார்கள்.

மேலும் அந்த குறிப்பிட்ட தனிநபரின் பேச்சு, செயல், நடத்தை அனைத்தையும் சரிகானும் போக்கே அவரோடு கூடவே இருக்கும் பக்தர்களின் பனியாக இருக்கும். மேலும் குறிப்பிட்ட அந்த சமூகநிறுவனத்தின் இயக்கமே அவரில் தான் தங்கியுள்ளது என்றும் அத்தகைய பக்தர்கள் மூலம் அந்தநிறுவனத்திற்கே எடுத்துக் காட்டப்படும்.

பொதுவாக இந்தப் பருவத்தில், அக் குறிப்பிட்ட சமூக நிறுவனம் இப்பூமியில் கால்பதித்து வளர்ந்து பூத்துக் காய்க்கக் காரணமாக இருந்த கொள்கைவாத ஊழியர்களை (பத்ர் சஹாபாக்களைப் போன்றவர்களை) அறிவற்றவர்கள், அணுபவம் அற்றவர்கள் என ஒதுக்கிப் புறந்தள்ளும் நிலை வளர்ந்து பரவலாகும்.

வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு நிலை உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது. எவ்வாறெனில், 'அல்லாஹ்வின் உறுவப்பட்ட வாள் என்று தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் பெயரிடப்பட்டு கௌரவிக்கப்பட்ட காலித் பின் வலீத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களால் தான் இஸ்லாமிய சாம்ராஜ்யம் ரோம் பாரசிக வள்ளரசுகளை வெற்றிகொள்வதற்கு அடிப்படைக் காரணமாகும். காலித் இல்லையெனில் இது நடைபெறாது' என்றகருத்து மக்கள் மத்தியில் பரவத் துவங்கியது. இக்கருத்தின் விளைவை நன்கறிந்த உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உடனே அவரை பிரதம தளபதி பதவியில் இருந்து விலக்கி சாதாரன ஒரு சிப்பாயாக மாற்றி இந்த தவறான மற்றும் ஆபத்தான நிலையிலிருந்து முஸ்லிம் சமூகத்தை காப்பாற்றினார்கள்.

ஆக இந்த நிலையானது ஒரு சமூக நிறுவனத்தின் மிகவும் ஆபத்தான நிலையாகும். இது தொடரும் பட்சத்தில் அக் குறிப்பிட்ட சமூக நிறுவனம் மூன்றாவது பருவத்தை நோக்கி நகரும் என்பதில் இருகருத்திற்கு இடமில்லை.

iii.        அழுகிதுர்வாடைவீசும் பருவம்
இந்தப் பருவத்தில் குறிப்பிட்டசமூகநிறுவனத்தின் தலைமைகளின் போக்கும், ஊழியர்களின் போக்கும், சிந்தனையும் பொதுவாக பணம், பட்டம், பதவி என்பவற்றை அடியொட்டியே அமையும்.

இதனால் இப்பருவத்தில் பணம், பட்டம், பதவி படைத்த தனவந்தர்களுக்குத் தான் இடம் அதிகம். இத்தகையவர்கள் தான் மதிக்கப்படுவார்கள். இவர்களது கருத்துக்கள் தான் ஏற்கப்படும்.

மேலும் முதல் பருவத்திற்காக உழைத்தவர்கள் பணம், பட்டம், பதவி என்ற இவர்களின் இந்த முப்பெரும் அளவுகோளிற்கு உட்படாவிடின் அவர்களும் புறக்கணிக்கப்படுவார்கள், தாழ்த்தப்படுவார்கள். அதேபோன்று அவர்களது கருத்துக்களும், அனுபவங்களும் தட்டிக்கழிக்கப்படும்.

இதனை நடைமுறை உதாரணத்தில் சொல்வதானால், கொள்கைக்காக தனது அனைத்தையும் தியாகம் செய்து, அடி-உதை என்று பல இன்னல்களை அனுபவித்து, தனது வாழ்வையே அதற்காக அர்ப்பனித்து அக்கொள்கையை சுமந்துவந்தவர்கள். பணம், பட்டம், பதவி என்ற அளவுகோளினுல் வராதவிடத்து தட்டிக்கழிக்கப்படுவார்கள்.

இதனை இன்னும் தெளிவாக சொல்வதானால், ஏஸி வாகனத்தில் தனது பெயருக்குப் பின்னால் வால்போல் நீழும் பதவிப் பெயர்களைக் அடுக்கிக் கொண்டு லெப்டொப்புடன் டிப்டொப்பாக வந்திறங்கும் மனிதர்கள் மதிக்கப்படுவார்கள், கௌரவிக்கப்படுவார்கள். இத்தகையவர்களின் வார்த்தைகள் தெய்வவாக்குகள் போன்றுகருதப்படும். இது தான் நிதர்சனம்....

கொள்கையை தமது தோள்களில் தூக்கிச் சுமந்துவந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு, இவர்களுக்குப் பதிலாக அந்த இடத்தை பணம், பட்டம், பதவி என்ற அளவுகோளைக் கொண்டு அனைத்தையும் பார்ப்பவர்கள் பிடிக்கும் போது அக் குறிப்பிட்ட சமூக நிறுவனம் துர்நாற்றம் வீசத் தொடங்கும், அதனை சுமந்துவந்தவர்களே புறக்கணிக்கப்படதுவங்குவர். அதுமட்டுமல்ல அத்தகைய கொள்கைவாதிகளே நம்பிக்கை இழந்து அதனை விட்டும் விலகிக்கொள்வார்கள். இதுதான் உலகநியதி!!

إِنَّ اللهَ لاَيُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوْا مَا بِأَنْفُسِهِمْ
'எந்தவொரு சமுதாயமும் தங்கள் நிலையை தாங்களேமாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக, அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை.' (13:11)

முஆத் முனாஸ்
வரகாபொலை